சொத்து தகராறு முன்னுரை :
இந்தியாவில் மிகவும் பொதுவான சட்ட மோதல்களில் குறிப்பிடதக்க ஒன்று தான் சொத்து தகராறு. சொத்து அபகரிப்பு வழக்குகள், சொத்து உரிமை, சொத்து விற்பனை மற்றும் வாங்குதல் மற்றும் பத்திரங்கள் தொடர்பான தகராறுகள். மற்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சொத்தில் பங்கு கேட்டு தகராறில் ஈடுபடுவது, அதிலும் குறிப்பாக சகோதரர்கள் சொத்தின் உரிமையை கேட்டு வாதிடுவது அசாதாரணமானது அல்ல. இது போன்ற தகராறுகளை தீர்க்கும் முறைகளில் கல்வி அறிவும் சரியான விழிப்புணர்வும் இல்லாததால் சொத்து சம்பந்தப்பட்ட பெரும்பாலான வழக்குகள் நீதிமன்றங்களில் தான் முடிவடைகிறது.
நீதிமன்றங்களில் சரியான ஆவணங்கள் இல்லாமல் வழக்குகள் தாமதப்படுகிறது, மேலும் வழக்கறிஞர்கள் மற்றும் நீதித்துறையால் வழக்குகள் தாமதப்பட்டு இழுக்கப்படுகின்றன.
இந்தியாவில் ஏற்படக்கூடிய சொத்து தகராறு சட்டங்கள்?
இந்தியாவில் ஏராளமான தீர்க்கப்படாத சொத்துப் பிரச்சினைகள் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன. நிறைய இடங்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் சொத்தை பங்கு பிரித்து கொள்வதில் தகராறு ஏற்றப்பட்டு தீர்க்கப்படாமல் இருக்கிறது, அதைப் போல நிலத்தை விற்பவர்களுக்கும் வாங்குபவர்களுக்கும் இடையில் இருக்கும் தகராறுகள், மற்றும் நில உரிமையாளர்கள் மற்றும் குத்தகைதாரர்களுக்கு இடையே கூட சொத்து மோதல்கள் போன்ற தகராறுகள் நீடித்துக்கொண்டேதீர்க்கப்படாமல் இருக்கிறது. மேற்கண்ட தகராறுகள் ஏற்படாமலிருக்க சொத்துப் பரிமாற்றச் சட்டம் சொத்துக்கள் வாங்கும் போதும் விற்க்கும் போதும் அல்லது தனது பெயருக்கு உரிமை மற்றம் செய்யும் போதும் ஏற்படும் தகராறுகளை தீர்க்க வழிமுறைகளை வகுத்துள்ளது. மேற்கண்ட சொத்துப் பரிமாற்றச் சட்டம் இந்தியாவில் சொத்துக்கள் பரிமாற்ற மற்றும் உரிமைமாற்ற தகராறுகளைத் தீர்மானிப்பதற்கும் தீர்ப்பதற்கும் சட்டப்பூர்வ அடிப்படையாக செயல்படுகிறது மேலும் அங்குள்ள சொத்து பரிமாற்றத்தை ஒழுங்குபடுத்தும் பொறுப்பையும் கொண்டுள்ளது.
பெரும்பாலான நேரங்களில் அசையும் சொத்துக்கள் மற்றும் நிலம் அல்லது வீடு போன்ற அசையாச் சொத்துக்கள் மீது தகராறுகள் எழலாம் என்றாலும், பெரும்பாலான சொத்து தகராறுகள் நிலம் அல்லது வீடு சார்ந்தவைகளாக இருக்கிறது.

சொத்துக்களில் ஏற்படக்கூடிய தகராறுகளை தடுக்க எப்படி கவனமாக இருப்பது?
சொத்துக்கள் சார்ந்த தகராறுகளை தடுக்க கீழ் கண்ட காரணிகளில் கவனமாக இருக்க வேண்டும்.
சொத்துக்களை வாங்கும் போது கவனமாக இருக்க வேண்டும் இதற்கு முன் அந்த சொத்து உரிமையாளருக்கு எப்படி கிடைத்தது சரியான உரிமை மாற்றம் மூலமாக தான் சொத்தை வாங்கி இருக்கிறாரா என்பதை சரிபார்க்க வேண்டும்.
