ஆபாச படங்களை பகிர்ந்தால் குற்றம்.
வயது பூர்த்தியான ஒரு தனிநபர் அவரது பர்சனலாக பார்க்கலாம் ஆனால், அந்த ஆபாசப் படத்தை ஒருவருக்குப் பகிர்ந்தால்கூட, அது சட்டப்படி குற்றம். அதேசமயம், குழந்தைகளின் ஆபாசப் படங்களைப் பார்ப்பது, பகிர்வது, பதிவிறக்கம் செய்வது என அனைத்துமே சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம்.
குழந்தைகளின் ஆபாசப் படங்களைப் பார்ப்பவர்கள் என்றால் மன ரீதியாகக் குழந்தைகளை பாலியல் நோக்கில் பார்க்கும் பீடோபைல்’ எனும் பாதிப்பு உள்ளவராக இருக்க வாய்ப்பிருக்கிறது. குழந்தைகளுக்கு எதிரான இந்த வக்கிர மனநிலை, அவர்களைக் குழந்தைகளுக்கு ஆபத்தானவர்களாகவே அடையாளப்படுத்துகிறது.
இந்த நிலையில், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துக் கொண்டே வரும் இந்த காலச்சூழலில், இத்தகைய நடவடிக்கைகளும், சமீபத்திய சட்டத்திருத்தம் கொண்டு வந்திருக்கும் கடுமையான சட்டங்களும் வரவேற்கத்தக்கவகையாக இருக்கிறது அதில் சிலவற்றை பார்ப்போம்.

தண்டிக்கும் சட்டங்கள் .
போர்னோகிராபி தொடர்பான இந்தியச் சட்டங்கள் என்ன சொல்கின்றன போர்னோகிராபி எனப்படும் ஆபாசப் படங்கள் மற்றும் ‘சைல்டு போர்னோகிராபி’ எனப்படும் குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் படங்கள் ஆகியவற்றையும் ஒன்றுக்கும் மேற்பட்ட இந்தியச் சட்டங்கள் கையாளுகின்றன.
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 292 :
பாலியல் ஈடுபாட்டை மிகவும் அதிகரிப்பதாகவோ,ஆபாச உணர்வுகளைத் தூண்டும் விதமாகவோ, ஒருவரின் மனதைக் கெடுப்பதாகவோ இருக்கும் எந்த விதமான ஆபாச வீடியோ அல்லது புகைப்படப் பதிவுகளை விற்பது, வாடகைக்கு விடுவது, பொது இடங்களில் காட்சிப்படுத்துவது, பலருக்குப் பகிர்வது, இந்த ஆபாசப் பதிவுகளை வைத்து லாபம் சம்பாதிப்பது, விளம்பரப்படுத்துவது, தயாரிப்பது உள்ளிட்டவை தண்டனைக்குரிய குற்றம் ஆகும்.
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 293 :
இருபது வயதுக்குக் குறைவான ஒரு நபருக்கு இத்தகைய ஆபாசப்படங்களை, வீடியோக்களை விற்பதைத் தண்டனைக்குரிய குற்றமாக வரையறுக்கிறது.
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 294 :
ஆபாசமான பாடல்கள் பாடுவது, பொது இடங்களில் ஆபாசமாக நடந்துகொள்வது ஆகியவற்றைத் தண்டனைக்குரிய குற்றம் என்கிறது.
தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 67 :
போக்ஸோ சட்டம்.
போக்ஸோ சட்டம் 2019 -ம் ஆண்டு ஜூலை மாதம் திருத்தப்பட்ட `போக்ஸோ’ சட்டத்தின்படி, குழந்தைகளைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துபவர்களுக்கு மரண தண்டனை வரையும், குழந்தைகளின் ஆபாசப் படங்களை வெளியிடுபவர்கள், பரப்புபவர்கள், பார்ப்பவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கான சட்டப்பிரிவுகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
குறிப்பாக குழந்தைகளின் ஆபாசப் படங்கள் அதாவது சைல்டு போர்னோகிராபி என்றால் என்ன என்பதன் விளக்கம் மறுவரையறை செய்யப்பட்டுள்ளது. புதிய சட்டத்தின்படி , புகைப்படம், வீடியோ டிஜிட்டல் படம் அல்லது கணினியில் உருவாக்கிய படம் என எந்த வடிவில் குழந்தைகளை ஆபாசமாக சித்திரிக்கப்பட்டிருந்தாலும் அந்த படம் குழந்தைகளை வைத்து நேரடியாக உருவாக்கப்பட்டிருந்தாலும் அல்லது குழந்தைகளின் படத்தை எடிட் செய்து சேர்த்திருந்தாலும்கூட அது சட்ட விரோதமே. மேலும் பெரியவர்கள் சிறியவர்களைப் போல நடித்திருந்தாலும் அது சைல்டு போர்னோகிராபி’ எனும் வகைப்பாட்டில்தான் வரும்.
குழந்தைகளின் ஆபாசப் படங்களைப் பார்த்தவர்கள், பதிவிறக்கம் செய்து வைத்திருப்பவர்கள், பகிர்ந்தவர்களைப் பட்டியல் தயாரித்து வைத்திருக்கும் காவல் துறை, அவர்களின் மீது நடவடிக்கை எடுப்பதாகச் சொல்லியிருக்கிறது.அவர் விரைவில் கைது செய்யப்படுவார்கள்.
Post a Comment