முன்னுரை :
ஒவ்வொரு வழக்கும் அதனை விசாரணை செய்வதற்கு அதிகார வரம்புள்ள ஒரு கீழமை நீதிமன்றத்தில் தொடரப்பட வேண்டும் , என பிரிவு 15 கூறுகிறது .
ஆகவே வழக்கைத் தொடர்வதற்கு முன்னர் , அது எந்த நீதிமன்றத்தில் தொடரப்பட வேண்டும் என்பதை நிர்ணயித்துக் கொள்ளல் சாலச் சிறந்தது.
இந்தச் சட்டத் தொகுப்பின் 16 , 17 , 18 , 19 , 20 ஆகிய பிரிவுகளில் , வழக்கு தொடர வேண்டிய இடம் பற்றிய விவரங்கள் கூறப்பட்டுள்ளன.
அதன்படி தொடரப்படும் வழக்கு எந்த இடத்தில் உள்ள நீதிமன்றத்தில் என்று கணிப்பதற்கு நீதிமன்றங்களின் நிதிநிலை அதிகார வரம்பு , வட்டார அதிகாரவரம்பு , அதனோடு வழக்கு அசையாச் சொத்தைப் பற்றியதாக இருந்தால் , அல்லது மற்றவருக்குச் செய்த தீங்கிற்காக நஷ்டஈடு கோரும் வழக்காயிருந்தால் , அல்லது அசையும் பொருளைப் பற்றியதாயிருந்தால் , அல்லது அதற்கு ஆன சேதம் பற்றிய வழக்காயிருந்தால் அவைகளின் தன்மையைப் பொறுத்து வழக்காடும் நீதிமன்றத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
1. அசையாச் சொத்துக்கள் ( Immovable Property ) குறித்த வழக்குகள் :
நிதிநிலை ' மற்றும் வட்டார அதிகாரவரம்புக்கு உட்பட்டு அசையாச் சொத்துக்களைப் பற்றிய வழக்குகளை அந்தச் சொத்துக்கள் இருக்கும் இடத்தில் எந்த நீதிமன்றத்திற்கு வட்டார , நிதிநிலை அதிகாரவரம்பு இருக்கின்றதோ, அந்த நீதிமன்றத்தில்தான் வழக்கைத் தொடர முடியும் என பிரிவு 16 கூறுகிறது .
அதன் உட்பிரிவுகள் பின்வருமாறு கூறுகிறது .
a ) அசையாச் சொத்தை திரும்பப் பெறவும் ( recovery of immovable property ) , திரும்பப் பெறும்போது , வாடகைப் பாக்கியையும் , சொத்தின் இலாபத்தோடு பெறுதலுக்கான வழக்குகள்.
b ) அசையாச் சொத்தை பாகப்பிரிவினை ( Partition ) செய்யக் கோரும் வழக்குகள்.
c ) அசையாச் சொத்தை அடைமானம் ( Mortgage ) வைத்தது சம்பந்தமான , அந்த சொத்தை மீட்பதற்கான , விற்பதற்கான , அடைமான மீட்புரிமையைத் தடை செய்வதற்கான வழக்குகள்.
d ) அசையாச் சொத்தின் மீதுள்ள உரிமையோ ( right ) அல்லது நலனோ ( interest ) பற்றிய வழக்குகள்.
e ) அசையாச் சொத்திற்கு இழைக்கப்பட்ட தீங்கிற்கு ( torts ) நஷ்டஈடு கோரி தொடரப்படும் வழக்குகள்.
மேற்படி வழக்குகள் யாவும் , அந்தச் சொத்து இருக்கும் இடத்தின் மீது நிதிநிலை வட்டார அதிகாரவரம்பு செலுத்தும் நீதிமன்றங்களில்தான் தொடரப்பட வேண்டும் . இரண்டு இடங்களில் வழக்கு தொடரலாம் என்றிருந்தால் வழக்குத் தொடருகின்ற இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது வாதியின் விருப்பத்தைப் பொறுத்தது . ஒருவரின் அசையாச் சொத்துக்கள் பல்வேறு இடங்களில் இருக்குமானால் அதைப் பற்றிய வழக்கு , அச்சொத்துக்கு ஏற்பட்ட தீங்கிற்கு இழப்பீடு கோரி தொடுக்கப்படும் வழக்குப் போன்றது . அதனால் , அந்த சொத்துக்கள் இருக்கும் ஏதாவது ஓர் இடத்தில் தொடரலாம் . ஆனால் வழக்குச் சம்பந்தப்பட்ட முழுக்காரணமும் , அந்த நீதிமன்ற நிதிநிலை அதிகாரவரம்பிற்கு உட்பட்டதாக இருத்தல் வேண்டும் . இது 17 ஆவது பிரிவில் கூறப்பட்டிருக்கிறது .
இந்த சட்டத் தொகுப்பில் 18 ஆம் பிரிவில் , ஓர் அசையாச் சொத்தை அது எந்த வட்டார அதிகாரவரம்புக்குட்பட்டது என்று நிர்ணயிக்க முடியாதிருந்தால் , ஏதாவது ஒரு நீதிமன்றம் , அவ்வாறு நிர்ணயிக்க முடியாதபடி சந்தேகம் இருப்பதற்கான காரணத்தைக் குறித்துக் கொண்டு அந்த வழக்கை விசாரித்து முடிவெடுக்கலாம்.
II . நபர்களுக்கும் , அசையும் சொத்துக்களுக்கும் இழைக்கப்படும் தீங்குகள் குறித்த வழக்குகள் ( Suits for torts to persons or movable property ) :
யாராவது ஒரு நபருக்கோ அல்லது அசையும் சொத்து ஒன்றுக்கோ தீங்கு இழைக்கப்பட்டால் அதற்கு நஷ்டஈடு கோரி எந்த இடத்தில் வழக்குத் தொடர்வது ? அவ்வழக்கினை அந்த தீங்கு இழைக்கப்பட்ட இடத்திலோ அல்லது பிரதிவாதி வாழ்கின்ற அல்லது தொழில் செய்கின்ற அல்லது பணிபுரிகின்ற இடத்திலோ தொடரலாம் . மேற்படி இடங்களில் எந்த இடத்தில் வழக்குத் தொடர்வது என்பது வாதியின் விருப்பத்தைப் பொருத்தது . இவ்வாறு பிரிவு 19 கூறுகிறது . பண வழக்குகளும் ( Money suits ) இப்பிரிவிற்குட்பட்டவையே
எடுத்துக்காட்டுகள்:
( 1 ) இராமன் டில்லியில் வசிக்கின்றார் . அவர் கிருஷ்ணன் என்பவரை கல்கத்தாவில் அடித்துவிடுகிறார் . இதற்கான நஷ்டஈடு கோரும் வழக்கை கிருஷ்ணன் என்பவர் டில்லியிலோ , கல்கத்தாவிலோ தொடரலாம்.