சொத்தின் அளவுகள் பட்டா மற்றும் சிட்டாவில் தெளிவாக சரியானதாக இருக்கிறதா என கவனமாக சரிபார்க்க வேண்டும்.
சொத்தின் எல்லைகள் சரியானது தானா என கவனிக்க வேண்டும் அல்லது நீங்கள் சொத்தை வாங்கிய பின் இன்னொரு நபர் இது எனது இடம் உங்கள் சொத்தின் எல்லை 10 அடிக்கு பின்னால் இருக்கிறது என உங்கள் இடத்தை அபகரிக்க வாய்ப்புகள் அதிகம் பின்னர் நீதிமன்றம் சென்று பல ஆண்டுகள் வழக்கை நடத்த வேண்டி இருக்கும்.
சொத்தை வாங்கிய பின் உடனடியாக வேலி அமைக்க வேண்டும் இது தேவையற்ற அக்கிரமிப்பு தகராறுகளை தவிர்க்க உதவுகிறது.
சொத்துக்கள் உங்கள் சொந்த ஊரிலும் நீங்கள் வெளியூரிலும் இருக்கும் போது உங்கள் இடத்தை பராமரிக்க ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒரு காவலாளியை நியமிக்கலாம்.
சொத்துக்களை குத்தகைக்கு கொடுக்கும் போது ஒப்பந்தங்களை ஏற்ப்படுத்தி கொண்டு சொத்தை கொடுப்பது நல்லது இது பிற்காலத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் தகராறுகளை தவிர்க்க உதவும்.
வீடு போன்ற அசையா சொத்துக்களை வாடகைக்கை விடும் போது வாடகை ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்வது நல்லது.
சொத்துக்களை வாங்க மற்றும் விற்பனை செய்ய பவர் பத்திரம் எழுதி கொடுக்கும் போது கவனமாக இருக்க வேணடும் இல்லாது போனால் பவர் வாங்கிய நபர் ஏமாற்ற வாய்ப்புள்ளது அதனால் இது போன்ற சூழ்நிலையில் ஒரு உரிமையியல் வழக்கறிஞரை சந்தித்து ஆலோசனைப் பெறுவது நல்லது.
சொத்து தகராறுகளை எவ்வாறு தீர்ப்பது?
இந்தியாவில், சொத்து தகராறுகளைத் தீர்க்க இரண்டு வழிகள் உள்ளன :
- பேச்சுவார்த்தை மூலமாக பரஸ்பரமாக ஒரு தீர்வுக்கு வருவது.
- நீதிமன்ற மூலமாக வழக்கு தாக்கல் செய்து ஒரு தீர்வை தேடிக்கொள்வது.
பேச்சுவார்த்தை மூலமாக பரஸ்பரமாக ஒரு தீர்வுக்கு வருவது?
குடும்பத்தார்களுக்கு இடையே ஏற்படும் சொத்து தகராறுகளை பேசி சமரச பேச்சுவார்த்தை மூலமாக சரி செய்ய முடியும். குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் மூலமாகவோ அல்லது உறவினர் மூலமாகவோ சொத்துக்கள் சார்ந்த பிரச்சனைகளை சமரசம் பேசி சரி செய்ய முடியும், ஒரு வேளை அவர்கள் சமரசம் ஆகவில்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டால் அவருக்கு இருக்கும் சாதக பாதகங்களை எடுத்துச் சொல்லி வழக்கு முடிய பல ஆண்டுகள் ஆகும் என்பதால் ஒரு தெளிவான முடிவை சமரசமாக எடுத்துக் கொள்வோம் என்று குடும்பத்தார் பரஸ்பர தீர்வை எடுக்க முடியும்.
குடும்பத்தில் ஏதாவது அசையும் அசையாத சொத்துக்களை பிரிக்கும் போது அதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் அமர வைத்து பரஸ்பரமாக ஒரு முடிவை எடுத்து அந்த முடிவை ஒரு ஒப்பந்தமாக உருவாக்கி அதில் சம்மந்தப்பட்ட அனைவரும் கையெழுத்திட வேண்டும், அதன்படியே அனைவரும் அசையும் அசையா சொத்துக்களை பிடித்துக் கொள்ள வேண்டும், இப்படி சமரசமாக பேச்சுவார்த்தை மூலமாக குடும்பத்தில் பிரச்சனை இல்லாமல் சொத்துக்களை பிரித்துக் கொள்ள முடியும்.
