சில நேரங்களில் உங்களுக்கு உரிமை உள்ள சொத்துக்களை அல்லது உங்களுக்கு பங்கு இருக்கிற ஒரு சொத்தை வேறு யாரோ போலி ஆவணங்கள் அல்லது தவறான ஆவணங்கள் மூலமோ அவர்கள் பெயருக்கு புதிதாய் பத்திரங்கள் உருவாக்கி மேலும் சட்ட குழப்பங்கள் உருவாக்கும் நோக்கில் பத்திரப்பதிவு செய்ய முயற்சி செய்வார்கள் என்று நீங்கள் நம்பும் பட்சத்தில் அதனை தடுத்து நிறுத்த சார் பதிவாளருக்கு உங்கள் தரப்பு நியாயத்தை எழுதி தடை மனு என்று ஒரு மனுவை கொடுக்கலாம்.
மேலும் தடை மனு எழுதூம் போது அந்த மனுவில் அந்த சொத்து விவரங்களை தெளிவாக எழுதி அதற்கான உங்கள் தரப்பு உரிமைக்கான ஆவணங்களையும் இணைத்து அனுப்ப வேண்டும்.மேலும் அந்த மனுவில் எதிர்தரப்பினர் பத்திரப்பதிவு தாக்கல் செய்வதை ஆட்சேபித்து அவர்கள் பதிவு செய்யும் முன் இந்த தடை மனுவை எழுதி அதனை நேரில் கொடுக்க வேண்டும். அந்த மனுவை அவர் பெற்றுக் கொண்டு முகவரி பெயர் சொத்தின் விபரம் உங்களுக்கான உரிமை ஆகியவற்றை கேட்டு பதிவு செய்து கொள்வார்.
மேலும் இந்த மனுவை நாம் கொடுத்த அத்தாட்சிக்கு வேண்டி அதே மனுவை பதிவு தபாலில் சார்பதிவாளருக்குக்கும் மாவட்ட சார்பதிவாளருக்கும் அனுப்ப வேண்டும். இதன் மூலம் உறுதியாக நீங்கள் உங்கள் எதிர்தரப்பினர் செய்யவிருக்கும் மோசடியையும் தவறான பத்திர பதிவையும் தடுக்க மனு அளித்தது பதிவுத்துறைக்கு தெரியப்படுத்தியதற்கு இது ஒரு முக்கியமான ஆவணம் ஆகும்.
பதிவு தபால் அனுப்பிய அத்தாட்சியை (acknowledgement card) அதாவது AD card பதிவு தபாலை பெற்றுவிட்டு அவர்கள் கையெழுத்து போட்டு திரும்ப வருமில்லையா அந்த கார்டை கவனமாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.அதற்கு பிறகும் பதிவுத்துறையில் விசாரணையோ தடையோ செய்யவில்லை என்றால் ஒரு முறை கூட நேரடியாக பதிவாளரிடம் சென்று உங்கள் தரப்பு நியாயத்தை சொல்லி பத்திரபதிவு செய்வதை தடை செய்ய அறிவுறுத்தலாம்.
மோசடி பத்திரப் பதிவுகள் மீது இரு மாதங்களுக்குள் விசாரணை நடத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இதன் அடிப்படையில் நீங்கள் கொடுத்த புகாரினை உடனடியாக விசாரணை அதிகாரி விசாரிக்க வேண்டும் இதற்கான அதிகாரம், மாவட்டந்தோறும் உள்ள மாவட்ட பத்திரப் பதிவாளருக்கு அளிக்கப்பட்டுள்ளது.எனவே இப்புகார் மனுக்களை பதிவுத் துறை சட்டம் 1908-இன் கீழ் 68 (2) பிரிவின்படி மாவட்ட பதிவாளர்கள் பெற்று விசாரணை நடத்த வேண்டும்.சார் பதிவாளர் உங்களுடைய எதிர்த்தரப்பினருக்கும் தங்களுக்கும் அழைப்பாணை அனுப்பி உடனடியாகவும் விரைவாகவும் விசாரணை நடத்தி ஆவணங்களையும் ஆய்வு செய்வார்.
எதிர்தரப்பினருக்கு ஆவணங்கள் சாதகமாக இருக்கிறது என்று சார்பதிவாளர் நம்பினால் அவர் பத்திரத்தை பதிவு செய்வார். இல்லையென்றால் பத்திரம் பதிவில் வில்லங்கம் இருப்பதை கண்டறிந்தால் பதிவை ரத்து செய்வார்.அனைத்து விசாரணைகளையும் முடித்த பிறகு, விசாரணை அதிகாரியான மாவட்டப் பதிவாளர் தான் கண்டறிந்த விஷயங்களைப் பதிவு செய்ய வேண்டும்.
இதற்கான உத்தரவை வாய்மொழியாக வெளியிட்டு அதுகுறித்த தகவலை சம்பந்தப்பட்ட மனுதாரருக்குப் பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும். இந்த விசாரணை நடவடிக்கைகளை இரண்டு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். இப்படி நீங்கள் தவறான முறையில் உங்களுக்கு கிடைக்க வேண்டிய உங்களுக்கு உரிமையுள்ள சொத்தை பதிவு செய்பவரிடமிருந்து தடை மனு மூலம் தடுத்து நிறுத்தி உங்கள் உரிமையை பாதுகாத்து கொள்ளலாம்.
إرسال تعليق