காவல் நிலையத்தில் ஒரு பிரச்சனை சம்பந்தமாக புகார் அளிக்கச் செல்லும்போது அந்த புகாரை காவல்துறை அதிகாரி பெற்றுக் கொண்டு, நடவடிக்கை எடுப்பாரா அல்லது அந்த புகாரை நடவடிக்கை எடுக்காமலேயே திருப்பி அனுப்பி விட முடியுமா, அப்படி அந்த அதிகாரி புகாரை பெற்றுக் கொள்ளாமல் அந்த புகாரை அனுப்பினாலோ நடவடிக்கை எடுக்காமல் தவிர்க்கலாலோ அடுத்து யாரிடம் புகார் அளிக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொருளடக்கம் :
- போலீஸ் புகார்?
- போலிஸ் உங்கள் புகாரை வாங்காமல் மறுக்கலாமா?
- போலிஸ் புகாரை ஏற்கமறுத்துவிட்டால் என்ன செய்யலாம்?
போலீஸ் புகார் மனு (Police Compliant).
காவல் நிலையத்தில் ஒரு புகாரை நாம் கொடுக்க மனு எழுதும் போது சில முக்கியமான அடிப்படையான விஷயங்களை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
சட்டத்தால் குற்றம் எனக் கூறப்பட்ட ஒரு செயலைப் பற்றி பாதிக்கப்பட்ட நபரோ அல்லது தெரிந்த வேறு நபரோ அச்செயல் பற்றி புகார் தெரிவிக்கலாம்.
புகார் அளிக்கும்போது எந்த தேதியில் யாரால் எவ்வாறு குற்றம் நடைபெற்றது என்பதை தெரிந்தவரை தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.
ஒரு குற்றம் நடைபெறுகிறது என்றால் அந்த குற்றம் எந்த இடத்தில் வைத்து நடைபெறுகிறது என்பது குறித்து தெளிவாக புகார் மனுவில் தெரிவிக்க வேண்டும்.
இந்த புகார் மனு தான் அந்த பிரச்சனைக்கான ஒரு முகவரி ஒரு காவல்துறை அதிகாரி இந்த புகாரின் அடிப்படையில் தான் விசாரணையை தொடங்க போகிறார் என்பதால் ஒரு புகாரில் யாருக்கு பிரச்சனை என்ன பிரச்சனை எந்த இடத்தில் பிரச்சனை எந்த நேரத்தில் பிரச்சனை நடந்தது என்று அனைத்து விஷயங்களையும் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு தெளிவாக தயார் செய்த புகார் மனுவை ஒரு காவல்துறை அதிகாரி கைபற்றிக் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த குற்றவாளியை கைது செய்ய வேண்டும்.
போலிஸ் உங்கள் புகாரை வாங்காமல் மறுக்கலாமா?
ஒருவேளை சாதாரண வழக்குகளில் புகாரைப் பெற காவல்துறையினர் மறுக்கலாமா என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்கலாம்.
எவ்வகையான புகாரையும் காவல்துறையினர் பெற்றுக்கொள்ள தான் வேண்டும் மறுக்கக் கூடாது. புகாரைப் பெற்று அதனை சமூக பதிவேட்டில்(ரசிது) பதிவு செய்து அதன் நகலை புகார்தாரருக்குத் தரவேண்டும். பின் புலனாய்வில் குற்றம் நிகழ்ந்ததாக தெரியவந்தால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யலாம் இல்லை எனில் வழக்கை முடித்துவிடலாம்.போலிஸ் புகாரை ஏற்கமறுத்துவிட்டால் என்ன செய்யலாம்?
புகாரை காவல் நிலைய அலுவலர் ஏற்காவிட்டால் காவல் மேல் அதிகாரி மாவட்டக் கண்காணிப்பாளர், மாநகர ஆணையாளர் அல்லது காவல் துறைத் தலைவர் ஆகியோருக்கு நேரடியாகவோ. அஞ்சல் மூலமாகவோ புகாரைஅனுப்பி வைக்கப்படவேண்டும். அல்லது – நீதித்துறை நடுவர் முன் ஒருவர் தனது புகார் குறித்து முறையீடாகப் பதிவு செய்யலாம். அதை நடுவர் விசாரித்து சாட்சியம் பதிவு செய்து புலனாய்வு செய்ய வேண்டிய வழக்கு எனில் போலீசாரை புலனாய்வு மேற்கொள்ள உத்தரவு பிறப்பிப்பார்.
إرسال تعليق