( 2 ) ராஜா என்பவர் டில்லியில் வசித்து வருகிறார் . அவர் சுரேஷ் என்பவரைப் பற்றி மானபங்கமாக எழுதிக் கல்கத்தாவில் பிரசுரிக்கின்றார். சுரேஷ் கல்கத்தாவிலோ , டில்லியிலோ நஷ்டஈடு கோரி வழக்குத் தொடரலாம் .
( 3 ) கந்தன் என்பவர் டில்லியில் வசித்து வருகிறார் . அவர் சுந்தர் என்பவரைப் பற்றி மானபங்கமாக எழுதி அதை கல்கத்தாவில் செய்தித்தாளில் பிரசுரிக்கின்றார் . அச்செய்தித்தாள் பம்பாய் , சென்னை மற்றும் ராய்ப்பூரில் விநியோகிக்கப்படுகிறது . இங்கு சுந்தர் , கந்தனுக்கு எதிராக கல்கத்தாவில் அல்லது டில்லியில் அல்லது பம்பாயில் அல்லது சென்னையில் அல்லது ராய்ப்பூரில் நஷ்டஈடு கோரி வழக்கிடலாம் .
III . ஏனைய வழக்குகள் ( Suits for other kinds ) :
ஏனை வழக்குகளை வழக்குக்கான காரணம் நடந்த இடத்திலோ , பிரதிவாதி வாழ்கின்ற இடத்திலோ , அவர் தொழில் புரியும் இடத்திலோ சம்பளத்திற்கு பணிபுரியும் இடத்திலோ தொடரலாம் என்பதாக பிரிவு 20 ல் கூறப்பட்டிருக்கிறது .
பல பிரதிவாதிகள் இருக்கும் சந்தர்ப்பத்தில் எவரேனும் ஒரு பிரதிவாதி வாழும் , தொழில் புரியும் , அல்லது சம்பளத்திற்கு பணிபுரியும் இடத்தில் , வழக்குத் தொடரலாம் , என்பதாக பிரிவு 20 ( a ) கூறுகிறது . பல பிரதிவாதிகள் இருக்கும் தருணத்தில் , ஒரு பிரதிவாதி வாழும் , தொழில் புரியும் அல்லது சம்பளத்திற்குப் பணிபுரியும் இடத்தில் வழக்கைத் தொடரும்போது மற்ற பிரதிவாதிகளின் சம்மதம் தேவை . அல்லது வழக்குத் தொடரும் நீதிமன்றம் , வேறு இடங்களில் இருக்கும் பிரதிவாதிகளையும் இந்த வழக்கில் சேர்ப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என பிரிவு 20 ( 6 ) கூறுகிறது . வழக்குக்கான காரணத்தின் ஒரு பகுதி நடந்த இடத்திலும் வழக்குத் தொடரலாம் என பிரிவு 20 ( c ) கூறுகிறது .
விளக்கம் :
கூட்டு நிறுவனம் ( Corporation ) ஒன்றின் மீதான வழக்குகளை இந்தியாவில் அதனுடைய பிரதான அலுவலகம் இருக்கும் இடத்திலும் . வழக்குக்கான காரணம் நடந்த இடத்திலும் , அந்த கூட்டு நிறுவனத்தின் துணை அலுவலகம் இருக்கும் இடத்திலும் தொடரலாம்.
எடுத்துக்காட்டுகள் ( Illustrations ) :
முதலாவதாக முருகன் என்ற வியாபாரி கல்கத்தாவிலிருக்கின்றார் . ரத்தினம் என்பவர் டில்லியில் வியாபாரம் செய்கின்றார் . ரத்தினம் தன்னுடைய பதிலாளைக் ( Agent ) கொண்டு முருகனின் பொருள்களை வாங்குகிறார் . அதனோடு ரத்தினம் முருகனை , தன்னால் வாங்கப்பட்ட பொருளைக் கிழக்குப் பிராந்திய ரயிலில் ஒப்படைக்க கேட்டுக்கொண்டார் . அதற்கு இணங்க முருகன் கல்கத்தாவில் குறிப்பிட்ட ரயில் துறையில் கொடுக்கின்றார் . இது தொடர்பான வழக்கை முருகன் டில்லியிலோ , கல்கத்தாவிலோ தொடரலாம்.
இரண்டாவதாக'.
' A ' என்பவர் சிம்லாவில் வசிக்கிறார் . ' C ' என்பவர் கல்கத்தாவிலும் ' E ' என்பவர் டில்லியிலும் வசிக்கின்றார்கள் . ' A ' , ' C ' , ' E ' என்ற மூவரும் காசியில் இருக்க ' C ' யும் ' E ' யும் சேர்ந்து கடனுறுதிச் சீட்டு ( Promissory Note ) கேட்ட மாத்திரத்தில் பணம் திரும்பக் கொடுக்கும் படியாக ' A ' வுக்கு எழுதிக் கொடுக்கின்றனர் . சம்பந்தமாகப் பணம் திரும்பப் பெற ' A ' என்பவர் ' C. ' E ' என்பவர்கள் கடனுறுதிச் சீட்டு மீது காசியில் வழக்குத் தொடரலாம் . ஏனென்றால் வழக்குக்கான காரணம் அங்கு எழுந்துள்ளது . மேலும் ' C ' . ' E ' பேரில் கல்கத்தாவிலும் வழக்குத் தொடரலாம் . அதுமட்டுமன்றி டில்லியிலும் வழக்குத் தொடரலாம் . ஏனென்றால் ஏனென்றால் அங்கு ' C ' வசிக்கிறார் . அங்கு ' E ’ வசிக்கின்றார் . தொடர்ந்து அந்த இடத்தில் வசிக்காத பிரதிவாதிகள் அதனை கல்கத்தாவிலோ டில்லியிலோ வழக்குத் எதிர்த்தால் , குறிப்பிட்ட நீதிமன்றத்தின் அனுமதியோடு வழக்கைத் தடை இன்றி நடத்தலாம் .
