இரண்டாவது திருமணம் பற்றிய மக்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு இந்த கட்டுரைகள் ஒரு விரிவான விளக்கம் கிடைக்கும்.


பொருளடக்கம் :
  1. இரண்டாவது திருமணம் சட்டபடி குற்றம் எப்படி எதனால்?
  2. முதல் திருமணதிற்கு விவாகரத்து பெறாமல் இரண்டாவது திருமணம் செய்தல் என்ன தண்டனை?
  3. இருதுணை மணகுற்றம் எப்போது நிரூபணமாகும்?
  4. இரண்டாவது திருமணம் செய்பவர்களில் தண்டனைகள் பெறக்கூடியவர்கள் யார்?
  5. கணவனை ஏழு ஆண்டுகளாக காணவில்லை இரண்டாவது திருமணம் (or) மறுமணம் செய்யலாமா?
  6. இரண்டாவது திருமணம் செய்த விதவை பெண்ணுக்கு முதல் கணவருடைய வங்கி கணக்கில் பங்கு உண்டா?
  7. இரண்டாவது திருமணம் செய்யலாம் ஆனால் எப்படி? 
  8. இரண்டாவது திருமணம் தவறான முறையில் செய்தால் என்ன தண்டனை?
  9. இரண்டாவது திருமணம் எப்பொழுது குற்றமாகாது?

A-complete-explanation-of-many-doubts-about-second-marriage

இரண்டாவது திருமணம் சட்டபடி குற்றம் எப்படி எதனால்?

இந்தியாவில் கணவன் அல்லது மனைவி அவர்களின் திருமண வாழ்க்கைக்கு பிறகு விவாகரத்து பெறாமல் இன்னொரு திருமணம் செய்துக் கொண்டால் அது செல்லாது மேலும் அது சட்டப்படி குற்றமாகும்.

முதல் திருமண வாழ்க்கைக்கு பிறகு  விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்தல் கணவன் அல்லது மனைவி இருதுணை புரிந்த குற்றத்திற்கு ஆளாகிவிடுவார்கள்.

திருமணம் செய்த ஒரு நபர் தன் வாழ்வில் நடந்த முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்ய ஒப்புக்கொண்டால் அது சட்டபடி குற்றம்.

முதல் திருமணதிற்கு விவாகரத்து பெறாமல் இரண்டாவது திருமணம் செய்தல் என்ன தண்டனை?

முதல் மனைவியோ கணவனோ உயிருடன் இருக்கும் போதே இரண்டாவது திருமணம் செய்தல் அந்த குற்றத்திற்கு குற்றத்தை செய்த நபருக்கு ஏழு வருடங்கள் சிறை  தண்டனையும்  மற்றும் அபராதமும்  அல்லது இவை இரண்டும் குற்றத்திற்கு தண்டனையாக வழங்கப்படும்.

சட்ட விளக்கம் :

விவாகரத்து பெறாமல் கணவன் அல்லது மனைவி உயிருடன் இருக்கும் போதே மறுமணம் இரண்டாவது திருமணம் செய்தல் அது செல்லுபடி ஆகாது. காரணம் முதல் கணவன் அல்லது மனைவி உயிருடன் இருக்கும் போது விவாகரத்து பெறாமல் அவர்களின் வாழ்நாள்கலத்தில் இரண்டாவது திருமணம் செய்தல் சட்டப்படி குற்றமாகும் இந்திய தண்டனை சட்டப்படி பிரிவு பிரிவு 494 படி இந்த குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும்.

இருதுணை மண குற்றம் எப்போது நிரூபணமாகும்?

1). குற்றவாளி வேறொருவர்க்கு திருமணம் செய்யப்பட்டிருக்க வேண்டும். உண்மையாக நடந்த திருமணத்திற்க்கான நிரூபனம் அவசியமாகிறது.மேலும் முதல் திருமணம் மணமுறிவு பெறாமல் இருக்க வேண்டும்.

ஒருவேளை  தரப்பினர்களை ஆளுமை செய்யும் சட்டப்படி முதல் திருமணம் செல்லத்தக்கதல்ல என்னும் பட்சத்தில்  இரண்டாவது திருமணம் செய்வதன் மூலம் எந்த குற்றமும் இல்லை.

