பொருளடக்கம் :
- நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர் யார்?
- நோட்டரி பப்ளிக் வழக்கறிஞரின் சான்றொப்பம் எதற்கு தேவை?
- நோட்டரி பப்ளிகின் உண்மை சான்று என்றால் என்ன?
- சாட்சி உறுதி நோட்டரி சான்று என்றால் என்ன?
- நோட்டரி பப்ளிக்கின் சான்று அரசிற்கும் சட்டத்திற்கும் எப்படி பயன்படுகிறது?
- நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர் உறுதிப்படுத்தும் ஆவணங்கள் யாவை?
- நோட்டரி பப்ளிக்கின் பொறுப்புகள் :
- வழக்கறிஞர் நோட்டரி பப்ளிக் ஆவதற்கு என்ன தகுதிகள் வேண்டும்?
- நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர் எங்கே செயல்படுவார்?
- வழக்கறிஞர் நோட்டரி பப்ளிக்காக எவ்வளவு ஆண்டு இருக்கலாம்?
- நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர் சான்றளிக்கும் முறை?
- நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர் எந்தெந்த ஆவணங்களில் கையெழுத்திட முடியும்?
நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர் யார்?
நோட்டரி பப்ளிக் வக்கீல் என்று அறியப்படுபவர், நோட்டரிச் செயல்களைச் செய்ய அங்கீகரிக்கப்பட்ட ஒரு சட்ட வல்லுநர் ஆவார். இந்தியாவில், நோட்டரி பப்ளிக் வக்கீல்களின் நியமனம் மற்றும் ஒழுங்குமுறை நோட்டரி சட்டம், 1952 மூலம் நியமிக்கப்படுகிறார்.
ஆவணங்கள் மற்றும் பரிவர்த்தனைகளைச் சரிபார்த்து அங்கீகரிப்பதே நோட்டரி பொது வழக்கறிஞரின் முதன்மைப் பணியாகும். ஆவணங்களைச் சான்றளித்தல், சான்றளித்தல் மற்றும் சாட்சியமளித்தல், உறுதிமொழிகள் அல்லது உறுதிமொழிகளை எடுத்துக்கொள்வது மற்றும் ஆவணங்களின் சான்றளிக்கப்பட்ட நகல்களை வழங்குதல் ஆகியவை நோட்டரிச் செயல்களில் அடங்கும்.
நோட்டரி பப்ளிக் வழக்கறிஞரின் சான்றொப்பம் எதற்கு தேவை?
நாம் நிறைய சந்தர்ப்பங்களில் முக்கியமான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் போது அதாவது அரசங்கம், கோர்ட் மற்றும் பள்ளி கல்லூரிகள் மேலும் வேலை சார்ந்த இடங்களில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் போது விண்ணப்பத்தோடு உங்களது ஒரிஜினல் சான்றிதழ்களை அல்லது ஆவணங்களை நோட்டரி பப்ளிகிடம் காண்பித்து சரி பார்த்து அதன் நகல்களில் நோட்டரி பப்ளிகின் முத்திரையை பெற்று விண்ணப்பத்தோடு நோட்டரி சான்றிட்ட சான்றிதழின் அல்லது ஆவணங்களின் நகலை சமர்ப்பிக்குமாறு கேட்டிருப்பார்கள் இதற்கு என்ன அவசியம் என்று நாம் யோசிப்போம் உண்மையில் நோட்டரி பப்ளிக் நமது வேலையும் அரசின் வேலையும் துரிதப்படுத்துகிறார்.
என்னவென்றால் எல்லா இடங்களிலும் நமது ஒரிஜினல் ஆவணங்களை அல்லது சான்றிதழ்களை சமர்ப்பிப்பது சாத்தியமில்லை. இந்த மாதியான சூல்நிலையில் மோசடி நடைபெறாமல் இருக்க மாநில அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட பொது அதிகாரி தான் இந்த நோட்டரி பப்ளிக்.உங்களது சான்றுகளை உங்களது ஆவணங்களை உண்மையானதாக்க அதன் உண்மைத் தன்மையை நிரூபிக்க உங்களது வேலைகளை துரிதப்படுத்த நோட்டரி பப்ளிகின் சான்றொப்பம் தேவைப்படுகிறது.
இவர் முக்கியமான ஆவணங்களில் கையொப்பமிட்டு அதை உறுதியான சான்றாக மாற்றுகிறார் மோசடியை தடுக்க அரசுக்கு உதவுகிறார். எனவே ஒரிஜினலுக்கு பதிலாக நகல்களை சமர்ப்பிக்கும் போதும் உண்மையான சான்றுகளை உறுதிபடுத்த நோட்டரி பப்ளிக் தேவை.
நோட்டரி பப்ளிகின் உண்மை சான்று என்றால் என்ன?
ஒரு ஒரிஜினல் சான்றிதழின் நகலில் உண்மை நகல் என்று சரிபார்த்து நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர் கையெழுத்திட்டுக் கொடுத்தால் அது சட்டபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்படும் தகுதியைப் பெற்றுவிடுகிறது இதையே உண்மை சான்று என்று கூறுகிறோம்.
