இந்தியாவில் விவாகரத்து வழக்குகளின் நடைமுறையானது விவாகரத்து மனு தாக்கல் செய்வதிலிருந்து தொடங்கி, விவாகரத்துக்கான இறுதி உத்தரவில் முடிவடைகிறது.இந்த விவாகரத்து செயல்முறை ஆறு நிலைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மனு தாக்கல், சம்மன் சேவை, பதில், விசாரணை, இடைக்கால உத்தரவு மற்றும் இறுதி உத்தரவு.
பொருளடக்கம் :
- எக்ஸ் பார்ட்டி ஆர்டர் விவாகரத்து என்றால் என்ன?
- எக்ஸ் பார்ட்டி ஆர்டர் விவாகரத்து யாருக்கு கிடைக்கும்?
- எக்ஸ் பார்ட்டி ஆர்டர் ஏன் வழங்கபடுகிறது?
- எக்ஸ் பார்ட்டி ஆர்டர் எதனால் வழங்கப்படுகிறது?
எக்ஸ் பார்ட்டி ஆர்டர் விவாகரத்து என்றால் என்ன?
இந்தியாவில் கணவன் மனைவிக்கிடையே பிரச்சனைகள் ஏற்பட்டு இனி சேர்ந்து வாழ முடியாது என்று முடிவு செய்யும் போது விவாகரத்து மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறார்கள்.
விவாகரத்து மனு தாக்கல் செய்யப்பட்ட பிறகு வழக்கு இருக்கும் விபரம் தெரிந்த பிறகும் நீதிமன்ற விசாரணைக்கு எதிர்மனுதாரர் வர தவறினால் எக்ஸ் பார்ட்டி ஆர்டர் அதாவது தமிழில் ஒருதலைப்பட்ச தீர்ப்பு வழங்கப்படுகிறது.
எக்ஸ் பார்ட்டி ஆர்டர் விவாகரத்து யாருக்கு கிடைக்கும்?
இந்தக் கட்டுரையில் சொல்லப்படுகிற சட்டம் கணவனுக்கு பொருந்துமா மனைவிக்கு பொருந்துமா என்ற கேள்வி உங்களுக்கு இருக்கலாம் அதற்கு பதில் வழக்கில் மனுதாரராக கணவனோ அல்லது மனைவியோ இருவரில் யாராக இருந்தாலும் இருவருக்கும் இந்த நடைமுறை பொருந்தும் இதில் உங்களுக்கு குழப்பம் வேண்டாம்.
எக்ஸ் பார்ட்டி ஆர்டர் ஏன் வழங்கபடுகிறது?
கணவன் மனைவி இருவரும் வாழும் வாழ்க்கையில் குழப்பம் ஏற்பட்டு பின் விவாகரத்து என்ற முடிவுக்கு வருகிறார்கள். விவாகரத்து மூலமாக திருமண பந்தத்தை முடிவுக்கு கொண்டு வர எண்ணி விவாகரத்து வழக்கை நீதிமன்றத்தில் கணவர் தாக்கல் செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.
விவாகரத்து வழக்கினை தாக்கல் செய்த பிறகு எதிர்மனுதாரர் நீதிமன்றத்தில் தோன்றி அவரது எதிர்உரையை (counter, written statement) தாக்கல் செய்யச் சொல்லி நீதிமன்றத்தில் இருந்து ஒரு அழைப்பானையை எதிர் மனுதாரருக்கு அனுப்பி வைப்பார்கள்.
நீதிமன்றத்தில் இருந்து அனுப்பி வைக்கப்படும் நீதிமன்ற வழக்கு அறிவிப்பு அழைப்பாணையை பெற்றுக் கொண்டோ அல்லது வாங்க மறுத்துவிட்டோ வழக்கு இருக்கும் விபரம் தெரிந்தே வேண்டுமென்றே நீதிமன்றத்திற்கு வழக்கு இருக்கும் வாய்தா நாளில் நேரில் தோன்றி விளக்கம் அவருக்கு எதிராக எக்ஸ் பார்ட்டி ஆர்டர் ஒரு தலைப்பட்ச தீர்ப்பு வழங்கப்படும்.
எக்ஸ் பார்ட்டி ஆர்டர் எதனால் வழங்கப்படுகிறது?
வழக்கு இருக்கும் விவரத்தினை நீதிமன்ற மூலமாக அழைப்பாணை அனுப்பி எதிர்மனுதாரருக்கு மனுதாரர் தெரியப்படுத்துகிறார். அழைப்பாணையைப் பெற்றுக் கொண்ட பிறகு நீதிமன்ற விசாரணைக்கு நேரில் தோன்றி எதிர்மனுதாரர் அவர் பக்க விளக்கத்தை கொடுக்க தவறினால் அவரது சாட்சியம் ரத்து செய்யப்பட்டு ஒருதலைப்பட்ச தீர்ப்பு வழங்கப்படும்.
அதுபோலவே அழைப்பாணை வீட்டிற்கு வந்த பிறகு வழக்கு இருக்கும் விபரம் தெரிந்து அந்த அழைப்பாணையை வாங்க மறுத்தால் அந்த அழைப்பாணையை அவர் பெற்றதாகவே நீதிமன்றம் எண்ணும், வழக்கு இருப்பது அவருக்கு தெரிந்த காரணத்தால் தான் வேண்டுமென்றே அழைப்பாணையை வாங்க மறுத்துள்ளார் என்று நீதிபதி கருத்தில் எடுத்துக் கொள்வார்.
மேற்படி காரணத்தின் அடிப்படையில் வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்காத எதிர்மனுதாரரின் வழக்கு சாட்சி விசாரணையை ரத்து செய்து நீதிபதி ஒருதலைப்பட்ச தீர்ப்பை வழங்குவர்.
எதிர்மனுதாரர் வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் காலதாமதத்தை ஏற்படுத்தினால் மனுதாரருக்கு கிடைக்க வேண்டிய நியாயமானது சீக்கிரம் கிடைக்காமல் தாமதமாகிக் கொண்டே இருக்கும் அதை சரி செய்வதற்காக தான் நீதிமன்றம் இந்த நடைமுறையை கையாள்கிறது.
வீடியோ மூலமாக எக்ஸ் பார்ட்டி ஆர்டர் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் இதோ லிங்க் Ex parte divorce meaning.
Post a Comment