கணவன் மனைவிக்கு தெரியாமல் விவாகரத்து ஃபார்ம்ல (form) கையெழுத்து வாங்கினாலோ அல்லது 20 ரூபாய் ஸ்டாம் பேப்பரில் அல்லது 50 மற்றும் 100 ஸ்டாம் பேப்பரில் கையெழுத்து வாங்கினாலோ அது சட்டபடி செல்லாது.

இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட விவாகரத்து ஃபார்ம்மோ சான்றிதழோ அல்லது வேறு எந்த ஆவணமும் கிடையாது.

சட்டப்படி விவாகரத்து பெற நீதிமன்றத்தில் தான் வழக்கு போட வேண்டும்.

நீதிமன்ற வழக்கில் மனைவிக்கு தெரியாமல் கணவன் வழக்கு போட்டால் என்ன செய்வது அப்படி மனைவிக்கு தெரியாமல் விவாகரத்து வழக்கை போட்டு முடிக்க முடியாது.

நீதிமன்றத்தில் கணவன் விவாகரத்து மனு தாக்கல் செய்தால் மனைவிக்கும் மனைவி வழக்கை தாக்கல் செய்தால் கணவனுக்கும் சம்மன் அனுப்ப வேண்டும்.

Divorce-form

இந்த சம்மன் என்ற அழைப்பாணை வரும் போது அதை வாங்க மறுத்தால் உங்களுக்கு எதிராக ஒருதலைபட்ச தீர்ப்பு வழங்கப்படும் இதை தான் எக்ஸ்பார்ட்டி தீர்ப்பு என்போம்.
இந்த எக்ஸ்பார்ட்டி பற்றிய நிறைய வீடியோகள் எனது சட்டம் அறிவோம் இணையதளத்தில் இருக்கிறது தேவைபட்டால் அதை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் அதற்கான லிங் இதோ:

ஒருவேளை சம்மன் கிடைக்கவில்லை என்றால் புதிய சம்மனை அனுப்ப சொல்லி நீதிபதி உத்தரவிடுவார்.

இப்படி ஏதாவது ஒரு நடைமுறையின் வாயிலாக வழக்கு இருப்பதை எதிர்மனுதாரருக்கு கட்டாயம் தெரியபடுத்த வேண்டும். உங்களுக்கு ஏதாவது ஒருவழியில் தெரியபடுத்தாமல் உங்கள் வழக்கை முடிக்க முடியாது.

விவாகரத்து ஃபார்ம் மற்றும் ஸ்டம் பேப்பரில் விவாகரத்து வாங்குவது போலியான ஆவணங்களே இவைகள் சட்டப்பூர்வமான ஆவணம் கிடையாது.

கணவன் மனைவிக்கு தெரியாமல் விவாகரத்து ஃபார்ம்ல கையெழுத்து வாங்கினால் அது சட்டப்படி செல்லாது.

Post a Comment

أحدث أقدم