விவாகரத்து வழக்குகளில் உங்களுக்கு இருக்கும் சந்தேகங்களை தீர்த்து வைப்பதற்காக இந்த பதிவை நான் பதிவிடுகிறேன் இன்றைய காலகட்டத்தில் பல காதல் திருமணங்கள் நடை பெற்றாலும் இன்னும் நீதிமன்றங்களில் விவாகரத்து வழக்குகள் குறைந்தபாடில்லை திருமணம் ஆன கணவன் மனைவி சுயநலம் இல்லாத விட்டுக்கொடுக்கும் அன்போடு ஒருவர் பற்றி மற்றொருவர் புரிந்து கொண்டு வாழ வேண்டும்.
திருமணமான கணவன் மனைவி ஒருவரை ஒருவர் சரியாக புரிந்து கொள்ளுதல் இல்லாமல் சின்ன சின்ன விட்டுக் கொடுக்கும் பண்பு இல்லாமல் சிறிய பிரச்சனை கூட ஒரு பெரிய பிரச்சினையாக இன்றைய சூழ்நிலையில் அது ஒரு மன நோயாக மாறி வருகிறது. இதுவே அவர்களுக்கு ஒரு கசப்பான அனுபவத்தை ஏற்படுத்துவதால் இதன் அடிப்படையில் விவாகரத்து வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. அதில் பெண் அதாவது ஒரு கணவனின் மனைவி எந்தெந்த காரணங்களின் அடிப்படையில் விவாகரத்து கேட்கலாம் எப்போது கேட்கலாம் என்பதை வரும் பதிவுகளின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.
பொருளடக்கம் :
விவாகரத்து வழக்கு யார் தாக்கல் செய்யலாம்?
விவாகரத்து வழக்கு தாக்கல் செய்ய ஆணுக்கும் பெண்ணுக்கும் சரிசமமான உரிமை உண்டு.
இருப்பினும், சில அடிப்படைக் காரணங்களின் அடிப்படையில் பெண்கள் மட்டுமே விவாகரத்து கோர வரையறுக்கப்பட்டுள்ளது.
மனைவி விவாகரத்து கேட்க அடிப்படையான காரணங்கள் என்ன?
கணவன் கற்பழிப்பு செய்யும் போது விவாகரத்து கேட்கலாம் அதாவது சுய விருப்பம் இல்லாத போது உடலுறவு கொள்ளுதல்,
கணவனுக்கு இன்னொரு பெண்ணோடு கள்ள தொடர்பு இருந்தால் மனைவி நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு போட முடியும்.
தீரார நோய் அல்லது பரவும் நோய் கணவனுக்கு இருந்தால் மனைவி விவாகரத்து வழக்கு போட முடியும்.
இயற்கைக்கு மீறிய தவறான உறவு மேற்கொள்ளுதல் அதாவது ஆண் ஆணுடனோ, மிருகத்துடனோ உடலுறவு வைத்துக்கொள்ளுதல் இதை அறியும் பட்சத்தில் விவாகரத்து வழக்கு போட முடியும்.
தினமும் குடித்துவிட்டு சண்டை போட்டு அடிப்பது அல்லது சந்தேகத்தால் அடிப்பது அல்லது பிடிக்காத செயலை செய்ய சொல்லி துன்புறுத்துவது இது போன்று மனதளவில் சித்திரவதை செய்யும் காரணத்தின் அடிப்படையில் மனைவி நீதிமன்றத்தில் விவாகரத்து பெறலாம்.
வீட்டிற்குள் அடைத்து வைத்து சித்திரவதை செய்தால் மனைவி நீதிமன்றத்தில் விவாகரத்து பெறலாம்.
கணவன் மனைவியை இன்னொரு
ஆணுடன் தொடர்பு இருப்பதாக கற்பனையாக கருதி சந்தேகப்பட்டு சண்டை போடுவது இதன் காரணமாக மன உளைச்சலடையும் மனைவி நீதிமன்றத்தில் விவாகரத்து பெறலாம்.
