காவல்நிலையத்தில் இரண்டு புகார் இருதரப்பு மீதும் FIR.


காவல்நிலையத்தில் அடிதடி பிரச்சனை சார்த்த புகார் அளிக்கும் போது மனுதாரருக்கும் எதிரிக்கும் சேர்த்தே  சில நேரங்களில் FIR போடுகிறார்கள் இது எப்படி நடக்கிறது நடக்கிறது இந்த புகாரினை காவல்துறை எப்படி விசாரணை செய்து  நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை பார்ப்போம். 

What-to-do-with-the-case-if-the-police-file-an-FIR-against-both-parties

இருதரப்பு மீதும் FIR ./How to file an FIR against both parties.


காவல்நிலையத்தில் ஒரே சம்பவத்தில் எதிரிக்கும், புகார்தாரருக்கும் காயங்கள் ஏற்பட்டிருந்து, அந்த சம்பவம் குறித்து இரண்டு புகார்கள் அளிக்கப்பட்டிருந்தால் அந்த புகார்களையும் பதிவு செய்து காவல் துறையினர் புலன் விசாரணையை மேற்கொள்ள வேண்டும். 

காவல்துறை அதிகாரிகள் விசாரணை செய்து புகாரில் சொல்லபட்ட சங்கதிகள் உண்மை குற்றம் நடந்துள்ளது என அறிந்தால்  இரண்டு வழக்குகளிலும் FIR போட்டு அதாவது முதல்தகவலறிக்கை போட்டு  இறுதியறிக்கையை காவல்துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.  காவல்நிலையத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறை மற்றும் இது சம்மந்தமான நீதிமன்ற தீர்ப்புகள்.


பொய் புகார்./False complaint.


புகார் பொய்யானது என்று தெரிய வந்தால் அந்த புகாரின் மீதான விசாரணையை காவல்துறையினர் கைவிட்டு விட வேண்டும்.


வழக்கு நடைமுறை./Case procedure.


வழக்கு மற்றும் எதிர்வழக்கு ஆகியவற்றில் எந்த நடைமுறையை பின்பற்றி புலன் விசாரணை செய்ய வேண்டும் என காவல்நிலைய ஆணை எண் 588 ல் கூறப்பட்டுள்ளது. 

எதிரிகளால் அளிக்கப்பட்டுள்ள புகாரை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து அதனை நிரூபிப்பதோடு மட்டுமின்றி அவர்களுக்கு ஏற்பட்டிருந்த காயங்களுக்கான மருத்துவ சான்றிதழ்களையும் புலன் விசாரணை அதிகாரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

 இந்த நடைமுறைகளை கட்டாயம் காவல்துறையினர் கடைப்பிடிக்க வேண்டும்.


இது சம்மந்தமான நீதிமன்ற தீர்ப்புகள்./Court judgments in this regard:


சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் "கிருஷ்ணமூர்த்தி Vs மாநில அரசு (1989-LW-CRL-103)" என்ற வழக்கில் மேலே கூறப்பட்டுள்ள நடைமுறைகளை காவல்துறையினர் பின்பற்றாத நிலையில் காயம்பட்ட எதிரிகளுக்கு தண்டனை வழங்க முடியாது என்று தீர்ப்பு கூறியுள்ளது.


இதே கருத்தை உச்சநீதிமன்றம் "பாபுராம் மற்றும் பலர் Vs குஜராத் மாநில அரசு (2008-2-SCC-CRL-727)" என்ற வழக்கில் தீர்ப்பாக கூறியுள்ளது.


அருள் மற்றுமொருவர் Vs ஆய்வாளர், ஹரூர் காவல் நிலையம், தருமபுரி மாவட்டம்

CRL. A. No - 309/2011

Dt - 20.11.2018

2019-1-MLJ-CRL-416


இப்படி இது போன்ற வழக்குகளில் சரியான முறையில் விசாரணை செய்யாமல் எதிரிகள் அளிக்கும் புகார்களில் நடவடிக்கை எடுத்தால் மேற்கண்ட நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் வழக்குகள் தள்ளுபடி செய்யட்டும்.

Post a Comment

Previous Post Next Post