பத்திரம் எழுதும் போது சிலர் தவறுதலாக ஏதாவது பிழைகள் போடுவது இயல்பானது ஆனால் அதை சரி செய்ய முடியுமா என்ற குழப்பம் நம்மில் சிலருக்கு நிச்சயமாக இருக்கும் அதை தெளிவுபடுத்தி சரியான சட்ட விழிபுணர்வு ஏற்படுத்தவே இந்த பதிவு.

பொருளடக்கம் :
  1. பத்திரத்தில் உள்ள பிழைகளை சரி செய்ய முடியுமா?
  2. சீர்திருத்த பத்திர சட்டம் என்றால் என்ன?
  3. ஆவணங்களில் எந்தெந்த பிழைகள் ஏற்படுகிறது?
  4. பத்திரங்களில் ஏற்படும் சாதாரண பிழைகள் என்றால் என்ன?
  5. உரிமை மாற்றம் சீர்திருத்த பத்திரம் என்றால் என்ன?
  6. சீர்திருத்த பத்திரம் பதிவு செய்ய முழு பத்திர தொகையும் திரும்ப சொலுத்தவேண்டுமா?
  7. சீர்திருத்த பத்திரம் பதிவு செய்ய முத்திரைத்தாள் கட்டணம் எவ்வளவு ஆகும்?
  8. சொத்தை விற்றநபர் உயிருடன் இல்லை என்ன செய்வது?
  9. சொத்தை விற்ற நபர் உயிருடன் இருந்தும் சீர்திருத்த பத்திரம் போட ஒத்துழைக்கவில்லை என்றால் என்ன செய்வது?
  10. சீர்திருத்தபத்திரம் பதிவதைவிட புதிய பத்திரம் பதிவிடலாம் எது சிறந்தது?
  11. பத்திரத்தில் திருத்தம் நீங்களே செய்யலாமா?
  12. பத்திரத்தில் வெட்டி திருத்தம் செய்வது சரியா?


Rectification-deed

பத்திரத்தில் உள்ள பிழைகளை சரி செய்ய முடியுமா?


ஆம் பாத்திரத்தில் ஏற்படக்கூடிய பிழைகளை சரி செய்ய முடியும் அப்படி சரி செய்யும் நடைமுறை சீர்திருத்த பத்திரம் எனப்படுகிறது. இந்த சீர்திருத்த பத்திரம் என்பது முக்கிய பத்திரத்தில் அதாவது அசல் பத்திரத்தில் உள்ள தவறை சரி செய்வதற்காக உருவாக்கப்படும் ஆவணமாகும்.

 சீர்திருத்தப் பத்திரத்தில் இருக்கும்  பிழைகளை எப்படி திருத்த முடியும் என்பதை மேலும் தெரிந்து கொள்வோம் இந்த பதிவை தெளிவாக கடைசிவரை படியுங்கள் அப்போது தான் இதில் இருக்கும் சட்ட ரீதியான சிக்கல்களை தெரிந்துகொள்ள முடியும்.

எந்தவொரு சொத்து ஒப்பந்தத்தை  நிறைவேற்றும் போதும் நிருபிக்க நிறைய ஆவணங்கள் தேவை. இப்படி ஆவணப்படுத்துதலின் போது பெரும்பாலும் சிறிய பிழைகளுக்கு வழிவகுக்கிறது. 

அவை சீக்கிரம் சரிசெய்யப்படாவிட்டால் ஆவணங்களின் சட்டப்பூர்வ செல்லுபடியை கடுமையாகக் குறைக்கலாம்.  இந்த ஆவணங்களில் ஏற்ப்படும் பிழைகளை நாம் திருத்தம் செய்யலாம்.

சொத்து வாங்குவதற்கான ஆவணங்களில் பல முக்கியமான விவரங்கள் உள்ளன.  எனவே, எழுத்துப் பிழைகள் அல்லது எண் பிழைகள் போன்ற இந்த விவரங்களில் ஏதேனும் சிறிய முரண்பாடுகளை கண்டால் கூட நீங்கள் உடனடியாக சரிசெய்ய வேண்டும்.  அதைச் சரி செய்வதற்கான வழி ஒரு திருத்தப் பத்திரத்தை உருவாக்குவது.  தட்டச்சுப் பிழைகளைத் தவிர, விற்பனைப் பத்திரத்தின் திருத்தம் முக்கியமான தகவல்களைச் சேர்ப்பது அல்லது பொருத்தமற்ற விவரங்களை நீக்குவது ஆகியவையும் அடங்கும்.