2). இரண்டாவது திருமணம் புரியும் நாளில்  முதல் திருமணம் செய்துக் கொண்ட நபர் உயிருடன் இருக்க வேண்டும் விவாகரத்து பெறாமல் அவர் இருந்தால் அதுவும் குற்றமாகும்.

3). முதல் திருமணம் போல் இரண்டாவது திருமணமும் கொண்டாடப்பட வேண்டும் அல்லது செல்லுபடியானதாக இருக்க வேண்டும்.

அதைப்போல கள்ளகாதலி வைத்திருந்தால் அல்லது வைப்பாட்டி வைத்துக் கொள்ளுதல் திருமணம் ஆகாது.

விவகாரத்து தீர்ப்பாணை முதல்  திருமணத்தை கலைக்கிறது. திருமணம் கலைக்கப்பட்ட பிறகு மீண்டும் திருமணம் செய்து கொள்ள முடியும் இது குற்றமாகாது.

இரண்டாவது திருமணம் செய்பவர்களில் தண்டனைகள் பெறக்கூடியவர்கள் யார்?

விவாகரத்து பெறாமல் முதல் கணவனோ மனைவியோ உயிருடன் இருக்கும் போதே இரண்டாவது திருமணத்தை நடத்தி வைத்தால் அந்த திருமணத்தை நடத்தி வைத்தவர்களும் பூசாரியும்  குற்ற உடந்தையாளர் என்ற வகையில் கைது செய்யபட்டு  பிரிவு 494 மற்றும் 109 படி தண்டிக்கபடுவார்கள்.

கணவனை ஏழு ஆண்டுகளாக காணவில்லை இரண்டாவது திருமணம் (or) மறுமணம் செய்யலாமா?

வணக்கம் மக்களே தற்போது நீதிமன்றங்களில் அதிக வழக்குகள் எது சம்மந்தமாக இருக்கிறது என்றால் திருமணம் ஆன கணவன் மனைவி பிரச்சனைகள் தான் அதிக வழக்குகளாக பதியபடுகிறது.  இதிலிருந்து ஒரு முக்கியமான பிரச்சினைக்கு இந்த பதிவில் விடையை காண்போம்.

கணவனை ஏழு ஆண்டுகளாக காணவில்லை இரண்டாவது திருமணம் (அல்லது) மறுமணம் செய்யலாமா?

இந்து திருமணச் சட்டம் – பிரிவு 11&13.

மேலே குறிப்பிட்டுள்ள சட்டங்கள் இந்த குழப்பத்திற்கு முடிவை வழங்குகிறது அதனால தான் அதை பதிவிட்டுள்ளேன் இப்போது திரும்பவும் பதிலுக்கு வருவோம். வாழ்க்கை துணைவரில் ஒருவர் உயிரோடு உள்ளாரா? என்கிற சங்கதி 7 ஆண்டுகளுக்கும் மேலாக மற்றொரு வாழ்க்கை துணைவருக்கு தெரியாத நிலையில் இந்து திருமணச் சட்டம் பிரிவு 13ன் கீழ் விவாகரத்து பெறுவதற்கான காரணங்களில் ஒன்றாக ஏற்றுக் கொள்ளலாம்.

7 ஆண்டுகள் வரை ஒரு வாழ்க்கை துணைவர் பற்றி எந்த தகவலும் இல்லாத நிலையில் அவர் உயிருடன் இல்லை என கருதி 2வது திருமணம் செய்து கொண்டால் சட்டப்படி குற்றமாகும்.

7 ஆண்டுகள் வரை ஒரு வாழ்க்கை துணைவர் உயிரோடு உள்ளாரா,என்பது குறித்து எந்த தகவலும் இல்லை என்று கூறுகிற நபர் தான் அவருடைய கூற்றினை இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 108ன் படி முதலில் நிரூபிக்க வேண்டும்.

வழக்கை துணை காணாமல் போன பிறகு உடனே திருமணம் செய்தாலோ அல்லது 7 ஆண்டுகளுக்கு பிறகு திருமணம் செய்தாலும் குற்றமாகும் .7 ஆண்டுகளாக வாழ்கை துணை பற்றிய எந்த தகவலும் இல்லை என்பதற்காக 2வது திருமணம் செய்யக்கூடாது.