திருமணத்திற்குப் பிறகு அந்த கணவன் இன்னொரு திருமணம் செய்து கொண்டார் என்றாலோ அல்லது அவர் வேறொரு பெண்ணோடு தொடர்பில் இருக்கிறார் என்ன காரணத்தினாலோ சேர்ந்து வாழ பிடிக்காமல் அந்த பெண் விவாகரத்து வழக்கை தாக்கல் செய்யலாம்.
அது மட்டுமல்லாமல் கணவர் விவாகரத்து பெறாத நிலையில் இன்னொரு பெண்ணை திருமணம் செய்தார் என்றால் அது சட்டப்படி குற்றம் அதற்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்க முடியும். காவல்நிலையத்தில் புகார் அளித்து அவருக்கு தண்டனை பெற்றுத் தர முடியும் மேலும் இந்த அடிப்படைக் காரணத்தைக் கொண்டு கணவன் தான் இருக்கும் போதே இன்னொரு திருமணம் செய்தார் என்பதற்காக மனைவி விவாகரத்து வழக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து கொள்ளலாம்.
திருமணத்திற்குப் பிறகு ஒரு கணவன் ஒரு மனைவியிடம் கணவனாக நடந்து கொள்ளாமல் அந்த கணவனுக்கான எந்தக் கடமையையும் செய்யாமல் அந்த பெண்ணோடு உறவு வைத்துக் கொள்ளாமல் அந்த பெண்ணை கஷ்டப்படுத்தி கொண்டிருந்தால் இந்து திருமணச் சட்டம் மற்றும் இந்திய சிறப்பு திருமண சட்டத்தின் அடிப்படையில் விவாகரத்து வழக்கை நீதிமன்றத்தில் அந்தப் பெண் தாக்கல் செய்ய முடியும்.
ஒரு பெண் 15 வயதுக்குள் திருமணம் செய்து வைக்கப்பட்டால் அவள் 18 வயதுக்கு முன் அதனை ரத்து செய்ய கோரி திருமண கலைப்பு வழக்கு போடலாம்.
இந்தியாவில் திருமணமான ஒரு பெண் பாதிக்கப்படும் போது இந்து திருமணச் சட்டம் மற்றும் 1939ம் ஆண்டு இயற்றப்பட்ட இஸ்லாமிய திருமணங்கள் ரத்து சட்டம் ஆகிய சட்டங்களின் கீழ் பாதிக்கப்பட்ட பெண் தன் கணவர் மீது விவாகரத்து வழக்கு தாக்கல் செய்யலாம்.
மனமொத்த பரஸ்பர விவாகரத்து பற்றிய விளக்கம்?
கணவன் மட்டும் தான் பரஸ்பர விவாகரத்து தாக்கல் செய்ய முடியும் மனைவி மட்டும் தான் பரஸ்பர விவாகரத்து வழக்கு போட முடியம்எ ன்றெல்லாம் இல்லை பரஸ்பர விவாகரத்தை இருவரும் சேர்ந்தே நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். திருமணமான கணவன் மனைவி இதற்கு மேலும் நமது திருமண பந்தத்தை தொடர வேண்டாம் அதில் எந்தப் பயனுமே இல்லை என்று நினைக்கும் போது அந்த தம்பதி ஒரே மனதோடு விவாகரத்து வழக்கை தாக்கல் செய்ய முடியும் அதற்கும் இந்திய திருமணச் சட்டம், இந்து திருமணச் சட்டம், கிறிஸ்தவர்களுக்கான விவாகரத்துச் சட்டம், பார்சி திருமணம் மற்றும் மற்றும் சிறப்புத் திருமணச் சட்டம் ஆகிய அனைத்துச் சட்டங்களிலும் வழிமுறை இருக்கிறது. இதை
கணவன் மற்றும் மனைவி இருவரும் விவாகரத்து செய்துகொள்ள முழுமனதோடு சம்பாதித்துக் கொண்டு அந்த மனைவிக்கு ஜீவனாம்சம் எவ்வளவு வழங்க வேண்டும் அவருடைய எதிர்கால வாழ்வாதாரம் என்ன குழந்தை இருப்பின் அந்த குழந்தையின் காப்பாளர் உரிமை யாருடையது என்பதை அந்த தந்தை அல்லது தாய் உறுதிப்படுத்த வேண்டும். மேலும் அவர்டைய சொத்துக்கள் யார் யாருக்கு கிடைக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும் இப்படி அவர்களுக்குள் பேசி சமாதானமாக ஒரு முடிவு எடுக்க வேண்டும் அதன் அடிப்படையில் நீதிமன்றத்தில் இந்த மனமொத்த பரஸ்பர விவாகரத்து மனுவை தாக்கல் செய்யலாம்.
