முதலில் இரண்டாவது திருமணம் செய்வது குற்றமா என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் அதை தெரிந்து கொண்டால் மட்டும் தான் இரண்டாவது திருமணம் எப்பொழுது செய்ய வேண்டும் என்பதை தெளிவாக புரிந்துகொள்ள முடியும். மக்களுக்கு இரண்டாவது திருமணம் பற்றி தெளிவான விபரம் தெரிந்துவிட்டால் ஆபத்துக்களில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க முடியும்.
இரண்டாவது திருமணம் குற்றமா?
திருமணமான கணவன் அல்லது மனைவி அவர்களின் திருமண வாழ்க்கைக்கு பிறகு இன்னொரு திருமணம் செய்துக்கொண்டால் அந்த திருமணம் செல்லுபடியாகாது.
மேலும் அந்த கணவனோ அல்லது மனைவியோ திருமணத்திற்கு பிறகு வேறொருவரை திருமணம் செய்துகொண்டால் இருதுணைப் புரிந்த குற்றத்திற்கு தண்டனை கிடைக்கும்.
ஒருவர் தனது வாழ்க்கையில் முதலாவது நடந்த திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்ய ஒப்புக்கொண்டால் அது சட்டபடி குற்றம்.
சட்டத்தை மீறி இரண்டாவது திருமணம் செய்த நபரை எந்த சட்டம் தண்டிக்கிறது என்றால் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 494 குற்றம் செய்த நபரை தண்டிக்கிறது.
திருமணமான கணவனோ or மனைவியோ உயிருடன் இருக்கும் போதே மறுமணம் புரிந்தால் அது செல்லுபடி ஆகாது. ஏன்னென்றால் அது கணவன் அல்லது மனைவியின் வாழ்நாள் காலத்தில் நடைபெறுவதால் அது இந்திய சட்டங்களுக்கு எதிரானது திருமணமானவர்கள் விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்தல் அது இருதுணை மணம் என்ற குற்றச் செயலாகும். இதற்காக இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 494-ன்படி தண்டனை வழங்கப்படும். இந்த குற்றத்திற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.
மேலும் இரண்டாவது திருமணம் பற்றி விபரமாக தெரிந்துகொள்ள இந்த லிங்கை அழுத்தவும் : இரண்டாவது திருமணம்
இருதுணை மணகுற்றம் எப்போது நிரூபணமாகும்?
1) குற்றவாளிக்கும் வேறொருவர்க்கும் திருமணம் செய்யப்பட்டிருக்க வேண்டும். உண்மையாக திருமணம் நடந்ததற்கான நிரூபனம் அவசியமாகிறது. இங்கு முதல் திருமணம் செல்லதக்கதாக இருக்க வேண்டும்.
ஒரு வேளை இரு தரப்பினர்களை விசாரணைச் செய்யும் போது சட்டப்படி முதல் திருமணம் செல்லத்தக்கதல்ல என்றால் இரண்டாவது திருமணம் செய்வதன் மூலம் எந்த குற்றமும் செய்யப்படவில்லை.
மேலும் இரண்டு தரப்பினர்களின் வழக்காறு சட்டங்குகளின்படி இரண்டாவது திருமணம் முறைபடி செய்யப்பட்டிருக்க வேண்டும்.
இரண்டாவது திருமணத்தின் செல்லுபடி தன்மை தரப்பினர்களின் மதங்கள் மற்றும் அவர்களின் உறைவிடம் மற்றும் சில இன்றியமையாத மதம் தொடர்பான திருமணச்சடங்குகளை நிறைவேற்றபடுவதை சார்ந்துள்ளது.
உதாரணமாக இந்துப் பழங்குடியினர்கள் இரண்டாவது மற்றும் அடுத்தடுத்த திருமணங்கள் அவர்களது பழங்குடியின வழக்கங்கள் அடிப்படையாக செய்யபடுகிறது என்றால் அத்தகைய இரண்டாவது திருமணங்கள் செல்லத்தக்கது.மற்றும் அந்த நபர் தண்டிக்கத்தக்கவரல்ல என்று உச்சநீதிமன்றம் கூறுகிறது.
2). இந்திய சட்டத்தின் படி தற்போது இரண்டாவது திருமணம் புரியும் நாளில் யாருடன் முதல் திருமணம் செய்துக் கொண்டாரோ அவர் உயிருடன் இருக்க வேண்டும்.
