சட்ட அறிவிப்பு (legal notice) என்றாலே அது வக்கீல் மூலமாக அனுப்பப்படும் நோட்டிஸ் என்றே நாம் நினைக்கிறோம். அது தவறு அதாவது எதிர் தரப்பினர் மீது அவரது செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து எடுக்கப்படக்கூடிய சட்ட நடவடிக்கை பற்றிய அறிவிப்பு கடிதம் தான் அது  அதை நாமே அனுப்பலாம்  நமக்கு அது பற்றிய விபரம் தெரியாத பட்சத்தில்  வழக்கறிஞர் மூலமாக அனுப்பவேண்டும்.


நமது நாட்டு சட்டப்படி  வழக்கு  தொடுப்பவர் ( Petitioner / Complainant) மற்றும் எதிர் தரப்பினர் ( Opposite Party ) -தான் வழக்கு நடவடிக்கையில் நேரடியாக பங்கேற்க  வேண்டும். அது சட்டம் நமக்கு வழங்கியிருக்கும் உரிமை  இதில் வழக்கு தொடுப்பவருக்கோ அல்லது எதிர் தரப்பினருக்கோ போதுமான சட்ட அறிவு  இல்லாத நிலையில் வழக்கறிஞர்  மூலமாக செய்ய வேண்டும்.


பொதுவாக லீகல் நோட்டிஸ் என்பது நாம் அனுப்பும் நோட்டிஸ் மற்றும் வழக்கறிஞர் மூலம் அனுப்பப்படும் நோட்டிஸ்   இவை இரண்டையுமே குறிப்பிடும் சொல்லாகும்  வழக்கறிஞர் மூலம் அனுப்பப்படும் நோட்டிஸ் அட்வகேட் நோட்டிஸ் ஆகும்.

சட்ட அறிவிப்பு - Legal notice லீகல் நோட்டீஸ்

லீகல் நோட்டிஸ் தயாரிப்பது எப்படி?


உதாரணத்திற்கு நீங்கள் ஒரு பொருளை  வாங்கியிருக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அதற்கு ஒரு வருட உத்திரவாதம் உற்பத்தியாளரால் வழங்கப்பட்டுள்ளது  என்று வைத்துக்கொள்வோம். வாங்கிய ஒரு சில நாட்களிலேயே அது பழுதடைந்து விடுகிறது. நீங்கள் எந்த கடைக்காரரிடம் வாங்கினீர்களோ  அவரிடம் புகார் செய்கிறீர்கள். அவர் அங்கீகாரம் பெற்ற பழுது நீக்குபவராக இருந்தால் அவரே பழுது பார்த்து சரி செய்து கொடுப்பார். அப்படி இல்லை என்றால் கம்பெனியின் சர்வீஸ் செண்டர் முகவரியை தருவார்  அங்கு புகார் செய்கிறீர்கள். அவர்கள் பழுது பார்த்து சரி செய்து தருகிறார்கள். மறுபடியும் குறுகிய காலத்தில் பழுது ஏற்படுகிறது மீண்டும் பழுது பார்க்கப்படுகிறது பழுதடைவது தொடர்கிறது. 

இதனால்  உங்களால் தொடர்ச்சியாக மொபைல் போனை பயன்படுத்த முடியாத  நிலை. இந்நிலையில் உங்களுக்கு விற்பனை செய்யப்பட்ட பொருள் தரம் குறைந்தது அல்லது உற்பத்தியில் குறைபாடுள்ள பொருள் (Manufacturing Defect) என கருதுகிறீர்கள். 

அதனால் அந்த மெஷினுக்கு பதில் வேறு மெஷின் தருமாறு கேட்க்கிறீகள்  கம்பெனிக்கரர்கள் அவ்விதம் செய்ய மறுக்கிறார்கள்  அதனால் (consumer  court )கன்ஸ்யூமர் கோர்ட்டில் வழக்கு தொடர போகிறீர்கள்  இப்பொழுது நீங்கள் செய்ய வேண்டியது என்ன? அவர்களுக்கு நோட்டிஸ் அனுப்ப வேண்டும்.

இந்த விஷயத்தில்  விற்பனையாளரை பொறுத்த வரையில் அவர் மீது எவ்வித தவறும் கிடையாது  எனவே வழக்கில் அவரை எதிர் மனுதாரராக சேர்க்க வேண்டிய அவசியம் கிடையாது  சேர்த்தாலும் தவறு கிடையாது.


