சாலை பயணத்தில் கடைபிடிக்க வேண்டியது என்ன?
நாம் வாகனத்தில் சாலையில் பயணம் செய்யும் போது மிக கவனமாக இருக்க வேண்டும். சரியாக வாகனங்களை ஓட்ட தெரியாமல் சாலை யில் பயணம் செய்ய கூடாது. தகுந்த பயிற்சியாளரிடம் பயிற்சி பெற்ற பின்னரே சாலையில் வாகனங்களை ஓட்ட வேண்டு்ம். சரியான பயிற்சி இல்லாமல் வாகனங்களை ஓட்டுவது அடுத்தவர் உயிருக்கு அச்சுறுத்தலாக அமையும். மேலும் சாலையில் பயணிக்கு போது சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் தவறான மற்றும் கவனக்குறைவாக வாகனத்தை சாலையில் ஓட்டும் போது விபத்துக்கள் ஏற்படும். சாலையில் நான்கு சக்கர வாகனமோ அல்லது இரு சக்கர வாகனமோ எதுவாக இருந்தாலும் பழுதுகள் இருக்கும் போது வாகனத்தை ஓட்ட கூடாது அந்த பழுதுகளை சரிபார்த்து ஓட்டுவாதனால் வீண் விபத்துக்களை தவிர்க்க முடியும். சாலை பயணத்தில் எப்போதும் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது.
சாலையில் விபத்துகள் ஏற்பட்டுவிட்டால் என்ன செய்ய வேண்டும்?
சாலையில் நீங்கள் வாகனத்தை ஓட்டி கொண்டு செல்லும் போது விபத்துக்கள் ஏற்பட்டால் நீங்கள் செய்ய வேண்டிய 4 நடைமுறைகளை தெரிந்து கொள்ளுங்கள்.1. வாகனத்தை நிறுத்துங்கள்.
2. விபத்தில் ஏதேனும் காயம் ஏற்பட்டால் கவனிக்கவும்.
3. மருத்துவ உதவி பெறவும்.
4.போலீஸ் எப்ஐஆர் பதிவு செய்யுங்கள்.
காவல்நிலையத்திற்கு தகவல் கொடுப்பதால் காவல்நிலைய அதிகாரிகளின் உதவி கிடைக்கும் மேலும் போலிஸ் பதிவு செய்யும் எஃப் ஐ ஆர் இன்சூரன்ஸ் கிளைம் அல்லது மூன்றாம் தரப்பு இன்சூரன்ஸ் கிளைம் செட்டில்மென்ட் செயல்பாட்டில் உங்களுக்கு தேவைப்படும். போலிஸ் FIR இன்சூரன்ஸ் கிளைம் செயல்பாட்டில் நீங்கள் காப்பீட்டு நிறுவனத்திடம் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணமாகும்.
சாலை விபத்தில் காப்பீட்டை பெறுவது எப்படி?
சாலை விபத்தில் உங்கள் வாகனம் சேதமடைந்து இருந்தால் எந்தெந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்தால் விரைவில் வாகன காப்பீட்டை பெறமுடியும் அதற்கு நான்கு வகையான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் அவை கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.1. உங்கள் காப்பீட்டு நிறுவனத்தை தொடர்பு கொள்ளவும்.
நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனம் எதுவாக இருந்தாலும் நீங்கள் இன்சூரன்ஸ் பாலிசி வாங்கி இருக்கும் இன்சூரன்ஸ் நிறுவனத்தை உடனடியாக அழைத்து நடந்த விபத்தை பற்றி தெரிவிக்கவேண்டும், இதன் மூலம் இன்சூரன்ஸ் கிளைம் விரைவில் பதிவு செய்யப்படும். ஒருவேளை இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் உடனடியாக சொல்ல முடியவில்லை என்றாலும் கவலை வேண்டாம் போலிஸ் அதிகாரிகள் நடந்த விபத்தை வழக்கு பதிவு செய்து விசாரித்து இருப்பார்கள் அதன் அடிப்படையில் இன்சூரன்ஸ் கிளைம் பண்ணலாம்.
