விவாகரத்து நோட்டீசுக்கு எதிர்மனுதாரர் பதிலளிக்கவில்லை என்றால் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்ய முடியுமா?

ஆம், விவாகரத்து அறிவிப்பிற்கு பிரதிவாதி பதிலளிக்காவிட்டாலும் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்யப்படலாம்.

விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்பு, வழக்கை தாக்கல் செய்யும் கணவனோ அல்லது மனைவியோ வழக்கு தாக்கல் செய்ய இருப்பதை எதிர்மனுதாரருக்கு வழக்கறிஞர் மூலமாக வழக்கறிவிப்பு அனுப்பி தெரியப்படுத்தலாம்.

இது வழக்கறிஞர் நோட்டீஸ் அல்லது விவாகரத்து நோட்டீஸ் மற்றும் வக்கீல் நோட்டீஸ் என பல பெயர்களால் பிரபலமாக அறியப்படுகிறது.

விவாகரத்து வழக்குகளில் வக்கீல் நோட்டீஸ் முக்கியமானது இல்லை ஆனால் விவாகரத்து வழக்கில் வக்கீல் நோட்டீஸ் என்பது கூடுதல் ஆதாரத்திற்கான ஒரு தகவல் மட்டுமே. பிரிந்து வாழும் கணவனோ அல்லது மனைவியோ விவாகரத்திற்காக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியும் எதிர்மனுதாரர் பதிலளிக்கவில்லை என்றாலும் நீங்கள் எதிர்மனுதாரருக்கு எதிராக விவாகரத்து மனு தாக்கல் செய்யலாம். 

Can-a-divorce-case-be-filed-if-the-respondent-does-not-respond-to-the-divorce-notice

இந்தியாவில், விவாகரத்து வழக்குகள் இந்து திருமணச் சட்டம், 1955, இந்து தம்பதிகளுக்கான சிறப்புத் திருமணச் சட்டம், 1954 இன் இன்டர்-ஃபெயித் தம்பதிகள் மற்றும் விவாகரத்துச் சட்டம், 1869 ஆகியவற்றால் நிர்வகிக்கப்படுகின்றன. பொருந்தக்கூடிய சட்டத்தைப் பொறுத்து செயல்முறை சிறிது மாறுபடலாம்.

விவாகரத்து வழக்கைத் தொடங்க, மனுதாரர் விவாகரத்துக்குத் தாக்கல் செய்யும் நோக்கத்தைப் பற்றி தெரிவிக்கும் வகையில், பிரதிவாதிக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். இந்த அறிவிப்பு சட்டத்தால் வகுக்கப்பட்ட தேவைகளுக்கு இணங்க வேண்டும் மற்றும் பிரதிவாதிக்கு முறையாக வழங்கப்பட வேண்டும்.

குறிப்பிட்ட நேரத்திற்குள் (பொதுவாக 30 நாட்களுக்குள்) விவாகரத்து அறிவிப்பிற்கு பதிலளித்தவர் பதிலளிக்கத் தவறினால், அது பொதுவாக இணங்காததாகக் கருதப்படுகிறது, மேலும் மனுதாரர் விவாகரத்து வழக்கைத் தாக்கல் செய்வதைத் தொடரலாம். மனுதாரர் தங்கள் வழக்கை ஆதரிக்க தேவையான ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை பொருத்தமான குடும்ப நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

விவாகரத்து அறிவிப்பிற்கு பிரதிவாதி பதிலளிக்காவிட்டாலும், நீதிமன்ற விசாரணைகளின் போது அவர்கள் தங்கள் தரப்பு வழக்கை முன்வைத்து விவாகரத்து நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும், பிரதிவாதியின் பதில் இல்லாத நிலையில், அவர்களின் தரப்பில் இருந்து ஒத்துழைப்பு அல்லது தொடர்பு இல்லாததைக் கருத்தில் கொண்டு நீதிமன்றம் வழக்கைத் தொடரலாம்.

உங்கள் வழக்கில் பொருந்தக்கூடிய குறிப்பிட்ட தேவைகள் மற்றும் நடைமுறைகளைப் புரிந்து கொள்ள குடும்பச் சட்டத்தில் நிபுணத்துவம் பெற்ற ஒரு வழக்கறிஞருடன் கலந்தாலோசிப்பது நல்லது.

