இந்தியாவில் செட்டில்மெண்ட் பத்திரம் பற்றிய தகவல்களை அனைவரும் அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும். அதற்கு இந்த கட்டுரை உதவியாக இருக்கும். 

பொருளடக்கம் :

    1. செட்டில்மெண்ட் பத்திரம் அறிமுகம்?
    2. செட்டில்மெண்ட் பத்திரத்தை ரத்து செய்ய முடியுமா?
    3. கிரைய பத்திரத்திற்கும் செட்டில்மெண்ட் பத்திரத்திற்கும் சொத்தை வாங்கியவருக்கான அதிகாரம் என்ன?
    4. செட்டில்மெண்ட் பத்திரத்தை சில நேரங்களில் ரத்து செய்ய முடியுமா?
    5. செட்டில்மெண்ட் பத்திரத்தை ரத்து செய்யும் வழிகள் என்ன?

    செட்டில்மெண்ட் பத்திரம் அறிமுகம்?


    தீர்வுப் பத்திரம் என்பது சட்டப்பூர்வ ஆவணமாகும், இது பொதுவாக சொத்து அல்லது நிதி விஷயங்களுடன் தொடர்புடைய கட்சிகளுக்கு இடையேயான தகராறுகள் அல்லது மோதல்களைத் தீர்ப்பதற்காக செயல்படுத்தப்படுகிறது. இது சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு இடையேயான கருத்து வேறுபாடுகளைத் தீர்ப்பதற்கும் வழக்குகளைத் தவிர்ப்பதற்கும் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தமாகும்.

    இந்தியாவில், செட்டில்மெண்ட் பத்திரங்கள் தொடர்பான விதிகள் இந்திய ஒப்பந்தச் சட்டம், 1872 ஆல் நிர்வகிக்கப்படுகின்றன. சட்டத்தின் 2(h) பிரிவு ஒரு ஒப்பந்தத்தை "சட்டத்தால் செயல்படுத்தக்கூடிய ஒப்பந்தம்" என்று வரையறுக்கிறது. ஒரு தீர்வுப் பத்திரம் அடிப்படையில் ஒரு ஒப்பந்தம் ஆகும், இது முறையாக நிறைவேற்றப்பட்டால், சட்டப்பூர்வமாக செயல்படுத்தப்படும்.

            Can-the-settlement-deed-be-cancelled

            செட்டில்மெண்ட் பத்திரத்தை ரத்து செய்ய முடியுமா?


            உங்களுடைய சொத்தினை வேறொருவருக்கு விற்பனை செய்ய அதற்குண்டான தொகையை பெற்றுக் கொண்டு விற்பனை செய்வோம். அந்த சொத்தை விற்பனை செய்த நாளிலிருந்து யார் வாங்கியவரோ அவரே அந்த சொத்தை முழு சுதந்திரமாக அனுபவிக்க வேண்டிய உரிமையாளர் ஆவர். 

            இனி அந்த சொத்தில் நீங்களோ அல்லது உங்கள் வாரிசுகளோ எவ்வித உரிமையும் செலுத்த முடியாது முழு அனுபவ உரிமையும் பணம் கொடுத்து சொத்தை வாங்கியவருக்கு கொடுத்து விட்டீர்கள் இதை கிரையம் கொடுப்பது விலை பத்திரம் மூலமாக விற்பனை செய்தது என சொல்லுவோம். 

            செட்டில்மெண்ட் எழுதும்போதே, இதனை ரத்து செய்ய எனக்கு அதிகாரம் இல்லை என்று எழுதப்பட்டிருந்தால், எழுதி கொடுத்தவர் அதனை ரத்து செய்ய முடியாது. ஏனென்றால் அந்த சொத்தினை அவர் எழுதிக் கொடுத்தவருக்கு இஷ்டம் போல் அனுபவிக்கும் உரிமையுடன் எழுதிக் கொடுத்து, அதனை ரத்து செய்ய தனக்கு அதிகாரம் இல்லை என்றும் குறிப்பிட்டிருப்பதால், அதனை பெற்றவர் அச்சொத்தினை வேறு யாருக்காவது கிரையமோ அல்லது வேறு வகையிலோ உரிமை மாற்றம் செய்திருக்கக்கூடும்.

            ஆனால் செட்டில்மெண்ட் பத்திரத்திற்கு கிரயத்திற்கும் வேறுபாடுகள் இருக்கிறது அது என்னவென்றால் செட்டில்மெண்ட்டில் பத்திரப் படி சொத்தை இனொருவருக்கு எழுதிக் கொடுக்க பிரதிபலனாக பணமோ, பொருளோ எதுவும் பெறக்கூடாது. மேலும் இரத்த சம்மந்தமான உறவுகளுக்கு மட்டும் தான் செட்டில்மெண்ட்டில் பத்திரப் படி சொத்தை எழுதி வைக்க முடியும். பணத்தை பெற்றுக்கொண்டு சொத்தை எழுதி வாங்குவது கிரய பத்திரப்படி சொத்தை வாங்குவதாக ஆகிவிடும்.

            கிரைய பத்திரத்திற்கும் செட்டில்மெண்ட் பத்திரத்திற்கும் சொத்தை வாங்கியவருக்கான அதிகாரம் என்ன?


