இந்தியாவில் சொத்துக்களை பரிசாக வழங்குவதற்கான இரண்டு பிரபலமான முறைகள் தான பத்திரம் மற்றும் செட்டில்மெண்ட் பத்திரம் ஆகிய இரு பத்திரங்களுமே ஆகும். இந்த சொற்கள் பெரும்பாலும் ஒன்றுக்கொன்று மாற்றாகப் பயன்படுத்தப்பட்டாலும், அவை வெவ்வேறு சட்டரீதியான தாக்கங்களையும் தேவைகளையும் கொண்டுள்ளன. இந்த பத்திரங்களை பற்றியும் பத்திரங்களுக்கு உள்ள வேறுபாடுகளைப் பற்றி விவாதிப்போம்.

பொருளடக்கம் :

What-is-Gift-deed-and-Settlement-Deed

தான பத்திரமும் செட்டில்மெண்ட் பத்திரமும் வேறு வேறா?


ஆம் இரண்டு பத்திரங்களும் வேறு பத்திரங்கள் தான் இருந்தாலும் இந்த பத்திரங்களுக்குள் பெரிய வேறுபாடுகள் இல்லை காரணம் இரண்டு பத்திரங்கள் மூலம் ஒரு சொத்தை எழுதிக் கொடுக்கும் போதும் பிரதிபலனாக பணத்தைப் பெற்றுக் கொண்டு எழுதிக் கொடுக்கப்படுவதில்லை, மாறாக அன்பிற்காக பாசத்திற்காகவும் தானாக முன்வந்து தானமாக சொத்துக்களை எழுதிக் கொடுப்பதுதான் இந்த இரு பத்திரங்களும் அதனாலேயே இரண்டு பத்திரங்களும் ஒன்றுதான் என்கிறோம்.

தானபத்திரம் மற்றும் செட்டில்மெண்ட் பத்திரம் வேறுபாடுகள்?


தான பத்திரம் மற்றும் செட்டில்மெண்ட் பத்திரம் இரண்டிற்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை கிட்டத்தட்ட இரண்டு பத்திரங்களும் ஒன்றுதான்.


தான பத்திரத்தை ஆங்கிலத்தில் கிப்ட் பத்திரம் மற்றும் பரிசு பத்திரம்  என்றும் செட்டில்மெண்ட் பத்திரத்தை தமிழில் தீர்வு பத்திரம் என்றும் அழைப்பார்கள், அதாவது குடும்பங்களுக்குள் ஏற்படும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான ஒரு தீர்வாக இந்த பத்திரம் இருப்பதால் இதை ஒரு தீர்வு பத்திரம் என்று அழைக்கபடுகிறது. 


தானமாக தருவது என்றால் தானப்பத்திரம் என்றும் சொத்தை செட்டில்மெண்ட் செய்வது போல எழுதினால் செட்டில்மென்ட் என்றும்  கூட குறிப்பிடுகிறார்கள். 


தானப்பத்திரம் மற்றும் செட்டில்மெண்ட் பத்திரம் மூலமாக சொத்துக்களை எழுதிக்கொடுக்கும்போது  பணத்தைப் பெற்றுக் கொண்டு எழுதிக் கொடுப்பதில்லை மாறாக அன்பு மற்றும் பாசத்திற்காக தானமாக கொடுக்கப்படுகிறது மற்றும் செட்டில்மெண்டாக எழுதிக் கொடுக்கப்படுகிறது. 

இந்த இரு பத்திரங்களில் தான பத்திரத்திற்கு ஒரே ஒரு வேறுபாடு இருக்கிறது, அதாவது குடும்ப உறுப்பினர்கள் அல்லாத வேறு நபர்களுக்கும் சொத்துக்களை இந்த பத்திரத்தின் மூலமாக தானமாக வழங்க முடியும். ஆனால் செட்டில்மெண்ட் பத்திரத்தை பொருத்தமட்டில் குடும்ப ரத்த உறவுகளுக்கு மட்டுமே செட்டில்மெண்ட் பத்திரம் மூலமாக எழுதி வைக்க முடியும். இதன் காரணமாக செட்டில்மெண்ட் பத்திரத்தை (Settlement Deed) ஒரு குடும்ப ஏற்பாட்டுப் பத்திரம் எனவும்  அழைப்பார்கள். 

