அதிகரித்து வரும் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைகள்.
சமூகத்தில் தற்போது நாம் எங்கே ஒரு செய்தியை கேட்டாலும் அதிர்ச்சி தரக்கூடிய ஒரு கொடுமையான ஒரு தகவல் குழந்தைகளிடம் பாலியல் வன்முறை, சித்ரவதை, ஆபாச படம் எடுத்தல் போன்ற குற்றங்கள். காலப் பழக்கத்தில் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான் இந்த கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது இதைத் தடுப்பதற்காக இந்திய அரசு குழந்தைகளுக்கான பாலியல் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் என்ற சட்டத்தை வரைவு செய்து இயற்றி இருக்கிறார்கள் இதனடிப்படையில் குற்றவாளிகள் தப்பிக்க முடியாதபடி தண்டனை பெறுவார்கள்.
இந்த குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கும் வகையில் இந்திய அரசால் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம் . (Protection of Children Against Sexual Offence)
குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்புசட்டத்தின் சில தண்டனைகளை பற்றி பார்ப்போம்.
- குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் அடிப்படையில் குற்றம் செய்தவற்கு அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூபாய் ஐம்பதாயிரம் வரை அபராதம் வசூலிக்கலாம்.
- குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் அடிப்படையில் வாய் வழியாக பாலியல் உறவுக்கு தூண்டி தொந்தரவு செய்தல் அந்த குற்றத்தை செய்த நபருக்கு குறைந்தது 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 50000 ரூபாய் அபராதமும் வசூலிக்கப்படும்.
- குழந்தையிடம் தவறான முறையில்(Fondling) நடக்கும் பெரியவர்களின் செயல்களும் பாலியல் தொந்தரவாக கருதப்படும்.
- குழந்தைகளிடம் பெரியவர்கள் தவறாக நடந்து கொண்ட குற்றத்திற்கு குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் அடிப்படையில் குறைந்தபட்ச தண்டனையாக 3 வருடம் சிறை தண்டனை விதிக்கலாம்.
- குழந்தைகளை பாலியல் தொல்லைகள் கொடுப்பதை தடுக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கங்கே அமைக்கபட்டும் வருகிறது.
- மேலும் அனாதை ஆசிரமங்கள், சிறுவர் காப்பகங்கள், போன்ற இடங்களில் குழந்தைகளை கவனிப்பவர்கள் குழந்தைகளின் காப்பாளர்களாக கருதப்படுவார்கள். அவர்கள் குழந்தைகளிடம் தவறான முறையில் நடக்கும் பட்சத்தில் அது அவலமாக கருதப்படும் (மோசமான குற்றம்.aggravated offence) பாதுகாப்பு துறை, காவல்துறை, அரசு ஊழியர்கள், குழந்தைகள் காப்பகத்தின் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள், மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவனங்கள் ஆகியவை இந்த நம்பிக்கைக்குரியவர்கள் என்ற பட்டியலில் வருகிறார்கள். இவர்கள் இப்படியான குற்றங்களில் ஈடுபட்டால் அவர்களும் இந்த சட்டத்தால் தண்டிக்கப்படுவர்கள்.
- மேலும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மாற்று திறனாளிகள் ஆகியவர்கள் மீது பாலியல் குற்றங்கள் புரிபவர்களுக்கு 12 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை வழங்கப்படும்.
- ஒரு நபர் குழந்தையின் ஆபாசப் படங்கள் வைத்திருப்பதும் அதை ஊடகங்களில் பதிவேற்றுவது தண்டனைக்குரிய குற்றமாக சட்டத்தால் கருதப்படும். மேலும் ஊடகங்களில் மற்றும் புகைப்படம் எடுக்கும் நிலையங்களில் குழந்தைகளுகு எதிரான பாலியல் குற்றம் இழைக்கப்படும் தெரிந்த தகவல்களை அரசுக்கு தர அறிவுறுத்தப் படுகிறார்கள். தகவல் தராத பட்சத்தில் அது குற்றமாக கருதப்படும்.
இந்த சட்டங்கள் சமூகத்தில் குழந்தைகளை எல்லா விதமான பாலியல் குற்றங்களிலிருந்தும் பாதுகாக்கின்றது.
Post a Comment