போலீசார் உங்கள் மீது 75 வழக்கு பதிவு செய்தால் அரசு வேலை கிடைக்காதா?

Pragatheesh.BA.LLB (வழக்கறிஞர்)
By -
தமிழ்நாடு நகர காவல் சட்டத்தின் பிரிவு 75 இன் கீழ் உங்களுக்கு எதிராக FIR பதிவு செய்யப்பட்டிருந்தால் அரசு வேலை பெறுவதிலிருந்து உங்களைத் தகுதி நீக்கம் செய்யமாட்டார்கள் - ஆனால் ஒரு சில காரணிகளைப் பொறுத்தது நீங்கள் தகுதி நீக்கம் செய்யப்படலாம்.


75 வழக்கு என்ன மாதிரியான குற்றம் என்று சுருக்கமாக பார்ப்போம்.


  • பிரிவு 75 என்பது ஒரு சிறிய, தீவிரமற்ற குற்றமாகும்.
  • இது பொதுத் தொல்லை, குடிபோதையில் நடத்தை அல்லது ஒழுங்கீனமான நடத்தை ஆகியவற்றைக் கையாள்கிறது.
  • தொடர்ந்து பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுத்தால் இந்த 75 பிரிவு வழக்கு ஒரு ஒழுக்கக் கேடான நடத்தையை குறிக்கிறது.
  • இது ஜாமீனில் வெளிவரக்கூடிய குற்றமாகும்.
  • 75 பிரிவு வழக்கிற்கு தண்டனை காவம் மற்றும் அபராதம் என்னவென்றால் 6 மாத சிறைத்தண்டனை அல்லது ₹1,000 அபராதம்.
இதை படிக்க இங்கே அழுத்துங்கள்👉75 வழக்கு என்றால் என்ன?

75 வழக்கு எப்போது அரசு வேலையை பாதிக்கலாம்?


கீழ்கண்ட காரணங்கள் உங்கள் வேலையை பாதிக்கலாம் :

• உங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீங்கள் தண்டனை பெற்றிருந்தால் அது உங்கள் வேலைக்கு ஆபத்தாக அமையும், நீங்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டால் தொடர்ந்து நீங்கள் வேலை செய்யமுடியாது என்பதால் ஆட்சேர்ப்பு அதிகாரி அதை எதிர்மறையாகப் பார்க்கலாம் அதனால் அவர் உங்கள் நிராகரிக்கலாம்.

• பல அரசு வேலை விண்ணப்பங்கள் கேட்கின்றன: "நீங்கள் எப்போதாவது நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டிருக்கிறீர்களா என்று இதற்கு உண்மையான பதிலை கொடுக்க வேண்டும். சில வேலைகளுக்கு குற்ற வழக்குகளோ, தண்டனைகளோ, குற்ற பின்னணியோ இருக்க கூடாது அதனால் அந்த வேலை உங்களுக்கு கிடைக்காமல் போகலாம். 

• விண்ணப்பப் படிவத்தில், “உங்களுக்கு எதிராக எப்போதாவது FIR அல்லது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா?” என்று கேட்டால், நீங்கள் உண்மையாக பதிலளிக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் மறைத்தாலும் நியமனத்திற்குப் பிறகும் கூட, தவறான தகவல்கள் வழங்கியதற்காக உங்கள் வேலை நிராகரிக்கப்படலாம் அல்லது பணிநீக்கம் செய்யப்படலாம்.

• காவல்துறை, பாதுகாப்பு, நீதித்துறை மற்றும் சிவில் சேவைகளுக்கு, சிறிய வழக்குகள் உங்கள் மீது இருந்தால் கூட தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

• ஊரக எழுத்தர் அல்லது தொழில்நுட்பப் பணிகளுக்கு, ஒரு FIR (குறிப்பாக 75 போன்ற சிறிய பிரிவின் கீழ்) ஒரு தடையாக இருக்காது - குறிப்பாக நீங்கள் விடுவிக்கப்பட்டாலோ அல்லது வழக்கு முடிக்கப்பட்டாலோ அது பெரிதாக பார்க்கப்படாது. 

• உங்கள் மீது போடப்பட்ட வழக்கு இன்னும் நிலுவையில் இருந்தால், தேர்வுக் குழுக்கள் இறுதி முடிவு வரை உங்கள் வேலை நியமனத்தை நிறுத்தி வைக்கலாம்.

உங்கள் மீது வழக்கு போடப்பட்டால் நீங்கள் என்ன செய்ய முடியும்?


• உங்கள் மீது வழக்கு போடப்பட்டுவிட்டால் வழக்கை முடிக்க முயற்சி செய்யுங்கள்.

• இது ஒரு சிறிய குற்றமாக இருந்தால், FIR ஐ ரத்து செய்ய நீதிமன்றத்தை அணுகலாம், குறிப்பாக அது ஒரு முறை மட்டுமே ஏற்பட்ட பிரச்சினையாக இருந்தால்.

• வழக்கு முடித்து வைக்கப்பட்டுவிட்டால் காவல்நிலையத்திலிருந்து வழக்கு சரிபார்ப்பு அறிக்கையைப் பெற்று வைத்துக்கொள்ளுங்கள்.

• பெரும்பாலான வேலைகளுக்கு காவல் சரிபார்ப்பு தேவை - உங்கள் வழக்கு முடிக்கப்பட்டாலோ அல்லது விடுவிக்கப்பட்டாலோ, இது உதவுகிறது.

• FIR நகல், ஜாமீன், நீதிமன்றதில் விடுவிக்கப்பட்ட உத்தரவுகள் அல்லது இறுதி அறிக்கைகள்  போன்ற அனைத்து சட்ட ஆவணங்களின் பதிவுகளையும் வைத்திருங்கள் தேவைப்படும் சூழ்நிலையில் வெளிப்படைத்தன்மைக்கு பயனுள்ளதாக இருக்கும். 


முடிவுரை சுருக்கமாக :


உங்கள் மீது 75 வழக்கு போடப்பட்டு விட்டால் அந்த வழக்கை முடித்து விட முயற்சி செய்யுங்கள், உங்கள் மீது 75  பிரிவில் வழக்கு போடப்பட்டு எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்றால் உங்கள் வேலைக்கு அது எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது காரணம் பணி நியமனத்திற்கு முன்பு அந்த வழக்கை முடித்து விட நீங்கள் முயற்சி செய்யலாம் ஆனால் ஆறு மாத காலம் தண்டனை பெற்று அந்த காலத்தில் உங்களுக்கு வேலை கிடைத்தது என்றால் அந்த வேலை கிடைப்பதில் தடை ஏற்படலாம். 

தொடர்ந்து உங்கள் மீது மீண்டும் மீண்டும் 75 வழக்கு போடப்பட்டு தண்டிக்கப்பட்டால் உங்களது ஒழுக்க கேடான நடவடிக்கை காரணமாக வேலை கிடைக்காமல் போகலாம்.

வேறு வழக்குகளில் எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டு இருந்தால் அந்த வழக்குகளில் இருந்து விடுதலை பெற்றிருந்தால் மட்டுமே உங்களுக்கு வேலை கிடைக்கும். 

பணி நியமனம் பெறுவதற்கு முன்பாக கடுமையான குற்ற வழக்குகளில் நீங்கள் சிக்கி இருந்தால் உங்களது வேலைக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். 

இது சம்பந்தமான உங்களது சந்தேகங்களுக்கு உடனடியாக ஒரு வழக்கறிஞரை அணுகி தகுந்த சட்ட ஆலோசனையை பெறுவது சிறந்தது.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!