நீதிமன்றத்திற்கு புகார்தாரர் வரவில்லை என்ற தகவலை தெரியப்படுத்தும் மனுவை எழுதுவது எப்படி?

நீதிமன்றத்திற்கு ஒரு புகார்தாரர் வரவில்லை என்றால் அவரது வருகையை தவிர்ப்பதற்காக ஏதாவது சட்டம் இருக்கிறதா அந்த சட்டத்தின் அடிப்படையில் அவருடைய வருகையை தள்ளிப்போட முடியுமா என்று கேட்டால் முடியும் அதற்காக தான் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 256 நடைமுறையில் இருக்கிறது இதன் அடிப்படையில் ஒரு புகார்தாரரின் வருகையை தள்ளிப்போட முடியும் அதை நீதிபதிக்கு  தெரியப்படுத்தவும் முடியும் அவருடைய வழக்கறிஞர் ஒரு மனுவைத் தாக்கல் செய்வதன் மூலமாக அவரது வருகையை தள்ளிப்போட முடியும். அந்த சட்டத்தைப் பற்றியும் தெரிந்து கொண்டு இதை பற்றி நாம் பேசினால் உங்களுக்கு தெளிவாக புரியும் அதனால் முதலில் அந்த சட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

1973 ஆம் ஆண்டு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் பிரிவு 256.


256. புகார்தாரரின் தோற்றம் அல்லது இறப்பு.


புகாரின் பேரில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தால், குற்றம் சாட்டப்பட்டவர் ஆஜராவதற்காக நியமிக்கப்பட்ட நாளிலோ அல்லது அதற்குப் பிறகு விசாரணை ஒத்திவைக்கப்படும் நாளிலோ, புகார்தாரர் ஆஜராகவில்லை என்றால், மாஜிஸ்திரேட் இதற்கு முன்பு எதனையும் மீறி, சில காரணங்களுக்காக வழக்கின் விசாரணையை வேறு சில நாட்களுக்கு ஒத்திவைப்பது சரியானது என அவர் நினைக்கும் பட்சத்தில், குற்றம் சாட்டப்பட்டவரை விடுவிக்கவும்: புகார்தாரர் ஒரு வழக்கறிஞரால் அல்லது வழக்கை நடத்தும் அதிகாரியால் அல்லது மாஜிஸ்திரேட் கருத்துப்படி இருந்தால் புகார்தாரரின் தனிப்பட்ட வருகை தேவையில்லை, மாஜிஸ்திரேட் அவரது வருகையை நிராகரித்து வழக்கைத் தொடரலாம்.

துணைப்பிரிவு (1) இன் விதிகள், இதுவரையில், புகார்தாரர் ஆஜராகாதது அவரது மரணத்திற்குக் காரணமான வழக்குகளுக்கும் பொருந்தும்.

சட்ட விளக்கம்  :

ஒரு வழக்கு நடைபெற்றுக்கொண்டு இருக்கும் போது அந்த வழக்கின் புகார்தாரர்  நீதிமன்றத்திற்கு வர இயலவில்லை என்றால் அவரது இயலாமையை நீதிமன்றத்தில் அவருடைய வழக்கறிஞர் மூலமாக ஒரு மனுவை தாக்கல் செய்து நீதிபதிக்கு தெரிய படுத்துவதன் மூலம் அந்த வழக்கைத் தள்ளிப்போட முடியும் அவரது வருகையே இல்லாமல் கூட அந்த வழக்கை அவரது வழக்கறிஞர் மூலமாக நடத்தமுடியும் மேலும் அந்த வழக்கின் புகார்தாரர் இறந்துவிட்டால்  இந்த குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 256 இன் உட்பிரிவு 1இன் கீழ் ஒரு மனுவைத் தாக்கல் செய்வதன் மூலமாக அவரது இறப்புச் செய்தியை நீதிபதிக்கு தெரியப்படுத்த முடியும்.

நீதிமன்றத்திற்கு புகார்தாரர் வரவில்லை என்ற தகவலை தெரியப்படுத்தும் மனுவை எப்படி எழுதுவது என்பதை கீழே அதற்கான மாதிரியை கொடுத்துள்ளேன் அதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
நீதிமன்றத்திற்கு புகார்தாரர் வரவில்லை என்ற தகவலை தெரியப்படுத்தும் மனுவை எழுதுவது எப்படி?
CRPC Section 256 மனுவை பதிவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும்.


இது போன்ற பதிவுகளுக்கு தொடர்ந்து உங்களுடைய ஆதரவுகளை தாருங்கள் உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிருங்கள்.

Post a Comment

أحدث أقدم