நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு போட வேண்டுமென்றால் சில ஆவணங்கள் தாக்கல் செய்ய வேண்டும். நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கில் நீங்கள் ஆவணங்கள் தாக்கல் செய்கிறீர்கள் என்றால் அவற்றை ஆய்வு செய்த பின்புதான் உங்களுடைய வழக்கு பதிவு செய்யப்படும். 

நீதிமன்ற ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்பு அந்த வழக்கு நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது என்றால் உங்களுடைய வழக்கிற்கு ஒரு எண் வழங்கப்படும் அந்த எண்ணின் படி தான் உங்களுடைய வழக்கு நீதிமன்றத்தில் அழைக்கப்பட்டு உங்களுக்கான விசாரணை நடைபெறும் சரிபார்க்கப்படும் இந்த ஆவணங்கள் நீதிமன்றத்தில் ஒரு வழக்கை நிலைப் படுத்துவதற்கு ஒரு மனுதாரருக்கு மிக முக்கியமானதாக இருக்கிறது.  விவாகரத்து வழக்குகளை தாக்கல் செய்வதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவைப்படுகிறது என்பதை தொடர்ந்து தெரிந்துகொள்வோம்.

பொருளடக்கம் :

விவாகரத்து வழக்கில் தேவையான ஆவணங்கள் என்ன?

  1. கணவரின் இருப்பிட சான்று (ரேஷன் கார்டு மற்றும் ஆதார் கார்டு)
  2. மனைவியின் இருப்பிட சான்று
  3. திருமண பத்திரிக்கை அல்லது திருமணம் பதிவு செய்திருந்தால், திருமண சான்றிதழ்.
  4. இருவரின் திருமண போட்டோ கணவன் மனைவி சேர்ந்து இருக்க வேண்டும்.
  5. யார் வழக்கு தாக்கல் செய்கிறார்களோ அவர்களது பாஸ்போர்ட் புகைப்படம்.
  6. இருவரும் சேர்ந்து வாழ எடுத்து கொண்ட முயற்சிகள் தோற்று விட்டன என்பதை காட்டும் ஆவணங்கள் (ஏதாவது இருந்தால் மட்டும்)
  7. ஒரு வருடத்திற்கு மேல், கணவர், மனைவி பிரிந்து வாழ்கிறார்கள் என்பதை காட்டும் ஆவணம் (ஏதாவது இருந்தால் மட்டும்)
  8. சொத்துக்கள் ஏதும் கணவர், மனைவிக்கு இருந்தால், அதை காட்டும் ஆவணம்(ஏதாவது இருந்தால் மட்டும்)

விவாகரத்து வழக்கிற்கு எவ்வளவு செலவு ஆகும்?

விவாகரத்து வழக்கிற்கு நீதிமன்ற கட்டணம் 5௦ ரூபாய் (court fee)ஆகும். மனுவை தாக்கல் செய்ய தயார் படுத்துவதற்கு நடைமுறைப்படுத்துவதற்கு கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. வழக்கு தாக்கல் செய்யும் போது ஏற்படும் செலவுகள் தனி வழக்கறிஞர் கட்டணம் தனி.

வழக்கறிஞர் கட்டணம் விவாகரத்து வகை மற்றும் சம்பந்தப்பட்ட காலத்தைப் பொறுத்து வழக்கின் சிக்கலான மற்றும் கணிக்க முடியாத தன்மையை பொறுத்து ரூ. 10,000 முதல் ரூ.50,000 வரை கட்டணமாக வசூலிக்கலாம். உயர்நீதிமன்றங்களில் ஒரு லட்சம் ரூபாய் வரைக்கும் கட்டணமாக வழக்கறிஞர்கள் பெறுகிறார்கள்.

வழக்கறிஞர்கள் வழக்குகளை நடத்துவதற்காக வாய்தாவிற்கும் கட்டணங்கள் வாங்குகிறார்கள். வாய்தாவிற்கு எவ்வளவு கட்டணம் வாங்குகிறார்கள் என்றால் 1000 முதல் 2000 வரை வழக்கறிஞர் கட்டணமாக வாங்குகிறார்கள் மேலும் வாய்தா விற்கு உயர்நீதிமன்றங்களில் ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவு கட்டணம் என்று வழக்கறிஞர்கள் வழக்கை நடத்துவதற்கு தங்களது கட்டணமாக பெறுகிறார்கள். மேலும் தக்கால் செய்யும் மனுகளுக்கு தனி கட்டண செலவுகள் வசூலிக்கப்டுகிறது. 

விவாகரத்து வழக்கு எங்கு தாக்கல் செய்ய வேண்டும்?

நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்ய வேண்டுமென்றால் எங்கே தாக்கல் செய்ய வேண்டும். என்ற விபரம் நம்மில் பலருக்கு தெரியாமல் இருக்கலாம் ஒரு வழக்கை தாக்கல் செய்ய குறிப்பிட்ட எல்லைகள் வகுக்கப்பட்டுள்ளது அந்த எல்லைக்குட்பட்ட நீதிமன்றத்தில் தான் வழக்குகள் விசாரிக்கபடுகிறது. அதன் விபரம் பின் வருமாறு.

விவாகரத்து வழக்கு தாக்கல் செய்ய கணவன் அல்லது மனைவி கடைசியாக இருவரும் எங்கு கணவர் –மனைவியாக வாழ்ந்தார்களோ அந்த இடத்தில் வழக்கு போடலாம். இதற்காக நம்பகூடிய எழுத்துபூர்வமான ஆதாரம் வேண்டும், 

உதாரணம் – வாடகை ஒப்பந்தம், குடும்ப அட்டை.

கணவன் மனைவிக்கு திருமணம் நடைபெற்ற இடத்தில் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்யலாம். அதாவது எந்த ஊரில் திருமணம் நடைபெறுகிறதோ அந்த ஊர் தாலுகாவில் இருக்கக்கூடிய மாவட்ட நீதிமன்றத்திலோ அல்லது சார்பு நீதிமன்றத்திலோ அல்லது நேரடியாக குடும்பநல நீதிமன்றம் இருக்கிறது என்றால் குடும்ப நல நீதிமன்றத்திலோ விவாகரத்து வழக்கை தாக்கல் செய்ய முடியும்.

திருமணம் செய்த ஊர் அல்லாத வேறு ஊரில் விவாகரத்து வழக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றால் வேறு ஊரில் கணவன்-மனைவி தம்பதிகளாக வாழ்ந்து இருக்க வேண்டும்.

அப்படி வேறு ஊரில் வாடகைக்கு  இருந்தோ அல்லது வீட்டை வாங்கிய அங்கே தங்கியிருந்து கணவன்-மனைவிக்குள் பிரச்சனை ஏற்பட்டால் விவாகரத்து வழக்கில் சம்பந்தப்பட்ட தாலுகாவில் இருக்கக்கூடிய மேற்கண்ட நீதிமன்றங்களில் விவாகரத்து வழக்கை தாக்கல் செய்ய முடியும். 

எடுத்துக்காட்டாக:

மாநகராட்சி எல்கைக்குட்பட்டது என்றால் மாவட்ட நீதிமன்றம் அல்லது குடும்ப நீதிமன்றம் மாநகராட்சிக்கு வெளியே என்றால் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யலாம். 

Post a Comment

أحدث أقدم