அமேசான் மற்றும் பிளிப்ஹர்டினில் சட்ட புத்தகங்கள் வாங்கலாமா கூடாதா?

  Can I buy law books online at amazon-flipkart.  

சட்டம் படிக்காத சாதாரண மக்களுக்கும் சட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் இன்றைய மக்களிடையே பலமாக இருக்கிறது. இது ஒரு நலமான விஷயமாகவே நான் கருதுகிறேன். காரணம் சட்டம் அனைவரும் அறிந்திருக்க வேண்டிய முக்கியமான நமது வாழ்வின் ஒரு அங்கம் என சொல்லலாம் சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளும் குற்றங்களும்  இதனால் குறைய வாய்ப்புகள் அதிகம்.

amazon-flipkart ல் ஆன்லைன் மூலம் சட்ட புத்தகங்கள் வாங்கலாமா?

சட்டத்தை தெரிந்து கொள்வதால் ஏற்படும் நன்மைகள்.

சாமானிய மக்களும் சட்டத்தை தெரிந்து கொள்வதால் எளிதில் அவர்களை வலியவர்கள் ஏமாற்ற முடியாது மேலும் நம் நாட்டில் குற்றங்கள் செய்பவர்களுக்கும் தண்டனைகள் பற்றி  தெரியும். இதனால் அலட்சியமாக குற்றம் செய்பவர்களின் எண்ணிக்கை குறையும்.  சாதரணமாக நம்ம நாட்டில் டிராபிக் நடைமுறைகள் கூட அனைவருக்கும் தெரியவில்லை இந்த சட்டம் பற்றி தெரிந்து மக்கள் அதை பின்பற்றி செயல்பட்டால் பெருமளவில் டிராபிக் விபத்துக்கள் அதுமீறல்கள் நடை பெறாமல் அரசு தடுக்க வேண்டியதில்லை மக்களே பின்பற்றுவார்கள்.

சரி இப்போ நாம amazon-flipkart ல் ஆன்லைன் சாப்பிங்கில் புத்தகங்கள் வாங்கலாமானு வந்த கதையை தெரிந்து கொள்வோம்.

amazon-flipkart Books.

amazon-flipkart ல் புத்தகங்கள் வாங்கலாம் தவறு ஏதுமில்லை ஆனால் புத்தகங்களை வாங்கும் போது அவற்றின் reviews ரொம்ப முக்கியம் அதை நீங்கள் மறக்காமல் கவனியுங்கள்.

அப்படி reviews பார்த்தால் கண்டிப்பாக அதில் முன்பு வாங்கியவரின் அனுபவத்தை சொல்லியிருப்பார் அது நமக்கு அந்த புத்தகத்தை வாங்க உதவியாக இருக்கும். 

ஏன் நாம ரிவியூ (reviews) படிக்க வேண்டுமென்றால் சில புத்தகங்களின் தரம் மோஷமாகவும் அந்த பேப்பர் (paper) ரொம்ப மெல்லிசாகவும் ஒன்றொடு ஒன்று ஒட்டியும் இருக்க வாய்புள்ளது. அதனால் தான் முன் அனுபவமுள்ளவர்களின் கருத்துக்களை கேட்டு புத்தகங்களை வாங்குங்கள்.

இரண்டாவது விலை சில நேரங்களில் ஆன்லைன் புத்தகங்கள் விலை  குறைவாகவும் தரமானதாகவும் கிடைக்கும் கருத்துக்களை பார்த்து வாங்கி கொள்ளுங்கள் அதே போல் லோக்கல் ஸ்டேஷ்னரி ஸ்டேர் (Stationery Stores) களில் சில புத்தகங்கள் நல்ல விலை குறைவாகவும் 10%(Discount)  டிஸ்கவுண்ட்வுடன் கிடைக்கவும் வாய்புள்ளது.

அதனால்தான் சொல்கிறேன் எப்போது ஒரு புத்தகத்தை வாங்கும் போதும் ஆன்லைன் ஆப்லைன் இரண்டிலும் விசாரித்து புத்தகங்களை வாங்குங்கள்.

நான் எப்படி புத்தகங்களை வாங்குகிறேன்.

நான் ஒரு வழக்கறிஞர் என்பதால் சரியான புத்தகங்களை தேடி தேடி வாங்குகிறேன். என்னைப் போன்ற வழக்கறிஞர்களுக்கு புத்தகங்கள் மிக அவசியமான ஒன்று நாங்கள் படிக்கும் எல்லாத்தையும் மனிதில் வைக்க முடியுமா முடியாது அதனால் அடிக்கடி புத்தகத்தை  புரட்டிப் பார்த்து படிக்க வேண்டியிருக்கும் என்பதால் தரமான பேப்பர் இருக்க வேண்டும் இல்லையென்றால் புத்தகம் சில நாட்களில் கிழிந்து வீணாக போகும். அதனால் நல்ல பேப்பர் இருக்கும் தெளிவான எழுத்துக்கள் மற்றும் புது எடிஷனான (New Edition)புத்தகங்களை நான் தேர்ந்தெடுத்து வாங்குகிறேன்.

New Edition (நீயூ எடிஷன்) எதற்க்கு வாங்க வேண்டும்.

புதிய சட்ட திருத்தங்கள் கொண்டுவரப்பட்டால் அதை சரி செய்து வெளியிடுவார்கள். அதனால் தான் சட்ட புத்தகங்கள் வாங்கும் போது நீயூ எடிஷனா (New Edition) ஏதாவது திருத்தங்கள் தற்போதைய நிலையில் கொண்டுவரப்பட்டுள்ளதா என கவனித்து வாங்குங்கள்.

தற்போது நான் சொல்லியுள்ள கருத்துக்களின் அடிப்படையில் நீங்கள் ஒரு தரமான நல்ல புத்தகத்தை ஆன்லை மற்றும் ஆப்லைனில் கட்டாயம் வாங்க முடியுமென்று நம்புகிறேன்.

Post a Comment

Previous Post Next Post