வாய்தா என்றால் என்ன?

Pragatheesh.BA.LLB (வழக்கறிஞர்)
By -

நீதிமன்ற வாய்தா பற்றி மக்களுக்கு தெரிந்தவை.

பொதுவாக மக்களுக்கு நீதிமன்றத்தில் வழங்கப்படும் வாய்தா பற்றி எப்படி தெரியும் எதுவரைக்கும் தெரியும் என்றால்  நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அந்த வழக்கை விசாரிக்காமலோ அல்லது அடுத்த விசாரணைக்காகவோ ஒத்தி வைப்பது வாய்தா (Postpone) என்று  யாராவது சொல்லி கேட்டு தெரிந்திருக்கும்.அதை பற்றி இன்று முழுமையாக தெரிந்து கொள்வோம்.

What is Vaida?

நீதிமன்றத்தில் வாய்தா வழங்கும் நடைமுறை எந்த சட்டத்தின் அடிப்படையாக செயல்படுகிறது.

நீதிமன்றத்தில் வாய்தா வழங்கும் நடைமுறை எந்த சட்டத்தின் அடிப்படையாக செயல்படுகிறது என்றால் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 309 ன் அடிப்படையில் தான் செயல்படுகிறது.

பிரிவு 309. நடவடிக்கைகளைத் தள்ளி வைப்பதற்கு அல்லது ஒத்தி வைப்பதற்கான (பிரிவு 309 – Power to postpone or adjourn Proceedings)
அந்த பிரிவில் கூறப்பட்டது என்னவென்றால்.

1). நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருக்கும் அனைவரையும் விசாரித்து முடிக்கும் வரையில் ஒவ்வொரு வழக்கு விசாரணையையும் அடுத்தடுத்த நாள் தொடர்ந்து விசாரிக்க வேண்டும். 

பரிசிலனை அல்லது விசாரணை ஒவ்வொன்றிலும் நடவடிக்கைகளை எவ்வளவு விரைவாக நடத்துவது சாத்தியமோ அவ்வளவு விரைவாக அவை நடத்தப்படுதல் வேண்டும்.

மற்றும் குறிப்பாக சாட்சிகள் விசாரணை ஒரு முறை துவங்கிவிட்டதும் அடுத்து வரும் நாளுக்கு அப்பால் அந்த நடவடிக்கைகளை ஒத்தி வைப்பது அவசியமாக இருக்கிறது என்பதாகப் பதிவு செய்யப்பட வேண்டிய காரணங்களுக்காக நீதிமன்றம் முடிவுக்கு வந்தாலன்றி முன்னிலையாகியுள்ள சாட்சிகள் அனைவரையும் விசாரித்து முடியும் வரை அன்றாடம் அந்த விசாரணை தொடர்ந்து நடத்தப்படுதல் வேண்டும். 

(குறிப்பாக : இ.த.ச. பிரிவுகள் 376 முதல் 376D வரையிலான கீழ்ஓர் குற்றம் தொடர்பில் விசாரணை அல்லது வழக்கு விசாரணை இருக்கும்போது , சாட்சிகள் விசாரணை தொடங்கப்பட்ட தேதியிலிருந்து இரு மாத கால அளவுக்குள் இயன்றவரை வழக்கு விசாரணை முடிக்கப்படுதல் வேண்டும்.

இது புதிதாக சட்ட எண்- 13/2013 ன் படி இணைக்கப்பட்டு 3.2.2013 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.)

( 2 ) நீதிமன்றம் குற்றமொன்றை விசாரணைக்கெடுத்துக் கொண்டதற்குப் பின்பு அல்லது விசாரணை எதையும் துவக்குவதைத் தள்ளி வைப்பதோ ஒத்தி வைப்பதோ அவசியமானது அல்லது உசிதமானது. என்னும் முடிவுக்கு வருமானால் அது தான் பொருத்தமென நினைக்கும் நிபந்தனைகளின் பேரில் பதிவு செய்யப்பட வேண்டிய காரணங்களுக்காக நியாயமானதெனத் தான் எண்ணும் காலத்திற்கு அவ்வப்போது அந்தப் பரிசீலனை அல்லது விசாரணையைத் தள்ளிவைக்கலாம் அல்லது ஒத்தி வைக்கலாம் மற்றும் எதிரி காவலிலிருப்பாரானால் கட்டளை ஒன்றின் மூலமாக மீண்டும் அவரைக் காவலில் வைக்கலாம்.

