Writ (ரிட்) மனு என்றால் என்ன?

ஆட்கொணர்விக்கும் ரிட் மனுவை பற்றி தெரிந்துகொள்வதற்க்கு முன் writ (ரிட் ) மனு என்றால் என்னவென்பதை சிறிதாக தெரிந்துகொள்வோம்.

 ரிட் மனுக்கள் (WRIT) உயர் நீதிமன்றத்தில் வழக்குகளாக பதிவு செய்யபடுகிறது. இந்த  ரிட் மனுக்கள் தமிழில் நீதி பேராணைகள் எனப்படுகின்றன.  அதா­வது ஒரு நீதி மன்றத்தின் கட்டளை, அல்லது ஆணை என்று பொருள்படும். இந்த பேராணைகள் மூலமாக யாருக்கு உத்தரவுகள் போடப்படுகிறது என்றால் அரசு அதிகாரிகள் செய்ய தவறிய செயலை செய்ய சொல்லி கட்டளைகள் அல்லது ஆணைகள் பிறப்பிக்கப்படுகிறது.

 நீதி பேராணைகளில் ஆட்கொணர்விக்கும் ரிட் மனுவும் ஒரு வகை தான் இதை நாம் ஆங்கிலத்தில் Habeas Corpus Writ Petition என அழைக்கிறோம். இதை பற்றி தெரிந்துகொள்ள முதலில் writ petition(ரிட் மனு)-எத்தனை வகைப்படும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

Habeas-Corpus-Petition

இந்திய அரசியலமைப்பில் ரிட் மனுக்கள் ஐந்து வகைப்படும்.
(There are five writ petition types in the Indian constitution)
 
ரிட் மனு வகைகள்.

Habeas Corpus (ஆட்கொணர்வு மனு)
Mandamus (மாண்டமஸ் மனு)
Prohibition (தடை மனு)
Certiorari (சான்றிதழ் மனு)
Quo Warranto (குவோ வாரன்டோ மனு)

ஆட்கொணர்விக்கும் ரிட் மனு.

ஆட்கொணர்விக்கும் ரிட் மனுவை மக்கள் பல பெயர்களில் தெரிந்து கொள்கிறார்கள் அதாவது ஆட்கொணர்விக்கும் ரிட் மனுவை ஆட்கொணர்விக்கும் நீதிப்பேராணை. மற்றும், H C P, ஹேபியஸ் கார்பஸ் (Habeas Corpus Writ Petition) என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது.

ஆட்கொணர்விக்கும் ரிட் மனுவின் நோக்கம்.
Habeas Corpus Writ Petition.


இந்திய மக்களின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கு நம் சட்டம் பல அம்சங்களை வழங்கியுள்ளது. அதில் மிக முக்கியமானது நீதி பேராணைகள். ரிட் மனுகள் ( WRIT ) என சொல்லப்படும் இந்த நீதிப்பேராணைகள் ஐந்து வகைகளாக  இருக்கிறது. இதில் அதிகமாக பயன்படுத்தப்படுவது Habeas corpus எனப்படும் ஆட்கொணர்விக்கும் நீதிப்பேராணைகள் தான்.

ஓருவரை சட்டத்திற்கு புறம்பாக கைது செய்து அவர் இருக்கும் இடமே தெரியாமல் இருக்கிறது என்ற சூழ்நிலையில் உயர்நீதிமன்றத்தை அணுகி இந்த ரிட் மனுவை தாக்கல் செய்யலாம். அவரை வெளியே கொண்டுவருவதற்காக ஆபத்து காலங்களில் இந்த ரிட் மனு பயன்படுகிறது. 

நீதிமன்றத்தில் hcp என்றால் என்ன?

 What is hcp in court?

HABEAS CORPUS PETITION என்பதன் சுருக்கமே H.C.P என அழைக்கப்படுகிறது.

ஹேபியஸ் கார்பஸுக்கான காரணங்கள் என்ன?

காவல்துறையினர் சட்டத்திற்கு புறம்பாக ஒருவரை கைது செய்யும்போது மட்டுமல்லாமல், யாரேனும் ஒருவர் கடத்திச் செல்லப்பட்ட  சூழ்நிலையிலும் அவரை உரியவர்களிடம் ஒப்படைக்க கூறி நீதிமன்றத்தில் இந்த ரிட் மனுவைதாக்கல் செய்யலாம். உதாரணமாக, காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடிகள் பெற்றோருக்கு தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

 பெற்றோர்கள் அவர்களை தேடி கண்டுபிடித்து அந்த பெண்ணை அழைத்துச் சென்றுவிட்டார்கள் என்று வைத்துக் கொள்வோம்  அந்த நேரத்தில் கணவன் என்ற முறையில் தனது மனைவியை கண்டுபிடித்து தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என அவர் மனு போடலாம்  மனுவை விசாரித்து அதில் உண்மை இருப்பின் நீதிமன்றத்தின் முன் சட்டத்திற்கு புறம்பாக கைது செய்திருக்கும் நபரை ஒப்படைக்க சொல்வார்கள்.

ஹேபியஸ் கார்பஸ் மனுவை எவ்வாறு தாக்கல் செய்வது. 

இந்த மனுக்களை நேரடியாக உயர்நீதிமன்றத்திலும் அல்லது உச்சநீதிமன்றத்திலும் தான் தாக்கல் செய்ய முடியும். மாவட்ட நீதிமன்றங்களில் தாக்கல் செய்ய முடியாது. சட்டத்திற்கு புறம்பான வகையில் ஒரு  வரை கைது செய்து வைத்திருக்கும் போதும் கூட ரிட் மனு தாக்கல் செய்யலாம்.  

காணாமல் போயிருக்கும் நபரை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டி நீதிமன்றத்தை அணுகி ரிட் மனு தாக்கல் செய்ய  ஆட்கொணர்விக்கும் நீதிபேராணை பெரும் துணையாக இருக்கிறது.

Post a Comment

Previous Post Next Post