போலீஸ் அதிகாரி எந்த இடத்தில் வைத்தும் உங்களிடம் கேள்வி கேட்க முடியுமா?


போலீஸ் அதிகாரி எந்த இடத்தில் வைத்தும் உங்களிடம் கேள்வி கேட்க முடியுமா என்பதை இன்று தெரிந்து கொள்ளப்போகிறோம். நீங்கள் தனியாக நடந்து வந்து கொட்டிருக்கிறீர்கள் உங்களுக்கு எதுவும் தெரியாது ஒரு போலீஸ்  அதிகாரி உங்களை  அடையாளம் காண வேண்டும் என உங்களை தடுத்து நிறுத்தி விசாரிக்கிறார் அதாவது நீங்கள் குற்றத்தைச் செய்ததாக அவர் கருதுகிறார் அப்படி விசாரிக்கலாமா. ஆம் விசாரிக்க முடியும் அதற்கு சட்டத்தில் இடமுள்ளது அப்படி விசாரணை செய்யும்போது நீங்கள் சரியான தகவலை கொடுக்கவில்லை என்றால் உங்களை கைது செய்யும் அதிகாரமும் ஒரு போலீஸ் அதிகாரிக்கு உண்டு. இந்த அதிகாரத்தை குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 42 வழங்குகிறது.

English : Section 42 in The Code Of Criminal Procedure, 1973 (Arrest on refusal to give name and residence)

ஒரு போலீஸ்  அதிகாரி உங்களை சதேகப்பட்டு விசாரணை செய்தல்  அத்தகைய  அதிகாரியின் விசாரணையில்  நீங்கள் உங்கள்  பெயரையும் வசிப்பிடத்தையும் கொடுக்க மறுக்கும்போது அல்லது அத்தகைய அதிகாரிக்கு பொய்யான தகவலை கொடுத்தால் அதனை அவர் பொய் என கருதினால்  உங்கள்  பெயர் அல்லது வசிப்பிடத்தை உறுதிப்படுத்தும் பொருட்டு  அந்த  அதிகாரி உங்களை கைது செய்யலாம். போலீஸ் அதிகாரியின் விசாரணைக்கு பின் நீங்கள் சொல்லியது உண்மை என அறிந்தால் நீங்கள் விடுவிக்கப்படுவீர்கள்.

Counter case என்றால் என்ன?


ஒரே ஒரு சம்பவத்தில் எதிரிக்கும், புகார்தாரருக்கும் காயங்கள் ஏற்பட்டிருந்து, அந்த சம்பவம் குறித்து இரண்டு புகார்கள் அளிக்கப்பட்டிருந்தால் அந்த புகார்களையும் பதிவு செய்து காவல்  துறையினர் புலன் விசாரணையை மேற்கொள்ள வேண்டும். புகாரில் கூறப்பட்டுள்ள சங்கதிகள் உண்மையானவை என்று தெரிய வந்தால் இரண்டு வழக்குகளிலும் இறுதியறிக்கையை காவல்துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். புகார் பொய்யானது என்று தெரிய வந்தால் அந்த புகாரின் மீதான விசாரணையை காவல்துறையினர் கைவிட்டு விட வேண்டும். 

இது சம்மந்தமாக வெளிவந்த நீதிமன்ற தீர்ப்பு கீழே உள்ளது ஒரே குற்றச் சம்பவம் தொடர்பாக எதிர்-எதிர் தரப்பினர் மீது 2 முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய முடியாது. (2001 Air SCW 2571)

இது பற்றி மேலும் புரிந்துகொள்ள வீடியோவை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் இதோ லிங் கவுன்டர் கேஸ் என்றால் என்ன?

விபத்தில் காயமடைதவருக்கு சிகிச்சை அளிக்க காவல்துறையிடமிருந்து முதல் தகவலறிக்கை தேவையா?