இந்த ஒரு வேறுபாடு மட்டுமே தானபத்திரம் மற்றும் செட்டில்மெண்ட் பத்திரத்தை வேறுபடுத்தி காட்டுகிறது.

இப்படி வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டாலும் கிட்டத்தட்ட இரண்டு பத்திரங்களும் ஒன்றுதான்.


தானபத்திரம் மற்றும் செட்டில்மெண்ட் பத்திரம் எப்படி எழுதுவது?


தன்னுடைய சொத்தை குடும்ப உறுப்பினர்கள் பெயருக்கு மாற்றி கொடுப்பது தான் தானப்பத்திரம்.


அதாவது இரத்த உறவுகளுக்கு மனைவி மகள் மகன் கணவன் தம்பி அண்ணன் அப்பா அம்மா இப்படியான உறவுகளுக்கு மட்டுமே தானமாக செட்டில்மென்ட்டாக  வழங்க முடியும்.  


 ஒருவர் தனக்குச் சொந்தமான சொத்துக்களை  செட்டில்மெண்ட் பத்திரம் மூலம் தன் குடும்பத்தில் உள்ள இரத்த சம்மந்தமான  உறவுகளுக்கு மட்டுமே பிரித்து கொடுக்கலாம்.திரும்பவும்  அதை நினைவு வைத்துக்கொள்ளுங்கள்.


ஒருவருக்குச் சொந்தமான சொத்தை அவர் வாழ்நாளிலேயே தன் குடும்பத்தில் உள்ள மற்ற உறவினர்களுக்கு கொடுப்பதால் செட்டில்மெண்ட் பத்திரம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.


 ஆனால், ஒருவர் தன் சொத்துக்களை தன் வாழ்நாளுக்கு பின்னர் தன் உறவினர்களுக்குச் சேரும்படி எழுதி வைக்கும் பத்திரத்தை “உயில் பத்திரம்” என்கிறார்கள்.


அதனால் நீங்கள் உயில் பாத்திரத்தையும் செட்டில்மெண்ட் பாத்திரத்தையும் சேர்த்து ஒன்றுக்கொன்று  குழப்பிகொள்ளக்கூடாது இரண்டும் வேறு வேறாகும். 


தன் வாழ்நாளிலேயே ஒருவர் தன் சொத்துக்களை தன் உறவுகளுக்கு கொடுக்கும் பத்திரமான இந்த செட்டில்மெண்ட் பாத்திரத்தை  எழுதிக் கொடுக்கும்போது அந்த சொத்தைப் பெறுபவர் குடும்ப உறவினராக இருக்க வேண்டும் என சட்டம் சொல்கிறது.


செட்டில்மெண்ட பத்திரத்தை திரும்ப மாற்றி எழுத முடியுமா?


நீங்கள் கவனிக்க வேண்டிய  முக்கியமானது என்னவெனில் ‘செட்டில்மென்ட். பாத்திரத்தை  ஒரு முறை எழுதினால் எழுதியதுதான். அதை மாற்றி மாற்றி திரும்பவும் எழுத முடியாது.


எனவே அவசர கதியில் செட்டில்மென்ட் எழுதுவதற்கு முன் பல முறை யோசித்து முடிவெடுப்பது சாலச் சிறந்தது. 


 என்னதான் பாத்திரத்தை பற்றி சொன்னாலும் இன்னொரு சந்தேகம் உங்களுக்கு இருக்கும்  இதை பதிய வேண்டுமா ஆம்  இதை உரிய கட்டணம் செலுத்தி சார்-பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளவேண்டும்.

6 تعليقات

  1. Very very useful and clr explanations

    ردحذف
  2. Can you please send the Draft of Gift Settlement (if its in tamil much better)

    ردحذف
  3. ஐயா வணக்கம் சித்தப்பா தன்‌அண்ணன் மகளுக்கு சொத்தை தானப்பத்திரம் மூலம் தானசெட்டில் பன்னலாமா

    ردحذف
  4. உடன்படிக்கை பத்திரம் தான செட்டில்மெண்ட் ஆகுமா?
    அதில் அப்பா பட்டிருக்தம் கடனை அடைக்க வேண்டும் என்று இருக்கிறது.
    இது எந்த வகை செட்டில்மெண்ட்?

    ردحذف
  5. Hi sir
    I f someone provide gift bond of his property to his son without giving intimation to his daughter.
    Is it possible to raise case by his daughter to cancel that gift bond agreement

    ردحذف

إرسال تعليق

أحدث أقدم