மரண வாக்குமூலம் முழுமையான விளக்கம்?

Pragatheesh.BA.LLB (வழக்கறிஞர்)
By -
மரண வாக்குமூலம் முழுமையான விளக்கம்.

பல வழக்குகளின் போக்கையே திசை திருப்பி விடும் சக்தி மரண வாக்கு மூலத்துக்கு உண்டு.

இந்த மரண வாக்குமூலம் எந்த சட்டத்தின் அடிப்படையில் பெறப்படுகிறது என்ற பார்த்தால் இந்திய சான்று சட்டம் 1872 பிரிவு 32ன் உட் பிரிவு 1படி, மரண வாக்கு மூலம் பெறப்படுகிறது.மேலும் இந்த சட்டத்தின் அடிப்படையில் தான் மரண வாக்குமூலம் ஏற்றுக் கொள்ள கூடிய வாக்கு மூலமாக வழக்கின் சாட்சியாக கருதலாம் என்று சொல்கிறது.

ஒரு நபர் இறக்கும் தருவாயில் தனது இறப்பை எதிர்பார்த்து இருக்கும் போது கொடுக்கும் வாக்கு மூலமே மரண வாக்குமூலம் என்றும் இறுதி வாக்குமூலம் என்று அழைக்கப்படுகிறது. அந்த நபரின் நிலைக்கு யார் காரணம், சம்பவம் எப்படி நடைப்பெற்றது யார் யார் எப்படி தாக்கினார்கள், என்னென்ன ஆயுதங்களால்


தாக்கினார்கள் என அவரிடம் தெளிவாக வாக்குமூலத்தை பெறவேண்டும். அந்த நபர் இறக்கும் தருவாயில் தனது வாக்கு மூலத்தை, மருத்துவமனையிலோ அல்லது தாக்கப்பட்ட இடத்திலோ கூட கொடுக்கலாம். எங்கு மரண வாக்குமூலம் கொடுத்தாலும் செல்லுபடியாகும். 

மரண வாக்குமூலம் எப்படி யார் முன்பாக கொடுக்கபடுகிறது?

மரண வாக்குமூலம் என்பது யாருடைய தூண்டுதலும் இல்லாமல் தானாகவே முன்வந்து கொடுப்பது. மரண தருவாயில் இருக்கும் நபர் சிகிச்சை அளிக்கும் மருத்துவர் அல்லது குற்றவியல் நடுவர் நீதிபதி அல்லது காவல் அதிகாரி போன்றோர் முன்னிலையில் மரண வாக்குமூலம் கொடுக்கலாம். 

பெரும்பாலும் மரண வாக்குமூலம் கொடுக்கும் நபரின் உயிர் நீடிக்கும் என்றால், காவல் துறையினர், குற்றவியல் நடுவரை அழைத்து வந்து வாக்குமூலம் பதிவு செய்வார்கள்.மேலும் உறுதியான நிலைபாட்டை வழக்கிற்கு ஏற்படுத்துகிறது.சில அவசரமான சூழ்நிலையில் தாசில்தார் கூட மரண வாக்குமூலத்தை பதிவு செய்யலாம். 

மேற்படி மரண வாக்குமூலத்தை ஒரு சில நேரம்  இரண்டாவது முறையாகவும் கொடுக்கக்கூடிய சூழ்நிலை கூட வரும். முதலில் டாக்டரிடமோ அல்லது காவல் துறை அதிகாரியுடனோ, உடனடி வாக்குமூலம் கொடுத்த பின்னர் மீண்டும் குற்றவியல் நடுவர் முன்பும் மரண வாக்குமூலத்தை கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்படலாம்.  

மரண வாக்குமூலம் ஏற்கப்படுமா?

இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட வாக்கு மூலங்கள் ஒன்றோடொன்று ஒத்து போகும் பட்சத்தில் அந்த மரண வாக்குமூலம் ஏற்கப்படும்.ஒன்றுக்கொன்று வித்தியாசமாக இருந்தால், அந்த வாக்குமூலத்தை நீதிமன்றமே நிராகரித்து விடும். 

ஒருவேளை, மரண வாக்குமூலம் கொடுத்தவர் உயிர்பிழைத்துவிட்டார் என்றால், அந்த வாக்குமூலம் நடந்த குற்றத்திற்காக நீதிமன்றத்தில் சத்தியப்ரமாண வாக்குமூலமாக பதிவு செய்யப்படும்.

மரண வாக்குமூலத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை செய்ய முடியுமா?

மரண வாக்குமூலம் கொடுத்தவர் உயிர் பிழைத்தார் என்றால் அந்த வாக்குமூலத்தை குறுக்கு விசாரணையும் செய்யலாம். ஆனால் மரண வாக்குமூலத்தை குறுக்கு விசாரணை செய்யமுடியாது. வாக்குமூலம் கொடுத்தவர் உயிர் பிழைத்து இருந்தால் மட்டுமே குறுக்கு விசாரணை செய்ய முடியும். 

மரண வாக்குமூலம் கொடுத்தால் கட்டாயம் தண்டணை வழங்கப்படுமா?

தனக்கு இனி மரணம் ஏற்பட போகிறது என்று தெரிந்த பின்னர் அந்த மரண தருவாயில் இருக்கும் ஒரு நபர் தனது வாக்குமூலத்தை உண்மையாகத்தான் கொடுப்பார் என்ற நம்பிக்கை எல்லாரிடமும் உள்ளது.மரண வாக்குமூலத்தை உண்மையான நம்பியிருந்தாலும்  இது எல்லா நேரங்களிலும் உண்மையாக இருக்கும் என்று சொல்ல முடியாது. பொய்யான மரண வாக்குமூலங்களும், மற்றவர்களை பழிவாங்குவதற்காக கூட கொடுக்கலாம். குற்றம் செய்யாதவர்களை உள்நோக்கத்தோடு சம்பந்தபடுத்தியும், மரண வாக்குமூலம் கொடுக்கலாம்.மரண வாக்குமூலம் குறுக்கு விசாரணை செய்யமுடியாத ஒரு சான்று. 

இதை அப்படியே என்று கொண்டால், ஒரு நிரபராதி, குற்றவாளியாக தண்டிக்கபடலாம். ஆனால் மரண வாக்குமூலத்தை நம்பிக்கையான வாக்குமூலமாக கருதினாலும் சட்டம் கண்களை மூடி வைத்துக்கொண்டு மரண வாக்குமூலத்தை மட்டுமே சாட்சியாக கருதி தண்டனை வழங்குவதில்லை இந்த மரண வாக்குமூலத்தை நம்பும்படியான சாட்சியங்கள் சான்றுகள் சமர்பிக்க வேண்டும்.

மரண வாக்குமூலத்தை நம்பும்படியான சான்றுகளை ஆராய்ந்து அதை உறுதிப்படுத்தினால் மரண வாக்குமூலத்தின்படி குற்றம் சுமத்தப்பட்டவர் தண்டிக்கப்படுவார்.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!