சாட்சி உறுதி நோட்டரி சான்று என்றால் என்ன?
இருவருக்கு இடையே ஓப்பந்தம் தயாராகும் போது ஒரு முத்திரைத்தாளில் பிரமாணமாக எழுதி கொடுக்க கையெழுத்திட்டு சமர்ப்பிப்பார்கள். சாட்சிகள் முன்னிலையில் அப்படிக் கையெழுத்திட்டு சமர்ப்பித்தாலும் கூட ஒரு நோட்டரி பப்ளிக்கின் முன்னிலையில் 1வது நபரும் 2வது நபரும் சரியான மனநிலையோடு பிரமாணத்தில் கையெழுத்திட்டார் என்று சான்றொப்பம் இடவேண்டும். அப்போதுதான் அந்தப் பிரமாணத்துக்கு சட்ட பூர்வமான அங்கீகாரம் கிடைக்கிறது.
நோட்டரி பப்ளிக்கின் சான்று அரசிற்கும் சட்டத்திற்கும் எப்படி பயன்படுகிறது?
ஒரு நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர் உண்மையான ஆவணங்களை சரி பார்த்து உறுதியளிக்கும் போது ஆவணங்கள் போலியாக தாக்கல் செய்யப்படுவது தடுக்கப்படுகிறது.இதனால் ஆவணங்களை எளிதில் உண்மையா போலியா கண்டறிந்து தடுக்க முடிகிறது. மோசடி ஆவணங்களை தடுக்கவே மாநில அரசாங்கம் பொது அதிகாரியாக நோட்டரி பப்ளிக் வழக்கறிஞரை நியமித்துள்ளது.
நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர் முக்கியமான ஆவணங்களில் கையொப்பமிடும் போது அந்த ஆவணங்களை நேரில் கண்டு அதை சரிபார்த்து உண்மை நகல் என ஒரு நகலுக்கு உண்மை சான்றை வழங்கவேண்டும். மேலும் பத்திரங்கள் ஒப்பந்தங்களில் கையொப்பமிடுபவர்கள் நோட்டரி பப்ளிக்கின் முன்பாக தான் கையொப்பம் இட வேண்டும் அந்த சமயத்தில் நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர் கையெழுத்து போடும் நபரின் அடையாளம் சான்றுகளை சரிபார்க்க வேண்டும். பத்திரத்திலோ ஆவணங்களிலோ கையொப்பமிடும் நபர் முழுமையான விருப்பத்தோடு தான் கையெழுத்து போட்டாரா என்று தெளிவாக கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் ஆவணம் அல்லது பரிவர்த்தனையின் உள்ளடக்கங்கள் பற்றிய சம்மந்தப்பட்ட நபரின் அல்லது ஆவணங்கள் எவை அதை பற்றிய விழிப்புணர்வு அந்த நபருக்கு இருக்கிறதா போன்றவற்றை நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர் சரிபார்க்கிறார்கள்.
அதாவது அந்த நபர் எதில் கையெழுத்திட போகிறார் அதை பற்றிய சரியான விழிப்புணர்வு அந்த நபருக்கு கையெழுத்திடும் முன் இருக்கிறதா என கவனித்து அதை பற்றி சொல்லி கொடுத்து அவர் அதற்கு பின் சரியான மன நிலையில் இருக்கிறார் என்று தெரிந்த பின் அவரிடம் கையெழுத்து வாங்குவார் இதனால் அந்த ஆவணத்தின் உண்மை தன்மை மேம்படும்.
நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர் உறுதிப்படுத்தும் ஆவணங்கள் யாவை?
- Estates documents (எஸ்டேட்ஸ்)
- Deeds documents (பத்திரங்கள்)
- Powers of attorney (பவர் பத்திரங்கள்)
- Affidavits (வாக்குமூலங்கள்)
- Licenses (உரிமங்கள்)
- Contracts (ஒப்பந்தங்கள்)
- Loan documents (கடன் ஆவணங்கள்)
- Trusts (டிரஸ்ட் ஆவணங்கள்)
உறுதிமொழிகள் மற்றும் உறுதிமொழிகளை நிர்வகித்தல் நோட்டரி பப்ளிக் பல நிறுவனங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் சட்ட சேவையை வழங்குகிறார்கள்.
நோட்டரி பப்ளிக்கின் பொறுப்புகள் :
- பிரமாணப் பத்திரங்கள் மற்றும் சட்டப்பூர்வ அறிவிப்புகளுக்கு சான்றளிப்பது.
- பத்திரங்கள் மற்றும் பிற ஒப்பந்தங்களில் மாற்றங்கள் ஒப்புதலைப் பெறுதல்.
- எதிர்ப்புக் குறிப்புகள் மற்றும் பரிமாற்ற பில்களை உறுதிபடுத்துதால்.
- வெளிநாட்டு வரைவுகளின் அறிவிப்பை வழங்குதல்.
வழக்கறிஞர் நோட்டரி பப்ளிக் ஆவதற்கு என்ன தகுதிகள் வேண்டும்?
வழக்கறிஞர்களாக குறைந்த பட்சம் ஏழு வருடங்கள் பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே நோட்டரி ஆவதற்கு விண்ணப்பிக்க முடியும்.