 வாழ்கை துணையை 7 ஆண்டுகளாக காணவில்லை என்றால் 2வது திருமணம் செய்ய காணாமல் போன விபரத்தை கூறி தகுதி வாய்ந்த நீதிமன்றத்தின் மூலமாக விவாகரத்து பெற்றிருக்க வேண்டும்.

அவ்வாறு செய்யாமல் வெறுமனே வாழ்க்கை துணைவர் 7 ஆண்டுகளாக காணாமல் போய் விட்டதால் 2வது திருமணம் செய்து கொண்டதாக கூறுவதை ஏற்க முடியாது.

மேலும் அவ்வாறு செய்த திருமணம் சட்டப்படி செல்லாது என பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. இந்த தீர்ப்பு பற்றி தெரிந்துகொள்ள கீழே அதன் தகவல்களை பதிவிட்டுள்ளேன் அதை பார்த்து இணையதளங்களில் அதற்க்கான முழு தீர்ப்பையும் அறிந்துகொள்ள முடியும்.
 
தீர்ப்பின் விபரம்:

F. A. O. NO – 246-M /2009 & F. A. O. NO – 309-M/2003, DT – 03.08.2015, சவர்ன்ஜித் கவுர் Vs LT. COL. அவதார் சிங் மற்றும் பலர் (2016-2-DMC-478)

இரண்டாவது திருமணம் செய்த விதவை பெண்ணுக்கு முதல் கணவருடைய வங்கி கணக்கில் பங்கு உண்டா?

தன்னுடைய முதல் கணவர் இறந்ததற்கு பிறகு மறுமணம் செய்து கொண்ட இந்துப் பெண் ஒருவர், முதல் கணவருக்கு வர வேண்டிய வைப்பு நிதித் தொகையில் தனக்கும் பங்கு வேண்டும் என்று கேட்க முடியுமா என்பதை சிறிய விளக்கத்துடன் பார்ப்போம் இது சம்மந்தமான நீதிமன்ற தீர்ப்பு பற்றி அனைவருக்கும் எடுத்துரைக்க நான் கடமைப்பட்டுள்ளேன். இந்த பதிவின் முடிவில் அந்த தீர்பாபையும் இணைத்துள்ளேன்.

யசோதா என்பவர் ஜெயராமன் என்பவரின் விதவை மனைவி ஆவார். செல்லம்மாள் என்பவர் மேற்படி ஜெயராமனின் தாயார் ஆவார். ஜெயராமன் திருச்சியிலுள்ள சங்கம் ஹோட்டலில் பணிபுரிந்து வந்துள்ளார் அவர் பணியில் இருந்த பொழுது, வைப்பு நிதித் திட்டத்தில் (Provident Fund Scheme) சேர்ந்து, அதற்கான தொகையை செலுத்தி வந்துள்ளார்.

 இந்நிலையில் ஜெயராமன் 25.8.2001 ம் தேதி இறந்து விட்டார். அதனால் வைப்பு நிதி திட்டத்தின் கீழுள்ள தொகையை பெறுவதற்காக வாரிசு சான்றிதழ் அளிக்கும்படி கோரி ஜெயராமனின் தாயார் செல்லம்மாள் திருச்சி முதன்மை சார்பு நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார்.
 
அந்த மனுவை நீதிமன்றம் அனுமதித்து உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவை எதிர்த்து ஜெயராமனின் விதவை மனைவி மதுரை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

மேல்முறையீட்டில் யசோதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தன்னுடைய வாதத்தில், தனது கணவர் இறந்ததற்கு பிறகு, மறுமணம் செய்து கொள்வதற்கு யசோதாவுக்கு எந்த தடையுமில்லை.
 
அதனால் அவர் மறுமணம் செய்து கொண்டார். அவ்வாறு மறுமணம் செய்து கொண்டதற்கு பின்னர், முதல் கணவரின் சட்டப்பூர்வமான பிரதிநிதி (Legal representative)  என்ற வகையில், முதல் கணவருக்கு சொந்தமான சொத்துக்களில் வாரிசுரிமை கோர முடியாது என்று இந்து வாரிசுரிமை சட்டத்தில் பிரிவு 24 ல் ஏற்படுத்தப்பட்டிருந்த தடை தற்போது நீக்கப்பட்டு விட்டது. எனவே யசோதா தனது முதல்
 கணவரின் சட்டப்பூர்வமான பிரதிநிதி என்கிற வகையில், வைப்பு நிதித் தொகையில் உரிமை கோர தகுதி உள்ளது என்று கூறினார்.

