இந்தியாவில் திருமணமாகி பிரிந்து வாழும் கணவன் மனைவி சேர்ந்து வாழ முடிவெடுத்தால் அவர்கள் சேர்ந்து வாழ சட்டத்தில் வழிமுறை இருக்கிறதா என்றால், ஆம் இருக்கிறது சேர்ந்து வாழ நீதிமன்றத்தில் திருமணம் மறு சீரமைப்பு சட்டம் (restitution of conjugal rights) என்ற சட்டத்தின் அடிப்படையில் வழக்கு தாக்கல் செய்யமுடியும் இந்த சட்டத்தை சுருக்கமாக RCR என்று அழைக்கப்படுகிறது.
பொருளடக்கம் :
- திருமணம் மறு சீரமைப்பு சட்டம் பற்றி தெரிந்துகொள்வோம்?
- திருமண உரிமைகளை மீட்டெடுப்பது என்றால் என்ன? (RCR)
- திருமண உரிமைகளை மீட்டமைத்தல் சட்டத்தின் சிறப்பு.
- திருமண உரிமைகளை மீட்டெடுப்பதற்கு பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்னென்ன?
- திருமண உரிமைகளை மீட்டெடுப்பதற்கு தேவையான ஆவணங்கள்.
- திருமண உரிமைகளை மீட்டெடுப்பதற்கான அத்தியாவசிய கூறுகள் என்ன?
- இந்தியாவில் திருமண மீட்டெடுக்கும் சட்டத்தின் பிரிவுகள் என்னென்ன?
- இந்தியாவில் திருமண மீட்டெடுக்கும் மனு செய்யும் முறை?
- திருமண உரிமைகளை மீட்டெடுப்பதற்கான ஆணையின் கால வரம்பு என்ன?
திருமணம் மறு சீரமைப்பு சட்டம் பற்றி தெரிந்துகொள்வோம்?
restitution of conjugal rights (RCR)
திருமணமாகி பிரிந்து வாழும் தம்பதிகள் மீண்டும் சேர்ந்து வாழ எண்ணினால் அதற்கும் சட்டத்தில் இடமுள்ளது அந்த சட்டத்தை தான் மணவாழ்வு உரிமைகளை மீட்டமைத்தல் சட்டம், மணவாழ்வு மீட்டளிக்கும் சட்டம், திருமணம் மறு சீரமைப்பு சட்டம்,திருமண உரிமைகளை மறுசீரமைத்தல் சட்டம், மீடெடுக்கும் சட்டம், மீட்புரிமை சட்டம், மற்றும் ஆங்கிலத்தில் Restitution of Conjugal Rights என்றும் அழைப்பார்கள்.
இந்த சட்டத்தின் வேறு பெயர்களை எல்லாம் நினைவில் வைத்துக்கொண்டு குழப்பத்தில் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம் இதை சரியாக திருமண உரிமைகளை மீட்டமைத்தல் சட்டம் என்றே நான் குறிப்பிடுகிறேன் அதை அவ்வாறே புரிந்து கொள்ளுங்கள்.
திருமணமான கணவன் மனைவி இருவரும் ஈகோவினாலோ, சொந்தங்களின் தலையீட்டாலோ பெரிதாக்கப்பட்ட குடும்பப் பிரச்சனைகளாலோ, கோபம், வெறுப்பு உள்ளிட்ட சூழ்நிலைகளால் விவாகரத்து பெறாமல் பிரிந்து வாழும் தம்பதிகள் சேர்ந்து வாழ விரும்பினால் இந்த சட்டத்தின் அடிப்படையில் வழக்கு போடலாம்.
திருமண உரிமைகள் மறுசீரமைப்பு விதியின்படி, கணவன் அல்லது மனைவி வாழ்க்கையில் கணவன் மனைவியாக வாழ தவறினாலோ அல்லது காரணமின்றி தமக்கு விதிக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்ற மறுத்தாலோ, பாதிக்கப்பட்ட தரப்பினர் சம்பந்தப்பட்ட மாவட்டத்திலுள்ள நீதிமன்றத்தில் சட்ட உதவியை நாடலாம்.
இது பிரிந்து வாழும் கணவன் மனைவியை சேர்த்து வைக்க சில நேரங்களில் திருமண தீர்வாக சட்டத்தில் அங்கீகரிக்கப்படுகிறது.
திருமண உரிமைகளை மீட்டெடுப்பது என்றால் என்ன?
