வேலை செய்த நிறுவனத்தில் ஒரிஜினல் கல்வி சான்றிதழ்களை தரமறுக்கிறார்களா?


வேலை செய்த நிறுவனத்தில் ஒரிஜினல் கல்வி சான்றிதழ்களை வாங்கிக்கொண்டு வேலை விட்டு நின்றதும் தரமறுக்கிறார்களா இந்த சூழ்நிலையை எப்படி சமாளிப்பது அவர்களிடமிருந்து நமது ஆவணங்களை திரும்ப பெறுவது எப்படி சட்ட நடவடிக்கைகள் என்ன தொடர்ந்து பாப்போம்.

சட்டநடவடிக்கை என்ன?

இன்றைய வாழ்க்கை ஓட்டத்தில் படித்து விட்டு வேலைக்காக பல லட்சியத்தோடு வெளியில் வரும் இளைஞ்கள் பலர்.அவர்கள் எதிர்பார்த்த சம்பளம் இல்லனாலும் ஏதோ வாழ்கையை ஓட்டினால் போதும் என கிடைத்த வேலையை செய்து வருகிறார்கள்.ஆனால் அவர்கள் வேலை பார்க்கும் கம்பெனி முதலாளிகள் பெரும் பணம் சம்பாதிக்க அவர்களின் ஒரிஜினல் கல்வி சான்றிதழை வாங்கி வைத்து கொண்டு கொத்தடிமைகளாக நடத்துகிறார்கள்.வேறு வேலைக்கு செல்ல அனுமதிப்பதும் இல்லை ஒய்வு நாட்களும் இல்லை சம்பள உயர்வும் இல்லை.

 இளைஞர்கள் வேலையை விட்டு நின்று விட்டாலோ, அல்லது வேறு ஒரு  கம்பெனியில்  வேலைக்கு முயன்றாலோ நிறுவனத்தார் ஒரிஜினல் கல்வி சான்றிதழை தர மறுத்து பிரச்சனை செய்கிறார்கள்.

இப்படி தெருவுக்கு ஒருவர் பாதிக்கபடுகிறார்கள். நமது ஒரிஜினல் சான்றிதழை வாங்கி வைத்துக்கொண்டு வீணாக அலையவிடுபவர்களை தண்டிக்க எப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பார்ப்போம்.

கம்பெனியில் வேலை செய்யும் ஊழியர்களின் ஒரிஜினல் கல்வி சான்றிதழ்களை வாங்கி வைத்துக்கொண்டு அவர்களை கடுமையான முறையில் ஓய்வின்றி  கொடுமைபடுத்தியோ, கட்டாயப்படுத்தியோ அல்லது மிரட்டியோ வேலை செய்ய வைப்பது இந்திய தண்டனைச் சட்டப்படி குற்றமாகும்.

இந்திய தண்டனைச் சட்டத்தின்படி இந்த குற்றத்தை செய்தவர்களுக்கு தண்டனை வழங்கப் படுகிறது. இந்திய தண்டனைச் சட்டத்தை ஆங்கிலத்தில் indian penal code என்றும் அதை சுருக்கமாக IPC என்றும் குறிப்பிடலாம்.

மேற்கண்ட வேலை செய்த நிறுவனத்தில் ஒரிஜினல் கல்வி சான்றிதழ்களை வாங்கிக்கொண்டு வேலை விட்டு நின்றதும் தரமறுக்கிறார்கள் அந்த நிறுவனம் மற்றும் அதிகாரியின் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 374,503,405, ஆகிய பிரிவுகளின் அடிப்படையில் குற்றம் செய்தவருக்கு தண்டனை வழங்கலாம்.

மேற்கண்ட இந்திய தண்டனை சட்ட பிரிவுகள் எந்தெந்த குற்றங்களுக்கு தண்டனை வழங்குகிறது என்று பார்ப்போம்.

IPC-374 சட்டப்பூர்வமற்ற கட்டாய உழைப்பு.

விளக்கம்:

 இந்த சட்டம் எதை வரையறுத்து கூறுகிறது என்றால் ஒரு வேலையை கட்டாயப்படுத்தி அதிகமான நேரத்திற்கு வேலை வாங்கினால் அல்லது இன்னொரு வேலைக்காக உங்களை தேர்வு செய்து விட்டு இன்னொரு வேலையை செய்யச் சொன்னால் அதற்கும் இந்த சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்படும்.

IPC-503 குற்றமுறு மிரட்டல்.

விளக்கம்:

குற்றம் என்று தெரிந்தே ஒருவரை வேலை நேரத்தை தவிர்த்து வேறு நேரத்திலும் வேலை செய்யச் சொல்லி மிரட்டினால் குற்றம்தான் அதற்கு இந்த சட்டத்தின் அடிப்படையில் தண்டனை வழங்கப்படும்.

IPC-405 குற்றமுறு நம்பிக்கை மோசடி.

 விளக்கம்:

ஒருவரிடம் வேலை செய்ய வேண்டும் என்றால் உங்களது ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும் என்று சொல்லி அவரது ஆவணங்களை பெற்று வைத்துக் கொண்டு அவரை நம்ப வைத்து அவரது ஆவணங்களை பெற்றுக் கொண்ட பிறகு அந்த வேலையில் இருந்து விலக வேண்டிய சூழ்நிலை ஏற்படும் போது ஏற்கெனவே வேலையில் சேரும் நேரத்தில் அவரை நம்ப வைத்து அவரின் ஆவணங்களை பெற்று விட்டு தற்போது அந்த ஆவணங்களை திருப்பி தர மறுப்பது நம்பிக்கை மோசடி என்ற அடிப்படையில் இந்த சட்டத்தின் அடிப்படையில் அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும்.

இப்படி எந்தெந்த துன்புறுத்தல்கள் எல்லாம் நீங்கள் அனுபவித்தீர்களோ அதற்கெல்லாம் தண்டனை உண்டு.

மேலும் இவ்வாறு தொழிலாளர்களை நடத்துவது தொழிலாளர் பாதுகாப்பு சட்டத்திற்கும் புறம்பானதாகும். பணிபுரிந்த கம்பெனியிடம் நேரில் சென்று கேட்டு பார்க்க வேண்டும் தரவில்லை என்றால் காவல்நிலையத்தில் புகார் அளிக்கலாம்.அல்லது வழக்கறிஞர் மூலம் அந்த நிறுவனத்திற்கு உங்கள் ஒரிஜினல் கல்வி சான்றிதழ்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்புங்கள் பதிலளிக்க வில்லையென்றால் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யலாம் நஷ்டஈடுப் பெறலாம். ஆனால் பெரும்பாலும் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியவுடன் தீர்வு கிடைக்கும்.

வேலை செய்த நிறுவனத்தில் ஒரிஜினல் கல்வி சான்றிதழ்களை வாங்கிக்கொண்டு வேலை விட்டு நின்றதும் தர மறுக்கிறார்களா?உங்களை சுத்தலில்விடுகிறார்களா  அவர்கள் மீது எப்படி நடவடிக்கை எடுக்க என்ன செய்வது பதிவு கீழே 👇

வேலை செய்த நிறுவனத்தில் ஒரிஜினல்சான்றிதழை வாங்கிக்கொண்டு தரமறுக்கிறார்களா? வீடியோ  PART-1

வேலை செய்த நிறுவனத்தில் ஒரிஜினல்சான்றிதழை வாங்கிக்கொண்டு தரமறுக்கிறார்களா? வீடியோ  PART-2

Post a Comment

Previous Post Next Post