இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 141. 

  What is the punishment of IPC Section 141  

இந்த சட்டம் என்ன குற்றத்திற்கு தண்டனை வழங்குகிறது என்றால் சட்ட விரோதமான கூட்டம் இதற்கு தான் தண்டனை வழங்குது.

இந்திய தண்டனைச் சட்டம் 141 தண்டனை பற்றி விளக்கமாக பார்ப்போம்.

அதாவது இந்த சட்டத்திற்கு புறம்பாக மக்களுக்கும் நாட்டிற்கும் அரசிற்க்கும் குந்தகம் விளைவிக்கும் நோக்கில் சட்ட விரோதமாக கூட்டமாக கூடி பிரச்சனை ஏற்படுத்துகிறவர்களை இந்த சட்டத்தின் அடிப்படையில் கைது செய்யலாம்.

சரி கூட்டம் என்றால் எப்படி விளக்க முடியுமா ஆம் முடியும் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடினால், அதைக் கூட்டம் என்று சட்டம் கருதுகிறது.

 கூட்டத்தின் பொது நோக்கம் சட்டத்திற்கு விரோதமான செயல்கள் புரிவதாக இருந்தால், அது சட்டவிரோதமான கூட்டம் ஆகிறது. இதைப் பற்றி பிரிவு 141மேலும் தெளிவாக்குகிறது.


இந்திய தண்டனைச் சட்டம் 141 பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

ஒரு கூட்டம் எப்போது சட்ட விரோதமான கூட்டம் ஆகிறது?

 பின்வரும் குற்றங்களில் ஏதேனும் ஒன்றை பொது நோக்கமாக கொண்டு ஐந்து அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கூடினால் அக்கூட்டம் சட்ட விரோதமான கூட்டமாகிறது.

1) மத்திய அரசு, மாநில அரசு, பாராளுமன்றம், சட்டமன்றம் பொது ஊழியர் இவர்களை குற்றமுறு வன்முறையால் தாக்கவோ, தாக்குவதற்காக அச்சிறுத்தவோ செயலுக்காக கூடுகிறக் கூட்டம்.

2) சட்டப்படியான உத்தரவுகளை அல்லது நடவடிக்கைகளை நிறைவேற்ற விடாமல் எதிர்க்கும் கூட்டம்.

3) அழிம்பு சொத்தழிப்பு அல்லது குற்றமுறு அத்துமீறல் அல்லது வேறு குற்றங்களைச் செய்யும் கூட்டம்.

4) குற்றமுறு வன்முறையால் தாக்கியோ, தாக்கப் போவதாக அச்சுறுத்தியோ, ஒருவரின் உடமையை கைப்பற்றினாலோ அல்லது மற்றவர்களின் சுவாதீன அனுபவத்தை பறித்தாலோ, அல்லது அவற்றின் தங்களின் உரிமைகளை நிலைநாட்டவோ செய்தல்.

5) குற்றமுறு வன்முறையால் தாக்கியோ, தாக்கப் போவதாக காட்டியோ, சட்டப்படியான கடமைகளை ஒருவர் செய்வதை தடுத்தல், அல்லது அவர் சட்டப்படி செய்யவேண்டாததைச் செய்யும்படி வற்புறுத்தல்..

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 141 தண்டனை விபரம்.

இப்படி இது போன்ற அனைத்து குற்றங்களும் இந்திய தண்டனை பிரிவி-143-ன்படி தண்டனை வழங்கபடும் ஒரு சட்டவிரோதமான கூட்டத்தில் உறுப்பினராக இருக்கும் எவரொருவருக்கும் ஆறு மாதம் வரை சிறைக் காவலோ அல்லது அபராதமோ அல்லது இரண்டுமோ தண்டனையாக விதிக்கப்படும்.

Post a Comment

أحدث أقدم