அடிப்படை உரிமைகள் மற்றும் சட்டங்கள்.
அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் சில சட்டங்களை கூறியுள்ளேன் இதில் நன் சில சட்டங்களை சுருக்கமாக சொல்லியுள்ளேன் அவற்றை நீங்கள் புரிந்துகொள்ள ஒரு அறிமுகம்.
CRPC என்பது குற்றவிசாரனை முறைச்சட்டம்.
IEA-Indian Evidence Act என்பது இந்திய சாட்சிய சட்டம்.
Constitution Article என்பது அரசியலமைப்பு சட்டம்.
1. நீதிபதியை எதிர்மனுதாரராக சேர்த்து அப்பீல் செய்யலாம். சிஆர்பிசி 404.
2. ஒரு நீதிபதி தவறு செய்தால் 7 வருடம் சிறை. ஐபிசி-217.
3. நீங்கள் வணிகம் செய்யும் கடையில் முத்திரையே இல்லாத தராசை பயன்படுத்தினாலோ அல்லது கைவசம் வைத்திருந்தால் சட்டப்படி குற்றம் 1 வருடம் சிறை தண்டனை உண்டு. ஐபிசி.267.
4. சட்டம் தெரியாத சாதாரண மக்கள் யாரும் வழக்கறிஞரின் உதவி இல்லாமல் தங்கள் வழக்கில் தாங்களே வாதாடலாம்.Article 19(1) , CRPC 303,302(2).
5. வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கலாம். சிஆர்பிசி 309(2) 312.
6. ஒரு குற்றம் ஏற்படப்போகிறது என அறிந்து அதை முன்பே நடைபெறாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு காவல் உயர்நிலை அலுவலர்களுக்கும் கீழ்நிலை அலுவலர்களுக்கும் உள்ளது. சிஆர்பிசி 36, 149.
7. உங்களை காவல்நிலையத்திற்கு ஒரு விசாரணைக்கு அழைத்தால் நீங்கள் அந்த விசாரணைக்கு சென்றதற்காக படித் தொகையும், செலவும் சம்பளத்தொகையும் கேட்டுப்பெறலாம். சிஆர்பிசி.160(2).
8. கடுமையான சூழ்நிலையில் மட்டும் குற்றவாளிக்கு கைவிலங்கிட முடியும் மற்றப்படி கைவிலங்கிட அவசியமில்லை கட்டுரை 21(14).
9. ஒரு வழக்கில் விசாரிக்கும் போது புகார் கொடுக்கும் போது பொய்யான வாதம் வைக்கப்பட்டிருந்தால் அந்த வழக்கை விசாரிக்கும் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் கட்டுரை 32(8).
10.கடமையை தவறும் அரசு அதிகாரிகள் மற்றும் அரசு மருத்துவர்கள் தண்டிக்கப்படுவார்கள் அதாவது அவர்களின் பணியின் போது கடமையிலிருந்து தவறி பணியை செய்யாமல் இருந்தால் 1 வருடம் சிறை. ஐபிசி-166.
11. ஒரு குழந்தை உயிருடன் பிறப்பதை தடுப்பது அதாவது கருக்கலைப்பு மற்றும் பிறந்தபின்அந்த குழந்தையை கொலை செய்த குற்றம் இந்த குற்றத்திற்கு பத்து வருட சிறை தண்டனை உண்டு.IPC-315.
12. தற்காப்புக்காக செய்யப்படும் எந்தவொரு செயலும் குற்றமில்லை. ஐபிசி-96.
13. பிற மதம் பற்றி தவறாக பேசுதல் மத நம்பிக்கையை கொச்சைபடுத்துவது குற்றம் 2 ஆண்டு சிறை. ஐபிசி-295.
14. மத உணர்வுகளை புண்படுத்துதல் ஒரு வருடம் சிறை IPC-295.
15. ஒரு நபரை இன்னொரு நபர் போல நடித்து ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல் குற்றம் அதற்கு 3 ஆண்டு சிறை IPC-419.
16. ஒரு நபரை ஏமாற்றுவதற்காக போலியாக பத்திரம் தயார் செய்தல் குற்றம் அதற்கு 7வருடம் சிறை. ஐபிசி-468.
17. ஒரு சொந்த அடையாள குறியை மாற்றுதல் 3ஆண்டு சிறை IPC-484.
18. கணவன் மனைவி உயிருடன் இருக்கும் போது மறுமணம் செய்த குற்றம் இந்த குற்றத்திற்கு 7 ஆண்டுகள் சிறை. ஐபிசி-494.
19. முந்தைய திருமணத்தை மறைத்த குற்றம் இந்த குற்றத்திற்கு 10 வருடம் சிறை. ஐபிசி-495.
மேற்படி தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று மக்களே மீண்டும் வேறொரு நல்ல சட்ட பதிவோடு உங்களை சந்திக்கிறேன்.
إرسال تعليق