3). இரண்டாவது திருமணம் முதல் திருமணம் போல் கொண்டாட பட வேண்டும் மற்றும் அது செல்லத்தக்கதாக இருக்க வேண்டும். மேலும் இந்த சட்டத்தில் காமக்கிழத்தி அதாவது வைப்பாட்டி, கள்ளக்காதல் வைத்துக் கொள்ளுதல் போன்றது இரண்டாவது திருமணம் ஆகாது.
இரண்டாவது திருமணம் செய்வதில் தண்டனைக்குறியவர்கள் யார்?
இரண்டாவது திருமணத்தை நடத்தி வைக்கும் பூசாரி குற்ற உடந்தையாளர் என்ற வகையில் பிரிவு 494 மற்றும் 109 ன் கீழ் தண்டிக்கப்படுவார்.
இருந்த போதிலும் அந்த இரண்டாவது திருமணத்திற்கு வருவதற்கு இச
ைவு தெரிவித்த நபர்கள் அல்லது அந்த திருமணத்திற்க்கு வீட்டில் இடம் அளித்தவர்கள் அந்த திருமணத்திற்க்கு குற்ற உடந்தையாளர் ஆவதில்லை.
எப்பொழுது இரண்டாவது திருமணம் செய்யலாம்?
1). திருமணமான தம்பதிகள் முதல் திருமணம் செல்லுபடி ஆகாது என தகுதி வாய்ந்த நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விவாகரத்து ஆகிவிட்டது என தீர்ப்பளிக்கப்பட்டால் அந்த நபர் இரண்டாவது திருமணம் செய்துகொள்வது குற்றமல்ல.
2). திருமணமான கணவன் மனைவி பிரிந்து முந்தைய கணவனோ அல்லது மனைவியோ எங்கே இருக்கிறார் என்று அவரை பற்றியே தொடர்ந்து சுமார் 7 ஆண்டுகளுக்கு தெரியவில்லை என்றாலோ அல்லது அவர் சுமார் ஏழு ஆண்டுகள் உயிருடன் இருக்கும் தகவலே ஏதுமில்லை என்றால் மற்ற நபர் இரண்டாவது திருமணம் செய்துக்கொள்ள முடியும்.
மேலும் தற்போது இரண்டாவது திருமணம் செய்ய போகிற வாழ்க்கைத் துனையிடம் முதல் திருமணம் பற்றி கூறியிருக்க வேண்டும்.
3). இந்தியாவில் இரண்டாவது திருமணம் செய்ய சட்டப்படி தகுதியான நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்து விவாகரத்து தீர்ப்பு பெற்ற பிறகு அதன் அடிப்படையில் முதல் திருமணம் கலைக்கப்பட்டுவிட்டது என்றால் இரண்டாவது திருமணம் செய்யலாம்.
இரண்டாவது திருமணம் எதனால் குற்றமாக கருதப்படுகிறது?
இரண்டாவது திருமணம் குற்றமாக எதனால் கருதப்படுகிறது என்ற காரணத்தை தெரிந்துகொள்ளுங்கள்.
கணவன் அல்லது மனைவி இவர்களில் யாராவது ஒருத்தர் விவாகரத்து பெறாமல் இரண்டாவது திருமணம் செய்வது சட்டப்படி குற்றமாகும்.
திருமணமான ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும் முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டால் குற்றமாகும் இரண்டாவது திருமணம் செய்தவர்களும் இருதுணைபுரிந்த குற்றத்திற்கு தண்டிக்கபடுவார்கள்.
திருமணமான தம்பதிகள் கணவனோ மனைவியோ உயிரோடு இருக்கும் போதே விவாகரத்து பெறாமல் இரண்டாவது திருமணம் செய்வதும் சட்டபடி குற்றம்.
இரண்டாவது திருமண குற்றத்திற்கு என்ன சட்டம் தண்டனை வழங்குகிறது?
குற்றவாளிகளுக்கு இந்தியத் தண்டனை சட்டம் பிரிவு-494 சட்டபடி தண்டனை வழங்கபடும்.
சட்டத்துக்கு எதிரான இரண்டாவது திருமணம் செய்து கொண்டால் யாரெல்லாம் தண்டிக்கபடுவார்கள்?
இரண்டாவது திருமணத்தை செய்து கொண்டவர்கள் திருமணம் நடப்பதற்கு காரணமாக இருந்தவர்கள் கூட இந்த சட்டத்தின் அடிப்படையில் தண்டிக்க படுவார்கள்.
இரண்டாவது திருமண குற்றத்திற்கு என்ன தண்டனை வழங்கப்படுகிறது?
இந்த குற்றத்தை செய்தவர்களுக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும் மற்றும் அபராதமும் தண்டனையாக வழங்கபடும்.
إرسال تعليق