வங்கிகளில் நடக்கும் மோசடிகள் வங்கி அதிகாரிகளால் ஏற்படுகிற பிரச்சனைகள் போன்ற சிக்கல்களை கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்காகவும் வாடிக்கையாளர்களின் நலனில் அக்கறையுடன் வங்கிகள் செயல்பட வேண்டும் என்ற காரணத்திற்காகவும் R B I யினால் உருவாக்கப்பட்ட திட்டம் தான் இந்த வங்கி ஓம்புட்ஸ்மேன் திட்டம் அதைப் பற்றி மேலும் விரிவாக தெரிந்து கொள்வோம்.
பொருளடக்கம் :
- வங்கி ஓம்புட்ஸ்மேன் என்றால் யார்?
- வங்கி ஓம்புட்ஸ்மேன் எந்த திட்டத்தின் கீழ் எப்போது நடைமுறைக்கு வந்தது?
- வங்கி ஓம்புட்ஸ்மேன் திட்டம் யாரின் மேற்பார்வையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது?
- வங்கி ஓம்புட்ஸ்மேன் திட்டம் எங்கெல்லாம் செயல்படும்?
- வங்கி ஓம்புட்ஸ்மேன் அதிகாரியிடம் யாரெல்லாம் புகாரளிக்கலாம்?
- வங்கி முறைகேள் அலுவலரின் அதிகாரம் எப்படிபட்டது?
- இணையவழி வங்கி சேவை பிரச்சினைகளுக்கு ஓம்புட்ஸ்மேனிடம் முறையிடலாமா?
- வங்கி ஓம்புட்ஸ்மேன் அதிகாரியால் என்ன பயன்?
வங்கி ஒம்புட்ஸ்மேன் என்றால் யார்?
இந்தியாவில் அனைத்து வங்கிகளையும் தனது கட்டுபாட்டுக்குள் வைத்திருப்பது RIB வங்கியாகும். அதன்படி RBI அதாவது இந்தியன் நடுவண் வங்கி வங்கியின் "ஒம்புட்ஸ்மேன்"(Ombudsman) என்று அழைக்கப்படும் இந்த திட்டம் வங்கியை பயன்படுத்தும் பயனாளர்களுக்கு மிகுந்த சாதகமாகாவும் மிக அசுர வேகத்தில் வாடிக்கையாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்து சிறப்பாக செயலாற்றுகிறது என்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கும் ஒரு உண்மையாகும்.
வங்கி ஒம்புட்ஸ்மேன் வங்கிளில் வாடிக்கையாளருக்கு ஏற்படும் குறைகளைக் சரி செய்வதற்காக நமது இந்திய அரசங்கத்தீன் அறிவுறுத்தலின் படி உருவாக்கப்பட்ட ஒரு அதிகாரி ஆவார்.
வங்கி ஒம்புட்ஸ்மேன் எந்த திட்டத்தின் கீழ் எப்போது நடைமுறைக்கு வந்தது?
ஒம்புட்ஸ்மேன் என்பது வங்கிகளால் வாடிக்கையாளருக்கு ஏற்படும் குறைகளை தீர்க்க இந்திய அரசால் உருவாக்கப்பட்ட திட்டம்தான் இந்த ஒம்படஸ்மேன் இதனை வங்கி முறைகேள் திட்டம் என்று அழைப்பார்கள் அதாவது ஆங்கிலத்தில் Banking Ombudsman Scheme என்ற திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்டு ஜனவரி 1ஆம் நாள் 2006ஆம் ஆண்டு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது .
வங்கி ஓம்புட்ஸ்மேன் திட்டம் யாரின் மேற்பார்வையில் நடைமுறைபடுத்தபடுகிறது?
இந்திய அரசின் இத்திட்டத்தை இந்திய ரிசர்வ் வங்கி நடைமுறைப்படுத்துகிறது. இந்த இந்திய ரிசர்வ் வங்கியின் அடிப்படியில் தான் இது இயங்குகிறது.
வங்கி ஒம்புட்ஸ்மேன் திட்டம் எங்கெல்லாம் செயல்படும்?
இந்த ஒம்புட்ஸ்மேன்(Ombudsman) திட்டம் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் அனைத்து வங்கிகளிலும் செயல்படும்.
வங்கி ஓம்புட்ஸ்மேன் அதிகாரியிடம் யாரெல்லாம் புகாரளிக்கலாம்?
ஒரு வங்கியின் வாடிக்கையாளர் வங்கிகள் மீதான குறைகளை நடவடிக்கை எடுக்க சொல்லி வலியுறுத்திய பிறகும் குறைகள் தீர்க்கபடவில்லையென்றால் வங்கி முறைகேள் அலுவலரிடம் முறையிட்டுத் அதற்கான தீர்ப்பை பெறலாம்.
