- கடன் பெறுவதில் விழிப்புணர்வு இருக்கிறதா?
- கடன் ஆடம்பர வாழ்க்கையில் சகஜமாக மாறிவிட்டதா?
- கடன் பெற எப்படி வருமானத்தை திட்டமிட வேண்டும்?
- சம்பிரதாயத்தை புறக்கணித்தல்?
- சரி கடன் பெறலாமா வேண்டாமா?
- வங்கி கடன், கிரடிட் கார்டு வாங்கியுள்ளோர் கவனிக்க வேண்டிய முக்கிய விடயங்கள் :
கடன் பெறுவதில் விழிப்புணர்வு இருக்கிறதா?
இந்தியாவில் மக்களுக்கு கடன் பற்றிய தெளிவான விழிப்புணர்வு இருக்கிறதா என்றால் இன்னும் மக்கள் விழிப்புணர்வு அடையவில்லை என்று சொல்லலாம். இந்த நவீன உலகில் கடன் பெற்று அதை திருப்பி செலுத்தவில்லை என்றால் என்னென் விளைவுகள் ஏற்படும் அதை எப்படி சமாளிக்க வேண்டும் சட்ட நடைமுறை என்ன சட்ட நடைமுறையில் நமது சொத்துக்களை முடக்க முடியும் அதை சட்ட ரீதியாக நீதிமன்ற நடைமுறைகளை அணுகுவது எப்படி என்பதில் மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை.ஒரு வழக்கறிராக நான் சொல்வது என்னவென்றால் கடன்களைப் பெறும் போது வங்கிகளில் கொடுக்கபடும் ஃபார்ம் களில் என்ன எழுதி இருக்கிறது என்பதை படித்து பார்க்க வேண்டும் இதை படிக்கும் போதே அது சாத்தியமில்லை என்று நீங்கள் நினைப்பது எனக்கு கேட்கிறது ஆனால் இதை நாம் செய்ய வேண்டும் நமக்கான ஃபார்ம்களை படிக்க நேரம் ஒதுக்க வேண்டும் நிச்சயமாக அந்த நேரத்தை வங்கி ஊழியர் உங்களுக்கு வழங்குவார். அதை படிக்கும் நேரத்தை வீணாக கருதாமல் படித்து அதன் நடைமுறையை நீங்கள் அறிந்து கொண்டால் பின்னால் கடன் சுமையாகவோ ஆபத்தாகவோ இருக்காது.
கடன் ஆடம்பர வாழ்க்கையில் சகஜமாக மாறிவிட்டதா?
ஆம் காலங்கள் மாறிவிட்டன, நம்மில் பலரால் கடன் இல்லாத ஆடம்பர வாழ்க்கையை வாழ முடியாது என்ற கருத்து வந்துவிட்டது இது நமக்கு மட்டுமல்ல நமது பெற்றோரும் இதை நம்பினார்கள் கடன் வாங்குவதை மக்கள் பார்க்கும் விதத்திலும் மாற்றம் உள்ளது. நமது பெற்றோருக்கு முந்தைய பெரியவர்கள் கடனை தீங்கு விளைவிப்பதாகக் கருதிவந்தனர்.இதனாலேயே ஊர் கிராமபுறங்களில் காம்ப ராமயணத்தில் சொல்லப்பட்ட கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன் என்ற பழம் சொல் பழக்கத்தில் இருந்தது. இருந்தாலும் கடன் ஆபத்தானது மட்டும் தானா என்றால் அப்படியும் இல்லை கடன்கள் தேவைப்படும் நேரத்தில் நம்மைக் காப்பாற்றுகிறது நமது தேவைகளை நிறைவேற்ற உதவுகின்றன. ஒருவரின் நிதித் திட்டமிடலின் ஒரு பகுதியாக கடன்கள் இருக்க வேண்டும் என்றும், கடன் வாங்குபவர் தனது கடன் வாங்கும் திறனைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இந்த திட்டமிடல் செய்யப்பட வேண்டும் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர்.
பகுப்பாய்வின் அடிப்படையில், கடன்கள் நல்லது மற்றும் கெட்டது என வகைப்படுத்தப்பட்டுள்ளன. வீட்டுக் கடன் ஒரு நல்ல கடனாகப் பார்க்கப்பட்டாலும், தனிநபர் கடன்கள் அபாயகரமான திட்டங்களாகக் கருதப்படுகின்றன.
வீட்டுக்கடன்களுக்கு விண்ணப்பிக்கும் போதும், திருப்பிச் செலுத்தும் போதும் உரிய கவனம் செலுத்தப்படாவிட்டால், வீட்டுக் கடன்களும் மோசமான கடனாக மாறும்.
கடன் பெற எப்படி வருமானத்தை திட்டமிட வேண்டும்.
நாம் விரைவில் ஒரு சொத்தை சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில், அல்லது அவசர நேரத்தில் கடன் வாங்க எந்த வித திட்டமிடலும் செய்வதில்லை.நீங்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்லும் சம்பளத்தில் 40 சதவிகிதம் மட்டுமே EMI (சமமான மாதாந்திர தவணை) கொடுப்பனவுகளுக்கு செலவிடப்பட வேண்டும் என்று நிதி வல்லுநர்கள் மத்தியில் ஒருமித்த கருத்து உள்ளது. அதன் அடிப்படையில் கடனையோ வீட்டு கடனையோ நீங்க திட்டமிட வேண்டும்.
இருப்பினும், செயல்முறையை விரைவாக முடிப்பதற்கான அழுத்தம் உங்களைச் சுற்றி உருவாகும்போது இந்த ஆலோசனை பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகிறது.