1955 ஆம் ஆண்டின் இந்து சட்டத் திருமணச் சட்டத்தின் 9வது பிரிவின்படி, கணவன் அல்லது மனைவி மற்றவரின் சமூக வட்டத்திலிருந்து காரணமின்றி விலகிக் கொள்ளும்போது. அதாவது திருமணமான தம்பதிகள் பிரிந்து வாழும் போது கணவன் மற்றும் மனைவி இருவரில் பாதிக்கப்பட்டவர் தங்கள் திருமண உரிமைகளை மீட்டெடுக்க மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம். மனுவில் வழங்கப்பட்ட காரணங்கள் பயனுள்ளவை என்றும் திருமணமான தம்பதிகளின் வாழ்வில் சரியான பாதுகாப்பு இல்லை என்றும் நீதிமனறம் தீர்மானித்தால், நீதிமன்றம் திருமண உரிமைகளை மீட்டெடுப்பதாக அறிவிக்கலாம்.
திருமண உரிமைகளை மீட்டமைத்தல் சட்டத்தின் சிறப்பு?
ஒருகட்டத்தில் பிரிந்து வாழும் வாழ்வின் கசப்பு தாங்காமல் நாம் சேர்ந்து வாழலாம் என்று மனைவி கணவருடனோ கணவர் மனைவியுடனோ சேர்ந்து வாழ விருப்பம் தெரிவிக்க பக்கபலமாக நிற்கிறது மண வாழ்வு மீட்புரிமைச் சட்டம்.திருமண உரிமைகளை மீட்டெடுப்பதற்கு பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்னென்ன?
பாதிக்கப்பட்ட மனைவி அல்லது கணவர் மாவட்ட நீதிமன்றத்தில் சேர்ந்து வாழ வேண்டி மனு தாக்கல் செய்ய வேண்டும்.அதன் பின்னர் மனுதாரர் வழக்கு விண்ணப்பத்தைப் பெற்ற நீதிமன்றம் விசாரணை செய்கிறது.
நீதிமன்ற வழக்கு விசாரணைக்காக குறிப்பிடப்பட்ட தேதிகளில், இரு தரப்பினரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.
நீதிமன்றம் இரு தரப்பினருக்கும் சுமுகமான சமாதன பேச்சு வார்த்தையை ஆரம்பிக்கிறது. இதற்காக இரு தரப்பினருக்கும் பொதுவான ஒரு சட்ட ஆலோசகரை பேச்சு வார்த்தைக்கு நியமித்து ஆலோசகருடன் சந்திப்புகளை நீதிமன்றம் ஏற்படுத்துகிறது.
சாமதன பேச்சுவார்த்தைக்கான நிலையை வழக்கில் மீடியேஷன் காலம் அல்லது சமரசம் பேச்சு வார்த்தை காலம் என்று சொல்வார்கள்.
இந்த மீடியேஷன் காலம் நீதிமன்றங்களில் பொதுவாக மூன்று முறைகளாக நடத்தப்படுகிறது இதன் இடைவெளி கால அளவு 20 நாட்களாக இருக்கலாம்.
இந்த மீடியேஷன் காலத்தில் சமரசம் ஏற்படவில்லை என்றால் மறுபடியும் நீதிமன்றம் சமரச பேச்சு வார்த்தையை முடித்துவிட்டு நீதிமன்ற விசாரணையை தொடங்கும். சமரசம் ஏற்பட்டுவிட்டால் வழக்கு முடித்து வைக்கப்படும்.
இரு கட்சிகளின் கருத்து மற்றும் ஆலோசனைகளையும் இரு தரப்பினர் வழங்கிய தரவுகளின் அடிப்படையில் நீதிமன்றம் ஒரு முடிவை வழங்கும்.
திருமண உரிமைகளை மீட்டெடுப்பதற்கு தேவையான ஆவணங்கள்?
- முகவரி ஆதாரம்,
- மனுதாரரின் அடையாளச் சான்று,
- திருமணத்திற்கான சான்று,
- மனுதாரரின் புகைப்படம்,
- நீதிமன்றத்தின் அதிகார வரம்பைச் சரிபார்க்க உதவும் சான்றுகள் எதுவும்.
திருமண உரிமைகளை மீட்டெடுப்பதற்கான அத்தியாவசிய கூறுகள் என்ன?