இந்த பிரிவின் அடிப்படை நோக்கம் என்னவென்றால் பிரதிவாதி அளவுக்கு மிஞ்சிய சிரமமில்லாமல் வழக்கில் எதிர் வழக்காட வகை செய்ய வேண்டுமென்பதாகும் .
Union of India v . Ladulal Jain '
இந்த வழக்கில் , வெளிநாட்டு நீதிமன்றத் தீர்ப்பின் பேரில் ( Foreign Judgment ) தாக்கல் செய்யப்படும் வழக்கும் பிரதிவாதி இருக்கும் இடத்தில் அல்லது தொழில் , பணி செய்யும் இடத்தில் உள்ள நீதிமன்றத்தில்தான் தாக்கல் செய்யப்பட வேண்டும் , எனக் கூறப்பட்டது .
வரைபட விளக்கம் :
வழக்கு தொடர வேண்டிய இடத்தை நிர்ணயிப்பதற்கான வழக்குகளின் வகைப்பாடு
அசையாச் சொத்துகள் குறித்த வழக்குகள்
ஏனைய வழக்குகள்
நபர்களுக்கும் , அசையும் சொத்துக்களுக்கும் இழைக்கப்படும் தீங்குகள் குறித்த வழக்குகள்.
உரிமையியல் நடைமுறை சட்டப்படி வழக்குரை-Plaint உருவாக்குவது எப்படி?
உரிமையியல் நடைமுறை சட்டத்தின் மிக முக்கியமான ஒரு பகுதி தான் வழக்குரை(plaint) இதன் எப்படி தயார் செய்வது என்பதை இந்த பகுதியில் தெரிந்துகொள்ள போகிறோம் மேலும் கீழ்கண்ட கேள்விக்கான பதிலை தெரிந்துகொள்ள்ம் போது விபரமாக விளங்கும்.
What is a plaint ? Explain its important contents . வழக்குரை என்றால் என்ன ? அதன் முக்கிய விபரங்களை விளக்குக.
Discuss the requirements of a Plaint . ஒரு வழக்குரைக்கு தேவையானவைகளை விவாதிக்க .
முன்னுரை :
வழக்குரை ( Plaint ) கொடுப்பதன் மூலம் ஒரு உரிமையியல் வழக்கு தோற்றுவிக்கப்படுகிறது ( ஆரம்பிக்கப்படுகிறது ) . [ பிரிவு 26 ( 1 ) ] . வழக்கை தோற்றுவிப்பதிலிருந்து அதை எப்படி நடத்துவது என்ற நடைமுறையை வகுக்கும் கோட்பாடுகள் 26 முதல் 35 - A வரையுள்ள பிரிவுகளில் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் , வழக்கை நடத்தும் முறைப் பற்றிய விதிகள் 4 வது மற்றும் 7 வது கட்டளைகளிலும் ( Orders IV and VII ) அதன் கீழ் உள்ள விதிகளிலும் ( Rules ) உள்ளன .
ஒரு வழக்குரை எவ்வாறு இருக்க வேண்டும் ?
வழக்குரை என்பது எவ்வாறு இருக்க வேண்டும் என்று ஒரு வரைமுறை உண்டு . ஒரு வழக்குரை 7 வது கட்டளையில் உள்ள 1 முதல் 6 வரையுள்ள விதிகளின்படி ( Order VII , Rules 1 to 6 ) தயார் செய்யப்பட்டிருத்தல் வேண்டும் . முன்னதாக கட்டளை IV விதி 1 ( 1 ) -ன் படி வழக்குரையை ( இரட்டைப்படிகளில் ( in duplicate ) ] 2 நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் . இவ்வழக்குரை , பின்வரும் விபரங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும்.
1 ) எந்த நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படுகின்றதோ முதலில் அந்நீதிமன்றத்தின் பெயர் இடம் பெறுதல் வேண்டும் . அடுத்து வழக்கின் எண் குறிப்பிடப்படல் வேண்டும் . எடுத்துக்காட்டாக , ஒரு வழக்கு 2003 - ஆம் ஆண்டு தொடரப்பட்டு அதன் அசல் வழக்கு எண் . 967 ஆக இருந்தால் , அது அசல் வழக்கு எண் . 967/2003 என்று குறிப்பிடப் பட்டிருக்கும் . ( O.S. எண் 967/2003 ) . இதற்குக் காரணம் , ஒவ்வொரு வழக்கிற்கும் வரிசைப்படி , எண் வழங்கப்படுகிறது . அந்த எண் ஒவ்வொரு ஆண்டும் அதற்கென்று உள்ள ஒரு வழக்குப் பதிவுப் புத்தகத்தில் பதியப்பட்டு , வாதி , பிரதிவாதிகளின் பெயர்களோடு , என்ன காரணத்திற்காக வழக்குப் போடப்பட்டிருக்கிறது என்ற சிறு குறிப்பும் அதில் இருக்கும் . இதன் பிறகு முதலில் வாதியின் பெயரையும் , அதற்கு நேரே ' வாதி ' ( Plaintiff ) என்றும் குறிக்க வேண்டும் . அதற்குக் கீழ் ' எதிராக ’ ( Versus ) என்றும் எழுத வேண்டும் . அடுத்துப் பிரதிவாதியின் பெயர் எழுதி அதற்கு நேரே ' பிரதிவாதி ' ( Defendant ) என்று குறிக்க வேண்டும் . அடுத்தாற்போல் எந்த சட்டப்பிரிவின் கீழ் வழக்குரை தாக்கல் செய்யப்படுகின்றது என்பதை குறிக்க வேண்டும் . அதாவது வழக்குரையானது , உரிமையியல் நடைமுறைச் சட்டத்தின் கட்டளை 7 , விதி 1 முதல் 6 ன் கீழ் ( Order VII , Rules 1 to 6 ) தாக்கல் செய்யப்பட்டது என்று குறிக்க வேண்டும் . ( Plaint filed under Order Vll Rules 1 to 6 of C.P.C. )
2 ) மேற்குறிப்பிட்ட சட்டக் காரணக் குறிப்பு ( Cause title ) முடிந்து வழக்குரைப் பகுதி தொடங்கும் முதல் கட்டமாக வாதியின் பெயர் அல்லது மேலே குறிப்பிட்ட வாதி என்று எழுதி அவருடைய தந்தையின் பெயர் , வயது , அவர் வசிக்கும் இடம் முதலிய விவரக் குறிப்புகளைக் கொடுக்க வேண்டும் . ஏனென்றால் , நீதிமன்றத்திலிருந்து வாதிக்கு ஏதாவது அறிவிப்புக் கொடுக்க வேண்டுமானால் இந்த விளக்கக் குறிப்பு மிகவும் இன்றியமையாததாகிறது.
