21 வயதுக்குட்பட்ட ஆண் திருமணம் செய்யலாமா?
இந்தியாவில் 21 வயதுக்குட்பட்ட ஆண் திருமணம் செய்து கொள்வது சட்ட விரோதமானது ஆகும். இந்தியாவில் திருமணத்திற்கான சட்டப்பூர்வ வயது என்னவென்றால் பெண்களுக்கு 18 ஆண்டுகள் பூர்த்தியாகி இருக்க வேண்டும் மற்றும் ஆண்களுக்கு 21 ஆண்டுகள் பூர்த்தியாகியிருக்க வேண்டும் என்று குழந்தை திருமணத் தடைச் சட்டம் 2006 இல் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது, எந்தவொரு சட்டக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் திருமணம் செய்து கொள்ள ஒரு ஆண் குறைந்தபட்சம் 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
மதங்களின் அடிப்படையில் சிறு வயதில் குழந்தை திருமண செய்யலாமா?
ஒரு குறிப்பிட்ட மதம் அல்லது சமூகத்திற்கு பொருந்தக்கூடிய தனிப்பட்ட சட்டங்கள் அல்லது வழக்கமான சட்டங்கள் திருமணத்திற்கு வெவ்வேறு வயதை பரிந்துரைத்தால், அதை ஏற்றுக்கொண்டு சட்டப்பூர்வ வயதில் மற்றம் ஏற்படுமா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். இதில் உங்களுக்கு சந்தேகம் இருக்கிறது என்றால் ஒரு வழக்கறிஞருடன் கலந்தாலோசிப்பது நல்லது.
வயது வரம்பு இல்லாத காதல் திருமணங்கள்?
காதல் திருமணங்களில் வயது வரம்பு என்பது சில பிரச்சனைகளை ஏற்படுத்தலாம் காரணம் வயது நிரம்பாத காதலர்கள் திருமணம் செய்து கொண்டாலும் அது சட்டப்படி தவறாகும். குழந்தை திருமணத் தடைச் சட்டம் மற்றும் pocso act (Protection of Children from Sexual Offences Act) சட்டத்தின் அடிப்படையில் உங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
குழந்தை திருமண செய்த குற்றத்திற்கு தண்டனை என்ன?
குழந்தைத் திருமணத்தை நடத்துபவர், நடத்துகிறார், வழிநடத்துகிறார் அல்லது ஊக்குவிப்பவர் இரண்டு ஆண்டுகள் வரையிலான கடுங்காவல் சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்படுவார், மேலும் திருமணம் நடக்கவில்லை என்று நம்புவதற்குக் காரணம் இருப்பதாக அவர் நிரூபிக்காத வரையில் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.குழந்தைத் திருமணத் தடைச் சட்டம், 2006, பிரிவு 9-இன் படி வயது வந்த ஆண் குழந்தையைத் திருமணம் செய்து கொள்வதற்கான தண்டனை.
பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட ஆணாக இருப்பவர், குழந்தைத் திருமணத்தை ஒப்பந்தம் செய்தால், இரண்டு ஆண்டுகள் வரை நீட்டிக்கக்கூடிய கடுங்காவல் சிறைத் தண்டனை அல்லது ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.
إرسال تعليق