விவாகரத்து சன்றிதழ் என்ற வார்த்தை பலருக்கு குழப்பமாக இருக்கலாம், விவாகரத்து சான்றிதழ் என்ற சான்று உண்மையாகவே நமது இந்தியாவில் உண்டா என்றால் நமது இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட பட்ட விவாகரத்து சான்று என்ற ஒன்றும் இல்லை.

விவகாரத்திற்கான ஒரே ஒரு அங்கீகரிக்கப்பட்ட சான்று விவாகரத்து வழக்கில் நீதிமன்றம் வழங்குகின்ற தீர்ப்பு மட்டுமே இந்தியாவில் சட்டப்படியான விவாகரத்து சான்றாகும்.

இதன் அடிப்படையில் இரண்டாவது திருமணம் செய்தால் முதல் திருமணத்தில் இருந்து முழுமையான தீர்வு கிடைக்கும். சிலர் 20 ரூபாய் ஸ்டாம்ப் பேப்பரில் விவகாரத்தை எழுதி கொடுத்துவிட்டு இதுதான் விவாகரத்து சான்றிதழ் என்று மக்களை ஏமாற்றுகின்றனர்.

நீதிமன்றத்தால் மட்டுமே விவாகரத்து வழங்க முடியும். முத்திரைத் தாளில் கையொப்பமிடுவது விவாகரத்து அல்ல, ஸ்டாம்ப் பேப்பரில் எழுதி விவாகரத்து செய்வது செல்லுபடியாகாது, விவாகரத்தை ஸ்டாம்ப் பேப்பரில் எழுதிவிட்டு இரண்டாவது திருமணம் செய்தல் முதல் கணவனோ முதல் மனைவியோ உங்களுக்கு எதிராக 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய கிரிமினல் வழக்கைத் தாக்கல் செய்யலாம்.விவாகரத்து சன்றிதழ் என்ற வார்த்தை பலருக்கு குழப்பமாக இருக்கலாம், விவாகரத்து சான்றிதழ் என்ற சான்று உண்மையாகவே நமது இந்தியாவில் உண்டா என்றால் நமது இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட பட்ட விவாகரத்து சான்று என்ற ஒன்றும் இல்லை. விவகாரத்திற்கான வழக்கில் வழங்கப்படுகிற நீதிமன்ற ஆணை (தீர்ப்பு) தான் இந்தியாவில் சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட விவாகரத்து சான்றாகும்.

இதன் அடிப்படையில் இரண்டாவது திருமணம் செய்தால் முதல் திருமணத்தில் இருந்து முழுமையான தீர்வு கிடைக்கும். சிலர் 20 ரூபாய் ஸ்டாம்ப் பேப்பரில் விவகாரத்தை எழுதி கொடுத்துவிட்டு இதுதான் விவாகரத்து சான்றிதழ் என்று மக்களை ஏமாற்றுகின்றனர்.

நீதிமன்றத்தால் மட்டுமே விவாகரத்து வழங்க முடியும். முத்திரைத் தாளில் கையொப்பமிடுவது விவாகரத்து அல்ல, ஸ்டாம்ப் பேப்பரில் எழுதி விவாகரத்து செய்வது செல்லுபடியாகாது, விவாகரத்தை ஸ்டாம்ப் பேப்பரில் எழுதிவிட்டு இரண்டாவது திருமணம் செய்தல் முதல் கணவனோ முதல் மனைவியோ உங்களுக்கு எதிராக 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய கிரிமினல் வழக்கைத் தாக்கல் செய்யலாம்.

Divorce-certificate?


எனவே மக்கள் தெரிந்துகொள்ள வேண்டியது 20 ரூபாய் ஸ்டாம்ப் பேப்பரில் விவகாரத்தை எழுதி வாங்குவது உண்மையான விவாகரத்து சான்று இல்லை. விவாகரத்து ஜட்ஜ்மெண்ட் உத்தரவு என்பது திருமணத்தை முடிக்கும் நீதிமன்றத் தீர்ப்பாகும், ஒரு நீதிமன்ற விவாகரத்து ஆணையை வழங்குவதற்கு முன் நீதிபதி பல விஷயங்களை ஆராய வேண்டும்.

குறிப்பாக பரஸ்பர விவகாரமாக இருந்தால் சொத்து எவ்வாறு பிரிக்கப்படுகிறது, உங்களுக்கு குழந்தைகள் இருந்தால் குழந்தையை யார் பராமரிப்பீர்கள், உங்கள் குழந்தைகளுடன் நீங்கள் எவ்வாறு நேரத்தை பகிர்ந்துகொள்வீர்கள் என்பது பற்றிய அனைத்து விவரங்களும் விசாரிக்கப்பட்டு அதன் பிறகுதான் திருமணம் ஏன் கலைக்கப்படுகிறது என்ற காரணத்தோடு விவாகரத்து ஆணை பிறப்பிக்கப்படுகிறது.

நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்ற பிறகு எதிர்காலத்தில் உங்கள் முன்னாள் கணவரோ அல்லது மனைவியோ நீதிமன்ற தீர்ப்பை பின்பற்ற தவறினால் போலீசில் புகார் கொடுக்கலாம்.

நீதிமன்ற ஆணைக்கு பிறகு முன்னாள் கணவனாலோ அல்லது மனைவியலோ எதிர்காலத்தில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் நீதிமன்ற ஆணையைப் பார்க்க வேண்டும், ஏனெனில் ஒவ்வொருவரும் என்ன செய்ய வேண்டும் என்று அதில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆணையில் குழப்பம் இருந்தால் அதைத் திருத்தம் செய்ய மீண்டும் நீதிமன்றத்திற்குச் செல்லலாம்.

Post a Comment

أحدث أقدم