            கிரைய பத்திரப்படி ஒருவர் சொத்தை வாங்கும் போது அவருக்கு அந்த சொத்து முழு அனுபவ உரிமையும் கொடுக்கிறது ஏனென்றால் பிரதிபலனாக பணத்தைப் பெற்றுக் கொண்டு சொத்தை கொடுப்பதால் அந்த சொத்தின் முழு அதிகாரத்தையும் விலை கொடுத்து வாங்கியவர் பெற்று விடுகிறார் ஆனால் செட்டில்மெண்ட் பத்திரம் மூலமாக ஒரு சொத்தைப் பெறும்போது அதில் நிபந்தனைகள் சொல்லப்பட்டு இருக்குமேயானால் அது முழுமையான அனுபவ உரிமையை எழுதி வாங்கியவருக்கு கொடுக்காது. ஏனென்றால் பிரதிபலனாக பணமோ பொருளோ பெறாத பட்சத்தில் தானமாக அவர் கொடுக்கும் சொத்திற்கு நிபந்தனை விதிப்பதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது நிபந்தனையின் காரணமாக சொத்தை எழுதி வாங்கியவருக்கு முழு அதிகார உரிமையும் கிடைக்காது.

            செட்டில்மெண்ட் பத்திரத்தை சில நேரங்களில் ரத்து செய்ய முடியும்?


            செட்டில்மெண்ட் பத்திரம் எழுதும் போது அந்த பத்திரத்தில் எழுதி கொடுப்பவர் ஏதாவது நிபந்தனைகள் வைத்திருந்தால் அதன்படி ரத்து செய்யலாம். உதாரணமாக செட்டில்மெண்ட் பத்திரத்தை ரத்து செய்ய எனக்கு அதிகாரம் உண்டு என்று சொத்தை எழுதி கொடுத்தவர் எழுதியிருந்தால் சொத்தை எழுதி வாங்கியவர் Absolute Right என்று சட்டப்படி முழுமையாக அனுபவிக்கும் முழு உரிமையும் வாங்கியவருக்கு கொடுக்கப்படவில்லை என்பதே உண்மை. 
            எனவே அந்த சொத்தை வாங்கியவர் விற்கவோ அல்லது வேறு தேவைகளுக்கு பயன்படுத்தவோ முடியாது.

            செட்டில்மெண்ட் பத்திரத்தில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளை எழுதி வாங்கியவர் கடைபிடிக்காவிட்டாலோ அல்லது எழுதிக் கொடுத்தவர் மனம் மாறி அதனை ரத்து செய்ய நினைத்தாலோ ரத்து செய்யலாம். செட்டில்மெண்ட் மூலம் ஒருவர் தன்னுடைய சொத்தின் முழு உரிமையையும் வேரொருவருக்கு எழுதிக் கொடுத்த பிறகு அதனை அவர் மூன்றாம் நபருக்கு விற்றிருந்தால், அதன்பிறகு செட்டில்மெண்ட் எழுதிக் கொடுத்தவர் ரத்து செய்தால் கிரையம் பெற்றுவரும் பாதிக்கப்படுவார். 

            செட்டில்மெண்ட் பத்திரத்தை ரத்து செய்யும் வழிகள் என்ன?


            செட்டில்மெண்ட் மூலம் சொத்தை பெற்றவர், அதனை வேறு யாருக்கும் கிரையம் அல்லது செட்டில்மெண்ட் மூலம் மாற்றாமல் இருந்து அவரும் அதனை ரத்து செய்ய ஒப்புக் கொண்டால், செட்டில்மெண்ட் எழுதிக் கொடுத்தவர் நினைத்தால் எளிதில் ரத்து செய்யலாம்.

            செட்டில்மெண்ட் பத்திரம் மூலமாக சொத்தை வாங்கியவர் நிபந்தனைகளை மீறும் போது பத்திரத்தை ரத்து செய்ய ஒப்புக்கொள்ளவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுத்து தான் ரத்து செய்ய வேண்டும்.

            செட்டில்மெண்ட் பத்திரம் மூலமாக சொத்தை வாங்கியவர் அந்த சொத்தை வேறொருவருக்கு விற்பனை செய்து விட்டால் உடனடியாக சொத்து பத்திரத்தை ரத்து செய்ய இயலாது காரணம் சட்டப்படி நீதிமன்றத்தில் தான் வழக்கு போடவேண்டும். செட்டில்மெண்ட் பத்திரம் மூலமாக சொத்தை வாங்கியவரும் பின் அந்த சொத்தை விலைக்கு வாங்கியவரும் வழக்கில் சேர்க்கப்படுவர் விசாரணைக்கு பிறகு நீதிமன்றமே பத்திரத்தை ரத்து செய்ய உத்தரவிடும்.

            ரத்து செய்ய அதிகாரம் இல்லை என்று எழுதி பதிவு செய்யப்பட்ட செட்டில்மெண்ட் கூட, எழுதிக் கொடுத்தவரை ஏமாற்றியோ, அச்சுறுத்தியோ, கட்டாயப்படுத்தியோ எழுதி வாங்கப்பட்டிருந்தால் நீதிமன்றத்தின் மூலம் அதனை ரத்து செய்யலாம்.

            இந்தியாவில் பரம்பரை சொத்தில் கிடைத்த பங்குகளை செட்டில்மெண்ட் எழுதி வைக்க முடியும். சட்டப்படி எழுதி கொடுக்கப்பட்ட சொத்தை எழுதி கொடுப்பவர் அவரது பெயருக்கு physical possession பெற்றிருக்க வேண்டும். வரியில் மாற்றம் செய்திருக்க வேண்டும் மேலும் சொத்து உரிமை ஆவணத்தில் பெயர் மாற்றம் செய்திருக்க வேண்டும் அப்படி செய்யப்படாத சொத்து சட்டரீதியாக எழுதி கொடுப்பவர் பெயருக்கு  உரிமை மாற்றம் செய்யப்படவில்லை என்றுதான் அர்த்தமாகும் இதை ஆங்கிலத்தில் அந்த ஆவணம் act ஆகவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இப்படி act செய்யப்படாத சொத்துக்களை வாங்குவது செல்லுபடியாகாமல் ரத்து செய்யப்படலாம்.

            Post a Comment

            أحدث أقدم