இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 161. 


இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 161 அரசு ஊழியர்கள் லஞ்சம் பெறுதலுக்கு எதிரான சட்டமாகும்.

பிரிவு 161 என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.


ஒரு பொது ஊழியராக இருப்பவர் மக்களிடம் பணத்தை   அல்லது பொருளை எதிர்பார்ப்பது.

அதாவது  அரசு பணி செய்பவர்  தமது பணியினை செய்யவோ அல்லது செய்யாமல் இருக்கவோ  தன்னுடைய பணியின் நடவடிக்கையின் கீழ் ஒருவருக்கு அனுகூலம் காட்டவோ அல்லது காட்டாதிருக்கவோ  தன்னுடைய மேல் அதிகாரிகளிடம் இருந்து ஒரு பணியினை செய்து கொடுக்கிறேன் என்றோ, அல்லது செய்து கொடுக்காமல் இருக்கிறேன் என்றோ  இவற்றில் ஒன்றை செய்வதற்கு என்று சன்மானமாக சட்டப்படியான  ஊதியம் தவிர வேறு வழியில் பணம் பொருளை சம்பளமாக பெறுதல் லஞ்சமாக கருதப்படும்.

இப்படி எந்த வகையிலான லஞ்சத்தையும் பிறரிடம் இருந்து தனக்கு என்றோ அல்லது வேறொருவருக்கு என்றோ லஞ்சம் பெறுதல் பெறுவதற்கு ஓப்புக்கொள்ளுதல் பெறுவதற்கு முயற்சி செய்தல் மேலும் ஊதியம் அல்லாத வேறு எந்த வகையிலான லஞ்சத்தையும் பிறரிடம் இருந்து தனக்கு என்றோ அல்லது வேறொருவருக்கு என்றோ லஞ்சம் பெறுதல் பெறுவதற்கு ஓப்புக்கொள்ளுதல் மேலும் பெறுவதற்கு முயற்சி செய்தல் ஆகியவை இந்திய தண்டனைச் சட்டம் 161 -ன் படி குற்றமாகும்.

இந்த குற்றத்தை செய்யும் நபருக்கு இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 161 ன் படி  தண்டனை அளிக்கப்படும்.

IPC-Section-161

லஞ்சம் பெறுவதற்கான தண்டனை.

இந்த குற்றத்தை  செய்தால் அந்த  நபருக்கு மூன்று ஆண்டுக் கால சிறைத் தண்டனையோ அல்லது அபராதமோ அல்லது இரண்டுமோ இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 161 ன் படி தண்டனையாக விதிக்கப்படும்.

Post a Comment

أحدث أقدم