சம்பாதிக்கும் மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை ஆனால் அனைவருக்கும் இது பொருந்தாது, காரணம் சில நேரங்களில் மனைவி சம்பாதிக்கும் பணத்தை வைத்துக்கொண்டு அவரால் அவரை பராமரித்துக் கொள்ள முடியாது.
ஒரு மனைவி அதிகம் படிக்கவில்லை அவர் ஒரு சின்ன வேலைக்கு போகிறார் அந்த வேலையில் அவருக்கு மிக குறைந்த சம்பளமே கிடைக்கிறது அதாவது பத்தாயிரத்திலிருந்து பதினைந்தாயிரம் வரைக்கும் அவங்களுக்கு சம்பளம் கிடைக்கிறது என்றால் அந்த சம்பளத்தை வைத்துக்கொண்டு ஒரு வாடகை வீட்டில் வாசித்துக் கொண்டு மாத வாடகை கொடுத்துக் கொண்டு அந்த மனைவியால் குடும்பம் நடத்துவது மிகவும் சிரமமான ஒரு சூழ்நிலையாக அந்த மனைவிக்கு இருக்கும் இந்த மாதிரியான சூழ்நிலைகள் ஒரு வழக்கில் வரும் போது அந்த சூழ்நிலைகளை நீதிமன்றம் கருத்தில் எடுத்துக் கொள்ளும்.
அவர் சம்பாதிக்கும் அந்த குறைந்த வருமானத்தில் அவரை அவரே பராமரித்துக் கொள்ள முடியாது என்ற காரணத்தினால் அவரை பராமரிக்க வேண்டிய அவசியம் கணவருக்கு ஏற்படுகிறது.
மனைவி என்னதான் சம்பாதித்து கொண்டு இருந்தாலும் மனைவியால் அவரை பராமரித்துக்கொள்ள முடியாத போது அவருக்கு கணவர் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டியது அவசியமாகிறது.
கணவர் ஐம்பதாயிரத்திலிருந்து அறுபதாயிரம் வரைக்கும் சம்பாதிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம் அல்லது அந்த கணவர் ஒரு முப்பதாயிரத்திலிருந்து ஐம்பதாயிரம் வரை சம்பாதித்தாலும் அவருடைய வருமானத்தில் குறைந்தபட்சம் 20% இலிருந்து 25% வரைக்கும் ஜீவனாம்சமாக கொடுப்பதற்கான உத்தரவை பிறப்பிப்பதற்கு நீதிமன்றத்திற்கு அதிகாரம் இருக்கிறது.
மனைவி சம்பாதித்துக் கொண்டுதான் இருக்கிறார் என்றால் கட்டாயமா அவருக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டாம் என்ற விதிமுறை எங்கும் கிடையாது அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
சம்பாதிக்கும் மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சில இணையதளங்களில் நீங்கள் பார்த்து இருக்கலாம் ஆம் அது உண்மைதான் உயர் நீதிமன்றங்களில் சில நீதிமன்ற உத்தரவுகள் அதை உறுதி செய்கிறது, இருந்தாலும் உங்கள் வழக்கிற்கும் அந்த வழக்கிற்கும் வேறுபாடுகள் மாறுபட்ட சூழ்நிலைகள் நிறைய இருக்கும் அந்த சமயங்களில் அது உங்கள் வழக்கிற்கு பொருந்தாது.
ஒவ்வொரு வழக்கிற்கும் ஒவ்வொரு தன்மைகள் இருக்கிறது அந்த வழக்கை தொடர்ந்து நடத்தி வழக்காடி தான் வெற்றி பெற முடியும்.
வழக்கில் எல்லா கூறுகளையும் எல்லா பக்கங்களையும் விசாரித்து தான் முடிவுகளை நாம் பெற முடியும் உடனடியாக ஒரு வழக்கை எடுத்த உடனே அதற்கு ஒரு முடிவை சொல்லிவிட முடியாது இரண்டு பக்கங்களின் நிறை குறைகளை விசாரணை செய்துதான் ஒரு வழக்கில் நீதிபதி தீர்ப்பை வழங்க முடியும்.
ஜீவனாம்சம் வழக்குகளில் சாட்சியங்கள் மிக மிக அவசியமாகிறது அதனுடைய சாட்சியங்களை விசாரித்து தான் ஒரு வழக்கில் தீர்ப்பு கொடுக்க முடியும்.
நீங்க அதிகமான சம்பளம் பெற்றுக் கொண்டு மனைவி ஒரு குறைவான சம்பளம் பெற்றுக் கொண்டிருக்கிறார் அவரால் அவரை பராமரிக்க முடியவில்லை என்ற சூழ்நிலை இருக்கு என்றால் நிச்சயமா ஜீவனாம்சம் கொடுக்க வேண்டியது அவசியமாகிறது.
இந்தியாவில் இன்னுமே ஜீவனாம்சம் பற்றிய விழிப்புணர்வு இல்லை என்று சொல்லலாம் இந்தியவில் மனைவிக்கு கணவர் ஜீவனாம்சம் கொடுப்பதில் பெரிய தயக்கம் இருக்கு என்று சொல்லலாம் இந்த ஜீவனாம்ச வழக்கில் கணவரை கைது செய்து ஜெயிலுக்கு அனுப்ப கூட வாய்ப்புகள் இருக்கிறது.
ஜீவனாம்ச வழக்கில் நிறைய விதிமுறைகள் இருக்கு அதெல்லாம் தெரிந்து கொண்டுதான் நீங்க ஒரு முடிவுக்கு வர வேண்டும். அதுக்கு நீங்கள் உங்கள் அருகில் இருக்கும் வழக்கறிஞரை சந்தித்து சட்ட ஆலோசனை பெறுவது உதவியாக இருக்கும்.
Post a Comment