நாம் அனைவரும் தினமும் நாம் வாழும் சூழலில் பல பயணங்கள் செல்கிறோம் பணிகள் பல செல்கிறோம் அதில் அருகில் யாருக்காவது விபத்து நடந்து விட்டது என்றால் சிலர் தயங்குவதுண்டு காரணம் வீண் அலைச்சல் போலிசில் புகார் அளிக்க வேண்டும் காவல்நிலையத்திற்கு அலைய வேண்டும் என்ற அச்சமே காரணம் இது தேவையில்லை.

விபத்தில் காயமடைந்தவருக்கு மருத்துவம் செய்ய போலீசின் முதல் தகவல் அறிக்கை தேவையில்லை. விபத்தில் காயமடைந்தவருக்கு மருத்துவம் செய்ய போலீசின் முதல் தகவல் அறிக்கை தேவையில்லை. இது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. எனவே, அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது மருதுவமனை காவல்துறை அனுமதி வேண்டும் என்று சொன்னால் அது சட்டப்படி குற்றம் என்று சொல்லுங்கள்.. ஆபத்தில் ஒரு உயிருக்கு தேவை உதவி அதனை உங்களால் முடிந்த அளவுக்கு மற்றவருக்கு செய்யுங்கள்.

FIR என்றால் என்ன?


முதல் தகவல் அறிக்கை என்பது குற்றம் சாட்டப்பட்டவர் மீது போலீசாரால் பதியப்படும் வழக்கு ஆவணம் ஆகும். காவல் நிலைய வழக்குகளில் புகார் கொடுக்கப்படும் போது அவற்றை விசாரணை செய்து இந்திய தண்டனைச் சட்டம் மேலும் வரதட்சணை கொடுமை மற்றும் பாலியல் கொடுமைகள் சிறுவர் சிறுமி வன் கொடுமைகள் போன்ற சட்டங்களின்  அடிப்படையில் குற்றங்கள் பிரிக்கப்பட்டு அந்தந்த பிரிவுகளின் அடிப்படையில் குற்றவியல் வழக்கில் வழக்கு FIR பதிவு செய்யப்படும்.

முதல் தகவல் அறிக்கை (FIR - First Information Report) என்பது குற்றத்தினை பதிவு செய்ய காவல் நிலையத்தில் பயன்படுத்தப்படும் நடைமுறை ஆகும்.  குற்றம் குறித்து கிடைக்கும் முதல் தகவலைப் பெற்று எழுதப்படும் எழுத்து மூலமான ஆவணமாகும். முதல் தகவல் அறிக்கைப் பதிவு குற்ற வழக்குகளின் புலனாய்வின் முதல் கட்டமாகும்.

சட்டம்.
 
இந்த நடைமுறை எந்த சட்டத்தின் அடிப்படையில் பதியபடுகிறது என்றால் குற்றவியல் நடைமுறைச்சட்டப் பிரிவு 154  வது சட்டப்படி தான் பதியப்படுகிறது.

புகாரைப் பெற்ற காவல் அதிகாரி அச்சிடப்பட உரிய படிவத்தில் புகாரையும். புகாரில் கண்ட பொருன்மைக்கு ஏற்ப சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடுத்து அந்த புகாரினை காவல் உயர் அதிகாரிகளுக்கும் நீதித்துறை நடுவர் ஒருவருக்கும் உடனடியாக அனுப்பி வைக்கப்படவேண்டும்.  

புகாரைப் பெற்ற காவல் அதிகாரியை அந்த புகாரை பற்றி விசாரணை செய்து குற்றம் குறித்த முதல் தகவலைப் பெறும் காவல் நிலையப் பொறுப்பு அதிகாரி ஆவார். அந்த அதிகாரியை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திடும் கடமையுடையவர் ஆவார். 

உயர்நீதிமன்றம் அல்லது இந்திய உச்ச நீதிமன்றத்தின் ஆணையில்லாமல் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் உள்ள பதிவுகளை காவல் துறையால் மாற்றவே முடியாது. இந்திய சட்டத்தில் அனைத்து வகைக் குற்றங்களையும் இரண்டு வகைகளாக அடக்கிவிடலாம். 