 மேலும், பதிவு செய்யப்பட்ட விற்பனைப் பத்திரத்தில் ஏதேனும் திருத்தம் செய்தால் இரு தரப்பினரின் முன்னிலையிலும் செய்யப்பட வேண்டும்.  இரு தரப்பினர் என்றால்  வாங்குபவர் மற்றும் விற்பவர் என்று அர்த்தம்.  முந்தைய உரிமையாளர் இல்லாவிட்டால், சரிசெய்வதற்கு முந்தைய உரிமையாளர்களின் சட்டப்பூர்வ வாரிசை நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.  ஆனால் நீங்கள் சட்டப்பூர்வ வாரிசைக் கண்டுபிடிக்க முடியாவிட்டால் என்ன செய்வது?  அந்த சமயங்களில் நீதிமன்றத்திற்கு செல்வதை தவிர வேறு வழியில்லை. 

சீர்திருத்த பத்திர சட்டம் என்றால் என்ன?


இந்தியப் பதிவுச் சட்டம், 1908 இன் பிரிவு 17 இல் சீர்திருத்தப் பத்திரம் என்றும் அழைக்கப்படும் ஒரு திருத்தப் பத்திரம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

 ஒரு திருத்தப் பத்திரத்தின் உதவியுடன், தற்போதுள்ள விற்பனைப் பத்திரம், பரிமாற்றப் பத்திரம் அல்லது பிற சொத்து தொடர்பான ஆவணப் பிழைகளை நீங்கள் திருத்தலாம்.

சீர்திருத்தப் பத்திரம் மூலம் முக்கியமான தகவலைச் சேர்க்கலாம் அல்லது சம்பந்தமில்லாத சொத்து விவரங்களை நீக்கலாம்.

ஆவணங்களில் எந்தெந்த பிழைகள் ஏற்படுகிறது?


தவறான பகுதி அளவீடு, உங்கள் பெயர் எழுத்துப்பிழை, அல்லது அச்சுக்கலை பிழை காரணமாக சர்வே எண் தவறாக இருக்கலாம் அல்லது பல்வேறு சொத்து ஆவணங்களுக்கு இடையே தவறான ஒப்பீடு போன்றவை இருக்கலாம்.  இந்த பிழைகளை நீங்கள் கண்டறிந்தவுடன் அவற்றை சரிசெய்ய வேண்டியது அவசியம்.  உங்கள் தவறை ரத்து செய்ய, சீர்திருத்தப் பத்திரம் எனப்படும் துணை ஆவணத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இந்த பத்திரப் பிழைகள் இரு வகைப்படும் ஒன்று சாதாரண பிழைகள் மாற்றும் உரி்மை மாற்ற பிழைகள் என இரண்டு உண்டு.


பத்திரங்களில் ஏற்படும் சாதாரண பிழைகள் என்றால் என்ன?


பத்திரத்தில் திசைகள், ஊர்ப் பெயர்கள், தன்னுடைய பெயர் என யாருக்கும் எந்தவித பெரிய மாற்றங்கள் இல்லாமல் தனக்கு மட்டுமே பிரச்சனையாகவே உள்ள பிழைகள் சாதாரணப் பிழைகள் எனப்படுகிறது.

 பட்டாவையும், பத்திரத்தையும் காணும்போது. பட்டாவில் உள்ள பெயரும், பத்திரத்தில் உள்ள பெயரும் சரியாக இல்லையென்றால் சொத்தை வாங்கப் பலர் தயங்குவார்கள். அதனால் இந்தச் சாதாரணப் பிழை கூட பெரிய பிரச்சினையாக அமைந்துவிடுகிறது இதனால் இந்த சாதாரண பிழைக்கும் சீர்திருத்தப் பத்திரம் போடப்படுகிறது.

பத்திரத்தில்  இன்னார் வீட்டுக்கு வடக்கே என எழுதுவதை இன்னார் வீட்டுக்கு கிழக்கே என எழுதுவது. பட்டா எண்ணைப் பத்திரத்தில் தவறாகக் குறிப்பிடுவது, சர்வே எண்ணை தவறாகக் குறிப்பிடுவது, ஏற்கனவே இருந்த  பத்திரங்களில் எண்களைத் தற்போது எழுதும் போதும் தவறாக எழுதுவது, இன்சியல், தந்தை பெயர் தவறாக எழுதிவிடுவது. கதவு எண்கள், ஊர்ப் பெயர், தன் பெயர் ஆகியவற்றைத் தவறாக எழுதுவது போன்ற காரணத்துக்காகவும் உங்களது பிழையான  பத்திரத்தை சீர்திருத்தம் செய்யலாம். 