2. படங்களை எடுக்கவும்.
3. ஆவணங்களை சமர்ப்பிக்கவும்.
விபத்து ஏற்பட்டால் தேவையான ஆவணங்கள்:
- ஓட்டுநர் உரிமத்தின் நகல்.
- போலீஸ் எஃப்ஐஆர் நகல்
- கார் பதிவு சான்றிதழின் நகல் (RC Book)
- கார் காப்பீட்டு ஆவணங்களின் நகல்
- வாகனத்தை பழுதுபார்த்த செலவு மதிப்பீடு பீல்கள்.
மேற்கண்ட ஆவணங்கள் அனைத்தையும் கைவசம் வைத்திருக்க வேண்டும் வாகன இன்சூரன்ஸ் கிளைம் செட்டில்மென்ட் பெற விண்ணப்பங்களை விண்ணப்பிக்கும் போது தேவைப்படும் ஆவணங்களை இணைத்து சமர்ப்பிக்கவும்.
4. உங்கள் வாகனத்தை பழுது பார்க்கவும்.
மேற்கண்ட அனைத்தையும் விபத்து ஏற்பட்ட பிறகு பின்பற்ற வேண்டியவை ஆகும். இதில் கட்டாயம் என்பது எதுவும் கிடையாது. உயிருக்கு ஆபத்தான சூழ்நிலலயில் உயிரை முதலில் காப்பாற்றிக் கொள்வதே புத்திசாலித்தனம். விபத்து நடந்த பிறகு பெரிய காயம் இல்லாமல் ஆரோக்கியமாக இருந்தால் மட்டும் மேலே கொடுக்கப்பட்ட 4 செயல்முறையையும் பின்பற்ற வேண்டும்.
வாகன விபத்தில் இன்சூரன்ஸ் இல்லை என்றால் என்ன ஆகும்?
வாகன விபத்துக்கள் ஏற்படும் போது இழப்புகள் அதிகமாக இருக்கும் சில நேரங்களில் உயிரே பறிபோவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அந்த சூழ்நிலையில் இழப்பு ஏற்பட்டவருக்கு இழப்பீடு வழக்குவதில் அலட்சியமாக இருக்க கூடாது என்பதற்காக தான் அனைத்து வாகனங்களிலும் மூன்றாம் நபர் காப்பீடு கட்டாயம் என இந்திய அரசு சட்டம் இயற்றி உள்ளது. இருந்த போதிலும் நிறைய மக்கள் சரியான விழிப்புணர்வு இல்லாமல் தங்களது வாகனங்களுக்கு காப்பீடு எடுப்பதில்லை. காப்பீடு இல்லாமல் விபத்து ஏற்பட்டால் பாதிக்கப்பட்டவருக்கு அதற்கான செலவுகள் மற்றும் இழப்பீடு தொகையை கட்டாயம் நீங்கள் கொடுக்க வேண்டி இருக்கும். ஒருவேளை இன்சூரன்ஸ் இல்லாத நிலையில் உங்களுக்கே விபத்து ஏற்பட்டாலும் அந்த இழப்பை நீங்கள் தான் சரி செய்ய வேண்டும்.சாலையில் பயணம் செய்யும் போது எப்போதும் கவனமுடன் செல்வது மட்டும் முக்கியமல்ல சரியான சாலை விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் மேலும் எப்போதும் பயணம் செய்யும் போது வாகனத்திற்கான ஆவணங்களையும் வாகனத்தில் வைத்திருக்க வேண்டும், கட்டாயம் இன்சூரன்ஸ் வாகனத்திற்கு வைத்திருக்க வேண்டும். மேற்கண்ட அனைத்து விழிப்புணர்வோடு சாலையில் பாதுகாப்பாக பயணம் செய்யுங்கள்.
Post a Comment