அதாவது புகார் அளித்ததும் குற்றம்சாட்டப்பட்டவரைக் கைது செய்ய வேண்டிய குற்றங்கள் என உடலில் ரத்தக் காயங்களை ஏற்படுத்தும் குற்றங்கள் மற்றும் சிறிய, பெரிய அளவிலான பண மோசடிகள் ஆகியவை உடனடி கைது நடவடிக்கை வேண்டுபவை இவற்றுக்கு உடனடியாக F.I.R பதிய வேண்டியது போலீசாரின் கடமையாகும்.

உடலில் காயம் ஏற்படாத மன உளைச்சலை உண்டாக்கும் வகையிலான குற்றங்கள் இரண்டாவது பிரிவில் அடங்குபவை ஆகும்.இந்தக் குற்றங்களில் பாதிக்கப் பட்டோரின் புகாரை அந்த எல்லைக்கு உட் பட்ட நீதிமன்றத்துக்கு அனுப்பி, மாஜிஸ்ட்ரேட்டின் ஒப்புதல் பெற்ற பிறகுதான், F.I.R பதிவு செய்ய முடியும்.

குற்றம் நடந்த பிறகு எங்கே புகார் கொடுப்பது?


சம்பவம் நடந்த இடத்தை நிர்வகிக்கும் காவல் நிலையத்தில்தான் புகார் அளிக்க வேண்டும். ஆனால் அவசரக்கலாம் என்றால்அருகில் இருக்கும் எந்தக் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கலாம்.

பொதுவாக, F.I.R பதிவு செய்யும் நபர் முதல் நிலை காவலர் அந்தஸ்துக்கு (பக்கவாட்டில் இரு வெள்ளைக் கோடு இருக்கும் காக்கி யூனிஃபார்ம் அணிந்து இருக்கும் காவலர்கள் குறையாத நபராக இருக்க வேண்டும். அவருக்கும் மேல் உள்ள அதிகாரிகளான டி.எஸ்.பி., எஸ்.பி. என எவரிடமும் உங்களது புகாரைப் பதிவு செய்யலாம்.

பாதிக்கப்பட்டவர் வாய்மொழி வாக்குமூலமாகக்கூட புகார் அளிக்கலாம். ஆனால், சம்பந்தப்பட்ட காவல் அதிகாரி அந்த வாக்குமூலத்தைப் புகாராக எழுதி, புகார்தாரரின் கையப்பத்தையோ கை ரேகையையோ அதில் இடம் பெறச் செய்ய வேண்டியது அவசியமாகும். 

அதன் பிறகு குற்றம் நடந்து இருப்பதை உறுதிசெய்து, உடனடியாக முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய வேண்டும். பிறகு இந்திய தண்டனைச் சட்டத்தில் உள்ள 511 பிரிவுகளில் புகார்தாரரின் பாதிப்புக்கு தக்க பிரிவுகளில் வழக்கினைப் பதிவுசெய்ய வேண்டும். பிறகு தாமதிக்காமல் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்துக்கு அந்த F.I.R-ஐ நேரிலோ, தபாலிலோ அனுப்பிவிட வேண்டும். அந்த F.I.R நீதிபதிக்குக் கிடைத்துவிட்டதை உறுதிப் படுத்திக்கொண்டு, விசாரணை நடவடிக்கையைத் தொடங்க வேண்டும். 

இந்த நடைமுறைகளைச் சரிவர மேற்கொள்ளாத சமயத்தில்தான் வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வரும்போது குற்றம் நடந்த நேரம், F.I.R பதிவு செய்யப்பட்ட நேரம் அது நீதிமன்றத்துக்குக் கிடைத்த நேரம் ஆகியவற்றில் உள்ள முரண்பாடுகளைச் சுட்டிக் காட்டி குற்றவாளிகள் தப்பித்துவிடுவார்கள். 

ஒரு F.I.R என்பது மொத்தம் ஆறு நகல்களைக் கொண்டது. காவல் அதிகாரி எழுதும் அசல் F.I.R அந்த நோட்டிலேயே இருக்கும். அதைக் கிழிக்கக் கூடாது. கார்பன் தாள் வைத்து எழுதப்படும் மீதி ஐந்து நகல்களைத்தான் புகார் தாரர் நீதிமன்றம் என விநியோகிக்க வேண்டும். 