ஜெயராமனின் தாயார் செல்லம்மாள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடும் போது யசோதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குறிப்பிட்ட சட்ட விளக்கத்தை ஒப்புக்கொண்டார்.

"செல்வி Vs K. அழகர்சாமி (2010-2-TNMAC-328)" என்ற வழக்கில், 1956 ஆம் ஆண்டு இந்து வாரிசுரிமை சட்டம் மற்றும் 1856 ஆம் ஆண்டு இந்து விதவைகள் மறுமணச் சட்டம் ஆகியவற்றை பரிசீலித்து, ஓர் இந்துப் பெண் தன்னுடைய கணவர் இறந்ததற்கு பிறகு, மறுமணம் செய்து கொள்வதற்கான உரிமையை பெற்றிருப்பதோடு, இறந்து போன கணவரின் சொத்துக்களிலும் வாரிசுரிமை அடிப்படையில், பாகம் கோருவதற்கு உரிமையுடையவர் என்றும், விதவைப் பெண்களை மற்ற ஆண் கூட்டு பங்குரிமையாளர்களுக்கு இணையாக கருத வேண்டும் என்றும் தீர்ப்பு கூறியுள்ளது. மேலும் இந்த தீர்ப்பின் 24 வது பத்தியில் கீழ்க்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.

" 24. மாண்புமிகு உச்சநீதிமன்றம் செரோட்டி சுகந்தன் மற்றும் பலர் Vs செரோட்டி பாரதி மற்றும் பலர் (2008-2- LW-102) என்ற வழக்கில், 1856 ஆம் ஆண்டு இந்து விதவைகள் மறுமணம் சட்டத்தின் மீது 1956 ஆம் ஆண்டு இந்து வாரிசுரிமை சட்டத்திற்குள்ள மேலோங்கு அதிகாரம் (Over Riding Effect) குறித்து பரிசீலனை செய்துள்ளது இந்து விதவைகள் மறுமணச் சட்டம் பிரிவு 2 ஆனது, இந்து வாரிசுரிமை சட்டம் பிரிவு 4 மற்றும் 24 ஆகியவற்றின் மீது மேலோங்கு அதிகாரத்தை கொண்டிருக்கவில்லை எனவும் இந்து விதவைப் பெண்களும் மற்ற ஆண் வாரிசுகளைப் போல் சரிசமமான வகையில், வாரிசுரிமை அடிப்படையில் சொத்துக்களை பெறுவதற்கு தகுதியுடையவர்கள் என்றும் தீர்மானித்துள்ளது.

 இந்து வாரிசுரிமை சட்டம் நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் அல்லது அதற்கு பின்னர் ஓர் இந்துப் பெண் ஒரு சொத்தை பெற்றால், அந்த சொத்துக்கு அந்தப் பெண் பிரிவு 14(1) ன்படி முழு உரிமையாளராக கருதப்பட வேண்டும்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள 1856 ஆம் ஆண்டு இந்து விதவைகள் மறுமணச் சட்டம், 1956 ஆம் ஆண்டு இந்து வாரிசுரிமை சட்டம், 1983 ஆம் ஆண்டு இந்து விதவைகள் மறுமணச் (நீக்குதல்) சட்டம் மற்றும் திருத்தச் சட்டம் 39/2005 ஆம் ஆண்டு சட்டம், இந்து வாரிசுரிமை சட்டத்தில் பிரிவு 24 ஐ நீக்குவதற்காக கொண்டு வரப்பட்டு, அந்த நீக்குதல் 09. 09.2005 ம் தேதியிலிருந்து அமலுக்கு வந்துள்ளது. அந்த சட்டத் திருத்தத்தின்படி விதவைகள் மறுமணம் செய்து கொள்வதற்கு உள்ள உரிமையை அங்கீகரிப்பதோடு, தன்னுடைய முன்னாள் கணவரின் சொத்துக்களில் பங்குரிமை பெறுவதற்குள்ள உரிமையையும் அங்கீகரிக்கிறது. சுருக்கமாக கூற வேண்டுமென்றால் விதவைப் பெண்கள் உள்பட அனைத்து பெண்களும் ஆண்களுக்கு இணையான வகையில் கூட்டுப் பங்குரிமையாளர்களாக கருதப்பட வேண்டும்.