உங்கள் சொத்து சம்மந்தமாக உங்களுக்கும் உங்களது பக்கத்து சொத்தின் உரிமையாளருக்கும் நிலம் சார்ந்த பிரச்சனை ஏற்பட்டால் அதையும் பேச்சுவார்த்தை மூலமாக நீங்கள் தீர்த்துக் கொள்ள முடியும், ஒரு வேளை உங்களுக்கும் உங்கள் நிலத்தின் அருகே இருக்கும் பக்கத்து நிலத்தின் உரிமையாளருக்கும் எல்லை தகராறு ஏற்பட்டு கொண்டிருக்கிறது என்றால் பேச்சுவார்த்தை மூலமாக அதை பேசி தீர்த்துக் கொள்ள முடியும், ஆனால் பிரச்சனை தீராது என்று தெரியும் பட்சத்தில் நீங்கள் நீதிமன்றத்தை அணுகலாம். மூன்றாம் நபர்களுக்கு இடையே ஏற்படும் நிலத்தகராறு ஆபத்தை விளைவிக்கும் சண்டையாக மாறும்போது காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம். நில சார்ந்த உங்கள் உரிமைகளை நிலை நாட்டுவதற்கு நீங்கள் கண்டிப்பாக நீதிமன்றத்தில் தான் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும்.
உங்களது சொத்துக்கள் சார்ந்த பிரச்சனைகளை சரி செய்து கொள்ள ஒரு வழக்கறிஞரை சந்தித்து சட்ட ஆலோசனைப் பெறுவது நல்லது. அசையா மற்றும் அசையும் சொத்துக்களின் தகராறுகளை பேச்சுவார்த்தை மூலமாக பரஸ்பரமாக ஒரு தீர்வுக்கு வர முடியவில்லை என்றால் நீதிமன்றத்தை அணுகுவதை தவிர வேறு வழியில்லை.
நீதிமன்ற மூலமாக வழக்கு தாக்கல் செய்து ஒரு தீர்வை தேடிக்கொள்வது?
சொத்துக்கள் சார்ந்த தகராறுகளை சமரசம் பேசியும் பரஸ்பரமாக முடிவுகளை எடுக்க முடியாத போது நீதியை நிலைநாட்ட பாதிக்கப்பட்ட நபர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து தான் தீர்வுகளை பெறமுடியும்.
வழக்கு :
சொத்து தகராறுகளைத் தீர்ப்பதற்கு நீதிமன்றத்தை அணுகுவதைத் தவிர வழக்கு ஒன்றுமில்லை. இது வழக்கறிஞர்கள், நீதிமன்றச் செலவுகள் மற்றும் பெரும்பாலும் கணிசமான அளவு தாமதத்தை உள்ளடக்கியது. பொதுவாக தொடர்பில்லாத தரப்பினர் முதல் நிகழ்வில் வழக்கை நாடுகிறார்கள். வழக்கு என்பது நீதிமன்ற செயல்முறைகள் மற்றும் நடைமுறைகளை உள்ளடக்கியது மற்றும் சர்ச்சையைத் தீர்க்க நீண்ட நேரம் ஆகலாம். உரிமைப் பத்திரம் உட்பட அனைத்து ஆவணங்களும் உங்களிடம் இருந்தால் மட்டுமே வழக்கிற்குச் செல்லுங்கள், மேலும் வெற்றி பெற உங்களுக்கு வலுவான வாய்ப்பு இருப்பதாக உங்கள் வழக்கறிஞர் உங்களுக்கு அறிவுறுத்துகிறார். சில நேரங்களில் நீதிமன்றங்கள் நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காணுமாறு கட்சிகளுக்கு உத்தரவிடுகின்றன. இது நீதிமன்றக் கண்காணிப்புத் தீர்வு.
சகோதரர்களிடையே ஏற்படக்கூடிய சொத்து தகராறு?