3 ) இவ்வாறே , அடுத்த பத்தியில் பிரதிவாதியின் பெயர் அல்லது மேலே குறிப்பிட்ட பிரதிவாதி என்று தொடங்கி , அவருடைய தந்தையின் பெயர் ( தெரிந்திருந்தால் அதைக் ) குறிப்பிட வேண்டும் . திருமணமான பெண்ணாக இருந்தால் அவரது கணவன் பெயரைக் குறித்து , சுமாரான வயது , வசிக்கும் இடம் ஆகியவற்றைக் கூறி , நீதிமன்ற அறிவிப்பு அல்லது அழைப்பாணை அனுப்புவதற்கு மேற்குறிப்பிட்ட முகவரி என்பதாகக் குறிக்க வேண்டும் .
4 ) வாதியோ , பிரதிவாதியோ இளவராக ( Minor ) இருப்பின் , அல்லது புத்தி சுவாதீனமற்றவராக இருப்பின் , அது பற்றிய குறிப்பும் , அதில் இளவரின் சுமாரான வயது என்னவென்ற குறிப்பும் , அவருக்காக வழக்காடும் பாதுகாப்பாளர் ( Guardian ) பெயரும் இடம் பெறுதல் வேண்டும் . காரணகாரியங்களை
5 ) அடுத்தபடியாக வழக்குக்கான பத்திபத்தியாக பிரித்து எழுதி , வழக்கிற்கான காரணம் ( Cause of action ) எப்பொழுது எழுந்தது என்று குறிப்பிட வேண்டியது மிகவும் முக்கியமானதாகும் . ஏனெனில் , வழக்குகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் தோற்றுவிக்கப்பட வேண்டும் என்று இந்திய காலவரையரைச் சட்டம் ( Indian Limitation Act , 1963 ) கூறுகிறது . அதன்படி அந்தக் காலத்திற்குள் வழக்கிடப்பட வேண்டும் .
6 ) அதற்குப் பிறகு , வழக்குத் தொடர்ந்த நீதிமன்றத்திற்கு நிதிநிலை அதிகாரவரம்பும் , வட்டார அதிகாரவரம்பும் உண்டு என்று காண்பிப்பதற்கான விளம்புகை இருக்க வேண்டும் .
7 ) இதை அடுத்து , வழக்கின் நிவாரணம் பற்றிய நிதிநிலைக் குறிப்பும் , நிவாரணம் கோரப்பட்ட அந்தத் தொகைக்காகக் கட்டியிருக்கின்ற நீதிமன்றக் கட்டணம் ( Court fees ) பற்றிய குறிப்பும் இருத்தல் வேண்டும் .
8 ) வழக்குரையின் இறுதிக்கட்டமாக , வாதி வழக்கின் வாயிலாக கோரும் நிவாரணங்கள் குறிக்கப்பட்டிருக்க வேண்டும் .
9 ) பிறகு இடத்தின் பெயர் குறிப்பிட்டு வாதி கையெழுத்திட்டு , எந்த நாள் , மாதம் , ஆண்டு என்ற குறிப்பும் இருத்தல் வேண்டும் .
10 ) அடுத்தபடியாக சரிபார்த்தல் ( Verification ) பத்தியைக் குறிக்க வேண்டும் . அதன்படி மேற்குறிப்பிட்ட வழக்குரையில் கூறப்பட்டுள்ள வாதுரைகள் ( Pleadings ) எல்லாம் தனக்குத் தெரிந்தவரை உண்மை என்று மொழிந்து அதனடியில் வாதி கையெழுத்திட வேண்டும் . [ மேலும் இவ்வாறு சரிபார்ப்பவர் , வழக்குரையில் கண்டுள்ள வாதுரைகளுக்கு ஆதரவாக ஆணையுறுதிப் பத்திரம் ( affidavit ) ஒன்றையும் வழங்க வேண்டும் ] .
11 ) வழக்கு , அசையாச் சொத்துப் பற்றியதாக இருந்தால் , அதன் விவரம் குறிக்க வேண்டும் . சொத்து உள்ள இடம் , சொத்தின் நாற்புற செக்குபந்தி , சர்வே நெம்பர் போன்றவற்றை சொத்து விபரம் ( Schedule of property ) எனத் தலைப்பிட்டு , அதனை ஒரு பத்தியாக கூறி , அதனடியில் வாதி கையெழுத்திட வேண்டும் .
12 ) சொத்தின் மூல ஆவணங்கள் ஏதேனும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டியிருந்தால் , அதனை ' ஆவணங்களின் பட்டியல் ' ( List of Documents ) என்ற தலைப்பின் கீழ் அடுத்த பத்தியில் குறிப்பிட வேண்டும்.