நோட்டரி விண்ணப்பத்தில் இரு மூத்த நோட்டரி வழக்கறிஞர்கள் உங்களை சிபாரிசு செய்து கையெழுத்திட வேண்டும்.
அதன் பிறகு அதற்குரிய கட்டணத்தை செலுத்தி மாவட்ட நீதிபதியிடம் சமர்பிக்க வேண்டும்.
மாவட்ட நீதிபதி அந்த விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்து தகுதியான விண்ணப்பதாரரின் விண்ணப்பங்களை அரசாங்கத்துக்கு அனுப்பி வைப்பார்.
மேலும் விண்ணப்பித்த வழக்கறிஞர்கள் நோட்டரி ஆவதற்கு யாருக்கேனும் ஆட்சேபணை இருக்குமானால் அரசாங்கத்துக்குத் தெரிவிக்கலாம்.என்று கெசட்டில் அறிவிப்பு வெளியாகும்.
யாருக்காவது ஆட்சேபணை இருந்தால் அதற்கான காரணத்தை கேட்டு விசாரித்து தகுந்த காரணம் என்றால் அவர் நிராகரிக்கபடுவார்.
அப்படி ஆட்சேபனை ஏதுமில்லாமல் மற்ற அம்சங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் அந்த வழக்கறிஞர் நோட்டரியாக நியமிக்கப்படுவார்கள்.
நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர் எங்கே செயல்படுவார்?
தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்ட நோட்டரி பப்ளிக் நோட்டரியாக செயல்படுவதற்கு ஒரு குறிப்பிட்ட நகரம், மாவட்டம் அல்லது மாநிலம் என்று வரையறை செய்யப்படும் அதன் அடிப்படையில் நோட்டரி பப்ளிக் செயல்படுவார்.
மாநில அரசால் நியமிக்கப்பட்ட நோட்டரி பப்ளிக் வழக்கறிஞருக்கு ஒதுக்கபட்ட குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே நோட்டரியாக செயல்பட முடியும்.
ஆனால் இன்னொரு கவனிக்கப்பட வேண்டிய தகவல் ஒரு வழக்கறிஞர் ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களில் அலுவலகங்கள் வைத்துச் செயல்பட விரும்பினால் அவர் ஆல் இந்தியா நோட்டரியாக செயல்பட மத்திய அரசிடம் அனுமதி பெறவேண்டும்.
வழக்கறிஞர் நோட்டரி பப்ளிக்காக எவ்வளவு ஆண்டு இருக்கலாம்?
முன்பெல்லாம் நோட்டரியாக செயல்பட ஒருவருக்கு மூன்றாண்டுகள் மட்டும் அனுமதி அளிக்கப்படும். மூன்றாண்டுகளுக்கு பிறகு அனுமதியைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
நோட்டரி பப்ளிக்காக தற்போது தேர்வு செய்பவர்களுக்கு விண்ணப்பிக்கும் போதே ஐந்து வருடங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அதனால் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்துக் கொண்டால் போதுமானது. இதற்கும் கட்ட ணம் உண்டு.
நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர் சான்றளிக்கும் முறை?
ஒரு வழக்கறிஞர் நோட்டரிக்கான அனுமதி பெற்றதும் நோட்டரிக்குரிய இரண்டு ரப்பர் ஸ்டாம்ப்களைத் தயாரித்துக் கொள்ள வேண்டும். ஒன்று நோட்டரியின் பெயர் மற்றும் அவர் செயல்பட அனுமதிக்கப்பட்ட எல்லையைக் குறிப்பிடும் வட்ட வடிவத் திலானது.
இன்னொன்று அவரது பெயர் மற்றும் முகவரி கொண்ட செவ்வக வடிவ ரப்பர் ஸ்டாம்ப். இதை பயன்படுத்தி ஸ்டாம் முத்திரையை பதிவு செய்தும கையெழுத்திடுவது.
நோட்டரி பப்ளிக் என்பவர் ஆவணத்தில் கையெழுத்திடும்போது பச்சை மையில்தான் கையெழுத்துப் போட வேண்டும்.
நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர் எந்தெந்த ஆவணங்களில் கையெழுத்திட முடியும்?
அஃபிடவிட் (Affidavit) என்று சொல்லப் படும் பலவிதமான பிரமாணப் பத்திரங்களை நோட்டரி, அட்டஸ்ட் செய்யலாம். உண்மையில் நீதிமன்ற ஆவணங்களில் அஃபிடவிட் இருந்தால் கட்டாயம் நோட்டரி பப்ளிக் கையெழுத்திட வேண்டும்.மாற்றுமுறை ஆவணங்கள், ஒப்பந்தங்கள்,பத்திரங்கள் போன்றவற்றில் நோட்டரி பப்ளிக் கையெழுத்திட வேண்டும்.ஒருவருடைய உயிலின் நகலை உண்மை நகல் என்று அட்டஸ்ட் செய்யலாம்.இப்படி பலதரப்பட்ட நகல் சான்றிதழ்களில் உண்மை சான்று கையொப்பமிடலாம்.
Post a Comment