வங்கி முறைகேள் அலுவலரின் அதிகாரம் எப்படிபட்டது?
வங்கி முறைகேள் அலுவலரின் அதிகாரம் ஒரளவுக்கு நீதிபதியின் அதிகாரத்திற்கு நிகராக இருக்கும்.
இணையவழி வங்கி சேவை பிரச்சினைகளுக்கு ஒம்புட்ஸ்மேனிடம் முறையிடலாமா?
இணையவழி வங்கி குறைகளுக்கும் வங்கிகளில் சரியான நடவடிக்கை இல்லையென்றால் ஒம்புட்ஸ்மேனிடம் புகார் அளிக்கலாம்.
வங்கி ஒம்புட்ஸ்மேன் அதிகாரியால் என்ன பயன்?
நாம் அவரை அணுகலாம் அதற்காக நண்பர் ஒருவரின் உண்மை அனுபவத்தை உங்களுக்காக பகிர்கிறேன்.
கணேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற வாடிக்கையாளர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு உடமையாக்கப்பட்ட வங்கி கணக்கிலிருந்து ரூபாய் 8000/- பணம் எடுபதற்கு ATM சென்று உள்ளார்.
அவர் சென்ற போது பணம் வராமல் உங்களுடைய வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுவிட்டது என்ற குறுந்தகவல் (SMS ) மட்டும் அவரது மொபைலுக்கு வந்துள்ளது.
உடனடியாக அந்த வாடிக்கையாளர் வங்கியை அணுகியுள்ளார் அதற்கு வாங்கி அதிகாரிகள் வங்கியில் இதை பற்றி ஒரு கடிதத்தை எழுதி கொடுங்கள் உங்களுக்கு பணம் தருகிறோம் மேலும் அந்த பணம் எடுத்த சீட்டையும் இந்த கடித்ததோடு இணைத்து தாருங்கள் என்று கூறியுள்ளனர்.
அந்த வாடிக்கையாளரும் ஒரு கடிதத்தை எழுதி அதனோடு அந்த பணம் எடுத்த சீட்டையும் இணைத்து கொடுத்துவிட்டு பல நாட்கள் காத்திருந்துள்ளார் ஆனால் பலனில்லை பல முறை வங்கிக்கு நேரில் சென்று முறையிட்டு கேட்டும் பார்த்துள்ளார் பணம் திரும்ப கிடைக்கவில்லை.
சம்பவம் நடந்த நாள் ஜனவரி 7 ம் தேதி, வாடிக்கையாளர் பிப்ரவரி 10ம் தேதி வரை காத்திருந்து பலன் இல்லாமல் கடைசியாக பொறுமை இழந்த கணேஷ் என்ற வாடிக்கையாளர் பின்னர் தனியார் வங்கியில் வேலை செய்யும் தனது நண்பரிடம் இதை பற்றி கூறி உள்ளார்.
அவர் இதை பற்றி வழக்கறிஞரிடம் ஆலோசனை கேட்க அவரும் இந்த "ஒம்புட்ஸ்மேன்" Ombudsman பற்றி சொல்லி உள்ளார்.
உடனடியாக ஒம்புட்ஸ்மேனிடம் அதே நாளில் இணையம் வாயிலாக புகாரை தெரிவித்துள்ளார்.
அந்த புகாரை கொடுத்த பிறகு பிப்ரவரி 25 அன்று ரூபாய் 8000/- வங்கி கணக்கில் சேர்ந்துள்ளது.
அதன் பிறகு மார்ச் மாதத்தில் அவருக்கு நஷ்ட ஈடுத் தொகையாக ரூபாய் 525/-ம் செலுத்தி உள்ளனர். மேலும் வங்கி ஊழியர்கள் அவரது குறைகள் சரி செய்யப்பட்டதை எழுதி வாங்கி கொண்டு அவரை மரியாதையுடன் அனுப்பிவைத்துள்ளார்.
இனி நீங்களும் வங்கி சார்ந்த பிரச்சனைகளுக்கு யோசிக்காமல் ஒம்புட்ஸ்மேனிடம் புகார்லளிக்கலாம்.
வங்கியால் பாதிக்கப்பட்டு நீங்கள் கொடுத்த புகார் உண்மை என்று நிருபணம் செய்யபட்டால் சமந்தப்பட்ட அதிகாரி பணியிடை நீக்கம் செய்யபடும் அளவிற்கு ஒம்புட்ஸ்மேனுக்கு அதிகாரம் உள்ளது.
மேலும் வங்கி அதிகாரிகளின் குற்றம் தொடர்ந்து அதிகமாக இருந்தால் சமந்தப்பட்டவங்கி கிளை மூடப்படும் அளவிற்கு ஒம்புட்ஸ்மேனிடம் அதிகாரம் உள்ளது.
Hi
ReplyDeleteHi 👋
DeletePost a Comment