இந்த முறைப்படி தயார் செய்யப்பட்ட வழக்குரையை நீதிமன்ற அலுவல் நேரத்தில் தாக்கல் செய்தல் வேண்டும் . இந்த வழக்குரையுடன் , நீதிமன்றக் கட்டணம் , பிரதிவாதிக்கு அனுப்ப வேண்டிய அறிவிப்பு , அழைப்பாணைக்கான ( Summons ) கட்டணம் கட்டியிருக்க வேண்டும் . ( இந்த அழைப்பாணையுடன் , எத்தனை பிரதிவாதிகள் உள்ளனரோ , அத்தனை பிரதிவாதிகளுக்கும் சார்பு செய்வதற்கென வழக்குரையின் நகல்கள் கொடுக்கப்பட வேண்டும் ) 4 . அவ்விதம் வழக்குரை எல்லா வகையிலும் , சரியாக இருந்தால் அதற்கு வரிசைப்படி ஓர் எண் வழங்கப்பட்டு , அந்த வழக்கின் எண்ணும் , அது பற்றிய ஒரு சிறு குறிப்பும் , அந்த ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் அடங்கிய பதிவேட்டில் பின்பு , பிரதிவாதிக்கு அழைப்பாணை அவருடைய கருத்துக்களை எழுத்து மூலமாகத் தர வேண்டும் . பிறகு வழக்குரையில் குறிப்பிடப்பட்டுள்ள காரண காரியங்கள் பற்றிய அனுப்பப்பட்டு , ஒரு குறிப்பிட்ட நாளில் பிரதிவாதி நீதிமன்றம் வந்து பதிவு செய்யப்படும் . வழக்கு விசாரணை தொடங்குகின்றது.
ஒரு வழக்கு நீதிமன்றத்தில் தொடரப்பட வேண்டியிருந்து , அது தவறுதலாக மற்றொரு நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்தால் , நீதிமன்றம் வேறு அவ்வழக்குரையை திருப்பி அனுப்பிவிடும் ( Return ) . அவ்வாறு திருப்பி காரணங்களுக்காகவும் திருப்பி அனுப்பப்படலாம் . அனுப்பப்படும் பொழுது , அதற்கான காரணத்தை நீதிபதி குறிப்பிட வேண்டும்.
13. Under what circumstances a plaint can be returned and state the requirements to be complied with by the plaintiff once the court expresses the decision to return . ( எந்த சூழ்நிலைகளில் வழக்குரையானது திருப்பி அனுப்பப்படலாம் ? அவ்வாறு நீதிமன்றம் வழக்குரையை திருப்ப இருக்கும் முடிவை தெரிவிக்கின்ற பொழுது வாதி கடைப்பிடிக்க வேண்டிய முறைகள் யாவை ?
வழக்குரையை திருப்புதல் எப்பொழுது ? Order VII Rule 10 :
வழக்குரையை திருப்பி அனுப்புவது குறித்து 7 வது கட்டளையின் 10 - வது விதி ( Order VII , Rule 10 ) பின்வருமாறு கூறுகிறது . அதன்படி , ஒரு நீதிமன்றத்திற்கு ஒரு வழக்கை விசாரிக்க நிதிநிலை அதிகாரவரம்போ ( Pecuniary jurisdiction ) அல்லது வட்டார அதிகாரவரம்போ ( Territorial ) இல்லையானால் , அவ்வழக்கு சம்பந்தப்பட்ட வழக்குரையை தக்க அதிகார வரம்புடைய நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் பொருட்டு அந்நீதிமன்றம் திருப்பிக் கொடுத்துவிடும் . இதை அந்நீதிமன்றம் அவ்வழக்கின் எந்நிலையிலும் செய்யலாம் . இவ்வாறு திருப்பும்பொழுது , அந்நீதிமன்ற நீதிபதி , அதற்கான காரணத்தை சுருக்கமாகக் கூறி தன்னுடைய கையொப்பத்தை இட வேண்டும்.
வழக்குரையை திருப்புவது குறித்து தன்னுடைய கருத்தை தெரிவித்தவுடன் வாதி கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை [ Order VII Rule 10 - A ] :
இது குறித்து கட்டளை VII விதி 10 - A கூறுகிறது . அதன்படி , ( 1 ) ஏதேனும் வழக்கில் , பிரதிவாதி ஆஜராகிய பின்னர் , வாதியின் வழக்குரை திருப்பப்பட வேண்டும் என்று தொடர்புடைய நீதிமன்றம் கருதினால் , அவ்வாறு செய்வதற்கு முன்னர் அது தன்னுடைய முடிவை வாதிக்கு தெரியப்படுத்த வேண்டும்.
( 2 ) இதனடிப்படையில் பின்வரும் விபரங்களை உள்ளடக்கி வாதியானவர் ஒரு மனு தாக்கல் செய்ய வேண்டும்.
அவை
( a ) வழக்குரை திருப்பப்பட்ட பின்னர் , தான் எந்நீதிமன்றத்தில் அவ்வழக்கை தாக்கல் செய்ய உத்தேசித்துள்ளாரோ , அந்நீதிமன்றத்தின் பெயரை குறிப்பிட வேண்டும்.
( b ) அந்நீதிமன்றத்தில் இரு தரப்பினர்களும் ஒரு குறிப்பிட்ட தேதியில் ஆஜராக வேண்டும் என்று உத்திரவிடுமாறு விண்ணப்பிக்க வேண்டும்.
( c ) அவ்வாறு ஆஜராக வேண்டிய தேதி குறித்த அறிவிப்பை தனக்கும் பிரதிவாதிக்கும் கொடுக்க வேண்டும் என்றும் விண்ணப்பிக்க வேண்டும்.
( 3 ) வழக்குரையை திருப்பக் கருதியுள்ள நீதிமன்றமானது மேற்கண்டவாறான மனுவை வாதியிடமிருந்து பெற்றுக்கொண்டவுடன்
( a ) எந்நீதிமன்றத்தில் அவ்வழக்குரை தாக்கல் செய்யப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளதோ அந்நீதிமன்றத்தில் இருதரப்பினரையும் ஆஜராகும்படி உத்தரவிட்டு அதற்கென ஒரு தேதியை நிர்ணயிக்க வேண்டும்.
( b ) அத்தேதி குறித்த அறிவிப்பை இரு தரப்பினர்களுக்கும் தர வேண்டும்.