புகார்தாரருக்கு F.I.R நகல் அளிக்க வேண்டியது அவசியம் அப்படித் தராமல் இருப்பதுகூட ஒரு குற்றம் வழக்கு பதியப்படும் போது FIR ஐ கவனமுடன் பெற்றுக்கொள்ளவேண்டும்.

காவல்நிலையத்தில் புகார் செய்தும் நடவடிக்கையில்லை என்ன செய்ய?


ஒரு குற்றம் நடந்தும் காவல்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் அந்த புகாருக்கு சரியான நடவடிக்கை இல்லை என்றால் நீதிமன்றத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி மனு செய்யலாம்.

புகாரை ஏற்கவில்லை என்றால் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டிடம் புகார் கொடுக்கலாம். (Complaint to Judicial Magistrate):

மூத்த காவல்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்த பிறகும் எப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை என்றால், குற்றவியல் நடைமுறையின் பிரிவு 190ன் படி, மற்றும் 156(3)ன்படி Judicial Magistrate ஜூடிசியல் மாஜிஸ்திரேட்/மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டுக்கு புகார் அளிக்க தகவலறிந்தவருக்கு சட்டப்பூர்வமாக உரிமை உண்டு. 

ஜூடிசியல் மாஜிஸ்திரேட் உத்தரவு:

ஜூடிசியல் மாஜிஸ்திரேட் உத்தரவுக்கு பின் குற்ற முகம்தாரம் அந்த வழக்கில் இருந்தால் காவல்துறையால் FIR பதிவு செய்யப்பட வேண்டும் மற்றும் இது தொடர்பாக விசாரணையைத் தொடங்க வேண்டும்.  

இது பற்றி மேலும் புரிந்துகொள்ள வீடியோவை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் இதோ லிங் : காவல்நிலையத்தில் கொடுத்த புகாருக்கு நடவடிக்கை இல்லை குற்றவாளி மீது FIR போடல என்ன செய்யலாம்?

காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் காவல் நிலைய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க முடியுமா?


எப்.ஐ.ஆர் பதிவு செய்யவில்லை என்றால் எப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் எனவும், எப்.ஐ.ஆர் பதிவு செய்ததற்கான காரணத்தை காண்பிக்க வேண்டும் எனவும் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட சொல்லி  உயர் நீதிமன்றத்தில் தவறிழைக்கும் காவல்துறை அதிகாரிக்கு எதிராக ரிட் ஆஃப் மாண்டமஸ் என்ற ரிட் மனுவை  தாக்கல் செய்து நீதிமன்றம் மூலமாக நடவடிக்கை எடுக்கலாம். மேலும் எஃப்ஐஆர் பதிவு செய்ய மறுத்த அதிகாரிக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் அவமதிப்பு மனு தாக்கல் செய்யலாம். சமீபத்தில் லலிதா குமாரி என்பவரது வழக்கில் காவல்துறை எப்ஐஆர் பதிவு செய்யாமல் இருந்ததற்கு கவத்துறைக்கு எதிராக உத்தரவுகள் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. காவல்துறை அதிகாரியின் அதிகார வரம்பில் எஃப்ஐஆர் பதிவு செய்ய மறுத்தால், காவல்துறை அதிகாரிகளுக்கு 1 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும். 

மேலே சொல்லப்பட்ட லலிதா குமாரி வழக்கை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் இந்த லிங்கை அழுத்தவும் : 👉 Lalita Kumari vs Govt.Of U.P.& Ors on 12 November, 2013

காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பாதிக்கப்பட்டவர் மேற்கொள்ள வேண்டிய மாற்று பரிகார வழி என்ன?


புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல் மற்றும் எப்ஐஆர் பதிவு செய்யாமல்  இருக்கும் காவல்துறையின் செயலற்ற தன்மையால்  நீங்கள் விரக்தி, உயிருக்கு ஆபத்து மற்றும் சுதந்திரம் பறிப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டால் அதற்காக உயர் நீதிமன்றத்தில் நஷ்டஈடு இழப்பீடு கோரி இந்திய அரசியலமைப்பின் 21ன்படி ரிட் மனு தாக்கல் செய்யலாம்.  

