அரசியலமைப்பு சட்டம்/Constitutional law 

நமது  இந்தியாவில் வாழ்பவர்களுக்கென சில அடிப்படை உரிமைகளை இந்திய அரசியலமைச் சட்டம் பகுதி 3 ல் சரியாக வரையறுக்கப்பட்டுள்ளது. 

இந்த சட்டத்தின் படி இந்தியர்கள்  அனைவரும் அடிப்படை உரிமைகள் பெற்று இந்தியக் குடிமகன்களாக வாழலாம்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி முன்பு அடிப்படை உரிமைகளை ஏழு வகைகளாக பிரித்து இருந்தனர் ஆனால் அதில் ஒரு உரிமையை பிரித்துவிட்டனர் அது தான் சொத்துரிமை தற்காப்பு அது சட்டபூர்வமான உரிமை மட்டுமே இப்போது ஆறு உரிமைகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

அடிப்படை உரிமைகள். 

1,சம உரிமை
2,சுதந்திர உரிமை
3,சுரண்டலை எதிர்க்கும் உரிமை
4,சமய சார்பு உரிமை
5,கலாச்சாரம் மற்றும் கல்வி கற்கும் உரிமை
6,அரசியல் அமைப்பை சீர்மைப்படுத்தும் உரிமை.

இந்த அடிப்படை உரிமைகளில் இருந்து இன்னும் சில உரிமைளை நாம் பெறுகிறோம். அது தான் நாம் வழக்கமாக சொல்கிற பேச்சுரிமை, பேச்சு சுதந்திரம்,கருத்துரிமை, எழுத்துரிமை,கூடிவாழும் உரிமை மற்றும் அமைதி வழிபாட்டு உரிமை, சுதந்திர சமய உரிமை, சமூக நீதிக் கோரும் உரிமை போன்றவைகளும் இந்த ஆறு  உரிமைகளில் அடங்கும்.

அடிப்படை உரிமைளை மீறுவது குற்றமா:


மேலும் இந்த அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதோ அல்லது மீறப்படுவதோ குற்றமுறு செயல்களாக இந்திய தண்டணைச் சட்டம் கூறுகிறது இதன் அடிிப்படையில் அந்த குற்றத்தை செய்தவர்கள் தண்டிக்கபடுவார்கள். 

அனைத்து குடிமகனின் கடமைகள்.


அரசியல் அமைப்புச் சட்டத்தின் படி அடிப்படை உரிமைகளை இந்திய குடிமக்கள் அனைவரும் சுதந்திரமாக அனுபவிக்க கடமைபட்டவர்களாவர். 

இந்த அடிப்படை உடமைகள் இனப்பாகுபாடின்றி அதாவது சாதி, நிறம், பாலினம்,மொழி, மொழி வேறுபாடின்றி, சாதி மாறுபாடின்றி, அனைத்துக் குடிமக்களும் அனுபவிக்க கடமைபட்டவர்களாவர். 

இவைகள் மறுக்கப்படும்போது நீதிமன்றங்கள் தலையிட்டு அவற்றை பெற்றுத்தர தயங்காது.

இந்திய அரசியலமைப்புச் சட்டதசட்டத்தின் அடிப்படை  உரிமையை நெருக்கடி காலங்களில்  அறிவிப்பின் மூலம் குடியரசுத் தலைவர் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வைக்க முடியும் அவருக்கு அதிகாரமும் உண்டு.

Post a Comment

Previous Post Next Post