( 4 ) மேற்கண்ட அறிவிப்பு இருதரப்பினர்களுக்கும் கொடுக்கப்பட்ட பின்னர் ,
( a ) வழக்குரையை திருப்பக் கருதியுள்ள நீதிமன்றமானது , மீண்டும் பிரதிவாதிக்கு தனியாக அவ்வழக்கு குறித்து அழைப்பாணை ( Summons ) அனுப்ப உத்தரவிட வேண்டிய அவசியமில்லை.
( b ) மேற்படி அறிவிப்பே போதுமானது . அந்த தேதியில் பிரதிவாதியானவர் வழக்குரை திரும்ப தாக்கல் செய்யப்பட உத்தேசிக்கப் பட்டுள்ள நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியது.
( 5 ) மேற்கண்டவாறு உள்விதி 2 - ல் கூறியபடி வாதியானவர் மனுச் செய்து அந்நீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்டுவிட்டால் , பின்னர் அவ்வழக்கை திருப்பி அனுப்பும் பொருட்டு இடப்பட்ட உத்தரவை எதிர்த்து எவ்வித மேல்முறையீட்டையும் வாதி செய்ய இயலாது .
14.a ) Under what circumstances can a plaint be rejected ? ( எந்த சூழ்நிலைகளின் கீழ் ஒரு வழக்குரை நிராகரிக்கப்படலாம் ? b ) What facts should a plaint contain in a suit for damages for breach of contract ? ( ஒப்பந்த மீறுகைக்கான நஷ்ட ஈடு கோரி போடப்படும் ஒரு வழக்கின் வாதுரையில் என்ன பொருண்மைகள் குறிப்பிடப்பட வேண்டும் ? )
பின்வரும் சூழ்நிலைகளில் ஒரு வழக்குரை நிராகரிக்கப்படும் ( கட்டளை 7 , விதி 11 ) [ Order VIl Rule 11 ] :
( a ) வழக்குரை வழக்குக்கான காரணத்தை வெளியிடாமலிருந்தாலும்.
( b ) வழக்கின் நிவாரணத்தைக் குறைத்து மதிப்பிட்டிருப்பது காணப்பட்டுச் சரியான மதிப்பீடு கொடுக்கும்படி கேட்டும் , குறிப்பிட்ட கால வரையறையில் அவ்விதம் வாதி செய்யத் தவறினாலும்.
( c ) அதுபோல சரியான மதிப்பீடு கொடுத்த போதிலும் அந்த மதிப்பீட்டிற்கான நீதிமன்றக் கட்டணம் ( Court fees ) கட்டவில்லையானால் , அல்லது குறைவான நீதிமன்றக் கட்டணத்தைச் சரிகட்ட அவகாசம் கொடுத்தும் அதன்படி செய்யவில்லையானாலும்.
( d ) குறிப்பிட்ட வழக்கு ஏதாவது ஒரு சட்டப்படி தடை செய்யப்பட்டிருந்தால்.
( e ) [ வழக்குரை இரட்டைப் படிகளில் ( in duplicate ) சமர்ப்பிக்கப்பட வில்லையானால் .
( f ) [ பிரதிவாதிகளுக்கு சார்பு செய்யும் பொருட்டு வழக்குரையின் நகல்கள் , வழக்குரையுடன் கொடுக்கப்படவில்லையானால் அவ்வழக்குரை நிராகரிக்கப்படும் .
அவ்வாறு வழக்குரை நிராகரிக்கப்படும்போது நீதிபதி அதற்கு உண்டான காரணங்களைக் குறித்திடல் வேண்டும் . நிராகரிக்கப்பட்டதால் மட்டும் , வாதி அதே காரண காரியத்தின் நிமித்தம் அவ்விதம் வேறு வழக்குரை தாக்கல் செய்யத் தடையேதுமில்லை.
b ) ஒப்பந்த மீறுகைக்கான வழக்கு :

வினா எண் 12 - க்கான விடையில் கூறப்பட்டுள்ள பத்திகளில் வழக்கிற்கான காரணம் என்ற பத்தியில் ஒப்பந்தம் எப்பொழுது ஏற்பட்டது , அதன் பின் மீறுகை எப்பொழுது நடந்தது என்று குறிப்பிட வேண்டும் . இறுதியான நிவாரணம் கோரும் பத்தியில் , ஒப்பந்த மீறுகைக்கான நஷ்டஈடு கோருவதையும் மற்றும் வழக்கின் செலவுத் தொகைகளை அளிக்குமாறு கோருவதையும் குறிப்பிட வேண்டும் . முதல் மூன்று அல்லது நான்கு பத்திகளில் ஒப்பந்தம் எதனடிப்படையில் எழுந்தது என்பதையும் , காலம்தான் ஒப்பந்தத்தின் அடிப்படைக் கூறு ( time is essence of contract ) என்பதையும் குறிப்பிட வேண்டும் . ( மேற்படி விபரங்களை வினா எண் 12 - ல் ஆங்காங்கே பொருத்தி விடையை முழுமை செய்க )
குறிப்பு:
1. முன்பு பிரிவு 26 ஆக இருந்தது , 1999 ஆம் ஆண்டின் உரிமையியல் நடைமுறை ( திருத்தச் ) சட்டத்தினால் , பிரிவு 26 ( 1 ) ஆக மறு எண்ணிடப்பட்டுள்ளது .
2. 1999 - ஆம் ஆண்டின் உரிமையியல் நடைமுறை ( திருத்தச் ) சட்டத்தால் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது .
3.1999 - ஆம் ஆண்டின் உரிமையியல் நடைமுறை ( திருத்தச் ) சட்டத்தால் கட்டளை VI -ல் விதி 15 - ன் கீழ் ( 4 ) -வது கூறாக புதிதாக சேர்க்கப்பட்டது .
4.2002 - ஆம் ஆண்டின் உரிமையியல் நடைமுறை ( திருத்தச் ) சட்டத்தால் கட்டளை VII விதி 9 - ல் சேர்க்கப்பட்டது .
5.1999 - ஆம் ஆண்டின் உரிமையியல் நடைமுறை ( திருத்தச் ) சட்டத்தால் புதிதாக சேர்க்கப்பட்டது .