எடுத்துக்காட்டு:

ஒரு கணவன் தனது மனைவியைவிட்டு பிரிந்து வாழ்கிறார் என வைத்துக்கொள்வோம் அவர் விவாகரத்து வழக்கை தாக்கல் செய்ய விரும்புகிறார் இதற்காக ஒரு வழக்கறிஞரை சந்தித்து ஆலோசனை பெறுகிறார். பின்னர் விவாகரத்து செய்ய போகிறேன் என்று அதற்கான காரணத்தை விவரித்து வழக்கறிஞர் மூலமாக ஒரு வக்கீல் நோட்டீஸை தனது பிரிந்து வாழும் மனைவிக்கு அனுப்பி வைக்கிறார் அதை அவர் பெற்றுக் கொண்டு பதில் அறிவிப்பு ஏதும் அனுப்பாமல் தவிர்த்து வந்தால் அந்த வக்கீல் நோட்டீஸை அனுப்பிய கணவர் தாராளமாக விவாகரத்து வழக்கு தொடரலாம். இது மனைவிக்கும் பொருந்தும் அதாவது மேலே நான் சொல்லி இருப்பதை அப்படியே கணவனுக்கு பதிலாக மனைவி நோட்டீஸ் அனுப்பியதாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

விவாகரத்து வழக்கில் வக்கீல் நோட்டீஸ் அனுப்புவதில் பயன் உண்டா?

விவாகரத்து வழக்கில் வக்கீல் நோட்டீஸ் அனுப்புவதால் ஏதாவது பயன் உண்டா என்றால் ஆம் பயன் இருக்கிறது எதிர் தரப்பு என்ன மனநிலையில் இருக்கிறது என்பதை வழக்கறிஞரின் நோட்டீஸை பெற்றபிறகு பதில் அறிவிப்பு தருவதன் மூலமாக தெரிந்து கொள்ள முடியும் வழக்கில் சுலபமாக சமரசம் செய்து முடியும் எப்படி என்றால் எதிர் தரப்பும் விவாகரத்து பெற விரும்பினால் இருதரப்பும் பேசி பரஸ்பர விவாகரத்திற்கு வழக்கை கொண்டு செல்ல முடியும் இதனால் பல ஆண்டுகள் வழக்குகளை நடத்தி பெற கூடிய முடிவை பேசி உடனடியாக பெற முடியும்.

விவாகரத்து வழக்கில் வக்கீல் நோட்டீஸ்க்கு கட்டாயம் பதிலளிக்க வேண்டுமா?

விவாகரத்து வழக்கில் மனுதாரர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினால் கட்டாயம் எதிர்மனுதாரர் பதில் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. வழக்கு நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட பிறகு எதிர்மனுதாரருக்கு அழைப்பாணை அனுப்பப்படும் அதை பெற்றுக்கொண்ட பிறகு நீதிமன்றத்தில் தோன்றி பதிலளிக்கவில்லை என்றால் வழக்கு எதிர்மனுதாரருக்கு எதிராக முடியும்.

விவாகரத்து வழக்கில் வக்கீல் நோட்டீஸ்க்கு எதிர்மனுதாரர் பதில் தரவில்லை அடுத்து என்ன செய்வது?

விவாகரத்து வழக்கில் வக்கீல்நோட்டீஸ் அனுப்பிய பிறகு பதில் அறிவிப்பு ஏதும் எதிர்மனுதாரர் தரவில்லை என்றால், நோட்டீசில் சொல்லப்பட்ட முற்பது நாட்களுக்கு பின் நோட்டீஸ் அனுப்பிய மனுதாரர் கணவனோ அல்லது மனைவியோ யாராக இருந்தாலும் விவாகரத்து பெற வழக்கை குடும்பநல நீதிமன்றத்திலோ அல்லது உங்க மாவட்ட சார்பு நீதிமன்றத்திலோ விவாகரத்து வழக்கை தாக்கல் செய்யலாம்.

மேற்படி நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யபட்டு எதிர்தரப்புகளுக்கு நீதிமன்ற அழைப்பாணை அனுப்பபடும் அதன் பிறகு எதிர்மனுதாரர் வழக்கை தொடர்ந்து நடத்த வேண்டும்.

இப்போது உங்களுக்கு தெளிவாக புரிந்திருக்கும் விவாகரத்து நோட்டீஸிற்கு எதிர்மனுதாரர் பதிலளிக்கவில்லை என்றாலும் விவாகரத்து வழக்கு போடலாம் என்று. மேலும் உங்கள் வழக்குகளை நடத்த வழக்கறிஞரின் வழிகாடுதல்களை சரியாக கடைப்பிடியுங்கள். உங்களுக்கு வழக்கறிஞர் பிரகதீஷ் ஆகிய என்னுடைய சட்ட ஆலோசனை தேவைப்பட்டால் இந்த லிங்கை அழுத்துங்கள்.CONTACT ME

Post a Comment

Previous Post Next Post