CSR என்பது காவல்நிலையத்தில் பதிவு செய்யப்படும் சேவை பதிவேடு ஆகும். இது குறிப்பாக இந்திய காவல்நிலையத்தில் தெளிவுபெறாத குற்றத்திற்காக பராமரிக்கப்படும் பதிவேடு ஆகும். தெளிவு பெற்ற குற்றமாக இருந்தால் உடனடியாக முதல் தகவல் அறிக்கை (FIR) உருவாக்கப்பட்டு குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது.
- காவல் நிலையத்தில் வழங்கப்படும் CSR பொருள் விளக்கம்?
- CSR எந்த வழக்கில் பதிவு செய்யப்படுகிறது?
- இந்தியாவில் எந்த சட்டத்தின் அடிப்படையில் CSR பதிவு செய்யப்படுகிறது?
- புகார் அளித்த நபருக்கு CSR மற்றும் FIR நகல் வழங்கப்படுமா?
- CSR இன் செல்லுபடியாகும் தன்மைகள் மற்றும் மதிப்பு என்ன?
- CSR-ன் கால அளவு என்ன?
- இந்திய காவல்நிலையத்தில் CSR மற்றும் FIR பதிவு நடைமுறைகள் என்ன?
- காவல் நிலையத்தில் வழங்கப்படும் CSR பொருள் விளக்கம்?
- CSR எந்த வழக்கில் பதிவு செய்யப்படுகிறது?
- இந்தியாவில் எந்த சட்டத்தின் அடிப்படையில் CSR பதிவு செய்யப்படுகிறது?
- புகார் அளித்த நபருக்கு CSR மற்றும் FIR நகல் வழங்கப்படுமா?
- CSR இன் செல்லுபடியாகும் தன்மைகள் மற்றும் மதிப்பு என்ன?
- CSR-ன் கால அளவு என்ன?
- இந்திய காவல்நிலையத்தில் CSR மற்றும் FIR பதிவு நடைமுறைகள் என்ன?
காவல் நிலையத்தில் வழங்கப்படும் CSR பொருள் விளக்கம்.
ஒரு குற்றம் நடந்து அந்த குற்றத்திற்காக நீங்கள் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கிறீர்கள் அப்போது அதை பதிவு செய்து அந்தப் புகாரினை ஏற்றுக்கொண்டத்திற்க்கு சான்றாக காவல்துறை அலுவலர் CSR என்ற ரசீது ஒன்று கொடுப்பார். இந்த CSR-ன் முழுமையான ஆங்கில விளக்கம் Community Service Register என்பது ஆகும். இதை தமிழில் சமூக சேவை பதிவு-Community Service Register. என்றும் கூறலாம். மேலும் இந்த CSR- ஐ மனு ஏற்புச் சான்றிதழ் என்றும் தினசரி டைரி அறிக்கை என்றும் சொல்லலாம், இதற்கு இது போன்ற பல பெயர்கள் இருந்தாலும் மனு ரசீது என்பதே அனைவராலும் அறியப்பட்ட ஓன்று ஆகும்.எனவே நம் புரிந்துகொள்ள வேண்டியது காவல் நிலையத்தில் கொடுக்கப்படும் புகாரை விசாரணை செய்வதற்கு முன் காவல் நிலையத்தில் காவல் அதிகாரியால் கொடுக்கப்படும் புகார் மனு ரசீது தான் CSR இந்த என்பதில் உங்களுக்கு குழப்பம் வேண்டாம்.
CSR எந்த வழக்கில் பதிவு செய்யப்படுகிறது?
CSR என்ற சமூக சேவை பதிவேடு என்பது ஒவ்வொரு இந்திய காவல் நிலையத்திலும் அறியப்படாத குற்றத்திற்காக பராமரிக்கப்படும் பதிவேடு ஆகும். குற்றம் அறியக்கூடிய குற்றமாக இருந்தால், முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) உருவாக்கப்பட்டு பதிவு செய்யப்படுகிறது. ஒரு சிஎஸ்ஆர் தினசரி டைரி அறிக்கை அல்லது டைரி அறிக்கை என்றும் அழைக்கப்படுகிறது.குறிப்பு : CSR என்ற சேவைப் பதிவேடு ஒவ்வொரு இந்திய காவல் நிலையத்திலும் அடையாளம் காண முடியாத குற்றத்திற்காக பராமரிக்கப்படும் பதிவேடு ஆகும். குறிப்பு ஆனால் அறியக்கூடிய குற்றம் மற்றும் குற்றம் செய்கிற குற்றவாளி மீது முதல் தகவல் அறிக்கை அதாவது FIR பதிவு செய்யப்படுவதால் CSR வழங்கப்படாது. அந்த குற்றவாளி மீது புகார் கொடுக்கப்பட்டு அந்த புகாருக்கு புகார் மனு ரசீது CSR கிடைக்காத என்றால் நிச்சயமாக கிடைக்கும் ஆனால் FIR பதிவு செய்தவுடன் அதுவே கொடுத்த புகாருக்கான அறிக்கையாக இருப்பதால் பதிவு செய்யப்பட்ட வழக்கில் CSR-ரை நாம் பெறுவது இல்லை.
இந்தியாவில் எந்த சட்டத்தின் அடிப்படையில் CSR பதிவு செய்யப்படுகிறது?
