நிலத்தை நீங்கள் அனுபவிப்பீர்கள் என்றால் இரண்டு ஆவணங்கள் உங்களிடம் கட்டாயம் இருக்க வேண்டும். ஆமாங்க நாம எல்லாருக்கும் தெரிந்த ஆவணங்கள்தான் என்னனு பார்ப்போம்.
முதலாவது பத்திரம்,இரண்டாவது பட்டா, இதில் பத்திரம் பதிவுத்துறை சார்ந்த ஆவணம், பட்டா வருவாய்த்துறை சார்ந்த ஆவணம் ஆகும்.
பத்திரம் என்றால் என்ன?
பத்திரம் என்பது நிலத்தின் உரிமையை மாற்றிக்கொள்ள அதாவது வாங்க விற்க அதை அனுபவிக்க சொந்தம் கொண்டாட நாம் எழுதிக்கொள்வது இதில் சர்வே எண் மற்றும் யாரிடமிருந்து பெற்றோம் எப்படி போற்றோம் அளவுகள் என்ன வீட்டு மனையா வெறும் மனையா நன்செய் நிலமா புன்செய் நிலமா தரிசுநிலமா அப்படினு அந்த நிலத்தை பற்றிய தகவல்கள் இருக்கும்.மேலும் அதையவர் எவ்வளவு பணம் கொடுத்து வாங்கினார் சர்வே எண் மற்றும் பட்டா எண் இனி யார் இந்த நிலத்தை அனுபவிக்க முடியும் என்றெல்லாம் அந்த பத்திரத்தில் இருக்கும் மேலும் இது இருவருக்கு நடக்கும் ஒப்பந்தமாகும் அதாவது தனது உரிமையை மாற்றி கொடுக்கும் ஒப்பந்தம்.
பட்டா என்றால் என்ன?
பட்டா தான் ஒரு சொந்த உரிமையாகும் நிலத்தின் மீது உங்களுக்கு உள்ள உரிமையை உறுதிபடுத்துவது. இதை நில உரிமை என்றும் சொல்லலாம் அதில் தற்பொழுது யார் பெயரில் இருக்கிறதோ அவரே தற்போதைய ஆவண உரிமையாளர்.
ஒரு சோத்தின் பட்டாவில் மாநிலம், மாவட்டம், வட்டம், கிராமம், நிலத்தின் சர்வே எண், எந்த வகையான நிலம், வரித்தொகை எவ்வளவு, இடத்தின் விஸ்தீரணம், உரிமையாளர் பெயர் மற்றும் அவரின் தந்தை பெயர் இருக்கும்.
மேலும் அந்த நிலத்தைப் பற்றிய கூடுதல் தகவல் மற்றும் குறிப்புகள் பட்டாவில் இருக்கும் ஒரு நிலத்திற்கு பட்டா பத்திரம் இரண்டுமே முக்கியம் இரண்டும் மனிதனின் இரு கண்களைப் போலத்தான் அதனால் சொத்துக்களை வாங்கும் போது பட்டாவையும் உரிமை மாற்றம் செய்து உங்களுடைய பெயரை மாற்றிக் கொள்ளுங்கள்.