இந்த மனமொத்த விவாகரத்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிறகு அதற்கு சமாதான காலம்என்று ஆறு மாத காலங்கள் அந்த வழக்கை தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிடுவார் அந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு அந்த விவாகரத்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும் அதாவது அந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் இருவரும் மனமொத்து விவாகரத்து செய்யும் எண்ணத்தில் இருந்தால் விவாதத்திற்கான தீர்ப்பு வழங்கப்படும்.
இந்த மனமொத்த விவாகரத்து இந்த 6 மாத காலங்களில் எதற்காக கொடுக்கப்படுகிறது என்றால் மேற்கண்ட ஆறு மாத காலங்கள் அந்த கணவன் மனைவி ஒன்று சேர திரும்பவும் எண்ணினால் அவர்களது மனதை மாற்றிக் கொள்ளவே இந்த ஆறு மாதங்கள் வழங்கப்படுகிறது
திருமணமான கணவன் மனைவி மனமொத்த விவாகரத்து மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிறகு அந்த வழக்கு ஆறு மாதங்களுக்கு பிறகு திரும்பவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் அந்த விசாரணை கிட்டத்தட்ட 18 மாதங்கள் வரை தொடர்வதற்கு வாய்ப்பு உள்ளது அதற்கு மேலும் விசாரணைக்கு சரிவர ஒத்துழைக்காமல் இருந்தால் அந்த வழக்கு 18 மாதங்களுக்குள் முடியவில்லை என்றால் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படும்.
இந்த மனமொத்த விவாகரத்து வழக்கு ஆறு மாதங்களுக்குப் பிறகு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் போது இந்த கணவன்-மனைவி யாராவது ஒருவர் இந்த விவாகரத்து மனுவில் உடன்பாடில்லை என்று சொன்னால் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படும்.
நீதிமன்றங்களில் விவாகரத்து தாக்கல் செய்யும் மக்கள் பெரும்பாலானோர் இந்த 6 மாத கால அவகாசம்தேவையில்லாத ஒன்று என்று எண்ணுகிறார்கள் ஆனால் அவர்களுடைய குழந்தைகளையும் அவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும் அவர்கள் சற்றும் யோசிக்காமல் எடுக்கும் முடிவில் தவறான முடிவுகள் எடுப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது என்ற அடிப்படையில் தான் நீதிமன்றம் இந்த மாதிரியான ஒரு சட்டத்தை நடைமுறையில் வைத்துள்ளது.
தற்போது உயர்நீதிமன்றம் இந்த 6 மாத கால இடைவெளி தேவை இல்லை என்றும் அந்த வழக்கை விசாரணை செய்யும் போது அவர்கள் அதற்கான சரியான காரணத்தை சொல்லி ஆறு மாத கால இடைவெளி தேவையில்லை என்று நீதிமன்றத்தில் வழக்காடும் போது அதை தவிர்க்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது அதன் அடிப்படையில் சில வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்படுகிறது.
Post a Comment