உச்ச நீதிமன்றத்தில் வழக்காட ஒரு வழக்கறிஞர் வெறும் BL,and LLB படிப்புகளில் தேர்ச்சி பெற்றால் மட்டும் போதாது இதற்கு சில தகுதி தேர்வுகள் நடத்தப்படுகிறது அதன் அடிப்படையில் தான் உச்ச நீதிமன்ற வழக்கறிஞராக வழக்காட முடியும் அந்த தகுதிகளை தான் இன்று தெரிந்துகொள்ள போகிறோம்.


வழக்காட தேவையான தகுதிகள் யாவை?


1)  4 ஆண்டுகளுக்கு குறையாமல் ஏதாவது மாநில பார் கவுன்சிலில் பெயர் பதிவு செய்யப்பட்டு வழக்குரைஞராக பணி செய்தவராக இருக்க வேண்டும்.


2)  இந்த 4 ஆண்டுகளோடு சேர்த்து இன்னும் கூடுதலாக ஒரு ஆண்டு, ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் பதிவு பெற்ற 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் உள்ள ஒரு வழக்குரைஞரிடம் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.


3) இதற்க்கு முன் மேலே கூறப்பட்ட இரண்டு தகுதிகளையும் பெற்ற பின்னர் உச்சநீதி மன்றத்தால் நடத்தப்படும் "Advocate on Record" என்று சொல்லப்படும் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

What-are-the-qualifications-required-to-become-a-lawyer-in-Supreme-Court

Advocate on Record அப்படினா என்ன?


இது உச்சநீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்ற விரும்புபவர்களுக்கு தகுதி தேர்வு ஆகும்.இந்த தேர்வில் மொத்தம் 4 பாடங்கள் உள்ளது.

நான்கு தேர்வுக்கான பாடங்கள் எவை அவற்றை தெரிந்து கொள்வோம் அவை பின்வருமாறு.


1) SUPREME COURT RULES OF PRACTICE & PROCEDURE. (இதற்கான மதிப்பெண்கள் 100)


2) DRAFTING & PLEADING.(இதற்கான மதிப்பெண்கள் 100)


3) ACCOUNTANCY FOR LAWYERS.(இதற்கான மதிப்பெண்கள் 100)


4) LEADING CASES.(இதற்கான மதிப்பெண்கள் 100)


நடைப்பெறும் அனைத்து தேர்விலும் தேர்ச்சி பெற ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தது "50" மதிப்பெண்களாவது  பெற வேண்டும்.


4 பாட தேர்வில் எடுக்கும் மதிப்பெண்களை சேர்த்து குறைந்தது 60% அதாவது 400 க்கு 240-தாவது இருக்க வேண்டும்.


 இந்த தேர்வில் தேர்ச்சி பெற்று 60%த்திற்கு மேல் மதிப்பெண்கள் பெறும் வழக்குரைஞர்களுக்கு உச்ச நீதிமன்றத்தில் "Advocate on Record" ஆக அங்கீகாரம் வழங்கப்படும்.


அவ்வாறான தேர்வில் வெற்றி பெற்று அட்வகேட் ஆன் ரெக்கார்டு அங்கீகரிக்கப்பட்ட வழக்கறிஞரின் பெயர் உடனடியாக உச்சநீதிமன்ற பெயர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்.


இ‌வ்வளவு தகுதிகளைப் பெற்றால் மட்டுமே உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளை தாக்கல் செய்ய ஒரு வழக்கறிஞரால் முடியும்.


இநத தகுதிகளை பெற்றவர் மட்டுமே உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் என அழைக்கபடுவர்.

Post a Comment

Previous Post Next Post