பொருளடக்கம்:

  1. விவாகரத்திற்குப் பிறகு முன்னாள் துணையுடன் மீண்டும் சேர்ந்து வாழலாமா?
  2. விவாகரத்து ஆணையைப் பெற்ற பிறகு அதே நபரை மறுமணம் செய்வதற்கான நடைமுறைகள் என்னென்ன?
  3. விவாகரத்து பெற்ற பிறகு மீண்டும் சேர்ந்து வாழ கட்டாயபடுத்தலாமா?
  4. முஸ்லிம் விவாகரத்துக்குப் பிறகு அதே நபரோடு சேர்ந்து வாழ முடியுமா?
  5. விவாகரத்துக்குப் பிறகு அதே நபரை மீண்டும் திருமணம் செய்ய சில நிபந்தனைகள்?

விவாகரத்திற்குப் பிறகு முன்னாள் துணையுடன் மீண்டும் சேர்ந்து வாழலாமா?

நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்ற பிறகு அதே நபர்கள் மீண்டும் சேர்ந்து வாழ முடியுமா என்றால் ஒரு கற்றறிந்த வழக்கறிஞராக சொல்கிறேன் நிச்சயமாக சேர்ந்து வாழ முடியும் அதில் எந்தவித தடையும் இல்லை ஆனால் ஒரு நபர் இன்னொரு நபரை கட்டாயப்படுத்தவோ மிரட்டவோ கூடாது.அப்படி மிரட்டினால் அது சட்டப்படி குற்றமாகும் இந்தக் குற்றத்தை செய்த நபருக்கு நிச்சயமாக தண்டனை கிடைக்கும் அதனால் இதில் நீங்கள் கவனமுடன் இருக்கவேண்டும்.

விவாகரத்து பெற்ற பிறகு கணவன் மனைவி அதே நபருடன் மீண்டும் சேர்ந்து வாழ்வதற்கு சில நடைமுறைகள் இருக்கிறது அதை கணவன் மனைவி இருவரும் பின்பற்ற வேண்டும்.அந்த கணவன்-மனைவியின் முந்தைய திருமணம் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டு விட்டது என்பதால் மீண்டும் இருவரும் திருமண உறவை தொடர விரும்பினால் திருமண வாழ்க்கையை சேர்ந்து வாழ்வதற்கு அவர்களது திருமண உறவை புதுப்பிக்க வேண்டும் அதாவது மறுபடியும் திருமணம் செய்து பதிவு செய்து கொள்ள வேண்டும்


Can I get back together with the same person after divorce?

விவாகரத்து ஆணையைப் பெற்ற பிறகு அதே நபரை மறுமணம் செய்வதற்கான நடைமுறைகள் என்னென்ன?

கணவன் மனைவி நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்ற பிறகு மீண்டும்  அதே நபரை ஒருவருகொருவர் மறுமணம் செய்ய முடியுமா என்றால் ஆம், விவாகரத்துக்குப் பிறகு அதே நபருடன் மீண்டும் சேர்ந்து வாழ மீண்டும்  அதே நபரை திருமணம் செய்து கொள்ளலாம். இதை தான் நான் மறுமணம் என்று குறிப்பிடுகிறேன் அப்படி திருமண செய்வது எப்படி என்ற நடைமுறையை விளக்கமாக தெரிந்துகொள்ளுங்கள்

கணவன் மனைவி குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து ஆணையைப் பெற்றவர்கள் மீண்டும்  அதே நபரை மறுமணம் செய்வதை எந்த சட்டமும் தடை செய்யவில்லை.ஆனால் விவாகரத்திற்கு பிறகு கணவன் மனைவி இணைந்து வாழ்வது (living together) திருமணம் ஆகாமல் சேர்ந்து வாழ்வது போல் அர்த்தமாகும்.

விவாகரத்து பெற்றவர்கள் மறுமணம் செய்ய வேண்டுமென்றால் விவாகரத்து பெற்ற கணவன் மனைவி  அவர்கள் முறைபடியாகவோ அல்லது கோவில்களில் வைத்தோ திருமணம் செய்து அந்த திருமணத்தை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.

விவாகரத்து பெற்ற கணவன் மனைவி  சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் மறு திருமணத்தை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

விவாகரத்து பெற்ற கணவன் மனைவி திருமணப் பதிவாளரிடம், பொருத்தமான படிவத்துடன், இருதரப்பு சாட்சிகளுடன் இருதரப்பு வாக்கு மூலங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

விவாகரத்து பெற்ற பிறகு மீண்டும் சேர்ந்து வாழ கட்டாயபடுத்தலாமா?

இதில் கவனிக்கப்பட வேண்டியது விருப்பம் இல்லாத பிறகு இதை செய்ய கூடாது அதா­வது ஏற்கனவே இருவருக்கும் ஒத்து போகவில்லை என்ற காரணத்தால் விவாகரத்து பெற்ற பிறகு இருவருக்கும் திரும்பவும் மனம் ஒத்து போனால் மட்டுமே அதே நபர்கள் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடியும். 

விவாகரத்து பெற்ற பிறகும் வலுக்கட்டாயமாக மறுமணம் செய்து வாழ்வோம் என கூற முடியாது அது சட்டப்படி தவறு நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் அவர் மீது பாயும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

முஸ்லிம் விவாகரத்துக்குப் பிறகு அதே நபரோடு சேர்ந்து வாழ முடியுமா?

இஸ்லாத்தில் விவாகரத்துக்குப் பிறகு உங்கள் முன்னாள் மனைவியை மறுமணம் செய்து கொள்ளலாமா ஆமா நிச்சயமாக உங்களது முன்னாள் மனைவியோடு விவாகரத்திற்கு பிறகு நீங்கள் சேர்ந்து வாழ முடியும் கணவன் காத்திருப்பு (இத்தா) காலத்தில் நல்லிணக்கத்தைக் கேட்கலாம். முதல் மற்றும் இரண்டாவது தலாக் முறைக்கு மட்டுமே இது அனுமதிக்கப்படுகிறது.

விவாகரத்துக்குப் பிறகு அதே நபரை மீண்டும் திருமணம் செய்ய சில நிபந்தனைகள்?

1. விவாகரத்துக்குப் பிறகு அதே நபரை மறுமணம் செய்துகொள்ள உங்களுக்கு சுதந்திரம் உள்ளது.
2. சாதாரண திருமணம் போலவே கோவில்களிலோ பதிவுத்துறை அலுவலகத்திலோ இரண்டாவது திருமணம் செய்யலாம்.
3. ஆனால் விவாகரத்துக்குப் பிறகு அதே நபரையே திருமணம் செய்து கொள்ளும் இந்த மறுமணத்தின் பின்னணியில் சட்ட விரோதமான சதி எதுவும் இருக்கக் கூடாது.

Post a Comment

Previous Post Next Post