6. 2002 - ஆம் ஆண்டின் உரிமையியல் நடைமுறை ( திருத்தச் ) சட்டத்தால் புதிதாக சேர்க்கப்பட்டது.
மேலும் இந்த சட்டத்தில் திருத்தங்கள் புதிதாக உருவாகலாம் அதையும் சரிபார்க்க வேண்டும்.

உரிமையியல் நீதிமன்றங்களின் அதிகாரவரம்பு.
Jurisdiction of Civil Courts.
உரிமையியல் வழக்கு ( Civil Suit ) - ஒரு விளக்கம் :
உரிமையை நிலைநாட்டுவதற்கோ , கடமையை வலியுறுத்துவதற்கோ , தீங்கிற்கு தீர்வழி வேண்டியோ உரிமையியல் நீதிமன்றங்களில் தொடுக்கப்படும் வழக்குகளுக்கென சட்டம் விளக்கும் நடைமுறையே , உரிமையியல் நடைமுறைச் சட்டம் ( Civil Procedure Code ) ஆகும் . அவ்வாறு தொடுக்கப்படும் வழக்கே , உரிமையியல் வழக்கு ( Civil Suit ) ஆகும்.
நீதிமன்றங்களின் அதிகாரவரம்பு ( Jurisdiction of Courts ) :
நீதிமன்றங்களின் அதிகாரவரம்பை இரு பெரும் கூறுகளாகப் பிரிக்கலாம்.
ஒன்று நிதி வழி அதிகாரவரம்பு ( Pecuniary Jurisdiction ) , மற்றொன்று வட்டார அதிகாரவரம்பு ( Territorial Jurisdiction ) . ஒவ்வொரு நீதிமன்றமும் இந்த இருவகைப்பட்ட அதிகார வரம்புக்குள்தான் செயல்பட்டு வருகிறது . இவ்விருவகை அதிகார வரம்பிற்குட்படாத எந்த ஒரு வழக்கும் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தின் விசாரணைக்கு உட்பட்டதன்று . இதில் நிதி வழி அதிகாரவரம்பானது , வரையறுக்கப்பட்ட அதிகாரவரம்பு ( Limited Jurisdiction ) என்றும் , வரையறுக்கப்படாத அதிகாரவரம்பு ( Unlimited Jurisdiction ) என்றும் இரு வகைப்படும் . வரையறுக்கப்படாத அதிகாரவரம்பானது ' வரம்பில்லா அதிகாரவரம்பு 'என்றும் வழங்கப்படுகிறது.
நம் நாட்டில் நீதிமன்றங்கள் மொத்தத்தில் செலுத்துகின்ற அதிகாரவரம்பைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
அசல் அதிகாரவரம்பு ( Original Jurisdiction ) :
ஒரு வழக்கு நடவடிக்கையை முதல் எடுப்பிலேயே ஏற்கும் நீதிமன்றம் அசல் அதிகாரவரம்பு படைத்ததாகும் . இந்த அதிகாரவரம்பில் முதல் வழக்காகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் நேர்முக விசாரணைக்கு உட்பட்டவை . அனைத்து நிலை நீதிமன்றங்களும் இந்த முதலேற்பு அதிகாரவரம்பினைக் கொண்டிருக்கின்றன. ஆனால் அதற்குரிய நிதிநிலை அதிகாரவரம்புக்கும் , வட்டார அதிகாரவரம்புக்கும் அது கட்டுப்பட்டு செயல்படும்.
மேல்முறையீட்டு அதிகாரவரம்பு ( Appellate Jurisdiction ) :
கீழ் நீதிமன்றங்களின் தீர்ப்புகள் மீது வரும் மேல்முறையீடுகளை விசாரிப்பதற்குள்ள அதிகாரம் படைத்த நீதிமன்றம் மேல் முறையீட்டு அதிகாரவரம்பு கொண்டதாகும் . மேல்முறையீட்டு வழக்கை ஆராய்வதில் நேரடி விசாரணையில்லாததால் , ஏற்கனவே எடுக்கப்பட்ட சான்றுகளைப் பரிசீலித்து அதனடிப்படையில் முடிவு கூறப்படும் . இந்த அதிகாரம் உரிமையியல் நடைமுறைச் சட்டத்தின் 96 - ஆவது பிரிவில் கூறப்பட்டுள்ளது . இதை அடுத்து இரண்டாவது மேல்முறையீட்டிற்கான அதிகாரவரம்பு பிரிவு 100 - ன்படி உயர் நீதிமன்றத்திற்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது . இந்திய உச்ச நீதிமன்றத்தின் முதலேற்பு அதிகார வரம்பு , மேல் முறையீட்டு அதிகாரவரம்புகள் குறித்து உரிமையியல் நடைமுறைச் சட்டத்தின் 109 , 110 - ஆவது பிரிவுகளில் வரையறை செய்யப்பட்டுள்ளது . மேலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 132 , 133,136 - ஆவது ஷரத்துக்களிலும் கூறப்பட்டுள்ளது.
உரிமையியல் நீதிமன்றங்களின் அதிகாரவரம்பு ( Jurisdiction of Civil Courts ) :
நம் நாட்டின் நீதிமன்றங்களில் உயர்ந்தது நாட்டின் தலைநகரான புது தில்லியில் இயங்கி வரும் உச்ச நீதிமன்றமாகும் . இந்திய நாட்டு மக்களின் உரிமையியல் வழக்குகளிலும் , குற்றவியல் வழக்குகளிலும் , அரசியலமைப்புச் சட்டம் பற்றிய வழக்குகளிலும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானது . உச்ச நீதிமன்றத்தின் கீழ் பல்வேறு நீதிமன்றங்கள் அதிகாரவரம்பின் அடிப்படையில் பிரிக்கப்பட்டு இயங்கி வருகின்றன . அவை பின்வருமாறு : ( 1 ) வரையறுக்கப்பட்ட அதிகாரமுள்ளவை . ( 2 ) வரையறுக்கப்படாத அதிகாரமுள்ளவை . ( 3 ) மேல்முறையீட்டு நீதிமன்றங்கள் . ( 4 ) தீர்ப்பாயங்கள் ( 5 ) சிறப்பு அதிகாரம் பெற்ற நீதிமன்றங்கள் . இவை ஒவ்வொன்றையும் பின்வருமாறு விளக்கமாக காண்போமா ?
