ரிட் மனு சிறு விளக்கம்.

  What is a writ petition in india and Types of Writ Petition.  

எந்த வகையான பிரச்சனைகளுக்கு ரிட் மனு தாக்கல் செய்யலாம் அரசாங்கம், மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு எதிராகவோ அல்லது அரசு தலையிட்டு நடத்த வேண்டிய காரியங்களுக்கு ரிட் மனு தாக்கல் செய்யலாம்.

‘WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்.

எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ரிட் மனு தாக்கல் செய்யலாம்?

பொது நலன் பாதிக்கப்படும்போது, பொது நல வழக்குகள் (Public Interest Litigation) தொடரலாம்.

ரிட் மனு என்றால் என்ன மற்றும் ரிட் மனுவின் வகைகள்


உதாரணமாக:

1. உங்கள் ஏரியா ரோடு மோசமாக இருந்தால், அந்தப் பகுதியின் அதிகாரத்திற்குட்பட்ட அரசுத்துறைகளுக்கு ஒரு மனு கொடுத்தும் அவர்கள் எதுவும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அந்தத் துறைக்கு ரோடு போட உத்தரவு போடச் சொல்லி அரசாங்கத்தைக் கேட்கலாம்.

2. நீங்கள் குடியிருக்கும் இடத்திற்குப் பக்கத்தில் ஒரு ஃபேக்டரியிலிருந்து புகை வந்து, அந்தப் புகை சுற்றுச் சூழலை பாதித்தால், அருகில் இருக்கும் மாசுக்கட்டுப்பாடு அலுவலகத்தில் புகார் செய்யலாம்.

அறுபது நாட்களுக்குள் அவர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் அரசாங்கத்தை நடவடிக்கை எடுக்கச் சொல்லி, ரிட் மனு தாக்கல் செய்யலாம். தற்போது பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கும் சாயப்பட்டறைகளை மூட வேண்டும் என்று ஹைகோர்ட் தீர்ப்பளித்தது கூட அந்தப் பகுதி மக்கள் ‘ரிட்’ மனு தாக்கல் செய்த பின்பு தான் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். 

ரிட் மனு வகைகள்.

ஐந்து வகைகளில் ரிட் மனுவைத் தாக்கல் செய்யலாம்.


1.அடுத்தது ‘ஹெபியஸ் கார்பஸ் ரிட்.Writ of Habeas Corpus.


இதற்குத் தமிழில் ஆள் கொணர் ஆணை என்று பொருள். நமக்குத் தெரிந்த ஒருவர் தவறாகக் காவலில் வைக்கப்பட்டிருந்தாலோ அல்லது ஒருவரைக் காணவில்லை அவரை யாரோ கடத்தி அடைத்து வைத்து இருக்கிறார்கள் என்று சந்தேகப்பட்டாலோ  இந்த ரிட் மனுவை நாம் தாக்கல் செய்யலாம். இந்த மனுவை விசாரிக்கும் நீதிமன்றம் காவல்துறைக்கு அந்த நபரை நீதிமன்றத்திற்கு ஆஜர் படுத்தச் சொல்லி உத்தரவிடும்.

2. முதல் வகை ரிட் ஆஃப் மாண்டமஸ்.Writ of Mandamus.


இதற்கு ஆணையிடும் நீதிப் பேராணை என்று பொருள். அதாவது, தனக்கு வரையறுக்கப்பட்ட கடமையை ஒரு அரசு அதிகாரி செய்யா விட்டாலோ அரசாங்கம் அல்லது அரசு சார்ந்த நிறுவனம் சட்ட விரோதமான உத்தரவைப் பிறப்பிக்கப் போகிறது என்று தெரிந் தாலோ அந்தக் காரியத்தை செய்யாமல் தடுக்க ஆணையிட வேண்டும் என்று ரிட் மனு தாக்கல் செய்யலாம். சாலையின் பிளாட்பார ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடக்கோரி ரிட் மனுவைத் தாக்கல் செய்யலாம்.

3.அடுத்தது செர்ஷியோரரி. Writ of Certiorari.


 இந்த வகையான ரிட் மனு  ஒரு ஹை கோர்ட்டின் அதிகாரத்தில் உள்ள ஒரு கோர்ட் அல்லது தீர்ப்பு கொடுக்கும் அதிகாரமுள்ள ஒரு அரசு அதிகாரி சட்ட விரோதமாக ஒரு உத்தரவு போட்டால்  அந்த உத்தரவை ரத்து செய்யவும் அல்லது அந்த குறிப்பிட்ட நீதி மன்றத்துக்கோ அல்லது அரசு அதிகாரிக்கோ சரியான வழிமுறையை உணர்த்தும்படி உத்தரவிடக்கோரி கேட்பதுதான் இந்த ரிட் மனுவின் அடிப்படை. 

என்ன புரியவில்லையா? உதாரணமாக : ஒரு சினிமா தியேட்டர் கட்டுவதற்கு கலெக்டரிடம் ‘நோ அப்ஜக்ஷன்’ ஒருவர் கேட்கிறார். அங்கே இருபத்தைந்து அடி தூரத்தில் ஹாஸ்பிடல் இருக்கிறது. சினிமா தியேட்டரால் ஹாஸ்பிடலுக்கு பாதிப்பு வரும், அதனால், நோ அப்ஜக்ஷன் கொடுக்கக் கூடாது என்று பொதுமக்கள் ஆட்சேபித்தும் அந்த ஆட்சேஷபணையைப் பரிசீலி க்காமல் நோ அப்ஜக்ஷனை கலெக்டர்தந்தால் அந்த உத்தரவை எதிர்த்து செர்ஷியோரரி ரிட் மனு தாக்கல் செய்யலாம்.

4.அடுத்தது பிரொகிபிஷன் ரிட்.. Writ of Prohibition.


அதாவது ஒரு நீதி மன்றம் தனது அதிகார வரம்பு மீறி செயல்படாதவாறு தடுப்பதற்காகப் போடப்படுவது இது.

5.மூன்றாவது ரிட் மனுவிற்கு ‘கோவாரண்டோ.Writ of Quo-Warranto. 


எந்த ஒரு அரசாங்க அதிகாரியாவது தகுதி இல்லாமல் ஒரு பதவிக்கு நியமிக்கப்பட்டாலோ அல்லது தனது பதவியின் அதிகார வரம்பை மீறி அவர் உத்தரவு பிறப்பித்தாலோ அதை எதிர்த்து ‘கோவாரண்டோ ரிட் தாக்கல் செய்யலாம்.

ரிட் மனு தாக்கல் செய்யும் முறை.

இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், ‘ஹெபியஸ் கார்பஸ்’ மற்றும் ‘கோவாரண்டோ ரிட் மனுக்களை யார் வேண்டு மானாலும் போடலாம். 

ஆனால், மற்ற ரிட் மனுக்களான  மாண்ட மாஸ்,செர்ஷியோரரி மற்றும் ப்ரோகிபிஷன் ரிட் மனுக்களை பாதிக்கப்பட்ட நபர்கள்தான் தாக்கல் செய்யவேண்டும்.

ரிட் மனு  தாக்கல் செய்ய ஒரு வழக்கறிஞரிடம் ஆலோசனை பெறுவது மிகவும் அவசியமான ஓன்று அதனால் வழக்கறிஞரிடம் உங்கள் வழக்கின் விபரத்தை சொல்லி ஆலோசனை கேட்டுவிட்டு வழக்கு தொடருங்கள்.

1 تعليقات

إرسال تعليق

أحدث أقدم