சட்ட அறிவிப்பு வடிவம்-legal notice format


சட்ட அறிவிப்பு அதா­வது லீகல் நோட்டிஸ் உருவாக்குவது எப்படி என்ற ஒரு மாதிரி வடிவத்தை வழங்கியுள்ளேன் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

லீகல் நோட்டிஸ் பதிவு தபாலில் அதனோடு ஓப்புதல் அட்டை அதாவது ஆக்னாலஜிமொன்ட் கார்டு சுருக்கமாக AD Card வைத்து அனுப்ப வேண்டும்.(BY REGISTERD POST WITH A/D)


அனுப்புநர்    :

(இது உங்கள் முகவரி)
பிரகதீஷ் BA LLB.வழக்கறிஞர்,
22x , கோர்ட்  மெயின் ரோடு,
நாகர்கோயில், 
கன்னியாகுமரி. (இது எனது உண்மையான முகவரி இல்லை)

பெறுநர்    :   

(இதில் எதிர் மனுதார் முகவரி ) 
samsung Electronics Pvt Ltd,
gg 33, 2nd mg road ,
Fatima Tower,
Anna Nagar ,
Chennai - 600 001.

சட்ட பூர்வ அறிவிப்பு.


தங்கள் நிறுவன தயாரிப்பாகிய samsung on -5 மாடல் மொபைல் போன்  ஒன்றை mr.babu , ss mobile store , nagercoil ,k -k  dist,    என்ற் டீலரிடம்23-08-2017 ல் வாங்கியுள்ளேன். பில் நம்ம்பர். 3456 / 23-08-2017. மேற்படி மொபைல்  இரண்டு மாத காலத்தில் மூன்று முறை பழுது ஏற்பட்டு தங்கள் சர்வீஸ் செண்டரால் சரி செய்யப்பட்டுள்ளது  அதன் விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


1. 25-9-2017 - சர்வீஸ்  நம்பர்: NG   2315
2. 15 -10-2017 - சர்வீஸ்  நம்பர்: NG  2134
3. 10-11-2017 - சர்வீஸ்  நம்பர்: NG  7658

இதனால் என்னால் தொடர்ந்து உபயோகிக்க இயலவில்லை. இவ்விதம் அடிக்கடி பழுது ஏற்பட காரணம்  எனக்கு விற்பனை செய்யப்பட்ட மொபைல்  உற்பத்தி குறை பாடான ஒன்றாகும். எனவே உடனடியாக மேற்படி மொபைலுக்கு  பதில் வேறு ஒரு மொபைல் மாற்றித்தரும்படி தங்களிடம் கூறியதற்கு மறுத்து விட்டீர்கள்.


ஆகவே  மேற்படி மொபைலை  மாற்றி தர வேண்டும் என தங்கள் நிறுவன்த்தின் மீது மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன். இதில் தங்களுக்கு ஏதாவது ஆட்சேபணை இருக்குமானால்  இந்த நோட்டீஸ் கிடைத்த பதினைந்து நாட்களுக்குள் தெரியப்படுத்த வேண்டும். அவ்விதம் தெரியப் படுத்தாத பட்சத்தில்  மேற்படி குற்றசாட்டை ஒப்புக்கொள்வதாகவும் ஆனால் பிரசணையை சுமுகமாக தீர்க்க விரும்பவில்லை எனவும் முடிவு செய்து  முறைப்படி வழக்கு தாக்கல் செய்யப்படும் என்ற விபரம் இதன் மூலம் தெரியப்படுத்தப்படுகிறது.


இப்படிக்கு

( கையொப்பம்)
(C பிரகதீஷ் BA LLB )
நா ள்: 25-8-2014.

இவை அனைத்தையும் தெளிவாக எழுதி அனுப்ப வேண்டும் தங்களுக்கு ஏதாவது குழப்பம் இருந்தால் ஒரு வழக்கறிஞரிடம் ஆலோசனை பெற்று சரியாக அனுப்புங்கள் சட்ட அறிவிப்பில்  அதாவது (legal notice) லீகல் நோட்டிஸில் தவறாக நாள்கள் போன்ற  முக்கியமான விசயங்களை கவனமுடன் பதிவிடுங்கள். நன்றி இதில் கொடுக்க பட்டவை முகவரி உள்பட ஒரு மாதிரியாகும்.

Post a Comment

Previous Post Next Post