மேலும் கிரயப் பத்திரத்தில் வரைபடம் மேப் விடுபட்டுவிடுவது , மின் இணைப்பு எண் மாற்றி எழுதிவிட்டால், தெருப்பெயர் மாறி எழுதியிருந்தால் திசைகள், எல்லைகள் தவறாக எழுதி அது பதிவு செய்யப்பட்டு விட்டால் இவை அனைத்தையும் சாதாரணப் பிழைத்திருத்தல் பத்திரம் மூலம் திருத்தி விடலாம்.

உரிமை மாற்றம் சீர்திருத்த பத்திரம் என்றால் என்ன?


உரிமை மாற்றம் பத்திரம் எழுதும் போது பிழை ஏற்பட்டால் உரிமை மாற்றம் ஏற்படாது உதாரணத்திற்கு பத்திரத்தில் 50 சென்ட் என்பதை 05 சென்ட் என்று எழுதி விட்டால் 50 சென்ட்டுக்கு பணம் கொடுத்து இருப்பார்கள், ஆனால் இந்தப் பிழையால் பட்டா மாறுவது தடையாகி விடும். இதனைத் திருத்துவதற்கு உரிமை மாறுவதற்கு பிழைத் திருத்தம் செய்ய வேண்டும்.

மேற்படி பிழைத்திருத்தல் பத்திரம் எழுதும் போது சரியான அளவினை குறிப்பிட்டு அதற்கு உண்டான அன்றைய சந்தை வால்யூவை வைத்து அதற்குண்டான கட்டணம் செலுத்தினால்தான் இந்த உரிமை மாறும். இதற்காக சீர்திருத்தல் பத்திரம் போடுவதில் எந்த சிக்கல்களும் ஏற்படாது.

சீர்திருத்த பத்திரம் பதிவு செய்ய முழு பத்திர தொகையும் திரும்ப சொலுத்தவேண்டுமா?


தேவையில்லை அசல் விற்பனைப் பத்திரப்படி சரியான முத்திரைதாள் மதிப்பீல் முத்திரைக் கட்டணம் செலுத்தியிருந்தால் தற்போது சீர்திருத்தம் செய்ய கட்டணம் முழுமையாக செலுத்த வேண்டாம்.

ஆனா‌ல் பத்திரம் பதிவு செய்த போது நிலத்தின் அளவுகளில் அல்லது தவறான சர்வே எண்ணில் நிலத்தின் மதிப்பை கணக்கிட்டு (guideline value) குறைவாக மதிப்பீட்டு முத்திரைதாள் கட்டணம் குறைத்து சொலூத்தியிருந்தால் தற்போது அந்த சொத்திற்கான சரியான மதிப்பீடு படி முத்திரைத்தாள் (stamp paper) கட்டணம் பதிவுதுறைக்கு செலுத்த வேண்டும்.

இதை இன்னும் உங்களுக்கு புரியும் வகையில்  கூற வேண்டுமென்றால் ஓரு இடத்தில்  குறைவான சதுரஅடி நிலத்தை அதிக சதுரஅடியாக எழுதினால் அதனை தற்பொழுது திருத்தம் செய்யும்போது ஏற்கனவே சார்பதிவகத்தில் கட்டிய முத்திரைத்தாளின் தொகையை திரும்பிப் கிடைக்காது. அதே நேரம் குறைவாக கட்டியிருந்தால் அந்த மீதியுள்ள தொகை கட்டணம் வசூலிக்கபடும்.

சீர்திருத்தம் செய்யும் போது மதிப்பீடு குறைந்தாலே ஒழிய வேறு அதிக கட்டணம் கட்ட அவசியமில்லை பழைய பத்திர முத்திரை தாள்களே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

பழைய பத்திரத்தில் திருத்தம் செய்து புதிய திருத்த பக்கங்களை மட்டுமே இணைப்பார்கள் இதற்கு தேவையான கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும்.

சீர்திருத்த பத்திரம் பதிவு செய்ய முத்திரைத்தாள் கட்டணம் எவ்வளவு ஆகும்?