நீங்கள் அளித்த புகாரின்படி விசாரணை செய்து, கைது செய்யப்படக்கூடிய குற்றம் நடந்திருக்கிறது என்று தெரிய வந்தால் முதல் தகவல் அறிக்கை (FIR) தயார் செய்து குற்ற விசாரணை முறைச் சட்டம், (Cr.P.C) 1973 – பிரிவு 154ன்படி குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்.புகார் அளித்த நபருக்கு CSR மற்றும் FIR நகல் வழங்கப்படுமா?
ஆம் புகார் அளித்த நபருக்கு CSR மற்றும் முதல் தகவல் அறிக்கையின் நகல் ஒன்று இலவசமாக காவால் நிலையத்தில் வழங்கப்படும்.
CSR இன் செல்லுபடியாகும் தன்மைகள் மற்றும் மதிப்பு என்ன?
what is the validity of CSR?CSR (சமூக சேவை பதிவேடு) என்பது புகாரை பதிவு செய்வதற்கான ஒரு ஆதாரம் மட்டுமே, எனவே CSR இன் செல்லுபடியாகும் தன்மை அதிகம் இல்லை. CSR மீது அவர்கள் எடுத்த நடவடிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகளுக்கு பதில் சொல்ல வேண்டிய சுமை காவல்துறையின் மீது உள்ளது. பொதுவாக, போலீசார் வழக்கை தவறு என்று முடித்துவிடலாம் அல்லது புகார்தாரரிடமிருந்து எந்த பதிலும் இல்லை என்றும் கூட வழக்கை சுலபமாக முடித்துவிடலாம். காவல்நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகார் மனுவை ரசீது வாங்கியதோடு விட்டுவிடாமல் அந்த CSR ஐ FIR ஆக மாற்ற முயற்சிக்கவும். அப்போதுதான் அதற்கு சில மதிப்பு இருக்கும்.
CSR-ன் கால அளவு என்ன?
CSR மூடுவதற்கு குறிப்பிட்ட காலம் நேரம் இல்லை ஆனால் 3 ஆண்டுகளுக்குப் பிறகு அது மூடப்படும் காலதாமதம்மின்றி உங்கள் புகாரின் மீது நடவடிக்கை எடுங்கள் இல்லை என்றால் உங்கள் வழக்குக்கு முடித்து வைக்கப்படும்.இந்திய காவல்நிலையத்தில் CSR மற்றும் FIR பதிவு நடைமுறைகள் என்ன?
ஒரு குற்றம் நடந்து அதை சமாளிக்க முடியும் என்றாலோ அல்லது இருதரப்பினரும் சமாதான சமரசம் ஏற்படும் என்றாலோ அந்த குற்றத்தை அறியப்படாத குற்றம் (non-cognizable offences) என்பார்கள் சட்டத்தில் இந்த மாதிரியான குற்றங்களுக்கு சமரசம் முடிவாக எடுத்துக்கொள்ளலாம் பிரச்சனை இல்லாமல் இருதரப்பினரும் சமாதானமாக போகலாம் என்று நடைமுறை இருக்கிறது அதனால் அந்தமாதிரியான குற்றங்களை அறியப்படாத குற்றமாக கருதி காவல்நிலையத்தில் காவல் அதிகாரி CSR ஐ உருவாக்குகிறார்கள் சமரசம் ஏற்படாத சூழ்நிலையில் FIR பதிவு செய்யப்படும்.இந்திய காவல்நிலையத்தில் எந்தவொரு குற்றத்திற்கும் எதிராக புகார் செய்ய காவல் நிலையத்தை அணுகலாம். அது அடையாளம் காணக்கூடிய குற்றமாக இருந்தால் (cognizable offences), காவல்துறை அதிகாரி FIR ஐ உருவாக்க வேண்டும். FIR என்றால் முதல் தகவல் அறிக்கை. குற்றம் பற்றிய தேதி, இடம் மற்றும் அனைத்து விவரங்களும் இதில் உள்ளன. புகார்தாரருக்கு காவல்துறை அதிகாரிகள் எஃப்.ஐ.ஆரின் இலவச நகலை வழங்க வேண்டும். நகலை வழங்கிய பிறகு போலீஸ் அதிகாரிகள் வழக்கு தொடர்பான விசாரணை மற்றும் பிற சட்ட நடைமுறைகளைத் தொடங்குவார்கள்.
தற்போது CSR (சிஎஸ்ஆர்) என்றால் என்னவென்று உங்களுக்கு தெரிந்திருக்கும் இந்த கட்டுரையில் சிஎஸ்ஆர் பற்றியும் அதன் அடிப்படையான தன்மைகள் பற்றியும் விளக்கமாக கூறியுள்ளேன்.
CSR என்றால் என்ன எனது யூடியூப் வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் லிங்க் இதோ👉 CSR என்றால் என்ன? புகார் கொடுத்தா வாங்க வேண்டும் ஏன்?
First of all thank you sir, its a very useful message and will help many innocent people.
ردحذفYes.Useful news
ردحذفSir na one weekya poituiruka enku kadikela sir
ردحذفCSR could stop the association actions in gated communities like appartments,when problems among two flat owners keeping persnel belongings on common area??
ردحذفإرسال تعليق