ஒரு ஆபத்தான சூழ்நிலையில் உங்களது உயிரை தற்காத்துக் கொள்வதற்கு நீங்கள் ஒரு செயலை செய்கிறீர்கள் அந்த செயலின் மூலமாக ஒருவருக்கு காயம் ஏற்பட்டாலோ அல்லது மரணமே ஏற்பட்டாலோ அந்த குற்றத்திற்கு நீங்கள் தண்டிக்கப்படுகிறீர்களா என்றால் தற்காத்துக் கொள்வதற்கு நீங்கள் செய்த செயலால் அவருக்கு மரணமோ காயமோ ஏற்பட்டாலும் உங்களது உயிரை தற்காத்துக் கொள்வதற்கு நீங்கள் எடுத்த நடவடிக்கை என்பதால் அந்த குற்றத்திலிருந்து நீங்கள் மன்னிக்கப்படுகிறீர்கள் ஆனால் இதற்கு விதிமுறைகள் இருக்கிறது அதைச் சுருக்கமாக தெரிந்து கொள்வோம்.
கடுமையான காயம் அல்லது மரணம் ஏற்படும் வகையில் தாக்குதல் நடக்கும்போது அதனை தடுப்பதற்காக நாம எதிர்த்து போராடலாம்.
அத்தகைய போராட்டத்தில் நம்மை தாக்க வந்தவருக்கு மரணமே நிகழ்ந்தாலும் குற்றமில்லை தண்டனையுமில்லை காரணம் அவர் செய்த வினையால் தான் இந்த சம்பவம் நடந்தது இதனால் ஒருவேளை நமது உயிர் போக கூட வாய்ப்புள்ளது என்பதால் தற்காப்பிற்காக தான் இந்த குற்றம் நடந்தது என்பதால் சட்டம் இந்த மாதிரியான வழிமுறையை கடைபிடிக்கிறது.
அத்தகைய போராட்டத்தில் நம்மை தாக்க வந்தவருக்கு மரணமே நிகழ்ந்தாலும் குற்றமில்லை தண்டனையுமில்லை காரணம் அவர் செய்த வினையால் தான் இந்த சம்பவம் நடந்தது இதனால் ஒருவேளை நமது உயிர் போக கூட வாய்ப்புள்ளது என்பதால் தற்காப்பிற்காக தான் இந்த குற்றம் நடந்தது என்பதால் சட்டம் இந்த மாதிரியான வழிமுறையை கடைபிடிக்கிறது.
மேலும் இந்த மாதிரியான தற்காப்பு நடைமுறை எந்த மாதிரியான பிரச்சனைகளில் சாமானிய மக்களால் நடைபெறுகிறது என்று பார்ப்போம் கற்பழிப்பு சம்பவங்களில் தன்னை தற்காத்துக்கொள்ள ஒரு பெண் கொலை கூட செய்யலாம்.
மேலும் இயற்கைக்கு விரோதமான காம உணர்வை தனித்துக் கொள்ள ஒருவர் நடவடிக்கையில் இறங்கும்போது அல்லது அரசு அதிகாரிகளை அணுகி தனது விடுதலைக்காக முறையிட முடியாத அளவிற்கு ஒருவரைச் சட்டவிரோதமாக அடைத்து வைக்கும் நேரத்தில் தப்பிக்க எடுக்கும் தற்காப்பு நடவடிக்கையின் போது ஒரு குற்ற சம்பவம் நடந்துவிட்டால் அந்த குற்றம் குற்றமாக எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.
மேலும் 7 வயதிற்குக் குறைந்த குழைந்தையின் செயலால் ஒரு குற்றம் நடந்துவிட்டது என்றாலும் அந்த குற்றம் குற்றமாக கருதப்படாது.
சட்டத்தின் விளைவுகள் மற்றும் குற்றத்தின் தன்மைகளை உணரும் பருவம் அடையும் முன்னர் 12 வயது வரையுள்ள குழந்தைகளது நடவடிக்கையும் குற்றமாக எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. ஏனெனில் அந்தக் குழந்தை தனது நடவடிக்கையின் முழு விளைவுகளையும் உணரும் பக்குவத்தைப் பெறவில்லை என்பதால். ஆனால் தற்போது 12 வயதுடைய சிறுவர்கள் கற்பழிப்பு போன்ற செயல்களில் ஈடுபடும் போது தண்டிக்க படுகிறார்கள்.
ஒரு குற்றம் நடக்கும்போது அந்தக் குற்றத்தைச் செய்தவர் மன நோயாளியாக இருந்தால் அவர் மன்னிக்கப்படுகிறார். அதே நேரத்தில் மனநோயாளியைத் தாக்கி அவரை சமாளிக்க சட்டபடி உரிமையுண்டு.
மேற்கண்ட குற்ற செயல்களில் தற்காப்புக்காக நீங்கள் ஒரு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தால் அது குற்றமாக கருதப்படாமல் தற்காப்பு நடவடிக்கை தான் என்று கருதி உங்களுக்கு விடுதலை கிடைக்கும் ஆனால் ஒருவரை துன்புறுத்த வேண்டும் கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் நீங்கள் ஒரு குற்றத்தை செய்து விட்டு அதை தற்காப்புக் குற்றமாக மாற்ற முற்படுவதும் ஒரு குற்றமாகும்.
ஒரு குற்றத்தை செய்துவிட்டு அந்த குற்றம் தற்காப்பிற்காக நடைபெற்ற குற்றம் என்று பொய்யாக ஒரு வழக்கு விசாரணையை மாற்றும்போது அந்த வழக்கை விசாரணை செய்து அவர் குற்றம் செய்திருக்கிறார் என்பது கண்டுபிடிக்கப்பட்டால் குற்றத்தை மறைத்த குற்றத்திற்காகவும் அந்த நபருக்கு கடுமையான தண்டனை கிடைக்கும்.
தற்காப்பிற்கு உங்களை பாதுகாப்பதற்கு குற்றம் செய்தல் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 96 முதல் 106 வரையுள்ள சட்டங்கள் உங்களுக்கு ஆபத்து ஏற்படும் போது உங்களை தற்காத்து கொள்ள நீங்கள் செய்யும் செயலில் இருந்து உங்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. இந்த சட்டத்தின் அடிப்படையில் உங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவரிடம் இருந்தது ஆபத்தான சூழ்நிலையில் நீங்களே உங்களை பாதுகாத்துக்கொள்ளலாம்.
Post a Comment