வரையறுக்கப்பட்ட அதிகாரமுள்ள நீதிமன்றங்கள் :
உரிமையியல் வழக்குகளில் வழக்கைப் பற்றிய ( சொத்து ) மதிப்பு ரூ .30,000 / ரம் அதற்குக் குறைவாகவும் உள்ள சொத்துக்களைப் பற்றிய வழக்குகள் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் ( District Munsif Court ) முன்பு தாக்கல் செய்யப்பட வேண்டும்.
வரையறுக்கப்படாத அதிகாரமுள்ள நீதிமன்றங்கள் :
உரிமையியல் வழக்குகளில் ரூ .30,000 / -க்கு மேல் சொத்து மதிப்புள்ள வழக்குகள் மாவட்ட ( துணை ) சார்பு நீதிமன்றம் ( Sub Court of the Subordinate Judge ) முன்பு தாக்கல் செய்யப்பட வேண்டும் . எனவே ரூ . 30,000 /-க்கு மேற்பட்ட வழக்குகளை விசாரிக்க மாவட்ட முன்சீப் நீதிமன்றங்களுக்கு அதிகாரம் கிடையாது .
மேல்முறையீட்டு நீதிமன்றங்கள் ( Appellate Courts ) :
உரிமையியல் வழக்குகளில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தின் 1 தீர்ப்பின் பேரில் மாவட்ட நீதிமன்றத்திற்கு ( District Judge Court ) முதல் மேல்முறையீடு செய்யலாம்.
இம்மேல்முறையீட்டை அம்மாவட்ட நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் . ஆனால் சில சமயங்களில் , உயர் நீதிமன்றத்தின் உத்திரவுகளுக் கேற்ப தன்னிடம் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடுகளை , தனக்கு கீழமைந்துள்ள சார்பு நீதிமன்றத்திற்கு ( Subordinate Judge Court ) மாற்ற மாவட்ட நீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டு.
மாவட்ட சார்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை எதிர்த்து முதல் மேல்முறையீடு செய்யலாம் . அம்மேல்முறையீட்டில் தாவாவின் மதிப்பு ரூ .30,000 / -த்திற்கு அப்பாற்பட்டும் ரூ . 1,00,000 / -த்திற்குள்ளும் இருப்பின் , மேற்படி முதல் மேல்முறையீடானது மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும்.
அதே சமயத்தில் , தாவாவின் மதிப்பு ரூ .1,00,000 / -த்திற்கு மேற்பட்டிருப்பின் , முதல் மேல்முறையீடானது , உயர் நீதிமன்றத்தின் டிவிசன் பெஞ்ச்சிடம் ( Division Bench ) தாக்கல் செய்யப்பட வேண்டும்.
இரண்டாவது மேல்முறையீட்டைப் ( Second Appeal ) பொருத்தவரை , உயர் நீதிமன்றத்தில் மட்டுமே செய்யப்பட வேண்டும்.
இரண்டாவது மேல்முறையீட்டுத் தீர்ப்பை எதிர்த்து , உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு அனுமதி பெற்று ( Special Leave ) உச்ச நீதிமன்றத்தில் உரிமையியல் மேல்முறையீடு ( Civil Appeal ) செய்து கொள்ளலாம் .
தீர்ப்பாயங்கள் :
ஒரு சில வழக்குகளைத் தீர்வு செய்யத் தனித்தனி தீர்ப்பாயங்கள் நிறுவப்பட்டுள்ளன . தொழில் வழக்குகளைத் தீர்க்க ஏற்படுத்தப்பட்ட தொழில் தகராறு தீர்ப்பாயம் , இயக்கவூர்தி விபத்தினால் ஏற்பட்ட இழப்பிற்கு , நஷ்ட ஈடு கோரி தொடுக்கப்படும் வழக்குகளை தீர்க்க இயக்கவூர்தி விபத்து நஷ்டஈடு கோருரிமை தீர்ப்பாயம் , இரயில் சேவை தொடர்பான , இரயில் சேவை கோருரிமை தீர்ப்பாயம் போன்றவை தனித்தனியான தீர்ப்பாயங்களாகும்.
சிறப்பு அதிகாரங்கள் பெற்ற நீதிமன்றங்கள் :
சட்ட விதிகளால் தீர்க்க இயலாத தவறுகளைத் தீர்க்கும் அதிகாரம் உயர் நீதிமன்றத்திற்கும் உண்டு . இத்தகைய வழக்குகள் ஒரு உயர் நீதிமன்ற நீதிபதியாலோ , முக்கிய வழக்காக இருக்குமானால் இரு நீதிபதிகளாலோ விசாரிக்கப்படும் . ஒரு உயர் நீதிமன்ற நீதிபதி வழங்கிய தீர்ப்பின் பேரில் இரு நீதிபதிகள் கொண்ட ஆயத்திற்கு ( Division Bench ) மேல்முறையீடு உண்டு.
மேலும் இதன் பேரில் உச்ச நீதிமன்றத்திற்கு மேல்முறையீடும் உண்டு .
இவை தவிர உயர் நீதிமன்றத்திற்கு , கப்பல் போக்குவரத்து பற்றிய ( கடலாண்மை அதிகாரம் - Admiralty jurisdiction ) வழக்குகளை விசாரிக்கவும் அதிகாரம் உண்டு.
நீதிமன்றங்களின் அதிகாரவரம்பின் அமைப்பைக் காட்டும் படிநிலை :
உரிமையியல் வழக்குகள் ( Civil Suits )
உச்ச நீதிமன்றம்
( Supreme Court )
உயர் நீதிமன்றம்
( High Court )
மாவட்ட நீதிபதி நீதிமன்றம்
( District Judge Court )
மாவட்ட சார்பு நீதிமன்றம்
( District Subordinate Judge Court )
மாவட்ட உரிமையியல் நீதிமன்றம்
( District Munsif Court )
வரைபட விளக்கம் :
Post a Comment