எனவே யசோதா தனது முதல் கணவரின் தயாரான செல்லம்மாளுக்கு இணையான வகையில் சரி பங்குரிமையை வைப்பு நிதித் தொகையில் பெறுவதற்கு தகுதி உண்டு என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 

   தீர்ப்பு நகல்.  

இரண்டாவது திருமணம் செய்யலாம் ஆனால் எப்படி? 

இரண்டாவது திருமணம் செய்து கொள்ளலாம் ஆனால் அதற்கு முன் சில நடைமுறைகள் இருகிறது அதன்படி செய்தாலே அந்த திருமணம் செல்லுபடியாகும் அது என்ன என்று இந்த வீடியோ பதிவில் பதிவிட்டுள்ளேன்.இதோ லிங் 👉இரண்டாவது திருமணம் செய்யலாம் ஆனால் எப்படி?

இரண்டாவது திருமணம் தவறான முறையில் செய்தால் என்ன தண்டனை? 

ஒரு கணவன் அல்லது மனைவி அவர்களின் திருமண வாழ்க்கைக்கு பிறகு விவாகரத்து பெறாமல் இன்னொரு திருமணம் செய்துக் கொண்டால் அது செல்லாது. இவ்வாறு செய்தால் கணவன் அல்லது மனைவி இருதுணை புரிந்த குற்றத்திற்க்கு ஆளாகிவிடுவார்கள்.

ஒரு நபர் தன் வாழ்வில் நடந்த முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்ய ஒப்புக்கொண்டால் அது சட்டபடி குற்றம்.

இப்போது இது போன்ற தவறுக்கு என்ன தண்டனை என்று பார்போம்:

இதற்க்கான தண்டனை 7 ஆண்டுகள் சிறைப்படுத்துதல் மற்றும் அபராதமும் ஆகும். இதர காரணங்கள் என்றால் 7 ஆண்டு சிறைவைப்பு மற்றும் அபராதமூம் ஆகும்.

விளக்கம்:

எந்த ஒரு நபரும் விவாகரத்து பெறாத  கணவன் அல்லது மனைவி உயிருடன் இருக்கும் போதே மறுமணம் புரிந்தால் அது செல்லுபடி ஆகாது . ஏனெனில் அது கணவன் அல்லது மனைவியின் வாழ்நாள் காலத்தில் நடைபெறுவதால் அந்த இருதுணை மணம் குற்றச்செயலாகும். (பிரிவு 494).

இரண்டாவது திருமணம் எப்பொழுது குற்றமாகாது?

முதல் திருமணம் விவாகரத்து செய்யப்பட்டது என்று தகுதி வாய்ந்த நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டால் அந்த நபர் இரண்டாவது திருமணம் செய்து கொள்வது குற்றமல்ல.

திருமண வாழ்க்கையில் முந்தைய கணவன் அல்லது மனைவி பற்றியோ  தொடர்ந்து ஏழு எங்கு இருக்கிறார்  உயிருடன் தான் இருக்கிறாரா என்று தகவல்கள் ஏதும் தெரியவில்லை என்றால் மற்ற நபர் மீண்டும் திருமணம் செய்துக் கொள்ளலாம். ஆனால் ணாமல் போன விபரத்தை கூறி தகுதி வாய்ந்த நீதிமன்றத்தின் மூலமாக விவாகரத்து பெற்றிருக்க வேண்டும்.
 
இந்தியாவில் இரண்டாவது திருமணத்தின் போது  இரண்டாவது திருமணத்தின் வாழ்க்கைத் துனையிடம் முதல் திருமணம் பற்றி சொல்லி சம்மதம் பெற்றிருக்க வேண்டும். 

இந்தியாவில் வாழும் மக்கள் முதல் திருமணத்தை மறைத்து விவாகரத்து பெறாமல் இரண்டாவது திருமணம் செய்ய முடியாது. சட்டபடியான விவாகரத்து பெற்றப் பின்னரே இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடியும். ஆக சட்டபடியான விவாகரத்து பெற்றப் பின்னரே திருமணம் செய்து கொள்வது நலம்.

Post a Comment

Previous Post Next Post