இந்திய தண்டணைச் சட்டம் பிரிவு 292.
What is the punishment for IPC 292 Case.
குற்றம் மற்றும் தண்டனையும்.
கீழ்கண்ட குற்றம் செய்தவர்கள் ஐபிசி பிரிவு 292 படி தண்டிக்கப்படுவார்கள். ஆபாசமான புத்தகத்தை, விளக்கத்தை, படத்தை, ஓவியத்தை, பொருளை அல்லது அமைப்பதும் விற்பதும் வாடகைக்குத் தருவதும் பிறருக்கு வழங்குவதும் பொதுமக்களுக்குக் காட்டுவதும் பொது மக்கள் அடையும் படி செய்வதும், உருவாக்குவதும், உற்பத்தி செய்வதும் தம்வசம் வைத்திருப்பதும் குற்றமாகும்.
அத்தகைய ஆபாசமான பொருள்களையே ஏதேனும் ஆபாச மேலே சொல்லப்பட்ட காரணங்களுக்காக இறக்குமதி செய்வதும் ஏற்றுமதி செய்வதும் குற்றம்.
மேலே கூறப்பட்ட ஆபாசப் பொருட்களை மேலே சொல்லப்பட்ட காரணங்களுக்காக உற்பத்தி செய்யும், வாங்கும், வைத்திருக்கும், இறக்குமதி ஏற்றுமதி செய்யும், பிறருக்கு வழங்கும் அல்லது பொது மக்களின் பார்வையில் படும்படி அல்லது காட்டும் படி வைத்திருப்பது இதன் மூலம் வியாபாரத்தில் லாபம் பெறுவது குற்றமாகும்.
மேலே குறிப்பிட்டுள்ளபடி பிரிவின் கீழ் குற்றம் என்றுகொள்ளப்படும் எந்தக் காரியத்தையும் செய்கிறேன் அல்லது செய்ய தயாராக இருக்கிறேன் என்று விளம்பரம் செய்வது பிறருக்கு அறிவிப்பதும் குற்றமாகும்.
இத்தகைய ஆபாசப் பொருட்கள் இன்னாரிடம் கிடைக்கும் என்று தெரியப்படுத்துவதும் குற்றமாகும். இந்த பிரிவின் கீழ் குற்றம் செய்ய முயற்சிப்பது குற்றமாகும்.

إرسال تعليق