மோட்டார் வாகனச் சட்டம்-1988.

பொது இடங்களில் குழந்தைகள் வாகனங்களை ஓட்டுவது குற்றமா அதற்கு தண்டனையும் உண்டா என்ற கேள்விக்கான பதில் ஆம் குழந்தைகள் அதாவது வயது வராத பதினெட்டு வயது பூர்த்தியடையாத சிறுவர்கள் சிறுமிகள் வாகனம் ஓட்ட கூடாது.

மேலும் குழந்தைகள் கையில் வாகனங்களை ஓட்ட கொடுக்கவும் கூடாது. குழந்தைகளிடம் வாகனத்தை கொடுப்பவர்களுக்கும் தண்டனை உண்டு இந்த தண்டனையை எந்த சட்டம் வழங்குகிறது என்றால் அது தான் மோட்டார் வாகனச் சட்டம் இந்த சட்டத்தின் பிரிவுகளின் அடிப்படையாக தான் வாகன குற்றம் செய்யும் எவருக்கும் தண்டனை வழங்கப்படுகிறது.

சட்டம் மற்றும் தண்டனை:

மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு-4-ன்படி சிறுவர்கள் குழந்தைகள் வாகனம் ஒட்டுவதற்க்கு எந்த சான்றும் பெறாதவர்கள் வாகனங்களை பொது இடங்களில் ஓட்ட தடை விதிக்கிறது.

மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 4. (1) பதினெட்டு வயதுக்குட்பட்ட எவரும் எந்தப் பொது இடத்திலும் மோட்டார் வாகனத்தை ஓட்டக்கூடாது.

மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு-4 மற்றும் 4(1) மோட்டார் வாகனச் சட்டம் 1988 பிரிவு 180 -ம் இதனோடு சேர்ந்து குற்றம் செய்தவரை தண்டிக்கிறது.

மோட்டார்_வாகனச்_சட்டம்_1988
பிரிவு_180. அங்கீகரிக்கப்படாத நபர்களை வாகனத்தைச்  ஓட்டுவதற்கு  அனுமதித்தால் அது குற்றம் அதாவது வயதுக்கு வராத சிறுவர் சிறுமிகளிடம் வாகனங்களை ஒட்டுவதற்க்கு அனுமதித்தால் அவர் எவராக இருந்தாலும் அவருக்கு மூன்று மாதம் வரையிலான சிறைத் தண்டனை அல்லது ரூ.1000 /-வரையிலான அபராதம் அல்லது இரண்டும் விதித்து தண்டிக்கப்படுவார்கள்.

இனி உங்கள் வீட்டு சிறுவர்கள் வாகனங்களை பொது இடங்களில் ஓட்டுவதற்க்கு அனுமதிக்காதீர்கள்.

Post a Comment

Previous Post Next Post