குறிப்பு:

பிரிவு 166A(c)ன் கீழ், சம்பந்தப்பட்ட அரசு ஊழியர் தனக்கு அளிக்கப்பட்ட எந்த தகவலையும் பதிவு செய்யத் தவறினால், குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973, பிரிவு 154 இன் துணைப்பிரிவு (1) இன் கீழ், சட்டப்பிரிவு 326A, பிரிவின் கீழ் தண்டிக்கத்தக்க குற்றம் தொடர்பாக  326B, பிரிவு 354, பிரிவு 354B, பிரிவு 370, பிரிவு 370A, பிரிவு 376, பிரிவு 376A, பிரிவு 376B, பிரிவு 376C, பிரிவு 376D, பிரிவு 376E அல்லது இந்திய தண்டனைச் சட்டம் 376E அல்லது பிரிவு 509, கடுமையான சிறைத்தண்டனைக்கு அவர் தண்டனைக்குரியவர். அவருக்கு தண்டனை ஆறு மாதங்களுக்கு குறைவாக இருக்கக்கூடாது, ஆனால் அது இரண்டு ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம், மேலும் அபராதமும் விதிக்கப்படும்.

எனவே அடுத்த முறை எந்தவொரு காவல்துறை அதிகாரியும் நியாயமற்ற காரணங்களுக்காக உங்கள் எஃப் ஐ ஆரை (FIR) பதிவு செய்ய மறுத்தால் மாற்று வழிகளைப் பயன்படுத்த தயங்க வேண்டாம். 

குண்டர் சட்டம் என்றால் என்ன மற்றும் குண்டர் சட்டத்திற்கு என்ன தண்டனை வழங்கப்படுகிறது? 


குண்டர் சட்டம் என்றால் என்ன?

குண்டர் சட்ட கைதுகள் தொடரும் இந்த நேரத்தில் இதை பற்றி சற்று தெரிந்து கொள்வோம். குண்டர்கள் என அழைக்கப்படுபவர்கள் குற்ற செயலில் ஈடுபட கூடிய சமூக விரோதிகளை இவர்களை  Goondas Act, 1923 என்ற சட்டத்தின் மூலம் அடக்குவதே அரசின் நோக்கம்  அதற்காக தான் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது.

Goondas sattam
Goondas act in tamil

Goondas Act, 1923.

தொடர் குற்றங்களில் ஈடுபடக்கூடியவர்கள், வனக்குற்றங்களில் ஈடுபடக்கூடியவர்கள், கள்ளச்சாராயம், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாலியல் தொழிலில் ஈடுபடும் சமூக விரோதிகளை கைது செய்து அதன் மூலம் அமைதியை நிலைநாட்டுவதற்கு என்றுக் கூறி 1982-இல் தமிழக அரசால் இயற்றப்பட்டது தான் இந்த குண்டர் தடுப்புச் சட்டம் எனப்படும் தமிழ்நாடு வன்செயல்கள் தடுப்புச் சட்டம். 

தமிழகத்தில் நிகழும் தொடர் குற்றங்களை தடுக்கும் பொருட்டு குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யும் அதிகாரம் இச்சட்டத்திற்க்கு வழங்கப்பட்டுள்ளது.

குண்டர் சட்டம் கைது நடவடிக்கை.

இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படக் கூடியவர் ஓராண்டு காலம் பிணையில் வெளிவர முடியாத வகையில் சிறையில் அடைக்கப்படுவார்கள். 

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவருக்கு எவ்வித நீதிமன்ற விசாரணையுமில்லை.

இதனால் கைது செய்யப்பட்டவர் தனது கைது நடவடிக்கைக்கு எதிராக ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி ஒரு ஓய்வுப் பெற்ற நீதிபதி மற்றும் ஒரு அமர்வு நீதிபதி ஆகியோரைக் கொண்ட நிர்வாக விசாரணைக் குழு ஒன்று உள்ளது அந்த விசாரணை குழுவிடம் மட்டுமே அணுக முடியும்.