திருமண உரிமைகளை மீட்டெடுப்பதற்கான மனுவை தாக்கல் செய்யும் கட்சிகள் சட்டப்பூர்வமாக ஒருவருக்கொருவர் திருமணம் செய்து இருக்க வேண்டும்.திருமணமான கணவன் மனைவி இரு தரப்பினரும் தனி தனியாக பிரிந்து வாழ்ந்திருக்க வேண்டும்.
திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் சரியான காரணமின்றி தாம்பத்திய வாழ்க்கையை வாழாமல் பிரிந்து இருத்தல் காரணங்கள் இகோ தாழ்வு மனபாண்மை குடும்பத்தார் மீது கோபம் போன்றவை.
கணவன் மனைவி திருமண வாழ்க்கையை வாழாமல் நியமற்ற முறையில் வாழ்வதை நீதிமன்றம் முன்பு நிரூபிக்க வேண்டும்.
இந்தியாவில் திருமண மீட்டெடுக்கும் சட்டத்தின் பிரிவுகள் என்னென்ன?
இந்துக்களுக்கு இந்து திருமணச்சட்டம் 1955.
அதாவது இந்து திருமணச் சட்டத்தின் 9 வது பிரிவு, கூட்டு உரிமைகளை மீட்டெடுப்பதற்கான ஏற்பாட்டை உள்ளடக்கியது ஆகும்.
அதன்படி வாழ்க்கைத் துணைவர்களில் ஒருவர் தங்களை மற்றவரின் சமூகத்திலிருந்து விலக்கிக் கொண்டால் அதாவது நியாயமான காரணமின்றி பிரிந்து வாழ்ந்தால் பாதிக்கப்பட்ட கணவரோ மனைவியோ திரும்பவும் திருமண வாழ்க்கையை மறு சீரமைக்க சட்டப்பூர்வ உரிமை உண்டு.
இந்த மனு விண்ணப்பம் மறுக்கப்படுவதற்கு எந்தவொரு சட்டபூர்வமான காரணமும் இல்லை என்று நீதிமன்றம் கருதினால் மனுவில் உள்ள அறிக்கைகளின் உண்மைத்தன்மையின் அடிப்படையில் கணவர் அல்லது மனைவியின் இணை உரிமைகளை மறுசீரமைப்பதற்கான ஆணையை நீீதிமன்றம் நிறைவேற்றலாம்.
பிரிவு9. Section 9 of the Hindu Marriage Act.
கிறிஸ்தவர்களுக்கான சட்டம்?
இந்த சட்டமும் மேலே கூறியது போல தான் பிரிவுகள் மட்டுமே வேறுபடும் அதே நடைமுறை தான் அதே போலதான் இனிவரும் இரண்டு பிரிவினருக்கான சட்டங்களும்.
கிறிஸ்தவர்களுக்கு இந்திய விவாகரத்துச் சட்டம் 1869 பிரிவு 32. section 32 of the indian divorce act
இரு வேறுபட்ட மதங்களைச் சேர்ந்தவர்களுக்கான சட்டம்?
கலப்பு திருமணத்தை தான் இப்படி கூறுகிறேன் இந்த திருமணத்தை சிறப்புத் திருமணச் சட்டத்தின்கீழ் பதிவு செய்திருந்தால் அதாவது வேறுபட்ட மதம் சாதியில் திருமணம் செய்து கொண்டவர்கள் இந்த சட்டத்தின்படி சேர்ந்து வாழ மனு அளித்து நீதிமன்றம் மூலமாக முயற்சிக்கலாம்.
சிறப்புத் திருமணச்சட்டம் 1954 பிரிவு 22. Section 22 in The Special Marriage Act, 1954.
இஸ்லாமியர்களுக்கான சட்டம்?
இதேபோல் இஸ்லாமிய மத சடங்குகளின்படி நிக்காஹ (திருமணம்) செய்துகொண்ட இஸ்லாமியர்களுக்கு இஸ்லாமியத் தனிச் சட்டங்கள் என இந்தச் சட்டங்கள் எல்லாம் பிரிந்து வாழும் தம்பதி மீண்டும் சட்டப்படி இணைந்து வாழ வழிவகை செய்கிறது.
முஹம்மதின் சட்டத்தின் 281வது பிரிவு, திருமண உரிமைகளை மீட்டெடுப்பதற்கான அம்சத்தைக் கையாள்கிறது, ஆனால் எந்த சூழ்நிலையில், திருமண உரிமைகளை மீட்டெடுப்பதற்கான ஆணையை வழங்கலாம் அல்லது நிராகரிக்கலாம் என்பது பற்றி விரிவாக போடவில்லை.
