சிவில் வழக்கிற்கு மேல்முறையீட்டு கால வாசம் எவ்வளவு என்பது தெரிவதற்கு முன்பாக சிவில் வழக்கு என்றால் என்பதை சுருக்கமாக பார்ப்போம்.
சிவில் வழக்கு என்றால்?
சிவில் வழக்கு என்பது அசையும் சொத்து, அசையா சொத்துக்கள், பணம், மற்றும் உங்களுடைய உரிமைகளை நிலைநாட்டுவதற்காக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளை சிவில் வழக்குகள் என்று சொல்வார்கள் இதை தமிழில் உரிமையியல் வழக்குகள் என்று சொல்லப்படுகிறது.
இந்தியாவில் சிவில் வழக்கில் மேல்முறையீடு தாக்கல் செய்வதற்கான கால வரம்பு அளவுகளை கால வரம்புச் சட்டத்தால் (Limitation Act 1963) நிர்வகிக்கப்படுகிறது.
மேல்முறையீடு செய்யப்படும் நீதிமன்றத்தைப் பொறுத்து இந்தச் சட்டம் குறிப்பிட்ட காலக்கெடுவை வழங்குகிறது.
சிவில் மேல்முறையீடுகளுக்கான வரம்பு காலங்கள் :
உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தல் கால அளவுகள் சிவில் நடைமுறைச் சட்டம், 1908 இன் கீழ் ஏதேனும் ஆணை அல்லது உத்தரவின் தேதியிலிருந்து 90 நாட்கள்.
வேறு நீதிமன்றங்களில் வழக்கின் தன்மையை பொறுத்து இந்த கால அவகாசம் மாறலாம் வழக்கின் ஆணையில் குறிப்பிட்ட காலம் குறிப்பிடப்பட்டிருந்தால் அந்த கால அவகாசத்திற்குள் வழக்கை மேல்முறையீடு செய்துவிடவேண்டும்.
எடுத்துக்காட்டாக : மாவட்ட நீதிமன்றகளில் வழக்குகள் மேல்முறையீடு செய்யப்பட்டால்.
சார்பு மற்றும் முனிசிப் நீதிமன்றத்திலிருந்து வழக்கை மேல்முறையீடு செய்வதற்கு ஆணை அல்லது உத்தரவு தேதியிலிருந்து 30 நாட்ககளுக்குள் மாவட்ட நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும்.அல்லது ஆணையில் குறிப்பிட்ட நாட்களுக்குள் மேல்முறையீடு செய்ய வேண்டும்.
கீழ் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது என்றால் உயர் நீதிமன்றத்திற்கு வழக்கை மேல்முறையீடு செய்தளுக்கான (உதாரணமாக, ஒற்றை நீதிபதி பெஞ்சிலிருந்து ஒரு டிவிஷன் பெஞ்சிற்கு): ஆணை அல்லது உத்தரவின் தேதியிலிருந்து 30 நாட்களில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும்.
நேரத்தைக் கணக்கிடுவதில் என்ன கணக்கிடப்படுகிறது?
வரம்புச் சட்டத்தின் பிரிவு 12 இன் கீழ், ஆணை அல்லது உத்தரவின் நகலைப் பெறுவதற்கு எடுக்கப்பட்ட நேரம் வரம்பு காலத்தைக் கணக்கிடும்போது விலக்கப்படுகிறது. மேலும், ஆணை அல்லது உத்தரவு அறிவிக்கப்படும் நாள் கணக்கிடப்படாது.
தீர்ப்பு ஆணையின் சான்றளிக்கப்பட்ட நகலைப் பெற நீங்கள் விண்ணப்பித்தால், அந்த நகலை தயாரித்து வழங்குவதற்கு எடுக்கப்பட்ட நேரம் வரம்பு காலத்திலிருந்து விலக்கப்படும்.
கால நீட்டிப்பு செய்து - தாமதத்தை மன்னிக்க முடியமா?
1. வரம்புச் சட்டத்தின் பிரிவு 5 ஆனது மேல்முறையீட்டாளர் தாமதத்திற்கு போதுமான காரணத்தை" நிரூபிக்க முடிந்தால், நீதிமன்றம் குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகும் தாமதமான மேல்முறையீடு அல்லது விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ள அனுமதிக்கிறது.
2. இருப்பினும், இந்த நீட்டிப்பு விருப்பத்திற்குரியது மற்றும் பொதுவாக விதிவிலக்கான சூழ்நிலைகளில் மட்டுமே வழங்கப்படுகிறது, தாமதம் சிறியதாக இருந்தால் (அதாவது, "குறுகிய தாமதம்"), மேல்முறையீட்டாளரின் நடத்தை நேர்மையாக இருந்திருந்தால், மேலும் தாமதம் எதிர் தரப்பினருக்கு பாதகத்தை ஏற்படுத்தவில்லை என்றால் அந்த தாமதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது.
வரம்புச் சட்டத்தின் பிரிவு 5 இன் கீழ், "போதுமான காரணம்" காட்டப்பட்டால் தாமதத்தை மன்னிக்க நீதிமன்றத்திற்கு உரிமை உண்டு.
முடிவுரை சுருக்கமாக :
இந்தியாவில், ஒரு சிவில் வழக்கில் மேல்முறையீடு செய்வதற்கான கால அவகாசம், மேல்முறையீட்டின் வகை மற்றும் அது தாக்கல் செய்யப்படும் நீதிமன்றத்தைப் பொறுத்தது. வரம்பு காலங்கள் வரம்பு சட்டம், 1963 இல் வகுக்கப்பட்டுள்ளன குறிப்பாக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தல் (ஒரு துணை நீதிமன்றத்தின் ஆணை அல்லது உத்தரவிலிருந்து) ஆணை அல்லது உத்தரவின் தேதியிலிருந்து 90 நாட்கள்.
வேறு எந்த நீதிமன்றத்திலும் (எடுத்துக்காட்டாக, கீழ் நீதிமன்ற ஆணையிலிருந்து மாவட்ட நீதிமன்றம்) ஆணை அல்லது உத்தரவின் தேதியிலிருந்து 30 நாட்கள் இதில் மாற்றம் இருக்கலாம்.