குண்டர் சட்டம் கைதுக்கு எதிரான முறையீடு எப்படி செய்வது?

குற்றவாளிகள் கைதுக்கு எதிரான முறையீடு நிர்வாக விசாரணைக் குழுவால் தள்ளுபடி செய்யப்பட்டால் பின்னர் உயர்நீதிமன்றத்தை அணுகலாம். 

அடிதடி ஆசாமிகள் தவிர பிற குற்றவாளிகளும் குண்டர் சட்டத்தால் தண்டிக்கப்படுவார்களா? 

 
திருட்டு வீடியோ, சி.டி குற்றம் ஆகியவை 2004ம் ஆண்டும், மணல் கடத்தல் மற்றும் குடிசை நில அபகரிப்பு ஆகியவை 2006ம் ஆண்டும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டன. இதனால் இந்த மாதிரி குற்றம் செய்பவரும் குண்டர் சட்டத்தால் தண்டிக்கபடுவர். 

பின்னர், மேற்கொள்ளப்பட்ட இரண்டு திருத்தங்களில் தொடர் குற்றவாளி என்ற வரையறை நீக்கப்பட்டதுடன், சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாகக் கூறி கைது செய்யும் வாய்ப்பையும் இந்த சட்டம் வழங்குகிறது.


இது பற்றி மேலும் புரிந்துகொள்ள வீடியோவை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் இதோ லிங் : குண்டர்  தடுப்பு சட்டத்தை பற்றிய  பதிவு. 

காவல்நிலைய வழக்குகளை சமரசம் செய்து கொள்ள முடியுமா?


காவல் நிலையத்தில் பதிவு செய்யப்படுகிற அனைத்து புகார்களுக்கும் தண்டனை வழங்கி விட வேண்டும் என்று கட்டாயம் இல்லை, நீதிமன்றத்தின் அனுமதியோடு காவல்நிலையத்தில் போடப்படும் வழக்குகளில் சில வழக்குகளில் புகார் கொடுத்தவருக்கும் குற்றவாளிக்கும் இடையே சமரசம் செய்து கொள்வதற்கான வாய்ப்புகளும் வழங்கப்படுகிறது. இது குறிப்பிட்ட பிரிவுகளில் பதிவு செய்யப்படும் குற்றங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

காவல் நிலைய வழக்குகளில் சமரசம் செய்து கொள்ளக்கூடிய குற்ற பிரிவுகள் யாவை?


நீதிமன்றத்தின் அனுமதியோடு காவல்நிலையத்தில் போடப்படும் வழக்குகளில் சிலவற்றை சமரசம் செய்துகொள்ள முடியும் அந்த மாதிரியான இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பதியப்பட்ட பிரிவுகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

இந்திய தண்டனை சட்டம் (Indian Penal Code) பிரிவுகள்
298, 323, 334, 341, 342, 352, 355, 358, 426, 427, 447, 448, 491, 497, 498, 500, 501, 502, 504, 506, 508 ஆகியவற்றின் கீழ் அடங்கிய குற்றங்களின் தரப்பினர்கள் சமாதானம் செய்து கொள்வதற்கு நீதிமன்றத்தில் முன் நீதிமன்ற அனுமதியோடு சமரசம் செய்துகொள்ள முடியும்.

பாதிக்கப்பட்டவரும் (victim) எதிரிகளும் (Accused) உள்ளூர் பஞ்சாயத்தார் முன்னிலையில் வழக்கை மேற்கொண்டு நடத்த வேண்டாமென குறிப்பிட்டு மனு தாக்கல் செய்தலே போதுமானதாகும்.

மனு, குற்ற விசாரணை முறை சட்டம், பிரிவு 320(1) –ன் கீழ் தாக்கல் செய்தல் வேண்டும். மனுவில் பாதிக்கப்பட்டவரும் (victim) எதிரிகளும் (Accused) கையொப்பமிடுதல் வேண்டும்.

