Uncontested Dismissed என்று சொல்வதற்கான விளக்கம்?
uncontested dismissed (போட்டியின்றி தள்ளுபடி செய்யப்பட்டது) என்ற சொற்றொடரின் பொதுவான அர்த்தம் இங்கே உள்ளது தெரிந்துகொள்ளுங்கள்.
Uncontested (போட்டியின்றி) : நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் வழக்கை யாரும் எதிர்க்கவில்லை, அல்லது கட்சிகள் உடன்படவில்லை என்றால் uncontested என்று சொல்லப்படும்.
உதாரணமாக : விவாகரத்து வழக்கில், கணவன் மற்றும் மனைவி இருவரும் விவாகரத்து மற்றும் அதன் விதிமுறைகளை ஒப்புக் கொள்ளலாம் என்றால் அவர்கள் வழக்கில் எதிர்க்கவில்லை என்பது தான் அர்த்தம் இதை தான் வழக்கில் uncontested என்று குறிப்பிடபடுகிறது.
Dismissed (தள்ளுபடி செய்யப்பட்டது) : முழு விசாரணை அல்லது இறுதி தீர்ப்புக்கு செல்லாமல் வழக்கை முடித்து வைத்துள்ளது என்பதுதான் அர்த்தம்.
Uncontested Dismissed என்பதன் முழுமையான அர்த்தம் :
uncontested என்பதன் அர்த்தம் வழக்கிற்கு எந்த எதிர்ப்பும் இல்லை, அதனால் நீதிமன்றம் இந்த வழக்கை முடிக்க முடிவு செய்கிறது.
நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கில் வாதி மற்றும் பிரதிவாதி எந்த அக்கறையும் இல்லாமல் இருந்தால் இந்த வழக்கு நீதிமன்ற நேரத்தை வீணடிக்கிறது என்ற காரணத்திற்காகவும் யாரும் வாதிடாத காரணத்திற்காகவும் Uncontested Dismissed என வழக்கு முடித்து வைக்கப்படுகிறது.
எடுத்துக்காட்டு:
• ஒரு ஜோடி பரஸ்பர விவாகரத்துக்காக மனு தாக்கல் செய்கிறது, ஆனால் இறுதி விசாரணையில் கலந்து கொள்ளவில்லை. யாரும் அதை எதிர்க்கவில்லை (போட்டியின்றி), ஆனால் அவர்கள் நீதிமன்ற நடைமுறையைப் பின்பற்றத் தவறியதால், நீதிபதி அதை தள்ளுபடி செய்யலாம்.
ஒரு சிவில் வழக்கில், "Uncontested Dismissed" என்ற சொல் பொதுவாக பின்வருவனவற்றைக் குறிக்கிறது:
• வழக்கிற்கு எந்த எதிர்ப்பும் இல்லை வழக்கை நடத்துவதற்கு எந்த அக்கறையும் இல்லை என்பதால் நீதிமன்றம் இரு தரப்பினருக்கும் ஆதரவாக இல்லாமல் இறுதி முடிவுவில் வழக்கை தள்ளுபடி செய்தது.
• வழக்கைத் தாக்கல் செய்த நபர் (வாதி) நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை, தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்கவில்லை, அல்லது காலக்கெடுவைச் சந்திக்கத் தவறிவிட்டார் - எனவே மறு தரப்பினர் ஆட்சேபிக்கவோ பதிலளிக்கவோ இல்லை என்றாலும், நீதிபதி வழக்கைத் தள்ளுபடி செய்தார்.
• சில நேரங்களில், கட்சிகள் இந்த விஷயத்தை தனிப்பட்ட முறையில் தீர்த்துக் கொண்டு, பின்னர் வழக்கை தள்ளுபடி செய்ய நீதிமன்றத்தைக் கேட்கிறார்கள். எந்த வாதமும் இல்லை (போட்டியிடப்படாதது), அது "போட்டியிடப்படாதது" என்று தள்ளுபடி செய்யப்படலாம்.