சகோதரர்களுக்கு இடையேயான சொத்து தகராறுகள் இந்தியாவில் பொதுவான சொத்து தகராறுகளில் ஒன்றாகும். இந்தியாவில் ஆண் குழந்தைதான் சொத்துக்கு வாரிசு என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கும்போது பிரச்சனை எழுகிறது. சொத்துப் பிரிப்பு தொடர்பாக சகோதரர்கள் அடிக்கடி தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கிறார்கள், குறிப்பாக பெற்றோர் உயில் வைக்கவில்லை என்றால். பொருந்தக்கூடிய பரம்பரை மற்றும் வாரிசுச் சட்டங்களைப் பயன்படுத்துவதன் மூலம் இத்தகைய சர்ச்சைகள் தீர்க்கப்படுகின்றன.
இந்தியாவில் நிலுவையில் உள்ள வழக்குகளில் பாதிக்கும் மேலான சொத்து தகராறுகள் உள்ளன. சொத்துச் சட்டங்கள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள வழக்குச் சட்டங்கள் சொத்து தகராறுகளை நிர்வகிக்கின்றன. தெளிவான சட்டங்கள் இருந்தபோதிலும், இதுபோன்ற சர்ச்சைகள் பல ஆண்டுகளாக நீடிக்கும். இந்தியாவில் நிலம் ஒரு மதிப்புமிக்க சொத்தாக இருப்பதால், சர்ச்சைகள் எழும் வாய்ப்பு அதிகம். எனவே, நீங்கள் எந்த ஒரு சொத்து பரிவர்த்தனையிலும் ஈடுபடும் முன் எப்போதும் ஒப்பந்தங்களை வரைந்திருக்க வேண்டும். உங்கள் பிள்ளைகள் சொத்து தகராறில் ஈடுபடாமல் இருக்க உங்கள் வாழ்க்கையில் உயில்களை எழுதி பதிவு செய்யுங்கள். காகிதப்பணி எப்போதுமே தெளிவின்மையைக் குறைக்கிறது, அதனால் தகராறுகளின் வாய்ப்புகள்.
முடிவுரை :
முடிவில், சொத்து தகராறுகள் இந்தியாவில் பொதுவானவை, மேலும் அவை தீர்க்க மிகவும் சிக்கலானதாகவும் நேரத்தை எடுத்துக்கொள்ளும்தாகவும் இருக்கும். எவ்வாறாயினும், சரியான அணுகுமுறை மற்றும் தீர்வு காண விருப்பத்துடன், சொத்து தகராறுகளை நியாயமான மற்றும் சமமான முறையில் தீர்க்க முடியும். இந்தியாவில் உள்ள சொத்து தகராறுகளைத் தீர்ப்பதற்கான சில முக்கிய வழிகள், மத்தியஸ்தம் மூலம் ஒரு தீர்வை பேச்சுவார்த்தை நடத்துவது, நீதிமன்றத்தில் சிவில் வழக்கைத் தாக்கல் செய்தல் அல்லது நடுவர் அல்லது சமரசம் போன்ற மாற்று தகராறு தீர்க்கும் வழிமுறைகளைப் பயன்படுத்துதல். இந்தியாவில் சொத்துச் சட்டத்தின் நுணுக்கங்களைப் புரிந்துகொள்வதற்கும், சர்ச்சைகளைத் தீர்ப்பதற்கான பல்வேறு விருப்பங்களை ஆராய்வதற்கும் சட்ட வல்லுநர்கள் மற்றும் ஆலோசகர்களின் வழிகாட்டுதலைப் பெறுவது முக்கியம். ஒரு செயலூக்கமான மற்றும் கூட்டு அணுகுமுறையை மேற்கொள்வதன் மூலம், தனிநபர்கள் நீண்டகால சட்டப் போராட்டங்களின் மன அழுத்தம், செலவு மற்றும் நிச்சயமற்ற தன்மையைத் தவிர்த்து, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் பயனளிக்கும் திருப்திகரமான தீர்மானத்தை எட்ட முடியும். இறுதியில், இந்தியாவில் சொத்து தகராறுகளைத் தீர்ப்பதற்கான திறவுகோல் திறந்த மனது, சமரசம் செய்வதற்கான விருப்பம் மற்றும் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வைக் கண்டுபிடிப்பதில் அர்ப்பணிப்பு ஆகியவற்றில் உள்ளது.
இந்த பதிவையும் படியுங்கள் : சொத்து தகராறுகள் மற்றும் அவற்றை எவ்வாறு தவிர்ப்பது?
Post a Comment