சீர்திருத்த பத்திரம் பதிவு செய்ய முத்திரைத் தொகையாக 100 ரூபாய் செலுத்த வேண்டும். இருப்பினும் அசல் ஆவணத்தில்  ஒரு பக்கத்தில் முழுமையாக தவறு அதாவது பிழை இருக்கிறது என்றால் திருத்தச் செலவோடு சேர்த்து அந்த முத்திரைதாளையும் மாற்ற வேண்பியிருக்கும் இப்படி பிழைகளைப் பெறுத்து கட்டணமும் மாறுபடும்.

சொத்தை விற்றநபர் உயிருடன் இல்லை என்ன செய்வது?


ஒரு சொத்து விற்ற நபர் சீர்திருத்த பத்திரம் போட வேண்டிய சமயத்தில் உயிருடன் இல்லை என்றால் அவருடைய வாரிசுகளை வைத்துப் பிழைத்திருத்தபத்திரம் போடலாம்.

சொத்தினை விற்ற நபருக்கு, வாரிசுகள் இல்லை என்றால் இரண்டாம் வாரிசுகள், மூன்றாம் வாரிசுகள் மூலம், பிழைத்திருத்தல் போடலாம். அதற்கும் வழி இல்லை என்றால் நீதிமன்றம் செல்வதை தவிர வேறு வழியில்லை.

சொத்தை விற்ற நபர் உயிருடன் இருந்தும் சீர்திருத்த பத்திரம் போட ஒத்துழைக்கவில்லை என்றால் என்ன செய்வது?


உங்களுக்கு சொத்தினை  விற்ற நபர் உயிருடன் இருக்கிறார், பிழைத்திருத்தம் செய்ய சீர்திருத்த பத்திரம் போட வர மறுக்கிறார் என்றாலும், நீதிமன்றம் செல்ல வேண்டியிருக்கும்.

சீர்திருத்தபத்திரம் பதிவதைவிட புதிய பத்திரம் பதிவிடலாம் எது சிறந்தது?


உங்களுடைய பத்திரத்தில்  சர்வே எண், விஸ்தீரணம் , நீள அகல அளவுகள், என அனைத்துமே பிழையாக இருந்தால் , பிழை திருத்தம் பத்திரத்திற்குப் பதிலாக புதிய கிரய பத்திரம் போட வேண்டி இருக்கும்.

பத்திரத்தில் திருத்தம் நீங்களே செய்யலாமா?


உங்களுடைய பத்திரத்தில் இருக்கும்  சிறு சிறு தவறுகளை உதாரணமாக சர்வே எண், மனை எண், இனிசியல் தவறுகளை பத்திரபதிவு செய்துவிட்ட பிறகு கண்டுப் பிடித்தால் அதனை அமிலம் வைத்தோ ஒயிட்னர் போட்டோ நீங்ளே திருத்தி விடுவது முற்றிலும் தவறு இதற்க்கு உங்களை தண்டனைக்கு  உட்படுத்த முடியும்.

உங்களுடைய  வீட்டு மனை எண் 3/G யை தவறாக மனை எண் 3/25 என்று டைப் ஆகி இருந்தால், தாங்கள் பத்திர பதிவுக்கு பிறகு பத்திரத்தில் 3/G என்று பேனாவில் போட்டாலும் பதிவு அலுவலக பராமரிப்பு ஆவணங்களில் அது 3/25  என்றே இருக்கும் என்பதை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்.

பத்திரத்தில் வெட்டி திருத்தம் செய்வது சரியா?


பதிவு செய்யபட்ட பத்திரத்தில்  எழுதப்பட்ட எழுத்துகளில் சில வார்த்தைகள் அடிக்கப்பட்டு மாற்றப்பட்டு இருப்பின் அடித்தல் திருத்தல் வரி பிளவுக்கு நேராகவோ , குறுக்காகவோ இரண்டு நபர்களும் சான்று கையொப்பம் இட வேண்டும்.

மேலும்  சொத்து விபரம், சர்வே எண்ணில், வரிபிளப்பு ஏற்படுத்தி திருத்தி இருந்து அட்டேஸ்டேசன் (திருத்தியவரின் கையொப்பம்) வாங்காமல் இருந்தால் அந்த பதிவு மிக பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும் இதனால் நீதிமன்றம் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படும் நீதிமன்றம் சென்றாலும்  நீதிமன்றம்  இந்த மாதியான திருத்தம் செய்யப்பட்ட பத்திரம் செல்லாது என தீர்ப்பளித்து இருக்கிறது. அதனால் பத்திரம் எழுதும் போது மிகவும் கவனமுடன் எழுத வேண்டும்.

Post a Comment

Previous Post Next Post