 வரம்புரையாக நடுவர் எவரும் எதிரியை ஒரு சமயத்தில் பதினைந்து நாள்களுக்கு மேற்பட்ட காலத்திற்கு இந்தப்பிரிவின்படி காவலுக்கு அனுப்புதல் ஆகாது .

 மேலும் வரம்புரையாக சாட்சிகள் முன்னிலையாயிருக்கும்போது எழுத்து மூலமாகப் பதிவு செய்யப்பட வேண்டிய சிறப்புக் காரணங்களுக்காக அல்லாமல் அவர்களை விசாரிக்காமல் ஒத்திவைப்பதற்கோ தள்ளிவைப்பதற்கோ அனுமதிக்கப்படுதல் ஆகாது.

இன்னும் வரம்புரையாக எதிரிக்கு எதிராக விதிக்கப்படவிருக்கும் தண்டனை குறித்து காரணம் கோருவதற்கு எதிரியினை இயல்விக்கும் நோக்கத்திற்காக மட்டும் வழக்கை ஒத்திப் போடுதல் என்பது கூடாது.

நீதிமன்ற வழக்கை ஒத்தி வைப்பது அவசியமானது என்று நீதிமன்றம் கருதினாலொழிய மற்றபடி வழக்கை நீதிமன்றம் ஒத்தி வைக்கக்கூடாது.
 அவ்வாறாக நீதிமன்றம் ஒத்தி வைத்தால் அதற்கான காரணத்தை நீதிமன்றம் பதிவு செய்ய வேண்டும்.

( a ) சூழமைவுகள் அந்த தரப்பினரின் கட்டாள்கைக்கு அப்பாற்பட்டு இருந்தால் தவிர தரப்பினரின் வேண்டுகோளின்படி தள்ளிவைப்பு வழங்கப்படாது .

 ( B ) வழக்குத் தரப்பினரின் வழக்குரைஞர் வேறொரு நீதிமன்றத்தில் இருப்பதன் காரணத்தின் பேரில் தள்ளிவைப்பதற்கு அடிப்படை ஆகாது. 

( c ) சாட்சி ஒருவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருக்கும் போது வழக்குத் தரப்பினரின் வழக்கறிஞர் வழக்கு விசாரணைக்கு வராதபோதும் அல்லது வழக்கு விசாரணைக்கு வழக்குத் தரப்பினரோ அல்லது வழக்குத் தரப்பினரின் வழக்கறிஞரோ வந்திருந்தும் சாட்சியை விசாரிக்கவோ அல்லது குறுக்கு விசாரணை செய்யவோ தயாராக இல்லாதபோதும் நீதிமன்றம் தான் பொருத்தமெனக் கருதும் நிலையில் சூழலுக்கேற்ப முதல் விசாரணை அல்லது குறுக்கு விசாரணையை தவிர்த்து சாட்சியிடமிருந்து வாக்குமூலத்தைப் பதிவு செய்து ஒரு உத்தரவைப் பிறப்பிக்கலாம்.

 விளக்கம் :

1).எதிரி குற்றமொன்றைச் செய்திருக்கக் கூடும் என்பதான சந்தேகத்தை எழுப்புவதற்குப் போதுமான சாட்சியம் கிடைத்திருந்து அவரைக் காவலில் வைப்பதனால் மேற்கொண்டும் சாட்சியம் கிடைக்கலாம் என்பதாகத் தோன்றுமானால் இது மீண்டும் காவலில் வைப்பதற்கு நியாயமான காரணமாகும்.

 விளக்கம் :

2).ஒத்தி வைக்கும் முன்னோ , தள்ளி வைக்கும் முன்னோ போடப்படும் நிபந்தனைகளில் வாதி தரப்பு அல்லது எதிரி உரிய சந்தர்ப்பங்களில் செலவுத் தொகையைச் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையும் ஒன்றாகும் .

அதாவது வழக்கை ஒத்தி வைக்கும் சூழ்நிலையில் அந்த வழக்கை ஒத்தி வைக்க யார் காரணமோ அவர்கள் மீது உரிய சந்தர்ப்பங்களில் வழக்கு செலவுத் தொகையை செலுத்த உத்தரவிடலாம். இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் share பண்ணுங்கள்.

கீழே உள்ள பதிவுகளையும் படித்து பாருங்கள் :







#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!