பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் சந்தேகங்கள் சட்ட தகவல்கள்.

இன்றைய சூழலில் அத்யாவசிய தேவையான சான்றிதழ்களை எப்படி பெறுவது என்பதை பற்றி பார்ப்போம் பிறப்பு மற்றும் இறப்புப் என்பது பதிவு ஒவ்வொருவரின் சொந்த ஊரில் அல்லது நிலையான இருப்பிடத்தில் தான் பதிவு செய்யப்பட வேண்டும் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் இது தவறு ஒரு குழந்தை எங்கு பிறக்கிறதோ அங்கு தான் அதன் பிறப்புப் பதிவு செய்யப்பட வேண்டும் அதே போல் ஒருவர் இறந்து விட்டாலும் அவர் எங்கு இறக்கிறாரோ அங்குதான் அவரது இறப்புப் பதிவு செய்யப்பட வேண்டும்.


பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் பற்றிய முக்கியமான குறிப்புகள்.

எடுத்துகாட்டு விளக்கம்.

பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் பிழையில் கவனமாக இருக்க வேண்டும்.
பிறப்புச் சான்றிதழ் அல்லது இறப்புச் சான்றிதழில் பிறந்தவர் அல்லது இறந்தவர் பெயர் உள்ளிட்ட தகவல்களைப் பதிவு செய்யும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

ஒருவர் அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் பொழுது இறந்து விடுகிறார் என்று வைத்துக்கொள்வோம் ஆனால் அவர்  இறந்து விட்டாரா அல்லது உயிருடன் இருக்கிறாரா என்பது தெரியவில்லை என்ற நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற  பிறகு அங்கு பரிசோதித்த மருத்துவர் நோயாளி ஏற்கனவே சுமார் அரைமணி நேரத்திற்கு முன்னரே இறந்து விட்டார் என்று சொன்னால் சுமார் அரை மணி நேரத்திற்கு முன்னால் தங்களது மருத்துவ அவசர கால ஆம்புலன்ஸ்  எந்த ஊரில் வந்து கொண்டிருந்திருக்கும் என்றெல்லாம் குழம்பத் தேவையில்லை மாறாக எங்கு முதன் முதலில் ஒரு மருத்துவர் 'ஒருவர் இறந்து விட்டார்' என்று கருதுகிறாரோ அங்கேயே அந்த இறப்பைப் பதிவு செய்யலாம். இறந்தவர் வீட்டிலிருந்து கிளம்பியவுடன் கூட இறந்திருக்க முடியும். அதற்காக அங்கே சென்று தான் அவருடைய இறப்பைப் பதிவு செய்ய வேண்டும் என்றெல்லாம் இல்லை. 

அவருடைய இறப்பு எங்கு முதன் முதலில் ஒரு பதிவு பெற்ற மருத்துவரால் உறுதி செய்யப்படுகிறதோ அங்குதான் அவர் இறந்ததாகக் கருதப்படுவார்.
பிறந்த குழந்தையின் தாய் தந்தையர் அல்லது முகவரியில் ஏதேனும் தவறு இருந்தால் அதைச் சரியான சான்றுகள் அளித்து மாற்றிக்கொள்ளலாம்  அதே வேளையில் குழந்தையின் பெயரில் ஏதேனும் மாற்றம் தேவையென்றால் அப்படி மாற்ற முடியாது. எனவே குழந்தையின் பெயரை உறுதி செய்த பின்னரே அதைப் பிறப்புச் சான்றிதழில் பதிவு செய்யவேண்டும்.

ஒருமுறை பதிவு செய்துவிட்டால்  அதை மாற்றுவது அவ்வளவு ஒன்றும் எளிதானது அல்ல பெற்றோர் சரியான தகவல்களை அளித்திருந்தும்  பதிவு செய்யும் அலுவலர் ஏதேனும் தவறு செய்திருந்தால் மட்டும்  பதிவு செய்கையில் பெற்றோர் அளித்த விண்ணப்பத்தில் உள்ள தகவல்களைப் பரிசோதித்துவிட்டு அதை மாற்றித் தருவார். எனவே பிறப்புச் சான்றிதழில் பெயர் பதிவு செய்யும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

2 Comments

  1. அருமையான தகவல்.
    நன்றி அண்ணா 🙏

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post