குடும்ப வன்முறை-Domestic violence.

  What Is Domestic Violence?  

குடும்ப வன்முறை(Domestic violence) என்பதை பற்றி இன்றய சட்ட பதிவில் பார்ப்போம் உடல்ரீதியாகவோ, பாலியல்ரீதியாகவோ, மன ரீதியாகவோ அல்லது பொருளாதார ரீதியாகவோ குடும்பத்தில் ஒருவர் ஒடுக்கப்படுவதும், அவர்கள் அச்சுறுத்தப்படுவதும் தான் குடும்ப வன்முறை எனபடுகிறது.


குடும்ப வன்முறை என்றால் என்ன?

குடும்ப வன்முறையின் வகைகள் :

உடல்ரீதியான குடும்ப வன்முறை செய்வது.

உடல்ரீதியாக துன்புறுத்துவது தான் இந்த வகை குடும்ப வன்முறைகளாகும் கன்னத்தில் அறைவது, அடிப்பது, உதைப்பது, தள்ளுவது, கையில் கிடைத்த பொருளை வீசி எறிவது ஆயுதம் கொண்டோ அது இல்லாமையோ தாக்குவது போன்றவை உடல்ரீதியான குடும்ப வன்முறை செயலாகும்.

மனரீதியாக குடும்ப வன்முறை செய்வது.  

சந்தேகப்படுவது, ஆபாசமாக திட்டுவது, அவதூறு செய்வது, தனிமைப்படுத்துவது மேலும்  எப்பொழுதும் திட்டிக்கொண்டும் வாய்சொல்லால் வசைபாடுவது போன்றவை மன ரீதியான வன்முறைகள்.இதனால் மன உளைச்சல் ஏற்படுகிறது.

பாலியல்ரீதியாக குடும்ப வன்முறை செய்வது.

பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுப்பது அதாவது ஒரே வீட்டில் வசிப்பவர்கள் ஒருவரை முறைதவறி பாலியல் உறவுக்கு அழைப்பது மேலும் கணவன் ஆனாலும் விருப்பம் இல்லாமல் பாலியல் உறவுக்கு அழைத்து துன்புறுத்த கூடாது. விருப்பமில்லாமல் தொட்டுப் பேசுவதும் , முத்தமிடுவதும், கட்டியணைப்பதில் தொடங்கி வல்லுறவு செய்வது.  போன்றவை பாலியல்ரீதியான  குடும்ப வன்முறை செயலாகும்.

பொருளாதார ரீதியாக குடும்ப வன்முறை செய்வது.

பணம் வேண்டி தொந்தரவு செய்வது. பணத்திற்காக கணவர் மனைவியை அடிப்பது மற்றும் மனைவி வீட்டில் பணத்தை வாங்கி வர சொல்வது, குடும்ப உறுப்பினர் ஒருவர் பணத்திற்காக இன்னொருவரை துன்புறுத்துவது பொருளாதார ரீதியாக குடும்ப வன்முறை செய்வதாகும்.

குடும்ப வன்முறை சட்டம் யார் மீது நடவடிக்கை எடுக்கும்.

 குடும்ப வன்முறை என்பது  கணவன் மற்றும் மனைவிக்கு இடையில் மட்டுமே நடக்க வேண்டுமென்பதில்லை. மற்ற உறவினர்களுக்கு இடையிலும் நடக்கலாம். கணவர் மட்டுமல்லாமல் உறவினர் மீதும் இந்த சட்டம் மூலம் நடவடிக்கை எடுக்க முடியும்.

குடும்ப வன்முறை சட்டம் எப்போது அமலுக்கு வந்தது?

குடும்ப வன்முறை நமது இந்தியாவில் 70%சதவிகிதம் பெண்கள் குடும்ப வன்முறையால் துன்புறுத்தப்படுவதாக புள்ளி விபரங்கள் சொன்னதை அடுத்து மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் இணைந்து இந்த அமைப்புகளால் குடும்ப வன்முறை பெண்கள் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டு அது 2005ம் ஆண்டு அமலுக்குவந்தது.

குடும்ப வன்முறை சட்டதின்  தண்டனைகள். 

குடும்ப வன்முறை சட்டத்தின் அடிப்படையில் கணவன் தன் மனைவியை அடித்தாலோ அல்லது அவமானப்படுத்தி துன்புறுத்தினாலோ இருபதாயிரம் ரூபாய் அபராதமும், ஓராண்டு சிறை தண்டனையும் கிடைக்கும். மேலும் குற்றத்துக்கு ஏற்ப தண்டனை வழக்கப்படுகிறது.

பெண்கள் மீதும் குடும்ப வன்முறை சட்டம் பாயுமா?

குடும்ப வன்முறை புகார் என்பது ஆண்களுக்கு மட்டும் தண்டனை வழக்கும் என்பதிலை இந்த சட்டம் பெண்கள் மீதும் பாயும். இதை மும்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

பெண்களுக்கான நீதியை உறுதி செய்யும் விதமாகவே இச்சட்டத்தைப் பார்க்க வேண்டும். அவர்களுக்கு ஏமாற்றத்தைத் தருவதாக இருந்தால் சட்டமே பொருளற்றுப் போய்விடும். குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண் ஆண்களுக்கு எதிராக புகார் தருவது போலவே ஆண்களும் பெண்களுக்கு எதிராக புகார் செய்யலாம் என ஒரு மனுவை விசாரித்த நீதிபதி தன் தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார்.

குடும்ப வன்முறை சட்டம் பயனுள்ளதா?

பெண்களுக்காக நீதியை பெற்றுத்தர இந்த சட்டம் பயன்பட்டாலும் நமது நாட்டில் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு, வரதட்சணை தடுப்பு, குழந்தைத் திருமணம், ஈவ் டீசிங்இப்படி பல சட்டமிருந்தும் இந்த குற்றங்கள் நீதித்துறைக்கு தெரியாதவாறு நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதைபோலதான் குடும்ப வன்முறை சட்டமும் வெறும் ஏட்டளவில்தான் உயிர் வாழ்கிறது என்பதும் கசப்பான உண்மை.

குடும்ப வன்முறை தொடர்ந்து ஏற்பட என்ன காரணம்?

இந்தச் சட்டத்தின்படி பாதிக்கப்பட்ட பெண் முதலில் புகார் அளிக்க வேண்டும். ஆனால், கணவனை சிறைக்கு அனுப்பிவிட்டு, தான் மட்டும் குழந்தைகளுடன் நிம்மதியாக வாழ எந்த நடுத்தர, கீழ் நடுத்தர, ஏழைப் பெண்களும் விரும்புவதில்லை. இதற்கு காலம் காலமாக சொல்லப்பட்டு வரும் இந்திய கலாசாரம் என்பதும் ஒரு காரணம்.எனவே பெரும்பாலான பெண்கள் புகார் தருவதில்லை. அதனால் இந்தச் சட்டம் வெறும் பேப்பரில் மட்டுமே அச்சடிக்கப்பட்டதாக இருக்கிறது.

1 Comments

  1. 2019Accident case
    Court ena status theriyala
    Insurance claim pananum sir
    Pls help me sir

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post