சமரசத்தின் பொருட்டு மனு தாக்கல் செய்த பின்னர், நீதித்துறை நடுவர் (judicial Magistrate) பாதிக்கப்பட்டவரை விசாரித்து, அவர் வழக்கில் சமரசம் செய்து கொண்டதை சாட்சியமாக அளித்த பின்னர் எதிரிகளை விடுதலை செய்வார்.

பாதிக்கப்பட்டவர் 18 வயதுக்கு உட்பட்டவராகவோ பிறவி மந்தராகவோ, (Idiot) பித்தராகவோ இருந்திடும்போது வழக்கொன்றில் சமரசம் செய்து கொள்ள முடியாது. அவர் பொருட்டு அவரது தாய் அல்லது தந்தை அல்லது காப்பாளர் (Guaridan) சமரசம் செய்து கொள்வார்.

குடமொன்றை சட்டப்படி சமரசமாக தீர்த்து கொள்ள மற்றைய வகையில் தகுதி வாய்ந்த நபர் ஒருவர் இறந்திருக்கும்போது, அவரின் பொருட்டு, உரிமையியல் விசாரணை முறை சட்டம் (Civil Procedure Code, 1908) கூறும் வரையறைகளின் படியுள்ள நபர்கள் சம்பவம் தொடர்பாக வழக்கில் சமரசம் செய்து கொள்ளலாம்.

குற்ற விசாரணை முறை சட்டம், பிரிவு 320(1) மற்றும் (2) ல் குறிப்பிட்டுள்ள குற்றங்களை தவிர மற்றைய குற்றங்களில் சமரசம் செய்து கொள்ளுதல் முடியாது. அது போன்ற குற்றங்களில் சாட்சிகளை பிறழ் சாட்சியாக (Hostile witness) ஆக்கியே விடுதல் பெறுதல் முடியும். தேவைப்படின், உயர்நீதிமன்றத்தில் (High Court) அனுமதி பெற்று சமரசம் செய்து கொள்ளலாம். – Law Weekly (Cri)1991,p.590.

சமரசம் செய்யக்கூடிய குற்றங்களின் தன்மைகள் என்ன?


பிரிவு 298 : எவரது சமய உணர்வையேனும் வேண்டுமென்றே புண்படுத்தும் உட்கருத்தோடு சொற்களை சொல்லுதல் முதலியன.

பிரிவு 323,334 : காயம் விளைவித்தல்

பிரிவுகள் 352, 355, 358 : தாக்குதல் அல்லது வன்முறை தாக்குதல் குற்றம்

பிரிவுகள் 426, 427 : சொத்தழிப்பு, தனிப்பட்ட ஒருவருக்கு எதிராக செய்யப்பட்டிருக்கும்போது மட்டும்

பிரிவு 447 : அத்துமீறல் குற்றம்

பிரிவு 448 : வீட்டிற்குள் அத்துமீறி நுழைதல்

பிரிவு 491 : ஊழிய ஒப்பந்த மீறுதல் குற்றம்

பிரிவு 497 : முறை பிறழ்ந்த புணர்ச்சி

பிரிவு 498 : திருமணமான பெண்ணை கடத்துதல்

பிரிவு 5௦௦ : அவதூறு

பிரிவு 5௦1 : செய்தி ஒன்றை அவதூறானது என்று தெரிந்தே அச்சிடுதல் அல்லது செதுக்குதல்

பிரிவு 5௦2 : அவதூறான செய்திகள் அடங்கிய நூல்களை அல்லது பொருள்களை விற்பனை செய்தல்

பிரிவு 504 : அமைதி குலைவை தூண்ட கருதி அவமதிப்பு செய்தல்

பிரிவு 5௦6 : மிரட்டல் குற்றம்; எழாண்டிற்கு உட்பட்டது.

பிரிவு 5௦8 : ஒருவரை அவர் தெய்வத்தின் சினத்திற்கு ஆளாவார் என்பதாக நம்புமாறு செய்வதன் மூலம் விளைவித்த செய்கை இது போன்ற  வழக்குகளில் சுலபமாக தீர்த்து வைக்க முடியும்.

Post a Comment

Previous Post Next Post