• சட்ட அல்லது நடைமுறைச் சிக்கல் காரணமாக வழக்கு தள்ளுபடி செய்யப்படலாம் - எடுத்துக்காட்டாக, தவறான அதிகார வரம்பு, காணாமல் போன பிரமாணப் பத்திரங்கள் அல்லது முறையற்ற தகவல் மற்றும் மற்ற தரப்பினர் அதை எதிர்த்துப் போராடத் தோன்றவில்லை.
முக்கிய குறிப்பு:
வழக்கு போட்டியிடப்படாவிட்டாலும், நீதிமன்றம் தானாகவே வாதிக்கு ஆதரவாக தீர்ப்பை வழங்காது - சில நடைமுறைகள் மற்றும் ஆவணங்கள் இன்னும் முறையாக முடிக்கப்பட வேண்டும். இல்லையெனில், அது தள்ளுபடி செய்யப்படலாம்.
குடும்ப வழக்குகளில் "Uncontested Dismissed" என்ற சொல் பின்வருமாறு வழங்கப்படுகிறது :
குறிப்பாக : விவாகரத்து, குழந்தைக் காவல், பராமரிப்பு போன்றவை.
வழக்கை எதிர் தரப்பினர்கள் எதிர்க்கவில்லை என்றாலும் வழக்காடிகளுக்கு வழக்கில் அக்கறை இல்லை என்றாலும் தொழில் நுட்ப கோளாறு அதாவது அதிகார வரம்பு எல்லை தவறாக வழக்கை தாக்கல் செய்யப்பட்டு இருந்தாலும் சரியான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க தவறினாலும் வழக்கில் இருக்கும் படிநிலைகளில் விசாரணைக்கு வராமல் தவறினால் வழக்கில் எந்த எதிர்ப்பும் இல்லை என்பதால் Uncontested Dismissed என்று தீர்ப்பு வழங்கப்பட்டு வழக்கு முடித்து வைக்கப்படும்.
குடும்ப வழக்குகளில் Uncontested Dismissed தீர்ப்பு வழங்கப்படுவதற்கான எடுத்துக்காட்டுகள் :
1. பரஸ்பர ஒப்புதல் விவாகரத்து (இந்து திருமணச் சட்டத்தின் பிரிவு 13B) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கணவன் மற்றும் மனைவி பரஸ்பரமாக விவாகரத்துக்காக வழக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து ஆறுமாதகால காத்திருப்பு காலம் முடிந்து இரண்டாவது இறுதி விசாரணைக்கு நேரில் ஆஜராகவோ அல்லது வழக்கை திரும்பப் பெறவோ இல்லை வரவில்லை என்றால் வழக்கில் எந்த எதிர்ப்புமில்லை என்பதால் பரஸ்பர விவாகரத்து மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது.
2. பராமரிப்பு அல்லது குழந்தை பராமரிப்பு வழக்கில் வாதி வழக்கைத் தாக்கல் செய்கிறார் எதிர்தரப்பினர் ஆஜராகவில்லை அல்லது எதிர்க்கவில்லை என்றாலும் தீர்ப்பு வழங்கப்படும்.
வழக்கு விசாரணைக்கு மனுதாரர் ஆதாரங்களை வழங்கத் தவறினால், ஆஜராகவில்லை அல்லது வழக்கு நடைமுறையில் பிழைகளைச் செய்தால் போன்ற காரணங்களுக்காக நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்யலாம்.
குடும்ப நல வழக்குகளிலும் மேலே சிவில் வழக்கில் கூறப்பட்டது போன்ற நடைமுறையை தான் குடும்ப நல நீதிமன்றமும் கடைபிடிக்கிறது.
உங்களது வழக்கில் இதே போல சட்ட சிக்கல்கள் ஏற்படும் என கருதினால் ஒரு வழக்கறிஞரை அணுகி தகுந்த ஆலோசனை பெறுவது நல்லது.