உங்கள் கிரெடிட் ஸ்கோர் அவ்வாறு செய்ய உங்களை அனுமதிப்பதால், வங்கி வழங்கும் கடனைப் பெற முயற்சி செய்கிறீர்கள். அதிக EMI சுமை உங்கள் மாதாந்திர செலவில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தும் மற்றும் நீங்கள் ஒரு சலிப்பான வாழ்க்கையை நடத்த வேண்டிய கட்டாயத்தை இந்த சூழ்நிலை உங்களை கொண்டு செல்லலாம். வாரயிறுதியில் திரைப்படப் பயணங்கள் அல்லது நண்பர்களுடன் அடிக்கடி இரவு உணவு உண்பது இனி உங்கள் காலெண்டரில் இருக்காது.அத்தகைய வாழ்க்கையை நீண்ட காலம் வாழ்வது உங்கள் தனிப்பட்ட ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்இங்கே பாடம் என்னவென்றால், நீங்கள் கடன் தொகையைத் தீர்மானிக்கும்போது உங்கள் வாழ்க்கை முறையைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
"சம்பிரதாயத்தை" புறக்கணித்தல்?
பலர் தங்கள் வீட்டு வேலை செய்யும் இல்லத்தரசிகளை தங்கள் கடன் விண்ணப்பத்தில் இணை விண்ணப்பதாரராக பெரிய தொகையை கடன் வாங்குகின்றனர். இது ஒரு பெரிய கடனைப் பெறுவதற்கு "ஒரு நடைமுறை சம்பிரதாயம்" என்று அடிக்கடி எடுத்துக் கொள்ளப்படுகிறது, இது மிகவும் தவறான அடிப்படையிலான யோசனை. உங்கள் வேலையை இழப்பது போன்ற எதிர்பாராத நிகழ்வு ஏற்பட்டால், கடனை அடைக்க உங்கள் வீட்டு மனைவி பொறுப்பாவார். அவளுக்கு சொந்தமாக வருமான ஆதாரம் இல்லை என்று கருதி, உங்கள் சொத்து வங்கியால் திருப்ப எடுத்துக்கொள்ளப்படலாம். துல்லியமாக இந்த காரணத்திற்காக, குடும்பத்தில் நீங்கள் மட்டுமே சம்பாதிக்கும் உறுப்பினராக இருந்தால், முடிந்தவரை குறைந்த தொகையை வைத்துக் கொள்ளுங்கள். நேரம் வரும்போது, நிகழ்காலத்தில் முக்கியத்துவம் இல்லாத வெறும் "செயல்முறை" விஷயங்கள் எதிர்காலத்தில் பெரியதாக மாறக்கூடும் என்பதை நீங்கள் உணரலாம். எதுவும் "சம்பிரதாயம்" இல்லை, குறிப்பாக நிதி உலகில்.சரி கடன் பெறலாமா வேண்டாமா?
நமது வருமானத்தை கணக்கில் கொண்டு வருமானத்தில் 40%த்தை மட்டும் கட்டி திருப்பி செலுத்த கூடிய கடனாக இருந்தால் அது நல்ல கடனாகவும் அல்லது வீட்டுக்கடன் பெறுவது மட்டுமல்ல EMI-ல் பொருட்கள்வாங்குவது, மற்றும் நகைக்கடன், விவசாய கடன், வாகன கடன், இப்படி எந்த கடனாக இருந்தாலும் கவனமாக திட்டமிடாமல் கடனை பெற்றால் அது மோசமான கடனாக மாறி பெரிய ஆபத்தாக முடியும்.வங்கி கடன், கிரடிட் கார்டு வாங்கியுள்ளோர் கவனிக்க வேண்டிய முக்கிய விடயங்கள் :
1. வங்கியில் கடன், கிரடிட் கார்டு, கல்வி கடன் வசூல் என எதுவாக இருந்தாலும் எல்லாமே சிவில் நடைமுறைதான்.
2. எக்காரணம் கொண்டும் வங்கிகள் கடனாளர் மீது கிரிமினல் நடவடிக்கைகளை எடுக்க கூடாது. இது ரிசர்வ் வங்கி யின் வழிமுறை.
3. கடனின் தவணைகள் தாமதமானால்,வங்கி முறைப்படி பணத்தை கேட்கலாம் அல்லது கடிதம் அனுப்பலாம், மாறாக கடன் வாங்கியோரின் வீட்டினுள் நுழைந்து பணம் வசூலிக்க முயலுவது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 441 யின் படி குற்றம்.
4. பணத்தை கேட்டோ, வசூலிக்கவோ வங்கி ஊழியர்களோ, முகவர்களோ செல்போனில் அவதூறாக பேசினாலோ, மிரட்டினாலோ IPC Section 499 and 503 யின் படி குற்றம்.
5. கடன் தவணையை கேட்டு தொடர்ந்து வங்கி தொல்லை கொடுத்தால் மேற்கண்ட பிரிவுகளை குறிப்பிட்டு அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும்.
6. அதேநேரம் உங்கள் பகுதியில் உள்ள சிவில் நீதிமன்றத்தில் Order VII, Rule 1 of Civil Proceedure Code யில் மனு தாக்கல் செய்து, Order XXXIX, Rule 1 of Civil Proceedure Code யில் தடை உத்தரவை பெறலாம்.
7. கடன் தவணை நிலுவை தொகையை வசூலிக்க வங்கி சிவில் நடைமுறையை மட்டுமே பயன்படுத்த வேண்டும், ஊழியர்களை, முகவர்களை கொண்டு மிரட்டுவது குற்றம்.
Post a Comment