இந்தியாவில் திருமண மீட்டெடுக்கும் மனு செய்யும் முறை?
திருமண தம்பதிகள் கணவனோ, மனைவியோ வலுவான காரணமில்லாமல் பிரிந்து வாழ்கிறார்கள் என்றால் சேர்ந்து வாழ ஆசைப்படும் இருவரில் யாராவது ஒருவர் மேலே குறிப்பிட்டிருக்கும் சட்டப் பிரிவுகளின் கீழ் அவர்கள் வசிப்பிடத்துக்கு உட்பட்ட நீதிமன்றத்தில் முதலில் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும்.
பிரிந்து வாழும் கணவனோ மனைவியோ என் துணையை என்னோடு சேர்த்து வையுங்கள் என்று நீதிமன்றம் செல்கிறார் என்றால் அந்த ஒரு காரணமே அவர்மீது இன்னொருவருக்கு அன்பை ஏற்படுத்தும். இதுவே அவர்களுக்கு இருக்கும்ஈகோவே குறைத்து அவர்கள் மீண்டும் இணையவும் வாய்ப்புகளை உருவாக்கும்.
இந்தச் சட்ட நடைமுறை யாருக்கெல்லாம் பொருந்தும்?
அங்கீகரிக்கப்பட்ட திருமணம் செய்து கொண்டவர்களுக்கு மட்டுமே இச்சட்டம் பொருந்தும்.
லிவிங் டுகெதரில் வாழும் தம்பதிகளுக்கு இச்சட்டம் பொருந்தாது.
இருவரும் ஒரே வீட்டில்தான் வசிக்கிறோம் ஆனால் எங்களுக்குள் எப்போதும் சண்டை எனவே எங்களைச் சேர்த்து வையுங்கள் என்று இந்த சட்டத்தின் அடிப்படையில் வழக்கு தொடர முடியாது.
இருவரும் இரு வேறு வசிப்பிடத்தில் பிரிந்து வாழ்கின்றனர் என்பது நிரூபணமாக வேண்டும்.
சேர்த்துவைக்க மனு செய்திருக்கும் மனுதாரர் அவரது தரப்பை மெய்ப்பிக்க வேண்டும்.
மனுதாரரின் தரப்பில் நீதிமன்றம் திருப்தி அடைந்தால் மட்டுமே எதிர்த்தரப்பை நீதிமன்றத்துக்கு அழைக்கும்.
எதிர்த்தரப்பு பிரிந்து வாழ்வதற்கான நியாயமான காரணத்தை முன் வைக்கும் பட்சத்தில் அதில் உண்மை இருக்கும்பட்சத்தில் ஏற்றுக்கொள்ளப்படும்.
நியாயம் மனுதாரரின் தரப்பில்தான் இருக்கிறது எனில் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் எனத் தீர்ப்பாகும்.
தம்பதிகள் இல்லறத்தில் இணைய வேண்டும் என்ற தீர்ப்பை எதிர்த்தரப்பு ஏற்றுக்கொள்ள மறுத்தால் அவர்கள் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம்.
திருமண உரிமைகளை மீட்டெடுப்பதற்கான ஆணையின் கால வரம்பு என்ன?
திருமண உரிமைகள் அல்லது ஒன்றாக இருப்பதற்கான உரிமையை மறுசீரமைப்பதற்கான ஆணை நீதிமன்றம் மூலமாக பெற்ற பிறகு ஆணையின் தேதிக்குப் பிறகு ஒரு வருடத்திற்கும் மேலாக பின்பற்றப்படாவிட்டால் அதாவது பிரிந்து வாழும் கணவனோ மனைவியோ நீதிமன்றத்தில் உத்தரவை பெற்ற பிறகு அதாவது சேர்ந்து வாழ வேண்டும் என்ற உத்தரவை பெற்ற பிறகும் சேர்ந்து வாழாமல் இருந்தால் அது விவாகரத்துக்கான நல்ல ஆதாரமாக இருக்கும்.
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். உங்களது கருத்துக்களை கீழேயுள்ள comments ல் பதிவிடுங்கள்.
உங்களுடைய நண்பர்களுக்கும் இந்த பதிவை share பண்ணுங்க ஒரு நல்ல சட்ட ஆலோசனை மற்றும் விளக்கங்கள் கிடைக்காமல் எத்தனையோ பேர் கஷ்டபடுகிறார்கள் தயவு செய்து பகிருங்கள்.
إرسال تعليق